தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்

தமிழகத்தில் உள்ள பெரிய மாநகரங்களும் மற்றும் மாவட்ட தலைநகரம் ஆகும்

தமிழக மாநகராட்சிகள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள இருபத்து ஐந்து மாநகராட்சிகளில், முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி சென்னை ஆகும். இரண்டாவது கோயம்புத்தூர் மாநகராட்சியும், மூன்றாவது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும் முறையே நான்காவது மதுரை மாநகராட்சியும் அடுத்த படியாக சேலம் மாநகராட்சியும் திருப்பூர் மாநகராட்சியும் உள்ளது. இந்த ஆறு மாநகராட்சிகள் மட்டுமே தமிழகத்தின் மிக முக்கியமான மாநகராட்சிகள் ஆகும். பிற மாநகராட்சிகள், திருநெல்வேலி, கடலூர் உட்பட சில மாநகராட்சிகள் அதற்கு அடுத்த நிலையில் காணப்படுகிறது. இந்த மாநகராட்சிகளின் தரவரிசை என்பது மக்கள் தொகை அடிப்படையிலும், மாநகராட்சி வருவாய் அடிப்படையிலும், மாநகராட்சி மண்டலங்கள் மற்றும் வார்டுகள் அடிப்படையிலும் வரிசைப்படுத்தப்படுகிறது [1]

தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. இம்மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக மாநகராட்சிகளின் ஆண்டு வரி வருவாய்

இதில் முதல் மூன்று இடங்களை சென்னை, கோயம்புத்தூர், திருச்சி மாநகராட்சிகள் கொண்டுள்ளது. இதில் 2021 ஆண்டு அடிப்படையில் மிகக்குறைந்த வரி வருவாயைக் வருவாயைக் கொண்ட மாநகராட்சி சிவகாசி ஆகும். புதிய ஆறு மாநகராட்சிகளின் வரம்பு நகர எல்லைக்கு சமமாக இருக்கும். எனவே பின்னர் நகர வரம்பு விரிவாக்கம், ஆண்டு வருமானம் அதிக உயரும்.

மாநகராட்சிகளின் பட்டியல்

வ. எண்மாநகர்மாவட்டம்மாநகராட்சி பெயர்மக்கள் தொகை (2011)[2]மக்கள் தொகை அடர்த்தி /கிமீ2மாநகராட்சியாக ஆக்கப்பட்ட ஆண்டுநிர்வாக மண்டலங்களின் எண்ணிக்கைமண்டலம்வார்டுகளின் எண்ணிக்கைமாநகராட்சி பகுதி /கிமீ2
1சென்னைசென்னை மாவட்டம்பெருநகர சென்னை மாநகராட்சி (இந்தியாவின் மிகப் பழமையான மாநகராட்சி மற்றும் லண்டனுக்குப் பிறகு, உலகின் இரண்டாவது பழமையான மாநகராட்சி ஆகும்.)71,39,63017,00029 செப்டம்பர் 168815
  • திருவொற்றியூர்
  • மணலி
  • மாதவரம்
  • தண்டையார்பேட்டை
  • இராயபுரம்
  • திரு. வி. க. நகர்
  • அம்பத்தூர்
  • அண்ணா நகர்
  • தேனாம்பேட்டை
  • கோடம்பாக்கம்
  • வளசரவாக்கம்
  • ஆலந்தூர்
  • அடையாறு
  • பெருங்குடி
  • சோழிங்கநல்லூர்
200426 சதுர கி.மீ
2மதுரைமதுரை மாவட்டம்மதுரை மாநகராட்சி18,38,25212,83201 மே 19714
  • மதுரை வடக்கு
  • மதுரை கிழக்கு
  • மதுரை தெற்கு
  • மதுரை மேற்கு
100147.97 சதுர கி.மீ
3கோயம்புத்தூர்கோயம்புத்தூர் மாவட்டம்கோயம்புத்தூர் மாநகராட்சி34,58,0459,17501 சூலை 19815
  • கோயம்புத்தூர் வடக்கு
  • கோயம்புத்தூர் கிழக்கு
  • கோயம்புத்தூர் மத்தி
  • கோயம்புத்தூர் தெற்கு
  • கோயம்புத்தூர் மேற்கு
100246.75 சதுர கி.மீ
4திருச்சிராப்பள்ளிதிருச்சிராப்பள்ளி மாவட்டம்திருச்சிராப்பள்ளி மாநகராட்சி12,22,5187,54301 சூன் 19945
  • கோ-அபிஷேகபுரம்
  • அரியமங்கலம்
  • பொன்மலை
  • திருவரங்கம்
  • திருவெறும்பூர்
100167 சதுர கி.மீ
5சேலம்சேலம் மாவட்டம்சேலம் மாநகராட்சி10,32,3368,32501 சூன் 19944
  • அஸ்தம்பட்டி
  • அம்மாபேட்டை
  • கொண்டலாம்பட்டி
  • சூரமங்கலம்
60124 சதுர கி.மீ
6திருநெல்வேலிதிருநெல்வேலி மாவட்டம்திருநெல்வேலி மாநகராட்சி9,68,8745,12701 சூன் 19945
  • தச்சநல்லூர்
  • பாளையங்கோட்டை
  • மேலப்பாளையம்
  • திருநெல்வேலி நகரம்
  • திருநெல்வேலி பேட்டை
55189.9 சதுர கி.மீ
7திருப்பூர்திருப்பூர் மாவட்டம்திருப்பூர் மாநகராட்சி9,63,1736,01926 அக்டோபர் 20084
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் கிழக்கு
  • திருப்பூர் தெற்கு
  • திருப்பூர் மேற்கு
60160 சதுர கி.மீ
8ஈரோடுஈரோடு மாவட்டம்ஈரோடு மாநகராட்சி5,21,7764,78601 ஆகத்து 20084
  • சூரியம்பாளையம்
  • பெரியசேமூர்
  • சூரம்பட்டி
  • காசிப்பாளையம்
60109.52 சதுர கி.மீ
9வேலூர்வேலூர் மாவட்டம்வேலூர் மாநகராட்சி6,87,9817,90701 ஆகத்து 20084
  • காட்பாடி
  • சத்துவாச்சாரி
  • வேலூர்க் கோட்டை
  • சேண்பாக்கம்
6087.915 சதுர கி.மீ
10தூத்துக்குடிதூத்துக்குடி மாவட்டம்தூத்துக்குடி மாநகராட்சி4,31,6284,5505 ஆகத்து 20084
  • தூத்துக்குடி வடக்கு
  • தூத்துக்குடி கிழக்கு
  • தூத்துக்குடி மேற்கு
  • தூத்துக்குடி தெற்கு
6090.663 சதுர கி.மீ
11தஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்தஞ்சாவூர் மாநகராட்சி3,22,4063,30019 பிப்ரவரி 20144
  • தஞ்சாவூர் வடக்கு
  • தஞ்சாவூர் கிழக்கு
  • தஞ்சாவூர் தெற்கு
  • தஞ்சாவூர் மேற்கு
62128.02 சதுர கி.மீ
12திண்டுக்கல்திண்டுக்கல் மாவட்டம்திண்டுக்கல் மாநகராட்சி2,95,5114,23119 பிப்ரவரி 20144
  • திண்டுக்கல் வடக்கு
  • திண்டுக்கல் கிழக்கு
  • திண்டுக்கல் தெற்கு
  • திண்டுக்கல் மேற்கு
4846.1 சதுர கி.மீ
13நாகர்கோயில்கன்னியாகுமரி மாவட்டம்நாகர்கோயில் மாநகராட்சி3,45,8495,33414 பிப்ரவரி 20194
  • நாகர்கோயில் வடக்கு
  • நாகர்கோயில் கிழக்கு
  • நாகர்கோயில் தெற்கு
  • நாகர்கோயில் மேற்கு
5249.10 சதுர கி.மீ
14ஓசூர்கிருஷ்ணகிரி மாவட்டம்ஓசூர் மாநகராட்சி3,45,0004,40714 பிப்ரவரி 20194
  • ஓசூர் வடக்கு
  • ஓசூர் கிழக்கு
  • ஓசூர் தெற்கு
  • ஓசூர் மேற்கு
4572.41 சதுர கி.மீ
15ஆவடிதிருவள்ளூர் மாவட்டம்ஆவடி மாநகராட்சி4,45,9965,32319 சூன் 20194
  • ஆவடி வடக்கு
  • ஆவடி கிழக்கு
  • ஆவடி தெற்கு
  • ஆவடி மேற்கு
4865 சதுர கி.மீ
16தாம்பரம்செங்கல்பட்டு மாவட்டம்தாம்பரம் மாநகராட்சி14,27,59110,5884 நவம்பர் 2021[3]7
  • தாம்பரம்
  • பல்லாவரம்
  • பம்மல்
  • செம்பாக்கம்
  • அனகாபுத்தூர்
  • பெருங்களத்தூர்
  • சிட்லபாக்கம்
100126 சதுர கி.மீ
17காஞ்சிபுரம்காஞ்சிபுரம் மாவட்டம்காஞ்சிபுரம் மாநகராட்சி3,11,5985,88724 ஆகத்து 20214
  • காஞ்சிபுரம் வடக்கு
  • காஞ்சிபுரம் தெற்கு
  • காஞ்சிபுரம் கிழக்கு
  • காஞ்சிபுரம் மேற்கு
5154.8 சதுர கி.மீ
18கடலூர்கடலூர் மாவட்டம்கடலூர் மாநகராட்சி2,80,2632,84724 ஆகத்து 20214
  • கடலூர் வடக்கு
  • கடலூர் கிழக்கு
  • கடலூர் தெற்கு
  • கடலூர் மேற்கு
4582.83சதுர கி.மீ
19கரூர்கரூர் மாவட்டம்கரூர் மாநகராட்சி3,58,4683,36324 ஆகத்து 20214
  • கரூர் கிழக்கு
  • இனாம் கரூர்
  • கரூர் மேற்கு
  • தாந்தோணி
48103.56 சதுர கி.மீ
20கும்பகோணம்தஞ்சாவூர் மாவட்டம்கும்பகோணம் மாநகராட்சி2,23,8664,16524 ஆகத்து 20214
  • கும்பகோணம் வடக்கு
  • கும்பகோணம் கிழக்கு
  • கும்பகோணம் தெற்கு
  • கும்பகோணம் மேற்கு
4848.87 சதுர கி.மீ
21சிவகாசிவிருதுநகர் மாவட்டம்சிவகாசி மாநகராட்சி2,60.0475,34824 ஆகத்து 20214
  • சிவகாசி மத்தி
  • சிவகாசி கிழக்கு
  • சிவகாசி மேற்கு
  • திருத்தங்கல்
4853.67 சதுர கி.மீ
22புதுக்கோட்டைபுதுக்கோட்டை மாவட்டம்புதுக்கோட்டை மாநகராட்சி2,16,0474,54815 மார்ச் 2024NANANA121 சதுர கி.மீ
23காரைக்குடிசிவகங்கை மாவட்டம்காரைக்குடி மாநகராட்சி2,34,5235,30015 மார்ச் 2024NANANA96 சதுர கி.மீ
24திருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம்திருவண்ணாமலை மாநகராட்சி1,60,5004,00015 மார்ச் 2024NANANA100 சதுர கி.மீ
25நாமக்கல்நாமக்கல் மாவட்டம்நாமக்கல் மாநகராட்சி1,50,7005,00015 மார்ச் 2024NANANA100 சதுர கி.மீ

இதனையும் காண்க

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை