1979
1979 (MCMLXXIX) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
- சனவரி 3 - இலங்கையில் வண. பிதா ஜேம்சு பத்திநாதர் செட்டிகுளத்தில் அகதிகளுக்கு உதவுகிறார் என்னக் குற்றம் சாட்டி துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானார்.
- சனவரி 15 - மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்தார். யாழ்ப்பாணம் வந்து நிலைமைகளைக் கண்டறிந்தார்.
- பெப்ரவரி 10 - இலங்கை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செ. இராசதுரை தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
- பெப்ரவரி 16 - இலங்கையில் காசி ஆனந்தன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட 11 பேர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
- மார்ச் 7 - இலங்கை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செ. இராசதுரை ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.
- ஏப்ரல் 1 - ஈரான் இசுலாமியக் குடியரசாக மாறியது.
- ஏப்ரல் 11 - தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பலா வை ஆக்கிரமித்தன. இடி அமீன் தப்பி ஓடினார்.
- சூன் 23 - இலங்கை குருநாகலில் தமிழர் கடைகள் தாக்கப்பட்டன.
- சூலை 11 - யாழ்ப்பாணத்தில் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
- சூலை 13 - யாழ்ப்பாணம், நவாலியில் இன்பம், செல்வம், பாலேந்திரன் என்ற மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் முதல் இருவரின் உடல்கள் தாக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
- சூலை 16 - சதாம் உசேன் ஈராக்கிய அதிபரானார்.
- சூலை 17 - இலங்கை நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேறியது. அடுத்த மூன்று நாட்களுக்குள் 47 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
- செப்டம்பர் 7 - ஈ-எஸ்-பி-என் ஒளிபரப்பு ஆரம்பம்
- செப்டம்பர் 28 - ஈழத் தமிழ் அரசியல்வாதி மா. க. ஈழவேந்தன் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டார்.
பிறப்புக்கள்
இறப்புக்கள்
- பெப்ரவரி 11 - மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை கருநாடக இசை, வயலின் வாத்தியக் கலைஞர் (பி. 1912)
- ஆகத்து 14 - என். எம். பெரேரா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி
- ஆகத்து 27 - மவுண்ட்பேட்டன் பிரபு, விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுநர் (பி. 1900)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - செல்டன் லீ கிளாசோ, அப்துஸ் சலாம், ஸ்டீவன் உவைன்பர்க்
- வேதியியல் - ஹெபர்ட் பிரவுன், கியோர்க் விட்டிக்
- மருத்துவம் - அலன் கோர்மாக், கொட்பிரி ஔன்சுஃபீல்ட்
- இலக்கியம் - இடிசீசு எலிட்டிசு
- சமாதானம் - அன்னை தெரேசா
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - தொயோடோர் சூல்ட்சு, ஆர்தர் லூயிசு
இவற்றையும் பார்க்கவும்
1979 நாட்காட்டி
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை