எராஸ்மஸ்

திசிடெரியஸ் எராஸ்மஸ் ரோட்டரோடமஸ் (Desiderius Erasmus Roterodamus)[note 1] (28 October 1466 – 12 July 1536)) இடச்சு தத்துவஞானியும், கத்தோலிக்க இறையியலாளரும் ஆவார். இவர் வடக்கு மறுமலர்ச்சியின் சிறந்த அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1][2][3] ஒரு கத்தோலிக்க பாதிரியாராக, இவர் ஒரு தூய இலத்தீன் பாணியில் எழுதிய பாரம்பரிய புலமையில் ஒரு முக்கிய நபராக இருந்தார். மனிதநேயவாதிகள் மத்தியில் இவருக்கு " மனிதநேயவாதிகளின் இளவரசர் " என்ற பெயர் இருந்தது. மேலும் " கிறிஸ்தவ மனிதநேயவாதிகளின் மகுடம்" என்றும் அழைக்கப்படுகிறார்.[4] நூல்களில் பணிபுரிய மனிதநேய நுட்பங்களைப் பயன்படுத்தி, புதிய ஏற்பாட்டின் முக்கியமான புதிய இலத்தீன் மற்றும் கிரேக்க பதிப்புகளைத் தயாரித்தார். இது கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் மற்றும் கத்தோலிக்க மறுமலர்ச்சி ஆகியவற்றில் செல்வாக்கு செலுத்தக்கூடிய கேள்விகளை எழுப்பியது.[5] இவர், ஆன் ஃப்ரீ வில்[5], இன் பிரைஸ் ஆஃப் ஃபோலி, ஹேண்ட்புக் ஆஃப் எ கிறிஸ்டியன் நைட், ஆன் சிவிலிட்டி இன் சில்ட்ரன், கோபியா: ஃபவுண்டேஷன்ஸ் ஆஃப் தி அபண்டண்ட் ஸ்டைல் போன்ற பல படைப்புகளையும் எழுதினார்.

எராஸ்மஸ்
இளைய ஆன்சு கோல்பினால் வரையப்பட்ட எராஸ்மசின் புகைப்படம் (1523)
பிறப்புc. (1466-10-28)28 அக்டோபர் 1466
ராட்டர்டேம் அல்லது கௌடா, பர்கிண்டிய நெதர்லாந்து
இறப்பு12 சூலை 1536(1536-07-12) (அகவை 69)
பேசெல், பழைய சுவிசு குடியரசு
மற்ற பெயர்கள்Desiderius Erasmus Roterodamus, Erasmus of Rotterdam
படித்த கல்வி நிறுவனங்கள்Queens' College, Cambridge
Collège de Montaigu, Paris
University of Turin
காலம்மெய்யியல் மறுமலர்ச்சி
பகுதிமேற்குலக மெய்யியல்
கல்விக்கழகங்கள்University of Leuven
முக்கிய ஆர்வங்கள்
கிறித்தவ மெய்யியல்
மானுட மறுமலர்ச்சி
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
ஏராசுமசிய உச்சரிப்பு
செல்வாக்குச் செலுத்தியோர்
  • Epicureanism, சிசெரோ, Giovanni Pico della Mirandola, John Colet, Alexander Hegius, Jan Standonck
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • Thomas More, Damião de Góis, Martin Luther, William Tyndale, Jacob Milich, Wolfgang Capito, John Colet

வளர்ந்து வரும் ஐரோப்பிய மத சீர்திருத்தத்தின் பின்னணியில் எராஸ்மஸ் வாழ்ந்தார். இவர் தனது வாழ்நாள் முழுவதும் கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினராக இருந்தார். திருச்சபை மற்றும் அதன் மதகுருக்களின் துஷ்பிரயோகங்களை உள்ளிருந்து சீர்திருத்துவதில் உறுதியாக இருந்தார்.[6][7]

ஆரம்ப வாழ்க்கை

எராஸ்மஸ், 1460களின் நடுப்பகுதியில் 28 அக்டோபர் அன்று ராட்டர்டேம் நகரில் பிறந்தார்.[4] இவர் டச்சு மற்றும் லத்தீன் இலக்கியங்களை இயற்றியவர். நூலகங்களைப் படிப்பதற்காகவே சமய துறவியானார். இவர் பாரிஸ் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் கலந்துரையாடி விளக்கம் பெற்றார். தாமஸ் மோர், ஜான் கெலெட் போன்ற மானிட மரபாளர்களுடன் தொடர்புகொண்டவர்.

இறப்பு

தனது உடல்நிலை மோசமடையத் தொடங்கியபோது, அங்கேரியின் ராணி மேரி, அழைப்பின் பேரில் நெதர்லாந்தின் பிரபாண்டிற்குச் செல்ல முடிவு செய்தார். இருப்பினும், 1536 இல் இந்த நடவடிக்கைக்கான தயாரிப்புகளின் போது, இரத்தக்கழிசல் தாக்குதலால் [[பேசல்|பேசலில் திடீரென இறந்தார். நகரின் பாசல் மினிஸ்டர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[8][9]

படைப்புகள்

மொழிபெயர்ப்பு நூல்கள்

  • கிரேக்க மொழியில் எழுதப்பட்ட விவிலியத்தின் புதிய ஏற்பாட்டுக்கு இலத்தீன் மொழியில் உரை விளக்கம் எழுதியுள்ளார்.
  • சிசெரோ யூரிபிடஸ், லூசியன், ஆகியோரது நூல்களை மொழிபெயர்த்தார்.

பிற

  • இவரது உரையாடல்கள் (Colloquies) புகழ்பெற்றவை
  • ஏழு நாட்களில் எழுதி முடித்த மடமையை புகழ்ந்து நூலில் கிறிஸ்துவ துறவிகள், திருச்சபை நீதிபதிகள், போப்பாண்டவர்கள், ஆகியவற்றை மையப்படுத்தி நையாண்டி விளக்கமளித்துள்ளார்.
  • கிறிஸ்துவ இளவரசனுக்கான கல்வி என்ற நூலில் போர்களை தவிர்த்தல், சொத்து குவிப்பை விழாக்கள், மடங்களுக்கு பதில் பள்ளிகளை பெருக்கல், பற்றி வலியுறுத்தியுள்ளார்.
  • அமைதி பற்றிய முறையீடு என்ற நூலில் போரின் நிறை குறைகளை விவாதித்துளார்.

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்பகம்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Desiderius Erasmus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எராஸ்மஸ்&oldid=3725942" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை