வீட்டுத் தகைவிலான்

பறவை இனம்
வீட்டுத் தகைவிலான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கிருண்டோ
இனம்:
கி. தகிடிகா
இருசொற் பெயரீடு
கிருண்டோ தகிடிகா
ஜெமிலின், 1789

வீட்டுத் தகைவிலான் (Pacific swallow) என்பது தெற்காசியாவிலும் தென் பசிபிக் தீவுகளிலும் காணப்படும் (கிருண்டோ தகிடிகா) தகைவிலா குடும்பத்தில் உள்ள ஒரு சிறிய குருவி வகைச் சிற்றினம் ஆகும். இந்த பறவை கடற்கரையோரங்களுடன் தொடர்புடையது, ஆனால் பெருகிய காடுகள் நிறைந்த மேட்டு நிலங்களிலும் காணப்படும்.[2]

வீட்டுத் தகைவிலான்

துணையினங்களும் பரவலும்

உடலமைப்பு

இந்தப் பறவை 13 செ. மீ. உடல் நீளம் வரை வளரக்கூடியது. இதன் நெற்றி செம்பழுப்பு நிறத்தில் உடலின் மேற்பகுதி பசுமை தோய்ந்த பளபளக்கும் கருப்பு நிறத்திலும், மேவாய், தொண்டை, மார்பின் மேற்பகுதி ஆகியன செம்பழுப்பு நிறத்திலும், எஞ்சிய வயிறு, வாலடி ஆகியன வெளிர் சாம்பல் நிறத்தில்ம் காணப்படும். சிறிய பிளவுப்பட்ட வால் இறகுடன் காணப்படும்.[2][3]

இனப்பெருக்கம்

பசிபிக் தகைவிலான் வெப்பமண்டல தெற்கு ஆசியா மற்றும் தெற்கு பசிபிக் தீவுகளில் இனப்பெருக்கம் செய்கிறது.[4] பசிபிக் தகைவிலான் நேர்த்தியான கோப்பை வடிவ கூட்டை உருவாக்குகிறது. அலகின் மூலம் சேகரிக்கப்பட்ட மண் துகள்களால் இக்கூடு கட்டப்படுகிறது. குன்றின் விளிம்பின் கீழ் அல்லது கட்டிடம், பாலம் அல்லது சுரங்கப்பாதை போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளில் இக்கூடி அமையும். கூடு மென்மையான பொருட்களை வரிசையாக அடுக்கி கட்டப்படுகிறது. கூட்டில் இரண்டு அல்லது மூன்று முட்டைகள் வரை இடும். இவை காற்றில் வேகமாகப் பறத்து, பறந்து கொண்டிருக்கும் பூச்சிகளை உண்ணவல்லது.[2]

படங்கள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வீட்டுத்_தகைவிலான்&oldid=3794516" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை