வெலிகோ டார்னோவோ

வெலிகோ டார்னோவோ (Veliko Tarnovo) வடக்கு மத்திய பல்கேரியாவிலுள்ள ஒரு நகரமாகும்.[1][2]

வெலிகோ டார்னோவோ
Велико Търново
வெலிகோ டார்னோவோ-இன் கொடி
கொடி
வெலிகோ டார்னோவோ-இன் சின்னம்
சின்னம்
பரப்பளவு
 • மொத்தம்30 km2 (10 sq mi)
ஏற்றம்225 m (738 ft)
மக்கள்தொகை (பெப்ரவரி 1, 2011)
 • மொத்தம்73,685
 • அடர்த்தி300/km2 (800/sq mi)
நேர வலயம்கி.ஐ.நே (ஒசநே+02:00)
 • கோடை (பசேநே)கி.ஐ.கோ.நே (ஒசநே+03:00)
அஞ்சல் குறியீடு5000
தொலைபேசி குறியீடு(+359) 062
இணையதளம்www.veliko-tarnovo.bg

கிழக்கு ஐரோப்பிய ஆட்சியாளர்களைக் குறிக்கின்ற வகையில் பெரும்பாலும் திசார்களின் நகரம் என்று அழைக்கப்படும் வெலிகோ டார்னோவோ யாந்திரா நதியில் அமைந்துள்ளது. இரண்டாம் பல்கேரிய இராச்சியத்தின் வரலாற்று தலைநகரம் என்றும் பிரபலமாக அறியப்படுகிறது, பல சுற்றுலாப் பயணிகளை அதன் தனித்துவமான கட்டிடக்கலை மூலம் ஈர்க்கிறது. யாந்திரா நதியின் நெளியும் சுற்று வழிகளுக்கு இடையே உயர்ந்துள்ள திசாரெவெட்சு, திராபெசிட்சா மற்றும் சுவெட்டா கோரா என்ற மூன்று மலைகளுக்கிடையில் இந்நகரத்தின் பழைய பகுதி அமைந்துள்ளது.

திசாரெவெட்சில் பல்கேரிய பேரரசர்களின் அரண்மனைகள் மற்றும் பாரம்பரியத் தலைவர், மற்றும் அவர் கட்டுபாட்டிலுள்ள தேவாலயம் மற்றும் தடிமனான சுவர்களால் சூழப்பட்ட பல நிர்வாக மற்றும் குடியிருப்பு மாளிகைகள் உள்ளன. திராபெசிட்சா பல தேவாலயங்களுக்காகவும், பிரபுக்களின் முன்னாள் முக்கிய இல்லமாகவும் அறியப்படுகிறது. இடைக்காலத்தில், இந்த நகரம் ஐரோப்பிய கலாச்சாரத்தின் முக்கிய மையங்களில் ஒன்றாக இருந்தது. டார்னோவோ கலைப் பள்ளியின் கட்டிடக்கலை, டார்னோவோ கலைப் பள்ளியின் ஓவியம் மற்றும் இலக்கியத்திற்கு இந்நகரம் புகழ் பெற்றிருந்தது. வெலிகோ டார்னோவோ நகரம் வடக்கு பல்கேரியாவின் முக்கியமான நிர்வாக, பொருளாதார, கல்வி மற்றும் கலாச்சார மையமாகவும் திகழ்கிறது.

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வெலிகோ_டார்னோவோ&oldid=3229248" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை