ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா

ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா (இசுட்டான் வாவ்ரின்கா) (Stanislas Wawrinka, லோசானில் பிறப்பு: 28 மார்ச் 1985) ஓர் சுவிஸ் நாட்டு தொழில்முறை டென்னிஸ் விளையாட்டுக்காரர். இவரது தந்தை செருமானியராதலால் செருமானியக் குடியுரிமையும் கொண்டவர். தனது உயரிய தரவரிசை இடமான 9ஐ சூன் 9, 2008இல் பிடித்தார். பின்கை ஆட்டத்தில் சிறந்தவராகவும் களிமண் தரையில் சிறந்த ஆட்டக்காரராகவும் தன்னைக் கருதுகிறார். பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் சுவிட்சர்லாந்திற்கு ஆடவர் இரட்டையர் டென்னிசுப் போட்டியில் ரோஜர் பெடரருடன் இணைந்து தங்கப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 2008ஆம் ஆண்டின் சுவிஸ் அணி என்ற விருதும் கிடைத்தது. இவரது பின்கை ஆட்டம் மிகவும் வலிமை மிக்கதாக ஜான் மக்கன்ரோ கருதுகிறார்.[1] ஆசுத்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், யூ. எசு. ஓப்பன் என மூன்று டென்னிசு பெருவெற்றி தொடரை (கிராண்டு சிலாம்) கைப்பற்றியுள்ளார்.

ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா
நாடுசுவிட்சர்லாந்து
வாழ்விடம்செயின்ட்-பார்தெலெமி, சுவிட்சர்லாந்து
உயரம்1.83 m (6 அடி 0 அங்) (6 அடி 0 அங்)
தொழில் ஆரம்பம்2002
விளையாட்டுகள்வலது-கை (ஒரு-கை பின்னாட்டம்)
பரிசுப் பணம்$4,696,887
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்200–146
பட்டங்கள்3
அதிகூடிய தரவரிசைஎண். 3 (27/01/2014)
தற்போதைய தரவரிசைஎண். 4 (சூன் 7, 2015)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்W (2014),
பிரெஞ்சு ஓப்பன்4R (2010 , 2011) W-2015
விம்பிள்டன்4R (2008, 2009)
அமெரிக்க ஓப்பன்W (2016)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்41–54
பட்டங்கள்1
அதியுயர் தரவரிசைஎண். 90 (6 நவம்பர் 2006)
தற்போதைய தரவரிசைNo. 110 (4 சூலை 2011)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்3R (2006)
பிரெஞ்சு ஓப்பன்3R (2006)
ஏனைய இரட்டையர் தொடர்கள்
ஒலிம்பிக் போட்டிகள் Gold Medal (வார்ப்புரு:OlympicEvent)
இற்றைப்படுத்தப்பட்டது: 23 நவம்பர் 2011.
வென்ற பதக்கங்கள்
நாடு  சுவிட்சர்லாந்து
ஆடவர் டென்னிஸ்
தங்கப் பதக்கம் – முதலிடம்2008 பெய்சிங்இரட்டையர்

2014 பிரெஞ்சு ஓப்பனுக்கு முன் தன் பெயரை இசுடேன் வாவ்ரின்கா என்று மாற்றிக்கொள்ள தொழில்முறை டென்னிசு ஆட்டக்காரர்களின் கூட்டமைப்பு அனுமதி அளித்தது. பெயர் மாற்றம் தொடர்பாகவும் சுருக்க பெயர் தொடர்பாகவும் செய்தியாளர் சந்திப்பை நடத்த திட்டுமிட்டுள்ளார்[2]

சூன் 7,2015 நிலவரப்படி டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம் உலகத்தரவரிசையில் 4ஆம் இடத்தில் உள்ளார். 2015ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தை நோவாக் ஜோக்கொவிசை எதிர்த்து 6-4 4-6 3-6 4-6 என்ற கணக்கில் வென்றார்.2016ஆம் ஆண்டு யூ. எசு. ஓப்பன் தொடரில் நோவாக் ஜோக்கொவிசை எதிர்த்து 6–7(1–7), 6–4, 7–5, 6–3 என்ற புள்ளி கணக்கில் வாகை சூடினார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை