மோனோட்ரீம்கள்

பாலூட்டி வரிசை

முதல் நிலை பாலூட்டிகள் அல்லது மோனோட்ரீம்கள் (Monotreme) என்று அழைக்கப்படுபவை பாலூட்டிகளின் துவக்க நிலைப் பண்புகள் கொண்டுள்ள விலங்குகளாகும். இவை நீரிலும், நிலத்திலிலும் புகுந்து வாழக்கூடிய இரவாடிகள் ஆகும். மோனோட்ரீம்களில் எஞ்சியிருக்கும் உயிரினங்கள் அனைத்தும் ஆஸ்திரேலியா, நியூ கினியாவை பூர்வீகமாக கொண்டவையாக உள்ளன, இருப்பினும் இவற்றில் சில தென் அமெரிக்காவில் பரவலாக இருந்து அழிந்துபோயின என்பதற்கான சான்றுகள் உள்ளன.[4] தற்போதுள்ள மோனோட்ரீம் இனங்களில் எஞ்சியுள்ளவை வாத்தலகி மற்றும் நான்கு வகையான எச்சிட்னாக்கள் ஆகும். மோனோட்ரீகளை வகைபிரித்தல் தொடர்பாக தற்போது சில விவாதங்கள் நடந்துவருகின்றன.

மோனோட்ரீம்கள்[2]
புதைப்படிவ காலம்:Late Triassic[1] – Holocene, 210–0 Ma
PreЄ
Pg
N
தற்போதுள்ள ஐந்து மோனோட்ரீம் இனங்களில் நான்கு: வாத்தலகி (மேல்-இடது), ஷாட்-பீக்கட் எச்சிட்னா (மேல்-வலது), மேற்கத்திய நீண்ட-பீக்கட் எச்சிட்னா (கீழ்-இடது), ரிப்பிகா லாங்-பீக்கட் எச்சிட்னா (கீழ்-வலது)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
Subclass:
Yinotheria
Infraclass:
Australosphenida
வரிசை:
Monotremata

C.L. Bonaparte, 1837[3]
Subgroups
  • †Kryoryctes?
  • †Steropodontidae
  • Platypoda
    • Ornithorhynchidae
  • Tachyglossa
    • Tachyglossidae

விளக்கம்

இந்த விலங்குகளின் தோல் உரோமத்தால் போர்த்தப்பட்டது. புறக் காது மடல்கள் காணப்படுவதில்லை. ஆண் விலங்குகளின் பின் கால்களில் உரோமக் குழல்கள் உள்நோக்கியவாறு காணப்படுகின்றன. பால் முனைக் காம்பற்ற பால் சுரப்பிகள் உள்ளன. வளர்ச்சி அடைந்த உயிரிகளுக்கு பற்கள் காணப்படுவதில்லை. உணவுப் பாதை வாய்க் குழியில் துவங்கி பொதுக் கழிவாயில் முடிவடைகிறது. இவை நுரையீரல்கள் காெண்டு சுவாசிக்கின்றன. கார்பஸ் கலோசம் அற்ற இதன் மூளை எளிய அமைப்பு கொண்டது.

இவற்றின் கழிவு நீக்க மண்டலமாக மெட்டாநெப்ரிக் சிறுநீரகங்கள் உள்ளன. சிறுநீர் நாளங்கள் சிறுநீரக இனப்பெருக்க புழையில் திறக்கின்றன. இவற்றின் இதயம் நான்கு அறைகள் கொண்டது. இதய நாண்கள் கிடையாது.

இவற்றின் இனப்பெருக்க மண்டலமானது முதிராப் பண்பினைக் காட்டுவதாக உள்ளன. இதன் விந்துச் சுரப்பி வயிற்றுக் குழியிலேயே உள்ளது. வலது சினையகம் குன்றியுள்ளது. பெண் உயிரிகள் முட்டையிடக் கூடியன. அகக் கருவுருதல் காணப்படுகிறது.

சிறப்புப் பண்புகள்

  • பால் சுரப்பிகள் வியர்வை சுரப்பியிலிருந்து மாற்றம் அடைந்துள்ளன.
  • பின்னங்கால்களில் காணப்படும் டார்சல் உரோம நீட்சிகள் ஆண் உயிரிகளில் உள்ளன.
  • பெண் உயிரிகளில் அடைக் காப்பு காலத்தின் போது பால் சுரப்பியை தற்காலிகமாக காணப்படுகிறது.

மேற்கோள்கள்

பார்வை நூல்

Chordate Zoology by E. L. Jordan, P. S. Verma

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மோனோட்ரீம்கள்&oldid=2954939" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை