அரியலூர் மாவட்டம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், 38 மாவட்டங்களில் ஒன்று.
அரியலூர் மாவட்டம்
மாவட்டம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற
கங்கைகொண்ட சோழபுரம் கோவில்

அரியலூர் மாவட்டம்:அமைந்துள்ள இடம்
நாடு India
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம்அரியலூர்
பகுதிமத்திய மாவட்டம்
ஆட்சியர்
திருமதி. பெ. ரமண
சரஸ்வதி, இ. ஆ. ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

திரு. கா. பெரோஸ்
கான் அப்துல்லா
நகராட்சிகள்2
வருவாய் கோட்டங்கள்2
வட்டங்கள்4
உள்வட்டங்கள்15
பேரூராட்சிகள்2
ஊராட்சி ஒன்றியங்கள்6
ஊராட்சிகள்201
வருவாய் கிராமங்கள்195
சட்டமன்றத் தொகுதிகள்3
மக்களவைத் தொகுதிகள்1
பரப்பளவுமொத்தம்: 1,940.00 ச.கி.மீ
ஊரகம்: 1886.69 ச.கி.மீ
நகர்ப்புறம்: 53.31 ச.கி.மீ
மக்கள் தொகை
(2011)
மொத்தம்: 7,54,894
ஆண்கள்: 3,74,703
பெண்கள்: 3,80,191
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இசீநே
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
608 XXX, 621 XXX
தொலைபேசிக்
குறியீடு

04329
வாகனப் பதிவு
TN 61
கல்வியறிவு
71.34%
இணையதளம்ariyalur

அரியலூர் மாவட்டம் (Ariyalur district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அரியலூர் ஆகும். இந்த மாவட்டம் 1,940.00 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.

சோழ மன்னர்களில் ஒருவரான, இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம், இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாகும். பிரம்மாண்டமான முதுகெலும்பில்லாத உயிரினங்கள் மற்றும் தாடை மீன்களின் பல புதைபடிவங்கள், டைனோசர் முட்டைகள் போன்றவை இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[1][2][3] புதைபடிவங்களை பாதுகாப்பதற்கு கீழப்பழூரில் ஒரு ஆன்-சைட் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில், சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளது.

வரலாறு

சனவரி 1, 2001-இல் பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பொருளாதாரத்தை காரணம் கூறி அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007இல் உருவாக்கப்பட்டது.[4]

மாவட்ட நிர்வாகம்

மாவட்ட வருவாய் நிர்வாகம்

இம்மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம் ஆகிய 2 வருவாய் கோட்டங்களும், அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய 4 வருவாய் வட்டங்களும், 15 உள்வட்டங்களும், 195 வருவாய் கிராமங்களும் கொண்டது.[5][6]

உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்

இம்மாவட்டம் 12 உறுப்பினர்கள் கொண்ட ஒரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும், 6 ஊராட்சி ஒன்றியங்களும்,[7] 201 கிராம ஊராட்சிகளும்[8], அரியலூர், ஜெயங்கொண்டம் என இரண்டு நகராட்சிகளும், வரதராஜன்பேட்டை மற்றும் உடையார்பாளையம் என 2 பேரூராட்சிகளும் கொண்டது.[9]

மக்கள் வகைப்பாடு

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.ஆ. ±%
19012,71,501—    
19112,94,621+0.82%
19213,06,764+0.40%
19313,08,837+0.07%
19413,48,381+1.21%
19513,98,231+1.35%
19614,37,692+0.95%
19715,13,704+1.61%
19815,72,498+1.09%
19916,36,381+1.06%
20016,95,524+0.89%
20117,54,894+0.82%
சான்று:[10]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 1,940 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள அரியலூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 754,894 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 374,703 ஆகவும் பெண்கள் 380,191 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1015 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 389 பேர் என்ற வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 71.34% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.23% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 61.74% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 81,187 ஆக உள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 8.54% ஆக உள்ளது.[11][12]

சமயம்


மதவாரியான கணக்கீடு (2011)

  மற்றவை (0.01%)

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 708,397 (93.84 %) ஆகவும், இசுலாமிய மக்கள்தொகை 7,942 (1.05 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 37,403 (4.95 %) ஆகவும், சீக்கிய மக்கள்தொகை 104 (0.01 %) ஆகவும், பௌத்த சமய மக்கள்தொகை 88 (0.01 %) ஆகவும், சைன சமய மக்கள்தொகை 65 (0.01 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 42 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 853 (0.11 %) ஆகவும் உள்ளது.

அரசியல்

சட்டமன்றம்

இம்மாவட்டத்தில் அரியலூர், குன்னம், ஜெயங்கொண்டம் என மூன்று சட்டமன்றத் தொகுதிகளை கொண்டது.[13]

வ. எண்சட்டமன்றத் தொகுதிசட்டமன்ற உறுப்பினர்கட்சி
1அரியலூர்கே. சின்னப்பாதிமுக
2ஜெயங்கொண்டம்கே. எஸ். கே. கண்ணன்திமுக
3குன்னம் (சில பகுதிகள்)எஸ். எஸ். சிவசங்கர்திமுக

மக்களவை

இம்மாவட்டப் பகுதிகள் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.

வ. எண்மக்களவைத் தொகுதிமக்களவை உறுப்பினர்கட்சி
1சிதம்பரம்தொல். திருமாவளவன்விசிக

பொருளாதாரம்

இங்கு சுண்ணாம்புக் கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி (Cement city) என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது.

சிமெண்ட் தவிர நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது. தமிழகத்தில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் அதிக அளவில் படிமங்களாகக் கிடைக்கிறது, இதனையடுத்து தமிழக அரசும் ஜெயங்கொண்டம் அனல் மின்நிலைய திட்டம் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து அதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இது தவிர இம்மாவட்டத்தில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திரி அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

புவியியல்

  1. இம்மாவட்டத்தின் மூன்று முக்கிய நதிகளாவன‌ : கொள்ளிடம், மருதையாறு, வெள்ளாறு.
  2. இம்மாவட்டத்தின் மூன்று முக்கிய நகரங்கள் : அரியலூர், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம்.

எல்லைகள்

வேளாண்மை

இம்மாவட்டத்தினுடைய பொருளாதாரத்தில் வேளாண்மைத் தொழில், முக்கிய பங்காக தொடர்ந்து இருந்து வருகிறது. இம்மாவட்டத்தின் எழுபது சதவிகித மக்கள் வேளாண்மை அல்லது அது சார்ந்தத் தொழில்களைச் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஏழு பெரிய வேளாண் காலநிலை மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டம் மண்டல எண் -V எனக் குறியீடு தரப்பட்டுள்ளது. அதாவது காவிரி டெல்டா மண்டலம் (CDZ). வெப்பநிலை அதிகபட்சமாக 38℃-லிருந்து குறைந்தபட்சமாக 24℃ வரை நிலவி வருகிறது.

பரப்பளவு

இம்மாவட்டத்தின் மொத்த பரப்பு, 1,949.31 சதுர கிலோ மீட்டராகும். அதில் மொத்த பயிர் பரப்பானது 1.118 இலட்சம் எக்டேராகும். சராசரி வருடாந்திர மழை அளவானது 954 மி.மீ ஆகும். இந்நிலப்பரப்பில் 45136 எக்டேர் நீர் பாசன வசதிப் பெறுகிறது. காவிரியின் கிளைகள் வழியாக 10389 எக்டேர் திருமானூர், தா. பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரம் பாசனம் பெறுகின்றது. மீதமுள்ள 66738 எக்டேர், மழை நீரை சார்ந்த மானாவாரி (மழை நீரை மட்டுமே சார்ந்த வேளாண்மை) பகுதிகளாகும்.

மண் வகைமை

மண்ணின் இயல்பு பெரும்பாலும் களிமண் பாங்காகவும், சிவப்பு நிறமானை மேற்பகுதியும், மஞ்சள் நிறமான அடிப்பகுதியும் காணப்படுகின்றன. இதன் வேதியியல் தன்மைகளான இரும்புச் சத்து அதிகமும், சுண்ணாம்புக் கல்லும் கலந்துள்ள, செந்நிற களிமண் (Ferruginous red loam) உள்ள நிலத்தின் தன்மை காணப்படுகின்றன. மண்ணின் நடு ஆழத்தில், சிறந்த வடிகால் வசதியும், உப்பும், காரத் தன்மையும் இல்லாமல், காரகாடித்தன்மைச் சுட்டெண் 6.5-லிருந்து 8 வரை காணப்படுகின்றன. அங்ககத் தன்மைகளான, தழைச்சத்துக்களும், மணிச்சத்துக்களும் அளவு குறைந்து இருக்கின்றன. ஆனால், சாம்பல் சத்தும், சுண்ணாம்பும் அளவு அதிகமாகவே காணப்படுகின்றன. செந்துறை, தா. பழூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் செம்மையான சரளைமண் காணப்படுகிறது. திருமானூரிலும், அரியலூர் வட்டாரங்களிலும், கரிசல் மண் அதிகமாகக் காணப்படுகின்றன.

மண் வளத்தை உயிர் உரங்கள் கொண்டு மேம்படுத்துதல், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, விதை கிராமத் திட்டம், மண்வள அட்டை இயக்கம், தேசிய எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் பனை இயக்கம், பசுந்தாள் உரம், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு பருத்திச் சாகுபடி இயக்கம், தேசிய நீடித்த வேளாண்மை இயக்கம், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைத் தொழில் நுட்பங்கள் போன்றத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மாநில அரசின் பங்கு

அரியலூர் மாவட்டத்தில் பலவகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுவதால் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் தேவையைப் பூர்த்தி செய்தல், ஊரக மக்கள் தொகைக்கு வேலை வாய்ப்பினை அளித்தல் ஆகியவையே வேளாண்மைத் துறையின் முக்கிய கொள்கையாகவும், கோட்பாடுகளாகவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. வேளாண் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல், அதற்குரியத் தொழில் நுட்பங்களை கண்டறிதல், அதனை பரப்புதல் ஆகிய செயல் திட்டங்களினால் வேளாண்மை துறை செயற்திட்டத்துடன் செயற்படுகிறது.

நடுவண் அரசின் பங்கு

இருப்பினும், நடுவண் அரசின் திட்டங்களான, பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம் வழியே சொந்த கிராமத்தில் வசிக்காத விவசாயிகளின் பட்டியல்களை காணும் போது, அரியலூர் உள்வட்டம், ஏலாக்குறிச்சி உள்வட்டம், கீழப்பழூர் உள்வட்டம், நாகமங்கலம் உள்வட்டம், திருமானூர் உள்வட்டம், செந்துறை உள்வட்டம், பொன்பரப்பி உள்வட்டம் R.S.மாத்தூர் உள்வட்டம் உடையார்பாளையம் உள்வட்டம், ஜெயங்கொண்டம் உள்வட்டம், குண்டவெளி உள்வட்டம், சுத்தமல்லி உள்வட்டம், தா.பழூர் உள்வட்டம், ஆண்டிமடம் உள்வட்டம், குவாகம் உள்வட்டம், பல்வேறு வட்டங்களில் குடிபெயர்வு நடைபெற்றுள்ளதை அறிய இயலும்.[14]

மேலும், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட தகுதியற்றோர் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அரியலூர் உள்வட்டம்,[15] ஏலாக்குறிச்சி உள்வட்டம், கீழப்பழூர் உள்வட்டம், நாகமங்கலம் உள்வட்டம்,திருமானூர் உள்வட்டம், செந்துறை உள்வட்டம், பொன்பரப்பி உள்வட்டம், R.S. மாத்தூர் உள்வட்டம், உடையார்பாளையம் உள்வட்டம், ஜெயங்கொண்டம் உள்வட்டம், குண்டவெளி உள்வட்டம், சுத்தமல்லி உள்வட்டம், தா.பழூர் உள்வட்டம், ஆண்டிமடம் உள்வட்டம், குவாகம் உள்வட்டம் ஆகிய அரியலூர் உள்வட்டங்களுக்கான தனித்தனி பட்டியல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து வசதிகள்

அரியலூர் தொடருந்து நிலையம்

தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சாலை மூலம் சென்று வர அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய நகரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் தொடருந்து மூலம் சென்று வர அரியலூர் தொடருந்து நிலையம் முக்கிய சந்திப்பாக இருக்கிறது. மேலும் அரியலூர் மாவட்டத்தின் தொடருந்து நிலையங்களான சில்லக்குடி, வெள்ளூர், ஒட்டக்கோவில், செந்துறை, ஆர்.எஸ்.மாத்தூர், ஈச்சங்காடு மற்றும் ஈச்சங்காடு (ஹால்ட்) வரை உள்ளது.

சுற்றுலா தளங்கள்

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் நுழைவாயில்

சோழர்களின் பெருமரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழன் மகனான இராசேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. இங்கு இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் இன்றும் உள்ளது. அதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. கங்கைகொண்ட சோழபுரம் கோயில் தஞ்சாவூர் கோயிலை விட சிறியது, ஆனால் சுத்திகரிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் தென்னிந்தியாவின், மிகப்பெரிய சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் தஞ்சாவூரிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் (43 மைல்) தொலைவில் உள்ளது.

வேட்டக்குடி ‍ கரைவெட்டி பறவைகள் சரணாலயம்

தமிழ்நாட்டிலுள்ள மிக முக்கியமான நன்னீர் ஏரிகளுள் ஒன்றாக விளங்குகிறது. மாநிலத்தின் பெரிய ஏரிகளுள் இதுவும் ஒன்று. இந்த ஏரி, மாநிலத்தின் மிக அதிக அளவிலான நீர்ப்பறவைகள் வந்து கூடும் இடமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இச்சரணாலயத்தில் உள்ள 188 பறவை இனங்களில் 82 இனங்கள் நீர்ப்பறவைகளாகும். அருகிவரும் பட்டைதலை வாத்து, இந்த ஏரியின் முக்கிய வருகையாளர்களுள் ஒன்றாகும்.[16]

கல்லூரிகள்

மருத்துவக்கல்லூரி

  • அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை - அரியலூர்

கலை அறிவியல் கல்லூரிகள்

  • அரசுக் கலைக் கல்லூரி - அரியலூர்
  • அரசுக் கலைக் கல்லூரி - ஜெயங்கொண்டம்
  • விநாயகா கலை அறிவியல் மகளிர் கல்லூரி
  • மீனாட்சி இராமசாமி கலை அறிவியல் கல்லூரி
  • மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • மதர் ஞானம்மா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பொறியியல் கல்லூரிகள்

  • மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி
  • அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - அரியலூர் வளாகம்
  • கே.கே.சி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
  • அரியலூர் பொறியியல் கல்லூரி
  • நெல்லியாண்டவர் தொழில்நுட்ப கல்லூரி

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்

  • மீனாட்சி இராமசாமி கல்வியியல் கல்லூரி
  • விநாயகா கல்வியியல் கல்லூரி
  • எம்.கே.கல்வியியல் கல்லூரி
  • எஸ். ஆர்.எம். கல்வியியல் கல்லூரி
  • ஸ்ரீ லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி
  • ஸ்ரீ சரஸ்வதி கல்வியியல் கல்லூரி
  • மெரிட் கல்வியியல் கல்லூரி
  • கே. இந்திரா கல்வியியல் கல்லூரி
  • ஸ்ரீ சௌபாக்யா கல்வியியல் கல்லூரி

பாலிடெக்னிக் கல்லூரிகள்

  • அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரியலூர்
  • மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரி
  • மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரி
  • நேஷனல் பாலிடெக்னிக் கல்லூரி

செவிலியர் பயிற்சி கல்லூரிகள்

  • அன்னை தெரசா மருந்தியல் மற்றும் செவிலியர் கல்லூரி

முக்கிய இடங்கள்

கரைவெட்டி பறவைகள் காப்பகம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அரியலூர்_மாவட்டம்&oldid=3859219" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை