நியா தேசிய பூங்கா

நியா தேசிய பூங்கா அல்லது நியா குகைகள் (மலாய்: Taman Negara Niah; ஆங்கிலம்: Niah National Park) என்பது, மலேசியா, சரவாக், மாநிலத்தில் மிரி பிரிவுக்குள் அமைந்துள்ள குகை வளாகம் ஆகும்.

நியா குகைகள்
Niah Caves
நியா குகைகளின் நுழைவாயில்
நியா குகைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
நியா குகைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
அமைவிடம்சரவாக்; மலேசியா
ஆள்கூறுகள்3°48′50″N 113°46′53″E / 3.81389°N 113.78139°E / 3.81389; 113.78139
கண்டுபிடிப்பு1950
நிலவியல்சுண்ணக்கல்

இந்தச் சுண்ணாம்புக் குகை (Limestone Cave) ஒரு தொல்பொருள் தளமாக விளங்குகிறது. இந்தக் குகை மலேசியாவின் மிகப் பெரிய குகை; அதே வேளையில் மலேசியாவிலேயே மிகப் பழமையான குகையாகும்.

உலகின் மிகப்பெரிய சுண்ணாம்புக் குகைகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது. நியா குகையின் சுற்றுப் பகுதிகள் சரவாக் அருங்காட்சியகத்தின் (Sarawak State Museum) அதிகாரத்தின் கீழ் ஒரு வரலாற்றுத் தளமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொது

ஆஸ்திரேலிய மானுடவியலாளர் டேரன் குர்னோ (Daren Curnoe) என்பவரின் தலைமையில் ஓர் ஆய்வாளர் குழு நியமிக்கப்பட்டது. அந்த ஆய்வாளர் குழுவினர், நியா குகையில் பண்டைய மனித எலும்புக் கூடுகள் மற்றும் மண்டை ஓடுகளின் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்தார்கள்.

அந்த மண்டை ஓடுகள் 40,000 ஆண்டுகள் பழமையானவை. அந்த மண்டை ஓடுகள் அங்கு வாழும் இபான் மக்களின் மண்டை ஓடுகளுடன் ஒரே மாதிரியான ஒற்றுமைகள் கொண்டவையாக உள்ளன.[1].[2]

வரலாறு

நியா குகைகள்
வர்ணம் பூசப்பட்ட குகையின் தொல்பொருள் தளம். நியா குகை வளாகத்தின் தெற்கே அமைந்துள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த குகை. இங்கு பண்டைய புதைகுழிகள் மற்றும் குகை ஓவியங்கள் காணப்படுகின்றன.

ஆல்பிரட் ரசல் வாலஸ் (Alfred Russel Wallace) என்பவர் சிமுஞ்சான்மாவட்டத்தில் (Simunjan District) சுரங்க பொறியியலாளர் ராபர்ட் கோல்சன் (Robert Coulson) என்பவருடன் எட்டு மாதங்கள் தங்கியிருந்து, வடக்கு சரவாக் பகுதியில் உள்ள கனிமப் பொருட்களை ஆராய்ந்தார்.[3]

சரவாக்கில் உள்ள பல குகைகளில் எலும்புகளைக் கண்டுபிடிப்பது குறித்து கோல்சன் பின்னர் வாலஸுக்கு எழுதினார். மேலதிக விசாரணையில், கேள்விக்குரிய ஒரு குகை, சரவாக் மற்றும் புரூணைக்கு இடையே உள்ள ஒரு மலையில் அமைந்து உள்ளது என்பதை வாலஸ் அறிந்து கொண்டார்.[4]

32 குகைகள் கண்டுபிடிப்பு

1864-அம் ஆண்டு மே மாதம் சரவாக் பிரித்தானிய தூதரான ஜி.ஜே. ரிக்கெட்ஸ் (G. J. Ricketts) என்பவர் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டார். ரிக்கெட்ஸ் நீண்ட காலம் பதவியில் நீடிக்கவில்லை. அவருக்குப் பின்னர் ஆல்பிரட் ஹார்ட் எவரெட் (Alfred Hart Everett) என்பவர் அந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளத் தேர்வு செய்யப் பட்டார்.

மலேசியாவின் மிரி அருகே உள்ள நியா, சுபிஸ் (Niah/Subis) பகுதிகள்; மற்றும் கூச்சிங் தெற்குப் பகுதியில் மூன்று இடங்களில், 32 குகைகள் இருப்பதாகக் கண்டுபிடித்தார்.

2010 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய களம் (UNESCO's World Heritage Site) தலைப்பிற்கு இந்த நியா தேசியப் பூங்கா பரிந்துரைக்கப்பட்டது.[5]

நிலவியல்

நியா குகைகள் குனோங் சுபிஸ் (மலாய்: Gunung Subis; ஆங்கிலம்: Mount Subis) என்ற சுண்ணாம்பு மலையின் வடக்கு விளிம்பில் அமைந்துள்ளது. இதன் நுழைவாயில் குகையின் மேற்கு வாயிலாக அமைந்துள்ளது.

இந்த இடம் தென் சீனக் கடலில் இருந்து 15 கி.மீ தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து 50 மீ உயரத்திலும் உள்ளது. நியா குகைகளின் மேற்கு பகுதி 150 மீ அகலமும் 75 மீ உயரமும் கொண்டது.[6]

தொல்பொருளியல்

இந்தக் குகைகள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து கற்கால, சீன சங்-சகாப்தம் மற்றும் மிக சமீபத்திய காலங்கள் வரை வெவ்வேறு காலங்களில் மனிதர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. சரவாக் அருங்காட்சியகம் 1954-ஆம் ஆண்டில் இந்தக் குகைகளில் முறையான தொல்பொருள் பணிகளைத் தொடங்கியது.

இந்த குகை ஒரு முக்கியமான வரலாற்றுக்கு முந்தைய இடமாகும். இங்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[7] கிழக்கு மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மிகப் பழமையான மனித குடியேற்றம் இதுவாகும். 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மிகச் சமீபத்திய ஆய்வுகள், நியா குகைகளில் முதல் மனித செயல்பாட்டிற்கான சான்றுகளைக் காட்டியுள்ளன.

1,200 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள்

34,000 முதல் 46,000 ஆண்டுகளுக்கு முன்பு பழைமையானது என்கிற குறிப்பு ஆய்வில் உள்ளது.[8] மிகப்பெரிய குகைத் தொகுதியின் (Great Cave) தென்கிழக்கு முனையிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில், அதன் சொந்தமான மிகச் சிறிய சுண்ணாம்புக் தொகுதியில் அமைந்துள்ள வண்ணக் குகை (Painted Cave), 1,200 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களைக் கொண்டுள்ளது.

சபாவில் லகாட் டத்து அருகிலுள்ள மன்சுலி பள்ளத்தாக்கில் (Mansuli valley) கண்டெடுக்கப்பட்ட கல் கருவிகளுக்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மிகவும் முந்தைய தேதியைக் கணித்துள்ளனர், ஆனால் துல்லியமான கால அளவு குறித்த பகுப்பாய்வு இன்னும் வெளியிடப்படவில்லை.

38,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித மண்டை ஓடு

நியா குகையில் காணப்படும் பொருட்களில் ப்ளீஸ்டோசீன் வெட்டுதல் கருவிகள் மற்றும் செதில்கள், கற்கால அச்சுகள், அட்ஜெஸ், மட்பாண்டங்கள், கிளிஞ்சல் நகைகள், படகுகள், பாய்கள், பின்னர் இரும்பு கருவிகள் மற்றும் மட்பாண்டங்கள் மற்றும் கண்ணாடி மணிகள் ஆகியவை இரும்பு யுகத்திற்கு முந்தையவையாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளன.

இங்கு, 38,000 ஆண்டுகளுக்கு முன்பு தேதியிட்ட மனித மண்டை ஓடு மிகவும் பிரபலமானதாக உள்ளது.[7][9] வர்ணம் பூசப்பட்ட குகையில் ஓவியங்கள் மற்றும் மர சவப்பெட்டி, 'மரணக் கப்பல்கள்' போன்றவை உள்ளன.

காட்சியகம்

தற்போதைய நடவடிக்கைகள்

இந்த குகைகள் பறவைகளின் கூடு சேகரிப்பு தொழிலுக்கு (Edible Bird's Nest) நன்கு அறியப்பட்டவை. இவை சரவாக் நகரின் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். குகைகளில் கூரையின் ஒவ்வொரு பகுதியும் கூட்டு உழவாரன் பறவைகள் (Swiftlets) தங்குமிடங்கள் உள்ளன. அவை தனியாருக்குச் சொந்தமானதாக உள்ளன.

மற்றும் கூடுகளைச் சேகரிக்க உரிமையாளருக்கு மட்டுமே உரிமை உண்டு. சேகரிப்பு அரை ஆண்டிற்கு ஒரு முறை (பொதுவாக ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில்) செய்யப் படுகிறது. பறவைக் கூடுகளைச் சேகரிப்பவர், குகையின் உச்சத்தை அடைவதற்கு, ஒரு கம்பத்தில் நூற்றுக் கணக்கான அடி ஏறி, மெழுகுவர்த்தியின் உதவியால் பறவைக் கூடுகளை எடுக்கிறார்.

மேலும் காண்க

குறிப்புகள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Niah National Park
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நியா_தேசிய_பூங்கா&oldid=3933592" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை