பூலிய இயற்கணிதம்

கணிதத்திலும், கணித ஏரணவியலிலும், பூலிய இயற்கணிதம் (Boolean algebra) என்பது இயற்கணிதத்தின் ஒரு பிரிவாகும். இப்பிரிவில், வேறிகளின் மதிப்பு உண்மை, இன்மை என்னும் இரு நிலைகளேயாகும். இவை முறையே 1 அல்லது 0 என்று குறிக்கப்படும். இயற்கணிதத்தில் வேறிகளின் மதிப்பை எண்களைக் கொண்டு குறிப்பது போலின்றி, பூலிய இயற்கணிதத்தில், எண்கள் பயன்படுத்தப்படுவதில்லை. அதுபோன்றே கூட்டல், கழித்தல் போன்ற பிணைகளின்றி, இதில் உண்மை இன்மை ஆகிய இருநிலைகளில் ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் (AND), ஒன்று அல்லது மற்றது (OR), அல்லாத (NOT), என்பவையே பிணைகளாக அமையும். எண்சார்ந்த உறவை இயற்கணிதம் விளக்குவதைப் போல, ஏரண உறவை பூலிய இயற்கணிதம் விளக்குகிறது.

பூலிய இயற்கணிதம், ஜார்ஜ் பூல் என்பவரால் தனது முதல் புத்தகமான, The Mathematical Analysis of Logic (1847) என்னும் புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு An Investigation of the Laws of Thought (1854).[1]என்பதில் இதுபற்றி இன்னும் விரிவாகக் குறிப்பிடுகிறார்.

1913 ஆம் ஆண்டு ஹென்றி செபர் என்பவர் இத்துறைக்கு பூலிய இயற்கணிதம் என்று வழங்கலாம் என்று முன்மொழிந்தார்.[2]

பூலிய இயற்கணிதமானது மின்னியல் துறை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாய் இருந்திருக்கிறது. அண்மைய கணிமொழிகள் அனைத்திலும் ஒரு அங்கமாக இருக்கிறது. கணக் கோட்பாடு, புள்ளியியல் துறைகளிலும் பயனுள்ளதாக இருக்கிறது.[3]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பூலிய_இயற்கணிதம்&oldid=3582698" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை