யுன்னான்

யுன்னான் (எளிய சீனமொழி 云南, மரபார்ந்த சீனமொழி 雲南 ஆங்கிலம் Yunnan) என்பது சீனாவின் மாகாணங்களில் ஒன்று. இது சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ளது. இம்மாகாணத்தின் தலைநகர் குன்மிங். கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இது ஹன் அரச வம்சத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

எல்லை

சீனாவின் மாகாணங்களில் திபெத்து, சிச்சுவான், குயீசூ, குவாங்சீ ஆகியவற்றுடனும் மியான்மர், லாவோஸ், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளுடனும் எல்லையைக் கொண்டுள்ளது.

ஆளுமைப் பிரிவு

எட்டு நகரப்பகுதிகள் எட்டு தன்னாட்சிப்பகுதிகள் என இது பதினாறு பிரிவுகளைக் கொண்டது. தாலி நகரம் முக்கிய இடம் பெறுகிறது.

மக்கள்

இங்கு பல்வேறு இன மக்கள் வசிக்கின்றனர். சீன அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 56 இனக்குழுக்களில் 35 இனக்குழு இந்த மாகாணத்தில் வாழ்கின்றனர்.

இயற்கை வளங்கள்

இது இயற்கை வளங்களும், தாதுக்களும் நிரம்பிய பகுதி. இங்கு காப்பி தயாரிப்பு முக்கிய இடம் பெறுகிறது. அரிசி, சோளம், உருளைக் கிழங்கு உள்ளிட்டவையும் விளைவிக்கப்படுகின்றன.

இம்மாகாணத்தின் வடமேற்கில் உயர்ந்த மலைகளும் தென்கிழக்கில் தாழ்ந்த நிலப்பகுதியும் உள்ளன.இங்குள்ள இயற்கைச் சூழலால் கவரப்பட்டுப் பலர் வருகின்றனர். சுற்றுலாத் துறையும் வருவாயில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. யுனெசுகோவின் பாரம்பரியக் களங்களும், தேசியப் பூங்காக்களும் இங்கு உள்ளன.

போக்குவரத்து

இங்கு ரயில் போக்குவரத்து வசதி உண்டு. பிற நாடுகளை இணைக்கும் சாலைப் போக்குவரத்தும் உள்ளது.


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யுன்னான்&oldid=2043511" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை