அதிசர்

வங்காள பௌத்த அறிஞர்

அதிசர் (கிபி 982 - 1054) இந்தியாவின் வங்காள பௌத்த சமய பிக்கு ஆவார்.[2] வங்காள பாலப் பேரரசில் (தற்கால வங்காளதேசம், முன்சிகஞ்ச் மாவட்டம்) விக்கிரம்பூரில் பிறந்தவர். பிக்குவாக துறவறம் ஏற்று, நாலந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த சாத்திரங்களை பயின்றவர்.[3][4]

அதிசர்
கையில் ஏட்டுச் சுவடியுடன் அதிசரின் ஓவியம் [1]
தாய்மொழியில் பெயர்অতীশ দীপংকর শ্রীজ্ঞান
அதிசா தீபம்கர சிறீஞானம்
பிறப்பு980
விக்கிரம்பூர், பாலப் பேரரசு
(முன்சிகஞ்ச், வங்காளதேசம்)
இறப்பு1054
நயாதாங், திபெத்
பணிபௌத்த குரு
அறியப்படுவதுதிபெத்தில் சர்மா பௌத்த குருகுல மரபை தோற்றுவித்தவர்
அதிசரின் சுவர் ஓவியம், ராலுங் மடாலயம், திபெத், 1993

அதிசர் கிபி 11ம் நூற்றாண்டில் மகாயானம் மற்றும் வஜ்ஜிராயன பௌத்த தத்துவங்களை திபெத் முதல் சுமத்திரா வரையிலான அசிய நாடுகளில் பரப்புவதில் முன்னிலை வகித்தவர். திபெத்தில் சர்மா பௌத்த குருகுல மரபை தோற்றுவித்தவர்.[3][4]

கிபி 1013ல் சிறீவிஜயம் எனப்படும் தற்கால மலேசியா மற்றும் இந்தோனேசியா பகுதிகளில் 12 ஆண்டுகள் தங்கி, பௌத்த சமயத்தை அப்பகுதிகளில் பரப்பியவர். நவீன பௌத்த சமயத்தின் புகழ் பெற்றவராக கருதப்படும் அசிதரின் மாணவரான திரோம்டன் என்பவர் திபெத்தில் கதம் பௌத்த தத்துவத்தை நிறுவியவர் ஆவார். [5]

நாகார்ச்சுனர், சந்திரகீர்த்தி அசங்கர் மற்றும் வசுபந்து போன்ற பௌத்த அறிஞர்கள் வழியில் வந்தவர் அதிசர்.[6] அதிசரின் குருமார்களில் முக்கியமாகக் கருதப்படுபவர் தர்மகீர்த்திசிறீ ஆவார்.[7]

படைப்புகள்

  • போதிபாதபிரதீபம்
  • போதிபாத பிரதீபகஞ்ஜிகா நாமா
  • சர்யாசம்கிரகபிரதீபம்
  • சத்தியத்வ அவதாரம்:
  • போதிசத்துவமன்யாவளி
  • மத்தியாமக ரத்தினாபிரதீபம்
  • மகாயானபாத சாதனா சங்கிரகம்
  • சிக்ஷா சமுச்சய அபிசமயம்
  • பிரக்ஞான பரமிதாபிந்தார்த்த பிரதீபம்
  • ஏகவீரசாதனா
  • விமலரத்தின லேகா

மேற்கோள்கள்

ஆதார நூல்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Atisha
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அதிசர்&oldid=3893909" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை