பிந்துலு

சரவாக் மாநிலத்தில் பிந்துலு மாவட்டத்தின் தலைநகரம்.

பிந்துலு (மலாய் மொழி: Bintulu; ஆங்கிலம்: Bintulu) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் பிந்துலு பிரிவு; பிந்துலு மாவட்டத்தின் தலைநகரமாகும். சரவாக் மாநகர் கூச்சிங்கிற்கு வடகிழக்கே 610 கி.மீ. (380 மைல்); சிபுவிற்கு வடகிழக்கே 216 கி.மீ. (134 மைல்); மிரிக்கு தென்மேற்கே 200 கி.மீ. (120 மைல்) தொலைவில் அமைந்து உள்ளது.

பிந்துலு நகரம்
Bintulu Town
சரவாக்
மேலிருந்து, இடமிருந்து வலமாக:
நகர மையப் பகுதி, சென்ட்ரல் சந்தை, மலேசியப் புத்ரா பலகலைக்கழகம் பிந்துலு, கரையோர நடமாடும் பகுதி மற்றும் குடிமை மையம்.
பிந்துலு நகரம் is located in மலேசியா
பிந்துலு நகரம்
பிந்துலு நகரம்
      பிந்துலு       மலேசியா
ஆள்கூறுகள்: 03°10′24″N 113°02′36″E / 3.17333°N 113.04333°E / 3.17333; 113.04333
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுபிந்துலு
மாவட்டம்பிந்துலு
ஜேம்சு புரூக்1862
பிந்துலு மேம்பாட்டுக் கழகம்8 சூலை 1978
பரப்பளவு
 • மொத்தம்2,253.5 km2 (870.1 sq mi)
 • பிந்துலு[1]237.12 km2 (91.55 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்114,058
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு97xxx[2]
மலேசியத் தொலைபேசி எண்கள்+6086 [3]
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்QT
இணையத்தளம்Bintulu Administrative Division

1861-ஆம் ஆண்டில் ராஜா ஜேம்சு புரூக், பிந்துலுவை கையகப்படுத்தும் போது அது ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்தது. பின்னர் 1862-ஆம் ஆண்டில் ராஜா ஜேம்சு புரூக் அங்கு ஒரு கோட்டையைக் கட்டினார். 1867-இல், முதல் பொதுக்குழு கூட்டம் (General Council); (இப்போது சரவாக் மாநில சட்டமன்றம்) பிந்துலுவில் கூட்டப்பட்டது.

1969-ஆம் ஆண்டு, தென்சீனக் கடற்கரையில் எண்ணெய் எரிவாயு இருப்புக்கள் கண்டுபிடிக்கப்படும் வரையில், பிந்துலு ஒரு சின்ன மீன்பிடி கிராமமாகவே இருந்தது. எரிவாயு இருப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், பிந்துலு நகரம், தொழில்களின் மையமாக மாறியுள்ளது.

சொல் பிறப்பியல்

16-ஆம் நூற்றாண்டின் போது, போர்த்துகீசிய கடலோடிகளால் "ரிவர் டி புருலு" (River de Burulu) என்று பிந்துலு பெயரிடப்பட்டது.[4] பிந்துலு என்ற பெயரில் பல புராணக் கதைகள் உள்ளன. புரூக் வம்சத்தின் வெள்ளை இராஜா ஆட்சியின் போது, சரவாக் பழங்குடியினரின் சமூகத்தில், தங்கள் சமூகத் தகுதியைத் தக்க வைத்துக் கொள்ள தலை வேட்டையாடுதல் (Headhunting) எனும் பழக்கத்தைப் பின்பற்றி வந்தனர்.

பின்னர் வேட்டையாடியத் தலைகளை கெமெனா ஆற்றில் (Kemena River) வீசி விடுவார்கள். அதன் பிறகு ஆற்றில் இறங்கி அந்தத் தலைகளைச் சேகரிப்பார்கள். தலைகளைச் சேகரிக்கும் நடைமுறையை "மெந்து உலாவ்" (Mentu Ulau) என உள்ளூர்ப் பூர்வீக மொழியில் அழைத்தார்கள்.[5]

இந்த மெந்து உலாவ் எனும் சொல்லில் இருந்து பிந்துலு எனும் சொல் உருவாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.[6]

பொது

1950-இல் பிந்துலு மீன்பிடி கிராமம்

பிந்துலுவின் முதல் விமான ஓடுபாதைக் கட்டுமானம் 1934-இல் தொடங்கியது. நிதி சிக்கல்களின் காரணமாக 1938-இல் நிறுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, நேச நாட்டுப் படைகளால் கடுமையாகக் குண்டுகள் வீசித் தாக்கப்பட்டது.

பின்னர் ஆங்கிலேயர்கள் அந்த விமான ஓடுபாதையை மீண்டும் கட்டினார்கள். 1955-இல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியது. 2002-இல், பழைய வானூர்தி நிலையத்திற்குப் பதிலாக புதிய பிந்துலு வானூர்தி நிலையம் கட்டப்பட்டது.

பிந்துலு நகரத்தின் பொருளாதாரம், எண்ணெய் பனை, வனத் தோட்டங்கள் (forest plantations), பாமாயில் பதப் படுத்துதல், மரக்கழிவு பதப் படுத்துதல் மற்றும் சிமெண்டு உற்பத்தி ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. சரவாக் மாநிலத்தில் பிந்துலு துறைமுகம் மிகவும் பரபரப்பான துறைமுகமாகும்.

வரலாறு

சரவாக்கின் வெள்ளை ராஜா

1868-இல் பிந்துலு கெப்பல் கோட்டை

ஜேம்சு புரூக், 1841-ஆம் ஆண்டில் புரூணை சுல்தானகத்தால் சரவாக்கின் வெள்ளை ராஜாவாக நியமிக்கப் பட்டார். அப்போது சரவாக் என்று அழைக்கப்பட்டது. இப்போது அந்தப் பகுதி கூச்சிங் என்று அழைக்கப்படுகிறது. இருபது ஆண்டுகள் கழித்து 1861-இல், பிந்துலு பகுதியையும் புரூணை சுல்தானகம் விட்டுக் கொடுத்தது.[7][8]

அந்தக் கட்டத்தில், பிந்துலு ஒரு சிறிய குடியேற்றப் பகுதியாக இருந்தது. பிந்துலு கிராமத்தில் கெப்பல் கோட்டை (Fort Keppel) எனும் ஒரு மரக் கோட்டை கட்டப்பட்டது. ராஜா ஜேம்சு புரூக் மற்றும் சார்லஸ் புரூக்கின் நெருங்கிய நண்பரான சர் என்றி கெப்பல் (Sir Henry Keppel) என்பவரின் பெயர் அந்தக் கோட்டைக்குச் சூட்டப்பட்டது.[9]

ஜப்பானியர் ஆட்சி

இரண்டாம் உலகப் போரின் போது, கூச்சிங், ஓயா, முக்கா, பிந்துலு மற்றும் மிரி ஆகிய இடங்களில் விமான ஓடுதளங்களைக் கட்ட ராஜா சார்லஸ் வைனர் புரூக் (Rajah Charles Vyner Brooke) உத்தரவிட்டார்.

பிந்துலு விமான ஓடுதளத்தின் கட்டுமானம் 1934-இல் தொடங்கப்பட்டது. நிதிப் பற்றாக்குறை காரணங்களால் அக்டோபர் 1938-இல் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. இருப்பினும் பிந்துலு விமான ஓடுதளத்தைத் தவிர மற்ற அனைத்து விமானப் பாதைகளும் கட்டி முடிக்கப்பட்டன.[10]

சார்லஸ் வைனர் புரூக்

1950-களில் பிந்துலு நகரம்

ஜப்பானியப் படைகள் 16 டிசம்பர் 1941-இல் மிரியில் தரையிறங்கின. 24 டிசம்பர் 1941-இல் கூச்சிங்கைக் கைப்பற்றின. அத்துடன் சரவாக் ஜப்பானியர்களின் கைகளில் விழுந்தது.

ஜப்பானியர்கள் சரவாக் மீது படையெடுப்பதற்கு முன்பாகவே, சார்லஸ் வைனர் புரூக் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விட்டார்.

இருப்பினும் அவரின் அரசு அதிகாரிகள் ஜப்பானியர்களால் பிடிக்கப்பட்டு, பத்து லிந்தாங் முகாமில் (Batu Lintang camp) அடைக்கப்பட்டனர்.[11]

ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது, ஜப்பானியர்கள் இராணுவ நோக்கங்களுக்காக பிந்துலு விமான ஓடுதளத்தைப் பயன்படுத்தினர். இருப்பினும், நேச நாட்டுப் படைகளால் பிந்துலு விமான ஓடுதளம் கடுமையாகத் தாக்கப்பட்டது. போருக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் விமான ஓடுதளத்தை புனரமைத்தனர்.

காலநிலை

பிந்துலு நகரம் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமான மழை பெய்யும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், பிந்துலு (1961–1990)
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)34.1
(93.4)
33.7
(92.7)
34.7
(94.5)
36.0
(96.8)
35.6
(96.1)
35.4
(95.7)
35.2
(95.4)
36.3
(97.3)
35.6
(96.1)
34.6
(94.3)
34.0
(93.2)
34.7
(94.5)
36.3
(97.3)
உயர் சராசரி °C (°F)29.5
(85.1)
29.8
(85.6)
30.4
(86.7)
31.2
(88.2)
31.6
(88.9)
31.7
(89.1)
31.4
(88.5)
31.4
(88.5)
31.0
(87.8)
30.9
(87.6)
30.6
(87.1)
30.2
(86.4)
30.8
(87.4)
தினசரி சராசரி °C (°F)25.9
(78.6)
26.1
(79)
26.6
(79.9)
27.0
(80.6)
27.2
(81)
27.1
(80.8)
26.7
(80.1)
26.8
(80.2)
26.6
(79.9)
26.6
(79.9)
26.3
(79.3)
26.2
(79.2)
26.6
(79.9)
தாழ் சராசரி °C (°F)23.1
(73.6)
23.3
(73.9)
23.5
(74.3)
23.7
(74.7)
23.8
(74.8)
23.5
(74.3)
23.2
(73.8)
23.3
(73.9)
23.3
(73.9)
23.4
(74.1)
23.2
(73.8)
23.2
(73.8)
23.4
(74.1)
பதியப்பட்ட தாழ் °C (°F)18.9
(66)
19.9
(67.8)
19.4
(66.9)
21.1
(70)
21.1
(70)
20.0
(68)
20.6
(69.1)
20.6
(69.1)
20.6
(69.1)
21.1
(70)
19.4
(66.9)
20.0
(68)
18.9
(66)
பொழிவு mm (inches)445.8
(17.551)
237.9
(9.366)
268.7
(10.579)
244.8
(9.638)
242.4
(9.543)
256.4
(10.094)
254.3
(10.012)
290.3
(11.429)
295.7
(11.642)
335.5
(13.209)
427.0
(16.811)
450.6
(17.74)
3,749.4
(147.614)
ஈரப்பதம்87878585858584858586858785
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm)191415151312141516182021192
சூரியஒளி நேரம்142.1151.0178.1192.9204.3201.3203.5186.7171.2171.2164.8163.62,130.7
Source #1: NOAA[12]
Source #2: Deutscher Wetterdienst (humidity, 1930–1969),[13] Meteo Climat (record highs and lows)[14]

இனப்பிரிவுகள்

பிந்துலு மாவட்ட இனப் புள்ளி விவரம்[15]
மொத்தம்
மக்கள் தொகை
மலாய்இபான்பிடாயூமெலனாவ்பிற
பூமிபுத்ரா
சீனர்இந்தியர்பிற
பூமிபுத்ரா
மலேசியர் அல்லாதவர்
183,40220,03672,8092,22517,02911,42130,83143072827,893

பிந்துலு காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பிந்துலு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிந்துலு&oldid=3645046" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை