பாம்பன் பாலம்

பாம்பன் பாலம் (Pamban Bridge) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கடல்வழி தொடருந்துப் பாலமாகும். பாக்கு நீரிணையில் அமைந்துள்ளள இந்தப் பாலம் இந்திய பெருநிலப்பரப்பையும் பாம்பன் தீவிலுள்ள இராமேசுவரத்தையும் இணைக்கின்றது.

பாம்பன் பாலம்
பாம்பன் கடல் பாலம்
தாண்டுவதுபாக்கு நீரிணை
இடம்ராமேஸ்வரம், தமிழ்நாடு, இந்தியா
அமைவு9°16′56.70″N 79°11′20.1212″E / 9.2824167°N 79.188922556°E / 9.2824167; 79.188922556

1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த இக்கடல் பாலத்தில், கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக நடுவில் திறக்கும் கத்திரி வடிவ தூக்குகள் அமைந்துள்ளன. ஏறத்தாழ 2.3 கி.மீ. நீளமுள்ள இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். 2010 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள பாந்திரா-வொர்லி கடற்பாலம் திறப்பதற்கு முன்பு வரை இது இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாக இருந்தது. பாம்பன் தொடருந்துப் பாலத்திற்கு அருகில் 1988 ஆம் ஆண்டு ஒரு சாலை போக்குவரத்துப் பாலம் திறக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டில், தற்போதுள்ள பாலத்திற்கு அருகில் ஒரு புதிய பாலத்தை கட்டும் பணி தொடங்கியது. 2022 ஆம் ஆண்டு திசம்பரில், கடல் அரிப்பின் காரணமாக தொடருந்துப் பாலம் பலவீனமடைந்ததால், பாலத்தின் மீது தொடருந்துப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

வரலாறு

இந்தப் பாலத்தின் மூலம் பாம்பன் தீவில் உள்ள ராமேஸ்வரம் இந்தியாவின் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டது

19 ஆம் நூற்றாண்டில் இலங்கையுடனான வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வழிகளை பிரித்தானிய நிர்வாகம் ஆராய்ந்தது. இதன் விளைவாக 1870 ஆம் ஆண்டு இந்திய நிலப்பகுதியுடன் பாம்பன் தீவை இணைக்கும் பாலத்திற்கான திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டன.[1] இதன் கட்டுமானம் 1911 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் தொடங்கியது.[2] இந்தக் கடற்பாலம் 24 பிப்ரவரி 1914 அன்று தொடருந்துப்போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இதன் மூலம் பாம்பன் தீவில் உள்ள ராமேஸ்வரம் இந்தியாவின் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டது.[3]

1964 ஆம் ஆண்டில் பாம்பன் தீவை தாக்கிய பெரும் புயல் மற்றும் சூறாவளியின் போது இந்தப் பாலம் பலத்த சேதமடைந்தது. இதனை சரி செய்ய விரிவான பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.[4] பாம்பன் தொடருந்துப் பாலத்திற்கு அருகில் உள்ள சாலைப் போக்குவரத்திற்கான பாலம் 1988 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.[1][5]

பாம்பன் தொடருந்துப் பாலம் மற்றும் அருகிலுள்ள சாலைபோக்குவரத்துக்கான பாலம்

2009 ஆம் ஆண்டில், அதிக எடையுள்ள சரக்கு இரயில்களைத் தாங்கும் வகையில் பாலத்தை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.[6][7] 13 சனவரி 2013 அன்று ஒரு கடற்படை படகு பாலத்தில் மோதியதால் ஏற்பட்ட சேதத்தால் பாலத்தின் சில தூண்களை சரிசெய்ய வேண்டியிருந்தது.[8][9] இதன் நூற்றாண்டு விழா 2014ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.[10][11] 2016 ஆம் ஆண்டு இந்திய அரசின் ரயில்வே அமைச்சகம் 25 கோடி (US$3.1 மில்லியன்) செலவில் பாலத்தை நவீனமாக்கும் திட்டத்தை அறிவித்தது.[12] 2018 திசம்பரில் பாலத்தின் தூண்களில் பிளவு ஏற்பட்டதையடுத்து, பழுதுபார்ப்பதற்காக தொடருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. பின்னர் பாலம் சரி செய்யபட்டதற்கு பிறகு மார்ச் 2019 இல் தொடருந்துப் போக்குவரத்துக்கு மீண்டும் தொடங்கியது.[13][14]

2020 ஆம் ஆண்டில், இந்திய அரசு பழைய பாம்பன் பாலத்தின் அருகே 50cro செலவில் புதிய ரயில் பாலம் கட்டப்படும் என்று அறிவித்தது.[15] 2022 ஆம் ஆண்டு திசம்பரில், கடல் அரிப்பின் காரணமாக தொடருந்துப் பாலம் பலவீனமடைந்ததால், பாலத்தின் மீது தொடருந்துப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.[16]

அமைப்பு

கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக நடுவில் திறக்கும் கத்திரி வடிவ தூக்குகள்

இந்த தொடருந்துப் பாலமானது கடல் மட்டத்திலிருந்து 12.5 m (41 அடி) உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் 6,776 அடி (2,065 m) நீளமானது.[17] இந்தப் பாலம் 143 தூண்களைக் கொண்டுள்ளது. இந்த இக்கடல் பாலத்தில், கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக நடுவில் திறக்கும் கத்திரி வடிவ தூக்குகள் அமைந்துள்ளன.[18] பாலத்தின் இரண்டு தூக்குகளும் நெம்புகோல்களைப் பயன்படுத்தி கையினால் திறக்கப்படுகின்றன.[17] ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 பெரிய கப்பல்கள் இப்பாலத்தின் கீழே செல்கின்றன.

பாம்பன் பாலம் உலகின் மிகவும் அதிக அளலில் துருப்பிடிக்கத் தக்க மற்றும் கடல் அரிப்பால் வெகுவாக பாதிக்கப்படும் ஒரு சூழலில் அமைந்துள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே நடைபெற்றன. மேலும் இந்த இடம் அதிவேக காற்று மற்றும் சூறாவளிகளை எதிர்கொள்ளும் மண்டலமாகவும் உள்ளது. இந்த பாலம் , எனவே இதன் பராமரிப்பு ஒரு சவாலான வேலையாக உள்ளது.[17]

இந்த பாலம் கட்டப்பட்ட போது இதன் மீது ஒரு குறுகிய அகலம் கொண்ட (மீட்டர் கேஜ்) இரயில் பாதை அமைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு இந்த பாதை அகல இரயில் பாதையாக மேம்படுத்தப்பட்டது.[1] இந்த இரயில் பாதையானது இந்தியாவின் பிரதான நிலப்பரப்பையும் பாம்பன் தீவையும் இந்தப் பாலம் வழியாக இணைக்கின்றது. முன்னதாக இந்த இரயில் பாதை பாம்பனை அடைந்ததும் இரு பாதைகளாக பிரிந்து ஒன்று ராமேஸ்வரம் நோக்கி சென்றது, மற்றொரு கிளைப் பாதை தனுஷ்கோடியில் முடிவடைந்தது.[19] 1964 ஆம் ஆண்டு சூறாவளியின் போது தனுஷ்கோடிக்கான ரயில் பாதை முற்றிலுமாக அழிக்கப்பட்டது.[20][21]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாம்பன்_பாலம்&oldid=3911963" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை