1844
1844 (MDCCCXLIV) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1844 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1844 MDCCCXLIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1875 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2597 |
அர்மீனிய நாட்காட்டி | 1293 ԹՎ ՌՄՂԳ |
சீன நாட்காட்டி | 4540-4541 |
எபிரேய நாட்காட்டி | 5603-5604 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1899-1900 1766-1767 4945-4946 |
இரானிய நாட்காட்டி | 1222-1223 |
இசுலாமிய நாட்காட்டி | 1259 – 1260 |
சப்பானிய நாட்காட்டி | Tenpō 15Kōka 1 (弘化元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2094 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4177 |
நிகழ்வுகள்
- பெப்ரவரி 27 - டொமினிக்கன் குடியரசு ஹையிட்டியிடம் இருந்து விடுதலை பெற்றது.
- பெப்ரவரி 28 - USS பிரின்ஸ்டன் என்ற படகில் பொருத்தப்பட்ட துப்பாக்கி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த இரண்டு ஐக்கிய அமெரிக்க அமைச்சர்கள் உட்படப் பலர் கொல்லப்பட்டனர்.
- மே 24 - முதலாவது மின்னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அனுப்பப்பட்ட செய்தி: What hath God wrought.
- ஜூன் - இலங்கையில் யானைகளைக் கொல்வோருக்கு பணப்பரிசு வழங்கப்படும் என்ற அரசு அறிவித்தலைத் தொடர்ந்து வன்னியில் மட்டும் சுமார் 150 யானைகள் கொல்லப்பட்டன.
- ஜூன் 6 - கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் ஜோர்ஜ் வில்லியம்ஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
- ஜூன் 15 - இறப்பர் பதப்படுத்தும் முறை (vulcanization) சார்ல்ஸ் குடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.
- ஜூலை 3 - ஐஸ்லாந்தின் எல்டி தீவில் பெரிய ஓக் பறவைகளின் கடைசிச் சோடி கொல்லப்பட்டது.
- ஜூலை 13 - இலங்கையில் காவற்துறை நீதிமன்றங்கள் (police courts) அமைக்கப்பட்டன.
- ஆகஸ்ட் - யாழ்ப்பாணம் இளவாலையில் சென் மேரியின் தேவாலயம் தீயில் முற்றாக எரிந்தது.
- ஆகஸ்ட் 28 - பிரெட்ரிக் எங்கெல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் பாரிசில் சந்தித்தனர்.
- அக்டோபர் - இலங்கையில் வடமேற்கு மாகாணம் உருவாக்கப்பட்டது.
- டிசம்பர் 20 - இலங்கையில் கூலிகளை வேலைக்கமர்த்தும் முறை (slavery) ஒழிக்கப்பட சட்டம் கொண்டுவரப்பட்டது.
நாள் அறியப்படாதவை
- சுவீடனைச் சேர்ந்த வேதியியல் நிபுணர் குஸ்டாஃப் எரிக் பாஸ்க் என்பவர் பாதுகாப்பான தீக்குச்சியைக் கண்டுபிடித்தார்.
- பாதுகாப்புப் பெட்டி (safe) அலெக்சாண்டர் ஃபிஷே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- அணுக்கரு என்ற சொல் என்பது முதன்முதலில் மைக்கேல் ஃவாரடேயினால் "அணுவொன்றின் மையப்புள்ளி" என்ற விளக்கத்தோடு தரப்பட்டது.
- பஹாய் சமயம் தோற்றம் பெற்றது.
பிறப்புக்கள்
- நவம்பர் 25 - கார்ல் பென்ஸ், ஜெர்மனியைச் சேர்ந்த வாகனப்பொறியாளர் (இ. 1929)
இறப்புக்கள்
- கதிரேசப் புலவர் (அகவை 40), அச்சுவேலியைச் சேர்ந்த புலவர்
1844 நாட்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை