இந்திய மேலாண்மை கழகங்கள்

இந்திய மேலாண்மை கழகங்கள் (இ.மே.க) (ஐ.ஐ.எம்), இந்தியாவிலுள்ள சிறப்பான பட்டமேற்படிப்பு மேலாண்மை பள்ளிகளாகும்.அவை மேலாண்மை கல்வி வழங்குவது, ஆய்வுகள் மேற்கொள்வதுடன் இந்திய பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் மேலாண்மை தொடர்பான கருத்துரைகள் வழங்கி வருகின்றன. இந்திய மாணவர்களில் அறிவில் சிறந்தவர்களைக் கண்டெடுத்து அவர்களுக்கு உலகின் தலைசிறந்த மேலாண்மைக் கல்வியை அளித்து இந்திய பொருளாதாரத்தின் பல துறைகளிலும் சிறப்பான வழிகாட்டிடும் மேலாளர் வளத்தை அமைத்திடும் நோக்கத்துடன் இந்திய அரசு|இந்திய அரசால் இக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.[1] இ.மே.கழகங்கள் நாட்டின் தலைசிறந்த மேலாளர்களை உருவாக்குவதில் முன்னணியில் இருப்பதுடன் உருவாகும் புதிய துறைகளிலும் ஆய்வுப்பணிகளை மேற்கொள்கிறது.[1] இவை உலகின் தலைசிறந்த மேலாண்மை கல்விக்கூடங்களுக்கிணையாக கல்வி வழங்கல், ஆய்வுகள் மற்றும் தொழில்முறை கருத்துரைகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.இந்தியாவின் தலைசிறந்த மேலாண்மை பள்ளிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.[2] இக்கழக முன்னாள் மாணவர்கள் உலகளவில் தமது தரத்தை நிலைநாட்டியுள்ளனர்.

இந்திய மேலாண்மை கழகங்கள் is located in இந்தியா
Kozhikode
Kozhikode
Shillong
Shillong
Rohtak
Rohtak
Raipur
Raipur
Tiruchirappalli
Tiruchirappalli
Kashipur
Kashipur
Udaipur
Udaipur
Nagpur
Nagpur
Sirmaur
Sirmaur
Amritsar
Amritsar
Bodh Gaya
Bodh Gaya
Sambalpur
Sambalpur
Visakhapatnam
Visakhapatnam
Jammu
Jammu
Location of the IIMs.

அனைத்து இ.மே.கழகங்களும் நடுவண் அரசின் உடமைகளாக நிதி பெற்று முழுமையான தன்னாட்சி பெற்ற கல்விக்கூடங்களாக விளங்குகின்றன.அவை நிறுவப்பட்ட வரிசையில் அமைந்துள்ள இடங்கள்: கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு, லக்னோ, கோழிக்கோடு, இந்தூர் மற்றும் சில்லாங்.இவை முதுகலை வணிக நிர்வாகம்|MBAவிற்கு இணையான பட்டமேற்படிப்பு மேலாண்மை பட்டயங்களை (PGDIM)வழங்குகின்றன. இவற்றின் பெல்லோஷிப் பட்டங்கள் முனைவர் பட்டத்திற்கிணையானவை.இவை கட்டமைக்கப்பட வணிகத்துறையன்றி பிற வணிக மற்றும் மேலாண்மை செய்யப்படாத துறைகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டு விவசாயம்,ஊரக வளர்ச்சி,பொது வினியோக அமைப்பு, ஆற்றல், நலக்கல்வி, இருப்பிடங்கள் என பல்வேறு துறைகளில் முன்னேற்ற வழிகளுக்கான கருத்துரைகள் வழங்கி வருகிறது.

இந்திய மேலாண்மை கழகங்களின் அமைவிடம்

இந்தியா முழுவதுமுள்ள 13 இந்திய மேலாண்மை கழகங்களின் (இ.மே.க)(ஐ.ஐ.எம்) பட்டியல்

இந்திய மேலாண்மை கழகம் (நிறுவப்பட வரிசையில்)
சீர் எண்தமிழ்ப் பெயர்ஆங்கிலப் பெயர்குறுகிய பெயர்துவங்கப்பட்ட ஆண்டுஇருப்பிடம்மாவட்டம்மாநிலம்அதிகாரப்பூர்வ இணையத்தளம்
1இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தாIndian Institute of Management CalcuttaIIM-C1961ஜோகா, கொல்கத்தாகொல்கத்தா மாவட்டம்மேற்கு வங்காளம்iimcal.ac.in
2இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்Indian Institute of Management AhmedabadIIM-A1961வசுதிரபூர், அகமதாபாத்அகமதாபாத் மாவட்டம்குஜராத்iima.ac.in
3இந்திய மேலாண்மை கழகம் பெங்களூருIndian Institute of Management BangaloreIIM-B1973பிலேகஹல்லி, பெங்களூருபெங்களூரு நகர மாவட்டம்கருநாடகம்iimb.ac.in
4இந்திய மேலாண்மை கழகம் லக்னோIndian Institute of Management LucknowIIM-L1984லக்னோலக்னோ மாவட்டம்உத்தரப் பிரதேசம்iiml.ac.in
5இந்திய மேலாண்மை கழகம் கோழிக்கோடுIndian Institute of Management KozhikodeIIM-K1996கோழிக்கோடுகோழிக்கோடு மாவட்டம்கேரளம்iimk.ac.in
6இந்திய மேலாண்மை கழகம் இந்தூர்Indian Institute of Management IndoreIIM-I1998இந்தூர்இந்தூர் மாவட்டம்மத்தியப் பிரதேசம்iimidr.ac.in
7இந்திய மேலாண்மை கழகம் சில்லாங்Indian Institute of Management ShillongIIM-S2007நோங்திம்மை, சில்லாங்கிழக்கு காசி மலை மாவட்டம்மேகாலயாiimshillong.ac.in
8இந்திய மேலாண்மை கழகம் ரோதக்Indian Institute of Management RohtakIIM-R2010 ரோதக் ரோதக் மாவட்டம்அரியானாiimrohtak.ac.in
9இந்திய மேலாண்மை கழகம் ராஞ்சிIndian Institute of Management RanchiIIM-Ranchi2010ராஞ்சிராஞ்சி மாவட்டம்சார்க்கண்ட்iimranchi.ac.in
10இந்திய மேலாண்மை கழகம் ராய்ப்பூர்Indian Institute of Management RaipurIIM-Raipur2010 ராய்ப்பூர்ராய்ப்பூர் மாவட்டம்சத்தீசுகர்iimraipur.ac.in
11இந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளிIndian Institute of Management TiruchirappalliIIM-T2011துவாக்குடி,திருச்சிராப்பள்ளிதிருச்சிராப்பள்ளி மாவட்டம்தமிழ்நாடுiimtrichy.ac.in
12இந்திய மேலாண்மை கழகம் உதய்ப்பூர்Indian Institute of Management UdaipurIIM-U2011உதயப்பூர்உதயப்பூர் மாவட்டம்இராச்சசுத்தான்iimu.ac.in
13இந்திய மேலாண்மை கழகம் காஷிப்பூர்Indian Institute of Management KashipurIIM-Kashipur2011 காஷிப்பூர்உதம் சிங் நகர் மாவட்டம்உத்தராகண்டம்iimkashipur.ac.in

மேற்கோள்கள்

இதனையும் பார்க்க

புற இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை