புளோரிடா

ஐக்கிய அமெரிக்காவின் மாநிலம்

புளோரிடா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் தலகாசீ தலைநகரமாகவும், ஜாக்சன்வில் பெரிய நகரமாகவும், மயாமி பெரிய பெருநகர்ப் பகுதியாகவும் இருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவில் 27 ஆவது மாநிலமாக 1845 இல் இணைந்தது. இது ஈரலிப்பான அயன அயல் மண்டல காலநிலை உடையது. இந்த மாநிலம், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 மாநிலங்களில், 8 ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகும்[3].

புளோரிடா மாநிலம்
Flag of புளோரிடாState seal of புளோரிடா
புளோரிடாவின் கொடிபுளோரிடா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): வெயில் மாநிலம்
குறிக்கோள்(கள்): கடவுளை நம்புவோம்
புளோரிடா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
புளோரிடா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்)ஆங்கிலம்
தலைநகரம்டலஹாசி
பெரிய நகரம்ஜாக்சன்வில்
பெரிய கூட்டு நகரம்மயாமி மாநகரம்
பரப்பளவு  22வது
 - மொத்தம்65,795[1] சதுர மைல்
(170,304[1] கிமீ²)
 - அகலம்361 மைல் (582 கிமீ)
 - நீளம்447 மைல் (721 கிமீ)
 - % நீர்17.9
 - அகலாங்கு24°27′ வ - 31° வ
 - நெட்டாங்கு80°02′ மே - 87°38′ மே
மக்கள் தொகை 4வது
 - மொத்தம் (2000)15,982,378
 - மக்களடர்த்தி309/சதுர மைல் 
117.3/கிமீ² (8வது)
 - சராசரி வருமானம் $41,171 (36வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளிபிரிட்டன் மலை[2]
345 அடி  (105 மீ)
 - சராசரி உயரம்98 அடி  (30 மீ)
 - தாழ்ந்த புள்ளிஅட்லான்டிக் பெருங்கடல்[2]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
மார்ச் 3, 1845 (27வது)
ஆளுனர்சார்லி கிரிஸ்ட் (R)
செனட்டர்கள்பில் நெல்சன் (D)
மெல் மார்ட்டீனெஸ் (R)
நேரவலயம் 
 - மூவலந்தீவுகிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/DST-4
 - பாத்திரக்காம்புநடு: UTC-6/DST-5
சுருக்கங்கள்FL Fla. US-FL
இணையத்தளம்www.myflorida.com

புவியியல் அமைப்பில் இந்த மாநிலம் ஒரு குடாநாடாக இருப்பதுடன், மேற்குப் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவையும், வடக்குப் பகுதியில் அலபாமா, மற்றும் ஜோர்ஜியாவையும் ஐயும், கிழக்குப் பகுதியில் அத்திலாந்திக் பெருங்கடலையும் கொண்டுள்ளது. குடாநாடாக இருப்பதனால், தொடர்ந்த கடற்கரைப் பகுதிகளை சுற்றிலும் கொண்டிருப்பதுடன், அடிக்கடி வெப்ப மண்டலச் சூறாவளி தோன்றும் இடமாகவும் இருக்கின்றது. புளோரிடா மாநிலத்தில் பரந்து காணப்படும் சதுப்புநில தேசியப் பூங்காவில் (Everglades National Park), மிக அரிதான விலங்குகள் பல காணப்படுகின்றன. இன அச்சுறுத்தலுக்கு உட்பட்ட பல அருகிய இனங்கள், இந்தப் தேசியப் பூங்காவில், இயற்கைச் சூழலில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன[4][5]. புளோரிடாவில் அமைந்திருக்கும் இந்த தேசியப் பூங்காவானது, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கியமான சுற்றுலா மையங்களில் ஒன்றாக இருக்கின்றது[6].

சுற்றுலாத்துறையில் மிகவும் பிரபலமடைந்திருக்கும் வால்ட் டிஸ்னி உலகம் இந்த புளோரிடா மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ஒர்லாண்டோ நகரத்தில் உள்ளது. வால்ட் டிஸ்னி உலகத்திற்குச் சொந்தமான நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும் இங்கே அமைந்திருக்கின்றன.

அதன் மேற்குக் கடற்கரை

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புளோரிடா&oldid=3716824" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை