எக்சுவீடியோசு


எக்ஸ்வீடியோஸ் (Xvideos) என்பது உலகின் மிகப்பெரிய ஆபாச காணொலி பகிர்வு மற்றும் பார்க்கும் வலைத்தளங்களில் ஒன்றாகும். இது டபில்யூ ஜி ஸீ ஸட் ஹோல்டிங் என்னும் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.[1][4] அக்டோபர் 24, 2018 ஆம் தேதியன்று எடுக்கப்பட்ட கணக்கீட்டின் படி, உலகிலேயே அதிகளவில் பார்க்கப்பட்ட பிரபலமான வலைத்தளத்தில், இது 29 ஆவது இடத்தில் உள்ளது.

எக்ஸ்வீடியோஸ்
வலைத்தள வகைஆபாச காணொலி பகிர்தல்
உரிமையாளர்டபில்யூ ஜி ஸீ ஸட் ஹோல்டிங்[1][2]
வணிக நோக்கம்ஆம்
வெளியீடுமார்ச்சு 1, 2007; 17 ஆண்டுகள் முன்னர் (2007-03-01)
அலெக்சா நிலை 43 (உலகளவில்)[3]
தற்போதைய நிலைவலைதளம்
உரலிwww.xvideos.com

வரலாறு

எக்ஸ்வீடியோஸ் ஆபாச ஊடக வலைதளமாகும். இது வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை அணுகும் வலைத்தள வகையாகும். இதில் காணொலிக்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய இந்த வலைதளத்தில் கணக்கு ஒன்று இருந்தால் மட்டுமே முடியும். 2012இல் இவ்வலைதளத்தை, உலகலவில் மாதத்திற்கு 440 கோடி பேரால் பார்க்கப்பட்டது.

இந்தியாவில் தடை

இந்தியாவில் இந்த வலைதளத்தை அக்டோபர் 2018 அன்று, ஜியோ நிறுவனம் தடை செய்துள்ளது. அதாவது ஜியோ தொலைத்தொடர்பை பயன்படுத்தும் எவராலும், இந்த வலைதளத்தை பார்வையிட முடியாது.[5] இந்த மாதிரியான வலைத்தளத்தை முற்றிலும் ஒழிக்க மைய அரசு முயற்சி செய்துவருகிறது.

தடை செய்யப்பட்ட நாடுகள்

மலேஸியா

2015 ஆம் ஆண்டில், மலேஸிய அரசாங்கம் தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடகம் சட்டத்தை மீறியதற்காக, இவ்வலைதளத்தை தடை செய்தது. இச்சட்டமானது இலக்கமுறையில் விநியோகிக்கப்படும் "ஆபாச உள்ளடக்கத்தை" தடை செய்கிறது.[6]

பிலிப்பீன்சு

ஜனவரி 14, 2017 அன்று, பிலிப்பீன்ஸ் குடியரசரான ரொட்ரிகோ துதெர்த்தெ என்பவர் இவ்வலைதளத்தை, குடியரசு சட்டம் 9775 அல்லது ஆபாசத்திற்கு எதிரான குழந்தைப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடை செய்தார்.[7]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எக்சுவீடியோசு&oldid=3457681" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை