சீன நாட்காட்டி

சீன நாட்காட்டி ஓர் சூரியசந்திர நாட்காட்டியாகும்.இது சீனா தவிர பல கிழக்கு ஆசிய பண்பாடுகளில் பின்பற்றப்படுகிறது. இது சீனர்களால் கி.மு 500 ஆண்டில் சீரமைக்கப்பட்டது.[1]. கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும், கிரெகொரியின் நாட்காட்டி அலுவலக முறையில் பயன்படுத்தப்பட்டாலும் சீன நாட்காட்டி பரம்பரை விடுமுறை தினங்கள் சீன புத்தாண்டு (அல்லது வசந்த திருவிழா (春節), டுயான் வு பண்டிகை, மற்றும் நடு மழைக்கால பண்டிகை போன்றவற்றை குறிக்கவும், திருமண நாள்,புதுமனை புகுவிழா போன்றவற்றிற்கு சோதிடப்படி நல்லநாள் தெரிந்தெடுக்கவும் பயனாகிறது.

இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.

சீன நாட்காட்டியில் பரம்பரை நாட்காட்டி வழமையாக க்சியா(Xia)நாட்காட்டி(எளிய சீனம்: 夏历; மரபுவழிச் சீனம்: 夏曆பின்யின்: xiàlì) எனக் குறிப்பிடப்படுகிறது. ஆண்டின் துவக்கம் ஆளும் மன்னரால் தீர்மானிக்கப்பட்டு வந்த நிலையில் க்சியா மன்னராட்சி காலத்தில் கூதிர்கால கதிர்த்திருப்பத்தின் பின்னர் ஏற்படும் இரண்டாவது அமாவாசை யன்று ஆண்டு துவங்கும். இவராட்சிக்குப் பின்னர் கடந்த 2000 ஆண்டுகளாக அதே துவக்கம் பின்பற்றப்படுவதால் க்சியா நாட்காட்டி என இப்பெயரே நிலைத்தது.


சீன நாட்காட்டியை "விவசாய நாட்காட்டி" (எளிய சீனம்: 农历; மரபுவழிச் சீனம்: 農曆பின்யின்: nónglì) கிரெகொரியின் நாட்காட்டியை "பொது நாட்காட்டி" (எளிய சீனம்: 公历; மரபுவழிச் சீனம்: 公曆பின்யின்: gōnglì) என குறிப்பிடுகிறார்கள். சில நேரங்களில் சீன நாட்காட்டியை,சந்திரனை பின்பற்றுவதால், "யின் நாட்காட்டி" (எளிய சீனம்: 阴历; மரபுவழிச் சீனம்: 陰曆பின்யின்: yīnlì) எனவும் கிரெகொரியின் நாட்காட்டியை,சூரியனை "யாங்க் நாட்காட்டி" (எளிய சீனம்: 阳历; மரபுவழிச் சீனம்: 陽曆பின்யின்: yánglì)எனவும் குறிப்பிடப்படுவதும் உண்டு. கிரெகொரியின் நாட்காட்டி அலுவலக நாட்காட்டியாக அறிவித்தப் பிறகு, அதனை புதிய நாட்காட்டி (எளிய சீனம்: 新历; மரபுவழிச் சீனம்: 新曆பின்யின்: xīnlì) எனவும் சீன நாட்காட்டியை பழைய நாட்காட்டி(எளிய சீனம்: 旧历; மரபுவழிச் சீனம்: 舊曆பின்யின்: jiùlì) எனவும் கூறுவதும் உண்டு.

2009ஆம் ஆண்டு சீன நாட்காட்டியில் எருதின் ஆண்டாகும் (Year of the Ox).சனவரி 26,2009 முதல் பிப்ரவரி 14,2010 வரை இவ்வாண்டு இருந்தது.

ஆண்டுகள் பன்னிரு விலங்குகள் (十二生肖 shí'èr shēngxiào, "பன்னிரு பிறப்பு சின்னங்கள்" அல்லது 十二屬相

shí'èr shǔxiàng, "பன்னிரு உடமை சின்னங்கள்") மூலம் குறிக்கப்படுகின்றன.அவை:எலி(rat), எருது(ox),புலி(tiger),முயல்(rabbit), டிராகான்(dragon), பாம்பு(snake), குதிரை(horse), ஆடு(sheep), குரங்கு(monkey),சேவல்(rooster), நாய்(dog), மற்றும் பன்றி(pig).தற்போதைய ஆண்டு (ஜனவரி 31, 2014 முதல் பிப்ரவரி 18, 2015 வரை) குதிரையின் Wǔnián ஆண்டாகும்.

நவீன ஹான் நாட்காட்டி

சூரியன் மற்றும் நிலவு

சந்திர சுற்றுப்பாதையின் முறையற்ற தண்மை கி.மு. 1 ஆம் நூற்றாண்டு முதலே அறியப்படுகிறது என்றாலும், 619ஆம் ஆண்டு வரை மாதங்களின் துவக்கம், சூரியன் மற்றும் சந்திரனின் சராசரி இயக்கத்தை பயன்படுத்தி கணக்கிடப்பட்டது.

ஹான் நாட்காட்டி அமைப்பு

கூறுகள்

  • நாள் - நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரை
  • மாதம் - ஒரு அம்மாவாசையிலிருந்து அடுத்த அம்மாவாசை வரை, சுமார் (29 + 17/32) நாட்கள்.
  • தேதி - மாதத்தில் இருக்கும் ஒரு நாள், 1 முதல் 30 வரை வரிசைப்படுத்தியிருக்கும்
  • வருடம் - ஒரு வசந்த காலம் தொடக்கத்திலிருந்து அடுத்த வசந்த காலம் வரை. சுமார் (365 + 31/128) நாட்கள்
  • ராசி - 1/12 வருடம், அதாவது சுமார் (30 + 7/16) நாட்கள்

இந்து நாட்காட்டியைப் போலவே, சீன நாட்காட்டியும் சூரியசந்திர நாட்காட்டயே.

நாள் ( ri, 日)

சீன நாட்காட்டியில் ஒரு நாள் என்பது கிரிகோரியன் நாட்காட்டியில் உள்ளது போல நள்ளிரவு முதல் நள்ளிரவு வரை கணக்கிடப்படும்.

ஒரு நாளின் உட்பிரிவுகள்

நவீன சீனாவில் ஒரு நாளை, மேற்கத்திய பாணியில் மணி-நிமிடம்-நொடி என பிரித்துள்ளனர். ஆனால் பழைய தரம் இன்னும் சில வேளைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

வாரம்

நாட்கள் பல்வேறு வகையான வாரங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. அவை

  • வழக்கமான வகையில் ஏழு நாட்கள் கொண்ட வாரம்.
  • நவீன கால சீனாவில் பயன்படுத்தப்படுத்தப்படும் எண்களால் தீர்மானிக்கப்படும் வாரம். (星期一, முதல் நாள்; 星期二, இரண்டாம் நாள்; 星期三, மூன்றாம்-நாள்; 星期四, நான்காம் நாள்; 星期五, ஐந்தாம் நாள்; 星期六, ஆறாம் நாள்). இதற்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் விதிவிலக்கு. (星期日, ஞாயிற்றுக்கிழமை)
  • ஒவ்வொறு நான்கு வாரமும் 28 நாட்களை கொண்ட வாரமாக கொள்ளப்படும்.
  • 10 நாட்கள் கொண்ட வாரம்.
  • 12 நாட்கள் கொண்ட வாரம்.

விடுமுறை தினங்கள்

சீன நாட்காட்டியில் ஆண்டுக்கு ஒன்பது முக்கிய திருவிழாக்கள் உள்ளன. இவற்றில் ஏழு திருவிழாக்கள் நிலவு நாட்காட்டியை கொண்டும், மற்ற இரண்டு திருவிழாக்கள் சூரிய விவசாய நாட்காட்டியினை கொண்டும் தீர்மானிக்கப்படுகிறது. பாரம்பரிய நிலவு நாட்காட்டியின் துல்லியமற்றத்தன்மையினால் விவசாயிகள் உண்மையில் பயிர்களை பயிரிடும் காலத்தை தீர்மானிக்க சூரிய நாட்காட்டியை பயன்படுத்தினர். இருப்பினும் பாரம்பரிய நிலவு நாட்காட்டியே விவசாயிகளின் நாட்காட்டி என அழைக்கப்பட்டது. க்விங் மிங் திருவிழா மற்றும் குளிர்கால சூரியச்சலன சாய்வு திருவிழா ஆகியவை முக்கியமான விடுமுறை தினங்கள் ஆகும்.

தேதிதமிழ்ஆங்கிலம்சீனம்வியட்நாமிய மொழிகுறிப்புகள்2008200920102011201220132014
Zhēngyuè 1stசீன புத்தாண்டுChinese New Year春節 chūnjiéNguyên Đán (元旦)3-15 நாட்கள் குடும்பம் ஒன்று கூடி கொண்டாடுவது0207012602140203012302100131
Zhēngyuè 15thவிளக்கு திருவிழாLantern Festival元宵節 yuánxiāoThượng Nguyên (上元)விளக்கு அணிவகுப்பு மற்றும் Yuanxiao உண்பது.0221020902280217020602240214
Wǔyuè 5thடிராகன் படகு திருவிழாDragon Boat Festival端午 duānwǔĐoan Ngọ (端午)டிராகன் படகு பந்தயம் மற்றும் zongzi உண்பது.0608052806160606062306120602
Qīyuè 7thக்வி க்சிNight of Sevens七夕 qīxīThất tịchகாதலர் தினம்0807082608160806082308130802
Qīyuè 15thஆவி திருவிழாGhost Festival中元節 zhōngyuánTrung Nguyên (中元)இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் தினம்.0815090308240814083108210810
Bāyuè 15thநடு இலையுதிர் கால திருவிழாMid-Autumn Festival中秋 ZhōngqiūTrung Thu (中秋)குடும்பத்துடன் ஒன்றுகூடி நிலவு கேக் உண்பது0914100309220912093009190908
Jǐuyuè 9thஇரட்டை ஒன்பதாவது திருவிழாDouble Ninth Festival重陽 chóngyángTrùng Cửu (重九)மலை ஏறுதல் மற்றும் மலர் கண்காட்சி1007102610161005102310131002
Shíyuè 15thக்சியாயுவான்Xiàyuán Festival下元節 xiàyuánHạ Nguyên (下元)நீர் கடவுளிடம் ஒரு அமைதியான ஆண்டு வேண்டி பிரார்த்தனை1112120111201110112811171206
Làyuè 23rd or 24thசமையலறை கடவுள் திருவிழாKitchen God Festival小年 xiǎoniánTáo Quân (竈君)சமையலறை கடவுள் வழிபாடு0131011902070127011702040211
April 4 or 5க்விங் மிங் திருவிழாQingming Festival清明節 qīngmíngThanh Minh (清明)கல்லறை துடைத்தல்0404040404050405040404040405
December 21 or 22குளிர்கால சூரியச்சலன சாய்வு திருவிழாWinter Solstice Festival冬至 dōngzhìLễ hội Đông Chíகுடும்பத்துடன் ஒன்றுகூடி டாங் யோன் உண்பது1221122112221222122112211222

மேற்கோள்கள்

கூடுதலாகக் காண்க

செயலிகள்

ஐபோன் செயலி
  1. https://itunes.apple.com/in/app/vedicpanchangam/id862232382?mt=8

வெளியிணைப்புகள்

நாட்காட்டிகள்
அட்டவணை மாற்றம்
விதிமுறைகள்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சீன_நாட்காட்டி&oldid=3835697" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை