ரோட்ஸ்

ஏஜியன் கடலில் உள்ள கிரேக்கத் தீவு

ரோட்ஸ் (Rhodes, கிரேக்கம்: Ρόδος‎) என்பது கிரேக்கத்தின் டோடெகனீஸ் தீவுகளில் மிகப்பெரியது மற்றும் தீவுக் குழுவின் வரலாற்று தலைநகராகவும் இருந்தது ஆகும். நிர்வாக ரீதியாக இந்தத் தீவு ரோட்ஸ் பிராந்திய அலகுக்குள் ஒரு தனி நகராட்சியைக் கொண்டுள்ளது. இது தெற்கு ஏஜியன் நிர்வாக பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். தீவின் முக்கிய நகரம் மற்றும் நகராட்சியாக தீவின் பெயராலேயே அமைந்த ரோட்ஸ் நகரம் உள்ளது.[2] ரோட்ஸ் நகரில் 2011 இல் 50,636 மக்கள் இருந்தனர். இது ஏதென்சின் தென்கிழக்கே கிரீட்டின் வடகிழக்கில் அமைந்துள்ளது. 1310 முதல் 1522 வரை தீவை ஆண்ட ஜெருசலேமின் செயிண்ட் ஜானின் மாவீரர்களின் பெயரால் [3] மாவீரர் தீவு மற்றும் முத்துத் தீவு என்றும் ரோட்ஸ் தீவின் காவல் தெய்வமான சூரியக் கடவுள் ஹீலியோசின் காரணமாக சூரியனின் தீவு போன்ற பல புனைப்பெயர்கள் இத்தீவுக்கு உள்ளன.[3]

ரோட்ஸ்
Ρόδος
தீவு மற்றும் நகராட்சி
ரோட்ஸ்-இன் கொடி
கொடி
ஆள்கூறுகள்: 36°10′N 27°56′E / 36.167°N 27.933°E / 36.167; 27.933
நாடுகிரேக்கம்
நிர்வாகப் பிராந்தியம்தெற்கு ஏஜியன்
PrefectureDodecanese
பிராந்திய அலகுரோட்ஸ்
தொகுதிரோட்ஸ்
அரசு
 • மேயர்அன்டோனியோஸ் கம்பூராகிஸ் [1] (New Democracy)
பரப்பளவு
 • மொத்தம்1,400.68 km2 (540.81 sq mi)
உயர் புள்ளி (Attavyros)1,216 m (3,990 ft)
தாழ் புள்ளி0 m (0 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,15,490
 • அடர்த்தி82/km2 (210/sq mi)
இனங்கள்Rhodian, Rhodiot or Rhodiote (rare)
நேர வலயம்EET (ஒசநே+2)
 • கோடை (பசேநே)EEST (ஒசநே+3)
அஞ்சல் குறியீட்டு எண்851 00, 851 31, 851 32, 851 33 (ரோட்ஸ் நகருக்கு)
தொலைபேசிக் குறியீடு2241, 2244, 2246
இணையதளம்www.rhodes.gr
General view of the village of Lindos, with the acropolis and the beaches, island of Rhodes, Greece.
கிரேக்கத்தின் ரோட்ஸ் தீவு, லிண்டோஸ் கிராமத்தின் உள்ளரண் மற்றும் கடற்கரையுடன் பொதுவான ஒரு காட்சி

வரலாற்று ரீதியாக, ரோட்ஸ் தீவு பண்டைய உலக ஏழு அதிசயங்களில் ஒன்றான ரோடோசின் கோலோசுக்கு உலகளவில் மிகவும் பிரபலமானது. ரோட்ஸ் நகரின் இடைக்கால பழைய நகரம் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று, இது ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.[4][5][6][7]

நிலவியல்

ரோட்சின் நிலப்பரப்பு வரைபடம்
அக்ரமிடிஸ் மலை

ரோட்ஸ் தீவு 79.7 கிமீ (49.5 மைல்) நீளமும், 38 கிமீ (24 மைல்) அகலமும் கொண்ட ஒரு ஈட்டி முனை போன்ற வடிவத்தில் அமைந்துள்ளது. தீவின் மொத்த பரப்பளவு தோராயமாக 1,400 சதுர கிலோமீட்டர் (541 சதுர மைல்) ஆகும். மேலும் தோராயமாக 220 கிமீ (137 மைல்) கடற்கரையைக் கொண்டுள்ளது. தீவின் முக்கிய அடித்தளமாக சுண்ணாம்புக்கல் உள்ளது.[8] தீவின் வடக்கு முனையில் ரோட்ஸ் நகரம் மற்றும் பண்டைய மற்றும் நவீன வணிக துறைமுகங்களின் தளமும் அமைந்துள்ளது. தீவின் முக்கிய வானூர்தி நிலையம் (டயகோரஸ் சர்வதேச விமான நிலையம், IATA குறியீடு: RHO) பாரதிசியில் நகரின் தென்மேற்கில் 14 கிமீ (9 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. சாலை வசதியின் வலையமைப்பு நகரத்திலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகள் வரை பரவியுள்ளது.

தீவில் ரோட்ஸ் நகருக்கு வெளியே, ஒயிட் வாஷ் ஹவுஸ் மற்றும் ஸ்பா ரிசார்ட்கள் கொண்ட சிறிய கிராமங்களான ஃபாலிராகி, லிண்டோஸ், க்ரெமாஸ்டி, ஹராக்கி, பெஃப்கோஸ், ஆர்க்காங்கெலோஸ், அஃபான்டோ, இக்ஸியா, கோஸ்கினோ, எம்போனா ( அட்டாவிரோஸ், பாராடியோஸ் ), ட்ரியாண்டா (Ialysos) போன்றவை உள்ளன.

ரோட்ஸ் தீவானது கிரேக்க நிலப்பரப்பில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 363 கிமீ (226 மைல்) தொலைவிலும், துருக்கியின் தெற்குக் கரையிலிருந்து 18 கிமீ (11 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. 1,216 மீட்டர் (3,990 அடி) உயரம் கொண்ட அட்டாவிரோஸ் மலை, தீவின் உயரமான இடமாகும்.

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ரோட்ஸ்&oldid=3712741" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை