விண்மீன்களிடை ஊடகம்

விண்மீன்களிடை ஊடகம் (interstellar medium) என்பது, விண்மீன்களுக்கு இடையிலான வெளியில் பரவியிருக்கும் தூசி, வளிமங்கள் போன்றவற்றைக் குறிக்கும். விண்மீன்களிடை ஊடகம் என்பது, கலக்சிகளில் உள்ள விண்மீன்களுக்கு இடையில் உள்ள பொருட்களைக் குறிக்கும் அதே வேளை, அவ்வெளியில் பரந்திருக்கும், மின்காந்தக் கதிர்வீச்சு, விண்மீன்களிடைக் கதிர்வீச்சுப் புலம் (interstellar radiation field) எனப்படுகின்றது.

விண்மீன்களிடை ஊடகம், அயன்கள், அணுக்கள், மூலக்கூறுகள், பெரிய தூசிப் பருக்கைகள், அண்டக் கதிர்கள், காந்தப் புலங்கள் போன்றவற்றின் மிக ஐதான கலவையைக் கொண்டுள்ளது. இதிலுள்ள பொருட்கள் திணிவு அடிப்படையில் 99% வளிமங்களையும்,1% தூசியையும் கொண்டுள்ளது.

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை