மக்னீசியம்

அணு எண் 12 கொண்ட தனிமம்

மக்னீசியம் (Magnesium) ஒரு தனிமம் ஆகும். இது Mg என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. இதன் அணு எண் 12. அணு நிறை 24.31. இதன் பொதுவான உயிர்வளியேற்ற எண்: +2. காரத்தன்மையுள்ள மக்னீசியம் புவியில் அதிகம் கிடைக்கும் தனிமங்களில் எட்டாவது ஆகும்[2]. புவி ஓட்டின் எடையில் இது 2% ஆகும்.

மக்னீசியம்
12Mg
Be

Mg

Ca
சோடியம்மக்னீசியம்அலுமினியம்
தோற்றம்
பளபளப்பான சாம்பல் திண்மம்


மக்னீசியத்தின் நிறமாலைக்கோடுகள்
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண்மக்னீசியம், Mg, 12
உச்சரிப்பு/mæɡˈnziəm/, mag-NEE-zee-əm
தனிம வகைகாரக்கனிம மாழைகள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு23, s
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
24.3050(6)
இலத்திரன் அமைப்பு[Ne] 3s2
2, 8, 2
Electron shells of magnesium (2, 8, 2)
Electron shells of magnesium (2, 8, 2)
வரலாறு
கண்டுபிடிப்புJ. Black (1755)
முதற்தடவையாகத்
தனிமைப்படுத்தியவர்
H. Davy (1808)
இயற்பியற் பண்புகள்
நிலைதிண்மம்
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்)1.738 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில்1.584 g·cm−3
உருகுநிலை923 K, 650 °C, 1202 °F
கொதிநிலை1363 K, 1091 °C, 1994 °F
உருகலின் வெப்ப ஆற்றல்8.48 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல்128 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை24.869 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa)1101001 k10 k100 k
at T (K)70177386197111321361
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள்2, 1[1]
(வலுவான கார ஆக்சைட்டு)
மின்னெதிர்த்தன்மை1.31 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 737.7 kJ·mol−1
2வது: 1450.7 kJ·mol−1
3வது: 7732.7 kJ·mol−1
அணு ஆரம்160 பிமீ
பங்கீட்டு ஆரை141±7 pm
வான்டர் வாலின் ஆரை173 பிமீ
பிற பண்புகள்
படிக அமைப்புhexagonal
மக்னீசியம் has a hexagonal crystal structure
காந்த சீரமைவுparamagnetic
மின்கடத்துதிறன்(20 °C) 43.9 nΩ·m
வெப்ப கடத்துத் திறன்156 W·m−1·K−1
வெப்ப விரிவு(25 °C) 24.8 µm·m−1·K−1
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)(அ.வெ.) (annealed)
4940 மீ.செ−1
யங் தகைமை45 GPa
நழுவு தகைமை17 GPa
பரும தகைமை45 GPa
பாய்சான் விகிதம்0.290
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
2.5
பிரிநெல் கெட்டிமை260 MPa
CAS எண்7439-95-4
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: மக்னீசியம் இன் ஓரிடத்தான்
isoNAஅரைவாழ்வுDMDE (MeV)DP
24Mg78.99%Mg ஆனது 12 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
25Mg10%Mg ஆனது 13 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
26Mg11.01%Mg ஆனது 14 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
·சா

மனித உடலில் மக்னீசியத்தின் பங்கு

பல்லுக்கும், எலும்புக்கும் அத்தியாவசியமான மற்றொரு தாதுப் பொருள். முழு தானியங்கள், கடலை போன்ற வகைகள், கீரை வகைகள் ஆகியவற்றிலிருந்து உடலுக்குத் தேவையான மக்னீசியம் கிடைக்கிறது.[3] மக்னீசியம் உலர் அத்திப் பழம், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றில் அதிகம் உள்ளது.[4] ஒரு சராசரி பன்முக உயிர்ச்சத்து (multi-vitamin) மாத்திரை தினசரி தேவையில் 25% வரை அளிக்கிறது.[5] 350 மில்லிகிராமுக்கு மேல் மாத்திரையாக உட்கொண்டால் கழிச்சலும், மூச்சடைப்பும் ஏற்படும்.[6][7][8]

கண்டுபிடிப்பு

1808 ல் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானியான சர் ஹம்ப்ரி டேவி என்பார் மக்னீசியம் ஆக்சைடு என்ற என்ற வெள்ளை மக்னீசியாவை மின்னார் பகுப்பிற்கு உட்படுத்தி ஒரு புதிய தனிமத்தைப் பிரித்தெடுத்தார்.[9] இதற்கு மக்னீசியம் என்ற பெயரையும் சூட்டினார்.[9] நீர் மூலக்கூறு நீக்கப்பட்ட மக்னீசியம் குளோரைடை உருக்கி மின்னாற்பகுப்பு மூலம் மக்னீசியத்தை உற்பத்தி செய்ய முடியும். கார்பனை 2000 டிகிரி C வரை சூடு படுத்தி மக்னீசிய ஆக்சைடை ஆக்சிஜனிறக்க வினைக்கு உட்படுத்தி, வெளியேறும் மக்னீசிய ஆவியை ஹைட்ரஜன் வெளியில் சுருக்கி மக்னீசியத்தை உற்பத்தி செய்யலாம்.

பண்புகள்

பூமியின் மேலோட்டுப் பகுதியில் செழுமையின் வரிசையில் மக்னீசியம் 8 வது இடத்தில் உள்ளது.[2] இது இலேசான, பளபளப்புடன் கூடிய வெள்ளி போன்ற உலோகமாகும். இது அலுமினியத்தைக் காட்டிலும் இலேசானது. இரும்பின் அடர்த்தியில் 9 ல் 2 பங்கும், அலுமினியத்தின் அடர்த்தியில் 3ல் 2 பங்கும் உள்ளது. இது கடல் நீரில் அதிகம் உள்ளது.[10] கடல் நீரில் இது மக்னீசியம் குளோரைடாகவும் மக்னீசியம் சல்பேட்டாகவும் கரைந்துள்ளது. கடல் நீரில் அதிகமுள்ள சோடியம் குளோரைடுக்கு அடுத்து அதிகமாக உள்ளது மக்னீசியம் குளோரைடும் அடுத்ததாக மக்னீசியம் சல்பேட்டும் ஆகும். பொதுவாக பூமியில் கிடைக்கும் கடின நீரில் இந்த மக்னீசிய உப்புக்கள் கரைந்துள்ளன. கடின நீரில் சோப்பு நுரை வளம் தருவதில்லை. மெல்லிய கடின நீர் குடிப்பதற்குச் சுவையானது. கால்சிய உப்புக்களை விட மக்னீசிய உப்புக்கள் இரும்பை அரிக்கும் தன்மை கொண்டவை. மக்னீசியம் ஓரளவு மிதமாக வினை புரியக் கூடியது. வறண்ட காற்றில் நிலையானது. ஈரக் காற்றில் மெதுவாக ஆக்சிஜனேற்றம் பெறுகிறது. இதைக் காற்றில் எரிக்கும் போது கண்ணைப் பறிக்கும் பிரகாசத்துடன் எரிகிறது. நைட்ரஜனுடன் நேரடியாக வினை புரியும் வெகு சில தனிமங்களுள் மக்னீசியமும் ஒன்று.

மக்னீசியம் பெரும்பாலான அலோகங்களுடன் வினை புரிகிறது. மக்னீசியம் ஆக்சிஜன் மீது கொண்டுள்ள நாட்டம் மிகவும் அதிகம். அதனால் கார்பன்டை ஆக்சைடு வளிமத்தில் கூட இது தொடர்ந்து எரிகிறது. மக்னீசியத்தை எரியச் செய்ய அதைப் பற்ற வைக்க வேண்டும் என்பதில்லை.[11] ஒரு எரியும் தீக்குச்சியை அதனருகே வைத்திருந்தாலே போதும். குளோரின் நிறைந்த வெளியில் இது அறை வெப்ப நிலையிலேயே நிகழ்ந்து விடுகிறது. மக்னீசியம் எரியும் போது புற ஊதாக் கதிர்களையும், வெப்பத்தையும் தருகிறது.[12] இந்த வெப்பம் மிகவும் அதிகமானது. 4 கிராம் மக்னீசியம் 250 மி.லி குளிர்ந்த நீரைக் கொதிக்க வைக்கப் போதுமானது. காற்று வெளியில் மக்னீசியம் ஆக்சிஜனேற்றம் பெறுவதால் அது பொலிவின்றி மங்கிப் போய் விடுகிறது. இந்த ஆக்சைடு படலம் மக்னீசியத்தின் உட்புறம் மேலும் ஆக்சிஜனேற்றம் பெறாமல் தடை செய்யும் ஒரு காப்பாக அமைகிறது. இதன் வேதிக் குறியீடு Mn. இதன் அணு எண் 12, அணு நிறை 24.31,அடர்த்தி 1740 கிகி/கமீ உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 923.2 K, 1373 K ஆகும்.[13] மக்னீசியத்தின் உருகு நிலை குறைவே என்றாலும் அதை உருக்குவது மிகவும் கடினம். ஏனெனில் உருகுவதற்கு முன்பாகவே இது எரிந்து சாம்பலாகி விடுகிறது. தாழ்ந்த அழுத்தத்தில் மந்த வளிம வெளியில் இதை உருக்கலாம்.

பயன்கள்

An unusual application of magnesium as an illumination source while wakeskating in 1931

ஹில்மன் காரணி

மக்னீசியத்தின் உறுதியை கலப்பு உலோகங்கள் மூலம் உயர்த்திக் கொண்டு அதைக் கட்டுமானப் பொருளாக பயன்படுத்துகின்றார்கள். இதற்கு துத்தநாகம், அலுமினியம் மற்றும் மாங்கனீசு போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.[14] அலுமினியமும் துத்தநாகமும் கலப்பு உலோகத்திற்கு வலுவூட்டுகின்றன. மாங்கனீசு உலோக அரிமானத்தை தடுக்கிறது.[15] இக்கலப்பு உலோகத்தினால் எடை குறைவான ஆனால் வலிமை மிக்க பொருட்களை உற்பத்தி செய்ய முடிகிறது. இது தானியங்கு வண்டிகள் கனரக மற்றும் ரயில் வண்டிகள், விமானங்களின் உதிரி பாகங்கள் செய்யவும்[16] நெசவுத் தொழில், அச்சுத் தொழிலில் பயன்படவும் செய்கிறது. உயர் வெப்ப நிலையை ஏற்கும் தன்மை, அடித்து கம்பியாக நீட்டக் கூடிய தன்மைகளை அதிகரிப்பதற்கும், ஆக்சிஜனை உட்கவரும்தன்மையைக் குறைப்பதற்கும் மக்னீசியக் கலப்பு உலோகம் பயன்படுகிறது

Products made of magnesium: firestarter and shavings, sharpener, magnesium ribbon

இரும்பு, சிலிகான், நிக்கல் போன்றவை மக்னீசியக் கலப்பு உலோகத்தின் பட்டறைப் பயன்பாட்டை மட்டுப்படுத்துவதுடன் அரிமானத்திற்குத் தரும் எதிர்ப்பையும் சீர்குலைத்து விடுகின்றன. உயர் வெப்ப நிலையில் ஆக்சிஜனிறக்கியாக மக்னீசியம் பல தனிமங்களின் உற்பத்தி முறையில் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக வனேடியம், குரோமியம், டைட்டானியம் போன்றவற்றைச் சொல்லலாம். தூய சிலிகான் மற்றும் போரானை அவற்றின் நிலையான ஆக்சைடுகளிலிருந்து பிரித்தெடுக்க மக்னீசியத்தின் இப்பண்பு உதவியாயிருக்கிறது. உருகிய இரும்புக் குழம்போடு மக்னீசியத்தைச் சேர்க்க இரும்பின் பயன்பாடு மேம்படுகிறது. அதனால் இரும்பின் கட்டமைப்பு, பட்டறைப் பயன்பாடு மேலும் சிறப்படைகின்றன. மக்னாலியம் (மக்னீசியம் + அலுமினியம் ) எலெக்ட்ரான் (மக்னீசியம் + துத்தநாகம் ) போன்ற கலப்பு உலோகங்கள் இலேசானவை ஆனால் உறுதியானவை.

மக்னீசியப் படிகம்

மக்னீசியம் ஆக்சைடு, உயர் வெப்பம் தாங்க வல்ல செங்கல், பீங்கான், இரப்பர் இவற்றின் உற்பத்தி முறையில் பயன்படுகிறது.[17] அணு உலைகளின் உட்சுவர்களைக் கட்டமைக்கப் பயன்படுகிறது.மக்னீசியம் சல்பேட் அரிகாரமாகவும்,கெட்டிச் சாயமாகவும் துணி மற்றும் காகித ஆலைகளில் பயன்படுகிறது தோல் பதனிடவும் உறுதுணையாக உள்ளது.

மருத்துவம்

மக்னீசியம் அடங்கியுள்ள சில உணவுகள்

தூய மக்னீசியம் ஆக்சைடு, நெஞ்சரிப்பு, வயிற்றுப் புளிப்பு மற்றும் அமில நஞ்சுகளுக்கு மருந்தாகிறது.[18] மக்னீசியம் பெர் ஆக்சைடு துணிகளை வெளுப்பூட்டப் பயன்படுகிறது. இது தொற்றுத் தடை மற்றும் நஞ்சுத் தடையாகப் பயன்தருகிறது. நீர் மூலக்கூறு ஏற்றப்பட்ட மக்னீசியம் சல்பேட்டை எப்சம் உப்பு என்பர். இது ஒரு சில வகை பத்துகளுக்கு(rashes) மருந்தாகப் பயன்படுகிறது. மலச்சிக்கலைப் போக்கும் அருமருந்தாகவும் இது எடுத்துக் கொள்ளப்படுகிறது. மக்னீசியம் ஹைட்ராக்சைடு வயிற்றிலுள்ள உபரி அமிலத்தை சமப்படுத்திவிடுகிறது என்பதால் நெஞ்சரிப்புக்கு உகந்த மருந்தாகக் கொள்கின்றனர்.[19][20]

சர்க்கரைப் பாகிலிருந்து சர்க்கரை எடுக்கவும் இது பயன் தருகிறது. மக்னீசியம் கார்பனேட்,பற்பசை, முகப் பவுடர், வெள்ளி மெருகேற்றி போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. உயிர் வேதியியலில் பிறக்கப் போகும் குழந்தை ஆணா,பெண்ணா என்று தீர்மானிப்பதில் மக்னீசியத்திற்குப் பங்கிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பொட்டாசியம் நிறைந்த உணவைக் கூடுதலாக உட்கொண்டால் பிறக்கப் போகும் குழந்தை ஆணாகவும், மக்னீசியம், கால்சியம் அதிகமாக இருந்தால் பெண்ணாகவும் இருக்கும் என்பது இவர்களுடைய ஆய்வு முடிவு.

கோழித் தீவனத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகமாக இருந்தால் கோழிகள் இடும் முட்டைகள் உறுதியாக இருக்கின்றன. இதனால் உடைவதினால் ஏற்படும் இழப்பு தவிர்க்கப்படுகிறது. எளிதில் கோபப்படுபவர்களுக்கும், உணர்ச்சி வயப்படுகின்றவர்களுக்கும் இதயத் தாக்கம் வருவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். இதற்குக் காரணம் கிளர்வுற்ற நிலையில் உடலில் உள்ள மக்னீசியம் எரிந்து போவதுதான் என்று கண்டுபிடித்துள்ளனர்.[21] தாவரங்களில் ஒளிச் சேர்க்கையைத் தூண்டும் குளோரோபில் என்ற பச்சையத்தில் இந்த மக்னீசியம் பங்கு பெற்றுள்ளது.[22]

உடலின் திசுக்களின் இயக்கங்களுக்கும் என்சைம்களுக்கும் இந்த மக்னீசியம் தேவை. மக்னீசியக் குறைவு தசை இசிப்பு, தசை முறுக்கு போன்ற பாதிப்புக்களைத் தருகிறது.[23][24] எலும்புகளின் கட்டமைப்பில் மக்னீசியம் பங்கேற்றுள்ளது. நரம்புகளின் வழி சமிக்கைகளைக் கொண்டு செல்ல இது துணை புரிகிறது.[25]

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மக்னீசியம்&oldid=3590546" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை