உத்ரெக்ட்

உத்ரெக்ட் (Utrecht, /ˈjtrɛkt/; டச்சு ஒலிப்பு: [ˈytrɛxt] ()) டச்சு மாகாணமான உத்ரெக்ட்டின் தலைநகரமும் மிகுந்த மக்கள் வாழும் நகரமும் ஆகும். இது இரான்ட்சுடாடு நகரத்தொகுதியின் கிழக்கு மூலையில் உள்ளது. நெதர்லாந்திலுள்ள நகராட்சிகளில் நான்காவது மிகப் பெரும் நகராட்சியாக விளங்குகின்றது. 2014ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 330,772 ஆக இருந்தது.

உத்ரெக்ட்
நகரமும் நகராட்சியும்
நகர மையத்தில் உள்ள டோம் கோபுரத்தின் வான்வழிக் காட்சி
நகர மையத்தில் உள்ள டோம் கோபுரத்தின் வான்வழிக் காட்சி
உத்ரெக்ட்-இன் கொடி
கொடி
உத்ரெக்ட்-இன் சின்னம்
சின்னம்
Highlighted position of Utrecht in a municipal map of Utrecht
உத்ரெக்ட்டின் அமைவிடம்
நாடுநெதர்லாந்து
மாகாணம்உத்ரெக்ட்
அரசு[1]
 • நிர்வாகம்நகராட்சி மன்றம்
 • நகரத் தந்தைழான் வான் சனென் (விவிடி)
பரப்பளவு[2]
 • நகராட்சி99.21 கிமீ2 (38.31 ச மை) km2 (Formatting error: invalid input when rounding sq mi)
 • நிலம்94.33 கிமீ2 (36.42 ச மை) km2 (Formatting error: invalid input when rounding sq mi)
 • நீர்4.88 km2 (1.88 ச மை) km2 (Formatting error: invalid input when rounding sq mi)
 • ராண்ட்சுடாடு3,043 km2 (1,175 sq mi)
ஏற்றம்[3]5 m (16 ft)
மக்கள்தொகை (Municipality, Error; Urban and Metro, Error; Randstad, 2011)[2][4][5]
 • நகராட்சி330,772
 • நகர்ப்புறம்489,734
 • பெருநகர்656,342
 • ராண்ட்சுடாடு69,79,500
இனங்கள்Utrechter, Utrechtenaar
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+1)
 • கோடை (பசேநே)ம.ஐ.கோ.நே (ஒசநே+2)
அஞ்சல் குறியீடு3450–3455, 3500–3585
தொலைபேசி030
இணையதளம்www.utrecht.nl

உத்ரெக்ட்டின் தொன்மையான நகரமையம் பிந்தைய நடுக்காலத்துக் கட்டிடங்களையும் கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது. 8ஆம் நூற்றாண்டிலிருந்து இது நெதர்லாந்தின் சமய மையமாக விளங்குகின்றது. டச்சுப் பொற்காலம் வரை இதுவே நெதர்லாந்தின் மிகவும் முக்கியமான நகரமாக இருந்தது; நாட்டின் பண்பாட்டு மையமாகவும் மிகவும் மக்கள்தொகை மிகுந்த நகரமாகவும் ஆம்ஸ்டர்டம் முன்னேறியது. 1321க்கும் 1382க்கும் இடையே கட்டப்பட்ட டோம்கெர்க் பேராலயம் சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.[6] 1674இல் ஏற்பட்ட சூறாவளி ஒன்றில் இப்பேராலயத்தின் ஒரு பகுதி அழிபட்டது. இப்பகுதி மீண்டும் கட்டப்படவில்லை. எனவே இப்பகுதி பேராலயத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தனியாக உள்ளது.

நெதர்லாந்தின் பெரியப் பல்கலைக்கழகமான உத்ரெக்ட் பல்கலைக்கழகம் இங்குள்ளது. தவிரவும் பல உயர் கல்வி நிறுவனங்கள் இந்நகரில் உள்ளன. நாட்டின் மையத்தில் இருப்பதால் இருப்பூர்தி, சாலைப் போக்குவரத்துக்கு மையச்சாக விளங்குகின்றது. பண்பாட்டு நிகழ்வுகளில் ஆம்சுட்டர்டாமை அடுத்து நாட்டின் இரண்டாமிடத்தில் உள்ளது.[7]2012இல் லோன்லி பிளானட் உலகின் பாராட்டப்படாத இடங்களில் முதல் பத்து இடங்களுக்குள் உத்ரெக்ட்டை சேர்த்துள்ளது.

டோம் கோபுரம், இடது புறத்தில் டோம் பேராலயத்தின் மீதப் பகுதி. 1674இல் ஏற்பட்ட சூறாவளியில் சேதமான இப்பகுதி மீண்டும் இணைக்கப்படவில்லை.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
உத்ரெக்ட்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உத்ரெக்ட்&oldid=3928011" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை