சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் (President of the Republic of Singapore; மலாய்: Presiden Republik Singapura) என்பவர் சிங்கப்பூர் குடியரசின் நாட்டுத் தலைவர் ஆவார். சனாதிபதி என்று அழைக்கப்படுகிறார்.[1]

சிங்கப்பூர் குடியரசு குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவரின் சின்னம்
குடியரசுத் தலைவரின் கொடி
தற்போது
தர்மன் சண்முகரத்தினம்

14 செப்டம்பர் 2023 முதல்
சிங்கப்பூர் குடியரசின் நாட்டுத் தலைவர்
Typeநாட்டுத் தலைவர்
வாழுமிடம்இசுத்தானா
நியமிப்பவர்நாடாளுமன்றம்
(1965–1991)
நேரடித் தேர்தல்
(1991 முதல்)
பதவிக் காலம்ஆறு ஆண்டுகள், புதுப்பிக்கத்தக்கது
உருவாக்கம்9 ஆகத்து 1965; 58 ஆண்டுகள் முன்னர் (1965-08-09)
முதலாமவர்யூசுப் இசாக்
துணை குடியரசுத் தலைவர்குடியரசுத் தலைவரின் ஆலோசகர்கள் சபையின் தலைவர்
ஊதியம்S$1,540,000 ஆண்டுக்கு
இணையதளம்அதிகாரபூர்வ இணையதளம்

சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற முறைமையின் கீழ் அரசின் தலைவர் (Head of Government) சிங்கப்பூரின் பிரதமர் ஆவார்.

குடியரசுத் தலைவர் எனும் அதிகாரப்பூர்வ அழைப்புப் பெயர், பெரும்பாலும் ஒரு சடங்குப் பெயராகவே கருதப் படுகிறது. 1993-ஆம் ஆண்டிற்கு முன்பு, சிங்கப்பூர் அதிபர் நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.

பொது

1991-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் அரசியல் சாசனங்கள் திருத்தப்பட்டன. அதன் பிறகு, குடியரசுத் தலைவர், சிங்கப்பூர் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.

சிங்கப்பூரில் முதலாவதாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஒங் தெங் சியோங். 1991-ஆம் ஆண்டில் நடந்த சாசான மாற்றங்களால், குடியரசுத் தலைவருக்குச் சில தனிப்பட்ட உரிமைகள் அளிக்கப்பட்டன. குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ வாழுமிடம் இஸ்தானா சிங்கப்பூர் ஆகும்.

வரலாறு

1965-ஆம் ஆண்டில் மலேசியா கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்று, சிங்கப்பூர் குடியரசாக மாறியது. அதன் பிறகு அதே 1965-ஆம் ஆண்டில் அதிபர் எனும் சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது.

சிங்கப்பூர் தேசிய அரசியலமைப்பு; சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் பதவிக்கு கடுமையான தகுதி நிபந்தனைகளை விதிக்கிறது. 1993-க்கு முன்னர், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தால் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

அரசியலமைப்புத் திருத்தங்கள்

1991-இல் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களின் விளைவாக, குடியரசுத் தலைவர் பதவியானது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதவியாக மாறியது. அரசாங்கச் செலவுகள் மற்றும் பொது அலுவலகங்களுக்கான முக்கிய நியமனங்கள் ஆகியவற்றில் குறிப்பிட்ட பாதுகாப்பு அதிகாரங்களைக் கொண்ட பதவியாகவும் மாறியது.[3]

1959-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சுய ஆளுமையைப் பெற்றது. அப்போது சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் எனும் பதவி உருவாக்கப்பட்ட வில்லை. அந்தப் பதவி யாங் டி பெர்துவான் நெகாரா (Yang di-Pertuan Negara) என்று அழைக்கப்பட்டது. சிங்கப்பூரின் கடைசி யாங் டி பெர்துவான் நெகாரா, யூசுப் இசாக். இவர்தான் சிங்கப்பூரின் முதல் அதிபரும் ஆகும்.

குடியரசுத் தலைவர்களின் பட்டியல்

இல.படிமம்பெயர்
(பிறப்பு–இறப்பு)
முந்தைய பதவிபதவிக்காலம்தேர்தல்முடிவுகள்
பதவியேற்ற நாள்பதவி முடிந்த நாள்Time in office
1
யூசுப் இசாக்[4]
(1910–1970)
யாங் டி பெர்துவான் நெகாரா9 ஆகத்து
1965
23 நவம்பர்
1970
5 ஆண்டுகள், 106 நாட்கள்நாடாளுமன்றத்தால் தேர்வு
1967
நாடாளுமன்ற சபாநாயகர் யோ கிம் செங் பதில் குடியரசுத் தலைவர்
24 நவம்பர் 1970–1 சனவரி 1971
2பெஞ்சமின் சியர்சு[4]
(1907–1981)
மருத்துவர், கல்வியாளர்2 சனவரி
1971
12 மே
1981
10 ஆண்டுகள், 130 நாட்கள்1970நாடாளுமன்றத்தால் தேர்வு
1974
1978
நாடாளுமன்ற சபாநாயகர் யோ கிம் செங் பதில் குடியரசுத் தலைவராக
13 மே 1981–22 அக்டோபர் 1981
3தேவன் நாயர்[4]
(1923–2005)
ஆன்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்23 அக்டோபர்
1981
28 மார்
1985
3 ஆண்டுகள், 156 நாட்கள்1981நாடாளுமன்றத்தால் தேர்வு
தலைமை நீதிபதி வீ சொங் சின் பதில் அரசுத்தலைவராக
29 மார்ச் 1985–31 மார்ச் 1985
நாடாளுமன்ற சபாநாயகர் யோ கிம் செங் பதில் குடியரசுத் தலைவராக

31 மார்ச் 1985–2 செப்டம்பர் 1985
4வீ கிம் வீ[4]
(1915–2005)
தென் கொரியா, சப்பானுக்கான தூதுவர்2 செப்டம்பர்
1985
1 செப்டம்பர்
1993
7 ஆண்டுகள், 364 நாட்கள்1985நாடாளுமன்றத்தால் தேர்வு
1989
5
ஓங் தெங் சோங்[4]
(1936–2002)
துணைப் பிரதமர்1 செப்டம்பர்
1993
31 ஆகத்து
1999
5 ஆண்டுகள், 364 நாட்கள்1993952,513
(58.69%)
6 செல்லப்பன் ராமநாதன்[5]
(1924–2016)
அமெரிக்காவுக்கான தூதுவர்1 செப்டம்பர்
1999
31 ஆகத்து
2011
11 ஆண்டுகள், 364 நாட்கள்1999போட்டியின்றித் தேர்வு
2005
7 டோனி டேன் கெங் யம்
(born 1940)
துணைப் பிரதமர்1 செப்டம்பர்
2011
31 ஆகத்து
2017
5 ஆண்டுகள், 364 நாட்கள்2011745,693
(35.20%)
குடியரசுத் தலைவரின் ஆலோசபர்களின் பேராயத்தின் தலைவர் ஜெ. ஒய். பிள்ளை பதில் குடியரசுத் தலைவராக[6]
1 செப்டம்பர் 2017–13 செப்டம்பர் 2017
8 அலிமா யாக்கோபு
(பிறப்பு 1954)
நாடாளுமன்ற சபாநாயகர்14 செப்டம்பர்
2017
13 செப்டம்பர் 2023 வரை5 ஆண்டுகள், 364 நாட்கள்2017போட்டியின்றித் தெரிவு
9
தர்மன் சண்முகரத்தினம்
(பிறப்பு 1957)
மூத்த அமைச்சர்14 செப்டம்பர்
2023
20231,746,427
(70.40%)

மேற்கோள்கள்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Presidents of Singapore
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை