திருவண்ணாமலை

தமிழ்நாட்டின் 11வது பெரிய மாநகரம். உலகப் புகழ்ப்பெற்ற திருக்கோயில் திருத்தலம்.

திருவண்ணாமலை (Tiruvannamalai) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். இந்நகருக்கு, திருவருணை மற்றும் திருஅண்ணாமலை எனும் பெயர்களும் உண்டு. புனித நகரமாகக் கருதப்படும் இந்நகரில், புகழ்பெற்ற (நினைத்தாலே முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான) அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.

திருவண்ணாமலை
Tiruvannamalai
திருவருனை, திருஅண்ணாமலை
மாநகராட்சி
அடைபெயர்(கள்): கோயில் நகரம், தக்காணப் பீடபூமியின் நுழைவாயில்
திருவண்ணாமலை is located in தமிழ் நாடு
திருவண்ணாமலை
திருவண்ணாமலை
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
திருவண்ணாமலை is located in இந்தியா
திருவண்ணாமலை
திருவண்ணாமலை
திருவண்ணாமலை (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°13′N 79°04′E / 12.22°N 79.07°E / 12.22; 79.07
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
பகுதிதொண்டை நாடு
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்திருவண்ணாமலை மாநகராட்சி
 • மக்களவை உறுப்பினர்சி. என். அண்ணாத்துரை
 • சட்டமன்ற உறுப்பினர்எ. வா. வேலு
 • மாவட்ட ஆட்சியர்பி. முருகேஷ், இ. ஆ. ப
பரப்பளவு[1]
 • மாநகராட்சி13.64 km2 (5.27 sq mi)
ஏற்றம்171 m (561 ft)
மக்கள்தொகை (2011)
 • மாநகராட்சி1,45,278
 • தரவரிசை25
 • பெருநகர்1,98,100
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு606601
தொலைபேசி குறியீடு91-4175
வாகனப் பதிவுTN 25
சென்னையிலிருந்து தொலைவு194 கி.மீ (121 மைல்)
பெங்களூரிலிருந்து தொலைவு202 கி.மீ (126 மைல்)
புதுச்சேரியிலிருந்து தொலைவு106 கி.மீ (66 மைல்)
மதுரையிலிருந்து தொலைவு317 கி.மீ (197 மைல்)
இணையதளம்tiruvannamalai

இந்நகரம், புதுச்சேரி - பெங்களூரு நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 66 திருவண்ணாமலை - திருச்சி - மதுரை - தூத்துக்குடி நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 38 ம் மற்றும் சேலம் - திருவண்ணாமலை - ஆரணி - சென்னை நகரை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை எண் 237 ம், இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

திருவண்ணாமலை மாநகரம் உருவாக்கம்

மக்கள் வகைப்பாடு


திருவண்ணாமலையின் சமயங்கள் (2011)

  இந்து (82.57%)
  சைனம் (0.4%)
  மற்றவை (0.13%)

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,45,278 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 72,406 ஆண்கள், 72,872 பெண்கள் ஆவார்கள். இந்நகரம் பாலின விகிதம் 1,006 மற்றும் குழந்தையின் பாலின விகிதம் 958 ஆகும். மக்களின் சராசரி கல்வியறிவு 87.75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.98%, பெண்களின் கல்வியறிவு 82.59% ஆகும்.[3]

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, திருவண்ணாமலையில் இந்துக்கள் 82.57%, முஸ்லிம்கள் 14.07%, கிறிஸ்தவர்கள் 2.79%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.4%, 0.13% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர்.

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
195135,912—    
196146,441+29.3%
198189,462+92.6%
19911,09,196+22.1%
20011,30,376+19.4%
20111,45,278+11.4%
சான்று:

சிவாலயமும் சித்தர்களும்

திருவண்ணாமலை கோயில்

அருணாசலேஸ்வரர் மலையிலிருந்து அருணாசலேஸ்வரர் கோயில் வளாகத் தோற்றம்

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. இச்சிவாலயம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். பிரம்மாவும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் ? என்று சண்டையிட்டுக் கொண்டபோது, சிவபெருமான் அக்னி தூணாக நின்றார். அவருடைய அடியைத் தேடி, திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா, சிவபெருமானின் முடியைத் தேடி, அன்ன வாகனத்தில் பறந்து சென்றார். இவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடிமுடியைக் காண முடியவில்லை என்பது இத்தலத்தின் தலப் புராணமாகும்.

திருவண்ணாமலை சிவாலயத்தில் ஆண்டுக்கு நான்கு முறை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இவற்றுள் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற பிரம்மோற்சவம் சிறப்பானதாகும். இந்தப் பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் பத்தாம் நாள் கார்த்திகை தீபத் திருநாளாகும். இச்சிவாலயத்தில் கார்த்திகை தீப நாளான்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. அந்நாளில் சிவாலயத்திற்கு வந்து, திருவண்ணாமலையை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். மலையின் உச்சியில் இந்தத் தீபம் ஏற்றப்படுகிறது. இதனை மகா தீபம் என்று அழைக்கின்றனர்.[6]

சைவ சமயத்தில் நினைத்தாலே முக்தி தரக் கூடியத் தலமாக திருவண்ணாமலை உள்ளது.

கிரிவலம்

கார்த்திகை தீபத் திருநாளன்றும், முழுநிலவு நாட்களிலும் சிவ பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருகிறார்கள். இதனை மலைவலம் என்று அழைக்கின்றனர். பக்தர்கள் வலம் வருகின்ற கிரிவலப் பாதைகள் இரண்டு உள்ளன.

சித்தர்கள்

திருவண்ணாமலையில் மலைவலம் வருகின்ற பாதையில், எண்ணற்ற சித்தர்களின் ஜீவசமாதிகள் அமைந்துள்ளன. இடைக்காடர், குகை நமச்சிவாயர், இரமண மகரிஷி ஆசிரமம், சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், விசிறி சாமியார் ஆசிரமம், மூக்குப் பொடி சித்தர் போன்றவை உள்ளன.

தக்காண பீடபூமி உருவாக்கம்

திருவண்ணாமலை மலை ஓர் இறந்த எரிமலையாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன் இது வெடித்து, இதன் தீக்குழம்பு, நீரில் தோய்ந்து உருவானதுதான் தக்காணம் என்றும் சிலர் கூறுவார்.[சான்று தேவை]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°13′N 79°04′E / 12.22°N 79.07°E / 12.22; 79.07 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171 மீட்டர் (561 அடி) உயரத்தில் இருக்கின்றது.

தட்பவெப்ப நிலைத் தகவல், திருவண்ணாமலை (1951–1980)
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)35.3
(95.5)
39.8
(103.6)
42.8
(109)
44.4
(111.9)
45.0
(113)
44.3
(111.7)
40.9
(105.6)
39.4
(102.9)
39.6
(103.3)
39.2
(102.6)
35.8
(96.4)
35.0
(95)
45.0
(113)
உயர் சராசரி °C (°F)29.2
(84.6)
32.0
(89.6)
35.0
(95)
37.1
(98.8)
38.5
(101.3)
36.3
(97.3)
34.6
(94.3)
34.0
(93.2)
34.0
(93.2)
33.0
(91.4)
29.5
(85.1)
28.3
(82.9)
33.46
(92.23)
தாழ் சராசரி °C (°F)18.2
(64.8)
19.2
(66.6)
21.3
(70.3)
24.8
(76.6)
26.3
(79.3)
26.0
(78.8)
25.1
(77.2)
24.6
(76.3)
24.1
(75.4)
22.9
(73.2)
20.8
(69.4)
19.2
(66.6)
22.71
(72.88)
பதியப்பட்ட தாழ் °C (°F)10.2
(50.4)
12.0
(53.6)
12.1
(53.8)
13.8
(56.8)
18.1
(64.6)
19.6
(67.3)
18.8
(65.8)
18.7
(65.7)
18.7
(65.7)
15.6
(60.1)
12.1
(53.8)
9.3
(48.7)
9.3
(48.7)
பொழிவு mm (inches)9.0
(0.354)
7.1
(0.28)
5.9
(0.232)
21.8
(0.858)
83.9
(3.303)
71.0
(2.795)
117.0
(4.606)
124.9
(4.917)
149.6
(5.89)
176.9
(6.965)
155.2
(6.11)
78.6
(3.094)
1,000.9
(39.406)
சராசரி பொழிவு நாட்கள்0.80.50.41.34.75.36.67.87.69.47.73.956
ஆதாரம்: இந்திய வானிலை ஆய்வுத் துறை,[8]

அமைவிடம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

மாநகராட்சி அதிகாரிகள்
மேயர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர்எ. வா. வேலு
மக்களவை உறுப்பினர்சி. என். அண்ணாத்துரை

திருவண்ணாமலை மாநகராட்சியானது திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த சி. என். அண்ணாத்துரை வென்றார்.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த எ. வா. வேலு வென்றார்.

சிறப்புகள்

இரமண மகரிசியின் ஆசிரமம், திருவண்ணாமலை

அண்ணாமலையார் ஆலயம் மிகவும் புகழ்வாய்ந்தது.இறைவன் பெயர் - அண்ணாமலையார் (அருணாசலேச்சுவரர்)இறைவி பெயர் - உண்ணாமுலை அம்மன் (அபீதகுஜலாம்பாள்)புகழ் பெற்ற விழா - திருகார்த்திகை தீபம்விழா காலம் - கார்த்திகை மாதம்

இரமண மகரிசி ஆசிரமம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இதைச் சுற்றிப் பார்க்க கட்டணம் இல்லை. இங்கு தங்கும் வசதி உண்டு. இங்கு பல வெளிநாட்டவர் வந்து தங்குகின்றனர்.

போக்குவரத்து

திருவண்ணாமலை மாநகராட்சி தொடருந்து மற்றும் சாலை மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்து

திருவண்ணாமலை, இரயில் மற்றும் சாலை வலைப்பின்னல் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நகரமாகும். வேலூர், ஆரணி, புதுச்சேரி, மற்றும் விழுப்புரம் போன்ற நகரங்களுக்கு திருவண்ணாமலையில் இருந்து செல்ல அடிக்கடி பேருந்து சேவைகள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்கள், நெடுஞ்சாலைகள் வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் (அதிக பேருந்து சேவைகள் மூலம்) இணைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் இருந்து மூன்று நெடுஞ்சாலைகள் துவங்கி பிற நகரங்களை சென்று அடைகின்றன, அவை:

கீழ்பெண்ணாத்தூர் -செஞ்சி - திண்டிவனம் - பாண்டிச்சேரி).

பேருந்து சேவைகள்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம்

திருவண்ணாமலையில் மத்திய பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. இங்கிருந்து பெரு நகரங்களுக்கு, பேருந்து சேவைகள் நன்றாக உள்ளன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தினசரி பேருந்து சேவைகளை வழங்குகிறது. இங்கிருந்து சென்னை செல்வதற்கு, இரண்டு பெரிய பேருந்து வழித்தடங்கள் உள்ளன, ஒன்று செஞ்சி, தாம்பரம், சென்னை வழித்தடம் ; மற்றொன்று போளூர், ஆரணி, ஆற்காடு, பூவிருந்தவல்லி, சென்னை வழித்தடம். உள்ளூர் பேருந்து சேவைகளை, தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் பிரிவு வழங்குகிறது.

வழிசேருமிடம்
போளூர் மார்க்கமாகவேலூர், ஆரணி, திருப்பதி, காஞ்சிபுரம், சென்னை, செய்யாறு, திருத்தணி, காளஹஸ்தி, ஆற்காடு, இராணிப்பேட்டை,சித்தூர், கண்ணமங்கலம், சமுனாமரத்தூர் செல்லும் பேருந்துகள்
செங்கம் மார்க்கமாககிருஷ்ணகிரி, பெங்களூரு, ஓசூர், திருப்பத்தூர், தர்மபுரி, ஒகேனக்கல், மேட்டூர், எடப்பாடி, சேலம், பவானி, பெருந்துறை, சங்ககிரி, ஈரோடு, ஊட்டி, மேட்டுப்பாளையம், திருப்பூர், கோயம்புத்தூர், பழனி, திண்டுக்கல், நாமக்கல், கரூர் மற்றும் கர்நாடக மாநிலம் ஷிமோகா (Shimoga), சிக்கமகளூர், உடுப்பி, சாகர் செல்லும் பேருந்துகள்
அவலூர்பேட்டை மார்க்கமாகசேத்துப்பட்டு, ஆரணி, செய்யாறு, மேல்மலையனூர், வந்தவாசி, காஞ்சிபுரம், சென்னை, மேல்மருவத்தூர் செல்லும் பேருந்துகள்
செஞ்சி மார்க்கமாகசென்னை, திண்டிவனம், புதுச்சேரி, மேல்மருவத்தூர், தாம்பரம், அடையாறு செல்லும் பேருந்துகள்
வேட்டவலம் மார்க்கமாகவிழுப்புரம், புதுச்சேரி, கடலூர்செல்லும் பேருந்துகள்
திருக்கோவிலூர் மார்க்கமாகநாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, செங்கோட்டை, மார்த்தாண்டம், திருவனந்தபுரம் செல்லும் பேருந்துகள்
ரிஷிவந்தியம் மார்க்கமாககள்ளக்குறிச்சி, தியாகதுர்கம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சங்கராபுரம் மார்க்கமாகசங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர் செல்லும் பேருந்துகள்
தானிப்பாடி மார்க்கமாகதண்டராம்பட்டு, அரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், கரூர் செல்லும் பேருந்துகள்
காஞ்சி மார்க்கமாகநகரப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன

மேலும், வேலூர், காஞ்சிபுரம், சென்னை, புதுச்சேரி, தாம்பரம்,பெங்களூரு, ஆரணி, கோயம்புத்தூர், திருப்பூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களுக்கு 100க்கும் அதிகமான பேருந்து வசதிகள் உள்ளன.

தொடருந்துப் போக்குவரத்து

திருவண்ணாமலையில் ரயில் நிலையம்

திருவண்ணாமலையில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த இரயில் நிலையம் தென்னக இரயில்வே யின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர்,காட்பாடி, வேலூர், ஆரணி, திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம் இரயில் பாதையில் திருவண்ணாமலை உள்ளது. இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1867 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. திருவண்ணாமலை ரயில் பாதை மின்மயமாக்கப்பட்ட இரயில் பாதையாகும்.

திருவண்ணாமலை வழியாக பிற நகரங்களுக்கு செல்லும் ரயில்கள்:

6 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட திருவண்ணாமலை - தாம்பரம் ரயில் மற்றும் திருவண்ணாமலை - காட்பாடி - சென்ட்ரல் ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன.

மேலும்:

இரயில் அட்டவணை

வ.எண்ரயில் பெயர்புறப்படும் இடம்சேருமிடம்வழித்தடம்

சேவைகளின் கால அளவு
1காட்பாடி- திருவண்ணாமலை -விழுப்புரம் - கடலூர் பயணியர் ரயில்காட்பாடிகடலூர்வேலூர், கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூர், துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை, தண்டரை, அரகண்டநல்லூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர்தினமும்
2பெங்களூர் - திருவண்ணாமலை பயணியர் ரயில்பெங்களூர் கண்டோன்மென்ட்திருவண்ணாமலைதுரிஞ்சாபுரம், போளூர் , ஆரணி சாலை, வேலூர் , காட்பாடி, ஜோலார்பேட்டை, பங்காருபேட்டை, கிரிஷ்ணராஜபுரம், பெங்களூர் கண்டோன்மென்ட் - மல்லேசுவரம், - பெங்களூர்தினமும்
3தாம்பரம் - திருவண்ணாமலை விரிவாக்கம் (EXTENSION .) பயணிகள் ரயில்தாம்பரம்தண்டரைசெங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர் – காட்பாடி, ஆரணி சாலை, போளூர், திருவண்ணாமலைதினமும்
4புதுச்சேரி - திருப்பதி விரிவாக்கம் (EXTENSION) பயணிகள் ரயில்புதுச்சேரிதிருப்பதிவிழுப்புரம், >திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி, கண்ணமங்கலம், வேலூர், காட்பாடி, சித்தூர்வாரந்தோறும்

வானூர்தி நிலையம்

திருவண்ணாமலையில் வானூர்தி நிலையம் ஏதும் இல்லை. எனினும், பௌர்ணமிக்கு வரும் பக்தர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அரசு இன்னும் 5 வருடத்தில் வானூர்தி நிலையம் அமைக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு சென்னை சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து பெங்களூர் மற்றும் சென்னைக்குச் சேவைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=திருவண்ணாமலை&oldid=3930912" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை