யுகடான் தீபகற்பம்

யுகடான் தீபகற்பம் (Yucatán Peninsula) என்பது மெக்ஸிகோ நாட்டின் தெற்கு மெக்ஸிகோ பகுதியில் உள்ள ஒரு தீபகற்பம் ஆகும். இது மெக்ஸிகோ வளைகுடாவை கரிபியன் கடலையும் பிரிக்கும் முக்கிய நிலப்பகுதியாகும். இந்த தீபகற்ப பகுதியில் தான் மெக்ஸிகோ நாட்டின் மாநிலங்களான யுகடான், கம்பெச்சே, குயிண்டனா ரூ போன்ற மாநிலங்கள் அமைந்துள்ளன. இந்த தீபகற்பம் சுமார் 181,000 கிமீ 2 (70,000 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. இது முற்றிலும் சுண்ணாம்புக் கற்களால் ஆனது.[1][2]

வரலாறு

யுகடான் தீபகற்பமானது 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரேஸ்டேசியன் காலத்தின் முடிவில் 10 முதல் 15 கிலோமீட்டர் (6 முதல் 9 மைல்) விட்டம் கொண்ட  சிறுகோள் புவியைத் தாக்கியதால் உருவான சிக்சுலக் பள்ளத்தாக்கின் தளமாகும்.[3]

யுகடான் தீபகற்பம் பண்டைய மாயா தாழ்நிலப்பகுதியின் பெருமளவு பகுதியை கொண்டிருந்ததுடன் பண்டைய மாயா நாகரிகத்தின் மையமாக இருந்தது. இத்தீபகற்பத்தில் சிச்சென் இட்சா, கோபா, துலம் ஆகிய நன்கு அறியப்பட்ட மாயா தொல்பொருள் இடங்கள் காணப்படுகின்றன. மாயா பழங்குடியினரின் வம்சாவளியைச் சேர்ந்தோர் மற்றும் மெசிடோஸ் பிராந்திய மக்கள் இங்கு கணிசமான அளவு வாழ்கிறார்கள்.[2] மேலும் மாயன் மொழியும் பரவலாக பேசப்படுகின்றன. இத் தீபகற்பத்தில் மெக்சிகன் மாநிலமான யுகடான், காம்பேச், குயின்டனா ரூ, பெலிஸ் மற்றும் குவாத்தாமாலாவின் பெட்டான் துறை பெரும் பகுதிகள் அமையப்பெற்றுள்ளது.[4]

பொருளாதாரம்

இத்தீபகற்பத்தில் நவீன காலத்தின் முற்பகுதி வரையிலும் கால்நடை வளர்ப்பு, மரம் வெட்டுதல்,  பாரம்பரிய மெல்லும் கோந்தின் உற்பத்திக்கு மெசோஅமெரிக்கன் மரங்களில் இருந்து பால் சேகரித்தல் மற்றும் ஹெனிகின் எனப்படும் தாவரத்தில் இருந்து ஒருவகை மதுபானம் தயாரித்தல் என்பன பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்தின. 1970 ஆம் ஆண்டுகளில் (இருந்து செயற்கை மாற்றீடுகளின் வருகையால் பாரம்பரிய மெல்லும் கோந்தின் உற்பத்தி மற்றும் ஹெனிகின் மதுபானம் ஆகியவற்றின் சந்தை வீழ்ச்சியினால்) பொருளாதார வளர்ச்சிக்காக சுற்றுலாத்துறையில் கவனம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக மெக்சிகன் மாநிலமான குயின்டனா ரூவில், தீபகற்பத்தின் வடகிழக்கில் உள்ள முன்பு சிறிய மீன்பிடி கிராமமான கான்கன் மற்றும் தூலூம் நகரங்களுக்கிடையே தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் பரவியிருக்கும் ரிவியரா மாயாவில் 50,000 படுக்கைகள், மற்றும் பிளாயா டெல் கார்மென் நகரின் சுற்றுச்சூழல் பூங்காக்கள், துலூம் மற்றும் கோபாவின் மாயா இடிபாடுகள் ஆகியவை மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களாகும்.

நிலவியல்

தீபகற்பத்தின் வெளிப்படும் பகுதிகள் அனைத்திம் கார்பனேட் மற்றும் கரையக்கூடிய பகுதிகளால் ஆனது. பெரும்பாலும் சுண்ணாம்புக் கல்லாக இருப்பதால் டொம்மைட் மற்றும் ஆவியாக்கிகள் பல்வேறு ஆழங்களில் உள்ளன. நாட்டின் உட்பகுதியில் சினோட்கள் எனப்படும் சுண்ணாம்பு கரட்டு பள்ளங்கள் பரவலாக காணப்படுகின்றன.[2]

அல்வரேசின் கருதுகோளின் படி 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியசில் காலத்தில் இருந்து பேலியோஜீன் காலத்திற்கு மாறும் போது கரிபியனில் சிறுகோள் தாக்கத்தால் ஏற்பட்ட ஆழமாக புதைக்கப்பட்ட சிக்சுலக் பள்ளத்தாக்கு தீபகற்பத்தின் வடக்கு கடற்கரையில் சிக்சுலக் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.

நீர்வளமும் தாவரங்களும்

முழு தீபகற்பமும் சுண்ணாம்புக்கரடு தன்மை கொண்டது. தீபகற்பத்தின் வடக்கு பாதியில் ஆறுகள் காணப்படுதில்லை. அங்கு ஏரிகள், சதுப்பு நிலங்களில் காணப்படும் தண்ணீர் பொதுவாக உகந்ததாக இருக்காது. குறுகிய மற்றும் உயரமான வெப்பமண்டல காடுகள் யுகடான் தீபகற்பத்தின் இயற்கை தாவர வகைகளாகும். இந்த காடுகள் காடழிப்புக்கு உள்ளாகின்றன.[1]

காலநிலை

கரிபியனின் ஏனைய பெரும்பகுதிகளைப் போலவே யுகடான் தீபகற்பமும் பெரும் புயல்களால் பாதிக்கப்படக்கூடியது. நார்ட்டெஸ் எனப்படும் வலுவான புயல்கள் யுகடான் தீபகற்பத்தில் வருடத்தின் எந்த நேரத்திலும் தாக்கக்கூடும். இந்த புயல்கள் பலத்த மழை மற்றும் அதிக காற்றுடன் இப்பகுதியைத் குறுகிய காலத்திற்கு தாக்கும். மாதாந்திர மழைவீழ்ச்சி குறைந்தது ஏப்ரல் மாதத்தில் 7% வீதமும், கூடுதலாக அக்டோபரில் 25% வீதமும் காணப்படும். பொதுவாக மழைக்காடு பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்.[2][தொடர்பிழந்த இணைப்பு]

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யுகடான்_தீபகற்பம்&oldid=3269863" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை