ஐ.கே.இ.ஏ


IKEA (ஐ.கே.இ.ஏ) என்பது சர்வதேச அளவில் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் தனியார் சில்லறை விற்பனை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஃப்ளாட் பேக் மரச்சாமான்கள், பொருள்கள், குழியலறை மற்றும் சமையல் பாத்திரங்களை உலகம் முழுவதும் உள்ள தங்களது விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்கின்றது. ஃப்ளாட் பேக் மரச்சாமான்களை குறைந்த விலையில் வடிவமைத்து விற்பனை செய்துவந்த இந்த நிறுவனம், தற்போது உலகின் மிகப்பெரிய மரச்சாமான் விற்பனையாளராக உள்ளது.[3]

IKEA International Group
வகைPrivate
வகைRetail (Specialty)
நிறுவுகைÄlmhult, Småland, Sweden (1943)
நிறுவனர்(கள்)Ingvar Kamprad
தலைமையகம்Delft, Netherlands
சேவை வழங்கும் பகுதிGlobal
முதன்மை நபர்கள்Mikael Ohlsson (President), Hans Gydell (President Inter IKEA Group)
உற்பத்திகள்Self-assembly furniture
வருமானம்22.71 Billion (2009)[1]
பணியாளர்127,800 (2008)[2]
இணையத்தளம்IKEA.com
Map of countries with IKEA stores:
  Current market locations
  Future market locations
  Former market locations
  No current or planned market locations

1943 ஆம் ஆண்டு பதினேழு வயதான இன்ங்வார் காம்பார்ட் என்பவரால் ஸ்வீடன் நாட்டில் ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவப்பட்டது. தற்போது காம்பார்ட் குடும்பம் நிர்வகிக்கும் டச்சு நாட்டில் பதிவுச் செய்யப்பட்ட நிறுவனம் மூலமாக ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவனம் நிர்வகிக்கப்படுகிறது. ஐ.கே.இ.ஏ (IKEA) என்ற சொல்லின் பொருளானது இதன் நிறுவனர்களின் பெயர்களில் உள்ள முதல் எழுத்துக்கள் (Ingvar Kamprad (இங்வார் கேம்ப்ராட்)), இவர் வளர்ந்த பண்ணை உள்ள இடம் (Elmtaryd (எல்ம்டர்யாட்)) மற்றும் தெற்கு ஸ்வீடனிலுள்ள இசுமலாண்ட் நகரில் உள்ள சமய வட்டாரப்பகுதியான அகுன்னாரிட் (Agunnaryd) ஆகியவற்றை இணைத்து உருவாக்கியதாகும்.[4]

உலகளாவிய அளவில் எந்த உற்பத்தியாளரிடமிருந்தும் (அவுட்சோர்ஸிங்) வரும் ஐ.கே.இ.ஏ மரச்சாமான் பொருள்களை விற்பனை செய்யும் ஸ்வீட்வுட்டில் உள்ள தொழிலகக் குழு, ஐ.கே.இ.ஏ கடைகளை நடத்தி அதன் பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் விற்பனை நிறுவனங்கள் மற்றும் ஐ.கே.இ.ஏ வகையைச் சார்ந்தப் பொருட்களை உருவாக்கும் ஸ்வீடனில் உள்ள ஐ.கே.இ.ஏ நிறுவனம் போன்ற அனைத்து ஐ.கே.இ.ஏ குழும நிறுவனங்களின் தலைமை நிறுவனம் இன்க்யா ஹோல்டிங் பி.வி (INGKA Holding B.V.) நிறுவனம் ஆகும். இன்க்யா ஹோல்டிங் பி.வி நிறுவனம் நெதர்லாந்து நாட்டின் லைடன் நகரில் பதிவுசெய்துள்ள இலாப நோக்கற்ற ஸ்டிச்சிங் இன்க்யா பவுண்டேசன் (Stichting INGKA Foundation) என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது. ஐரோப்பாவிற்கான சரக்கக மையம் (Logistics Centre) ஜெர்மனி நாட்டின் டார்ட்மண்ட் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தின் டெல்ஃப்ட் நகரில் உள்ள இண்டர் ஐ.கே.இ.ஏ சிஸ்டம்ஸ் பி.வி (Inter IKEA Systems B.V.) என்பது ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் வணிகக் குறியீடு மற்றும் கோட்பாடுகளைக் சொந்தமாக கொண்டுள்ளது. மேலும் அது உலகில் உள்ள ஐ.கே.இ.ஏ கடைகளுடன் உரிமை உடன்படிக்கையையும் கொண்டுள்ளது. இண்டர் ஐ.கே.இ.ஏ சிஸ்டம்ஸ் பி.வி நிறுவனத்தின் மிகப்பெரிய உரிமை பெற்ற நிறுவனம் ஐ.கே.இ.ஏ குழுவாகும். இண்டர் ஐ.கே.இ.ஏ சிஸ்டம்ஸ் பி.வி நிறுவனமானது இன்க்யா ஹோல்டிங் பி.வி நிறுவனத்திற்குச் சொந்தமானது இல்லை. ஆனால் லக்ஸம்பர்க் நகரில் பதிவுச் செய்யப்பட்ட இண்டர் ஐ.கே.இ.ஏ ஹோல்டிங் எஸ்.எ நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் இது நெதர்லாந்தின் ஆண்டில்சில் பதிவுச் செய்யப்பட்ட ஐ.கே.இ.ஏ ஹோல்டிங் நிறுவனத்தின் பகுதியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் பற்றி வெளியிடப்படவில்லை.[5]

பொதுவான மேலோட்டப் பார்வை

பிட்ஸ்பர்ஹ், பென்சில்வேனியா அங்காடியில் உள்ள கொடிகள்.

இந்நிறுவனம் ஸ்வீடன் நாட்டின் ஸ்மலாண்ட் பகுதியை அடிப்படையாகக் கொண்டது. இது தனது விற்பனை நிலையங்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்கிறது. 2009 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரை 37 நாடுகளில் 301 கடைகளைக் கொண்டுள்ளது. இதில் ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிகமான கடைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம் 2006 ஆம் ஆண்டில் புதிதாக 16 கடைகளைத் திறந்துள்ளது. மேலும் 2009 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 12 கடைகளைத் திறக்க அல்லது மாற்றியமைக்கத் திட்டமிட்டது. இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கடைகளைக் கொண்டுள்ள குறிப்பிட்ட நிறுவனங்களில் ஐ.கே.இ.ஏ நிறுவனமும் ஒன்று.

பல மொழிகளில், "ஐ.கே.இ.ஏ" என்பது [iˈke.a] இவ்வாறும், ஆங்கிலத்தில் /aɪˈkiː.ə/ "idea" (ஐடியா) என்ற வார்த்தைக்கு இணையாகவும் உச்சரிக்கப்படுகிறது. "Idea" (ஐடியா) என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கு எதிராக விக்டோரியா நகரைச் சேர்ந்த தனது வியாபாரப் போட்டியாளருக்கு எதிராக பிரித்தானிய கொலம்பியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்து "Idea" என்ற சொல்லை உபயோகிப்பதை தடைசெய்து வெற்றி பெற்றது. இதன் சிண்டாங் பெயர் "宜家" (வைஜியா), சீன மொழியில் எழுதப்பட்ட "வீடுகளுக்கு பொருத்தமானது" என்று பொருள் கொண்டது, மேலும் காண்டூனீஸ் உச்சரிப்பைச் சார்ந்து "ரைட் நவ்" என்ற சொற்றொடர் போன்று ஒலியைக் கொண்டது.

ஐ.கே.இ.ஏ வலைத்தளம் ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் 12,000 பொருட்களைப் பற்றியத் தகவல்களையும் மேலும் அருகில் உள்ள முழுமையான ஐ.கே.இ.ஏ வின் வரிசைகளைப் பற்றிய தகவல்களையும் கொண்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை 470 மில்லியன் பார்வையாளர்களை ஐ.கே.இ.ஏ வலைத்தளம் கொண்டுள்ளது.[6]

சூழ்நிலைக்குச் சாதகமான நடவடிக்கைகள் மேற்கொள்வதில் முதன்மைப் பங்கு வகிக்கும் விதத்தில் ஐ.கே.இ.ஏ நிறுவனம் தனது ஆர்வத்தை உற்பத்தி செயல்முறைகளில் பின்பற்றுகிறது. 1990 ஆம் ஆண்டில் த நேச்சுரல் ஸ்டெப் என்ற வடிவமைப்புப் பணியை சூழ்நிலைச் சாதகமான திட்டங்களுக்கு அடிப்படையாக ஐ.கே.இ.ஏ நிறுவனம் பின்பற்றியது ( பார்க்க "என்விராண்ட்மெண்டல் பெர்ஃபார்மென்ஸ்").[7]

ஐ.கே.இ.ஏ அங்காடிகள்

உலகின் முதல் ஐ.கே.இ.ஏ (IKEA) அங்காடி.ஸ்வீடனில் உள்ள அல்ம்ஹட் நகரில் அமையப்பட்டுள்ள கடை, ஐ.கே.இ.ஏ (IKEA) வின் நிறுவனர் பிறந்த இடத்திற்கு மிக அருகில் உள்ளது.

1958 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் முதல் ஐ.கே.இ.ஏ அங்காடி திறக்கப்பட்டது. ஸ்வீடன் நாட்டைத் தவிர்த்து நார்வே (1963) மற்றும் டென்மார்க் (1969) ஆகிய நாடுகளில் முதன் முறையாக அங்காடிகள் திறக்கப்பட்டன. 1970 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளில் அங்காடிகள் திறக்கப்பட்டன. ஸ்காண்டினேவியா பகுதியை தவிர்த்து சுவிட்சர்லாந்து (1973) நாட்டைத் தொடர்ந்து ஜெர்மனி (1974) நாட்டில் முதல் அங்காடிகள் திறக்கப்பட்டன. இதே கால கட்டத்தில் ஜப்பான் (1974), ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங் (1975), கனடா (1976) மற்றும் சிங்கப்பூர் (1978) போன்ற உலகின் மற்ற பகுதிகளிலும் அங்காடிகள் திறக்கப்பட்டன. பிரான்ஸ் (1981), த கனரே தீவுகள் (1981), பெல்ஜியம் (1984), அமெரிக்க ஐக்கிய நாடுகள் (1985), இங்கிலாந்து (1987) மற்றும் இத்தாலி (1989) போன்ற இடங்களில் 1980 ஆம் ஆண்டுகளில் அங்காடிகளை ஆரம்பித்தது. 1990கள் மற்றும் 2000களில் உலகின் பிற பகுதிகளிலும் அங்காடிகளை விரிவாக்கும் பணியில் ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவனம் ஈடுபட்டது. 44 அங்காடிகளை உள்ளடக்கிய ஐ.கே.இ.ஏ வின் மிகப்பெரிய வணிகச் சந்தையை ஜெர்மனி நாட்டிலும், அதனைத் தொடர்ந்து 36 அங்காடிகளுடன் அமெரிக்காவிலும் தொடங்கியது. ஐ.கே.இ.ஏ நிறுவனம் தற்போது 37 நாடுகளில் 301 அங்காடிகளைக் கொண்டுள்ளது. லத்தீன் அமெரிக்காவில் ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் முதல் அங்காடியானது 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி டொமினிக் குடியரசின் சாண்டோ டோமிங்கோவில் தொடங்கியது.[8][9] எனினும், அந்நிறுவனம் வளரும் நாடுகளில் அங்காடிகளை அமைப்பதில் ஈடுபாடு இல்லாமல் இருந்தது.

அங்காடி வடிவமைப்பு

சிங்கப்பூர், குயீன்ஸ்டவுன் அலெக்ஸாண்டர் சாலையில் உள்ள ஐ.கே.இ.ஏ (IKEA) அங்காடி. அங்காடிக்கு உள்ளே, இடது புறத்தில் பர்கர் கிங் உள்ளது.

ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் புதிய அங்காடிகள் அனைத்தும் பெரிய கட்டிடங்களுடன் ஒரு சில ஜன்னல்களைக் கொண்டு நீலநிறம் மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் (நிறுவனத்தின் நிறங்கள் ஸ்வீடன் நாட்டின் தேசிய நிறங்களாகும்). "ஒரு வழிப்பாதை" மனைப்பிரிவில் பெரும்பாலும் அங்காடிகள் வடிவமைக்கப்படுவதால் வாடிக்கையாளார் "நீளமான இயற்கை பாதையை" பயன்படுத்தும் வண்ணம் அமைகிறது. இந்த மனைப்பிரிவு வடிவமைப்பானது அங்காடியை முழுமையாக பார்ப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு வழிவகை செய்கிறது (மற்ற சில்லறை வணிக கடைகளில், வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பொருட்கள் வைத்துள்ள பகுதிகளுக்கு சென்று பார்க்குமாறு அமைக்கப்பட்டு இருக்கும்). எனினும் அங்காடியின் பிற பக்கங்களுக்குச் செல்ல மாற்றுவழிகள் இருக்கும். தேவைப்படும் பொருட்களை குறித்து வைக்க இந்த வரிசை அமைப்பு முதலில் மரச்சாமானகள் காட்சி அறைக்கு செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

இதன் பின்னர் பொருட்களைக் கொண்டு செல்லும் வண்டியைப் பெற்றுக் கொண்டு சிறிய பொருட்கள் (மார்கெட் ஹால்) வைக்கப்பட்டிருக்கும் திறந்த வெளி பண்டகசாலைக்கு வாடிக்கையாளர் செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இங்கு பொருட்களை வாங்கிய பிறகு மரச்சாமான்கள் வைக்கப்பட்டு இருக்கும் பண்டகசாலைக்கு (சுய சேவை) வந்து தாங்கள் முன்பு குறித்து வைத்திருந்த பொருட்களை ஃப்ளாட் பேக் வடிவில் பெற்றுக் கொள்ளலாம். சில நேரங்களில் அந்த இடத்தில் உள்ள வெளிப்புற பண்டகசாலை அல்லது அருகில் உள்ள பகுதியில் இருக்கும் அங்காடிக்கு சென்று தங்களது பொருட்களை பெற்றுக் கொள்ளுமாறும் வாடிக்கையாளர்களை மாற்றி அனுப்புவர். இறுதியில் காசாளர் நிலையத்தில் கட்டணங்களைச் செலுத்தி பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஜெர்மனி நாட்டின் மோனோசென்க்ளாட்பாஹ் என்ற இடத்தில் உள்ள புதிய ஐ.கே.இ.ஏ அங்காடிகளில் கலைநயம் மற்றும் நடைமுறைக் காரணங்களுக்காக கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன. சுயசேவை பணடகசாலைகளில் வானொலிகள் பொதுவான ஒன்றாக உள்ளது. இயற்கை ஒளி ஆற்றல் செலவுகளைக் குறைத்து வேலையாட்களின் மன உறுதியைக் கூட்டுகிறது. மேலும் பொருட்கள் மீது தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

பண்டகசாலைகள் கீழ்நிலையில் காட்சி அறையும் மற்றும் வணிகத்தளம் மேல்நிலையிலும் இருக்கும் வண்ணம் முதன்மை வடிவமைப்புகள் இருக்கின்றன. ஆனால் உலக அளவில் உள்ள ஒரு சில அங்காடிகளில் வணிகத்தளம் மற்றும் பண்டகசாலை கீழ்நிலையிலும் காட்சி அறை மேல்நிலையிலும் உள்ளது. ஒரு சில அங்காடிகள் ஒரே நிலையிலும் உள்ளன. சில அங்காடிகள் பண்டகசாலைகளை அங்காடி இருக்கும் இடத்திலிருந்து தனியாக அமைத்து அதிகப்படியான பொருட்களை வைத்துக் கொள்கின்றன, ஒரு சில நேரங்களில் பொருட்களை கண்டறிவதில் சிக்கல்களை இந்த முறைகள் ஏற்படுத்துகின்றன. மேலும் இரண்டு வரிசை அமைப்புகளை ஏற்படுத்துவது போன்ற பார்வையை வழங்குகிறது. ஒற்றை நிலை அங்காடிகளை ஒரு சில மேம்பட்ட இடங்களில் காண இயலும் இந்த நிலையிலுள்ள இடத்தின் மதிப்பானது இரண்டு நிலையில் கட்டிடங்களைக் கொண்ட அங்காடிகள் இருக்கும் இடத்தின் மதிப்பை விட குறைவாக இருக்கும். ஜெர்மனியில் உள்ள சார்லோயிஸ் மற்றும் ஸ்வீடன் நாட்டின் ஹப்பார்ண்டா ஆகியவை எடுத்துக்காட்டுகளாகும். சில அங்காடிகள் இரட்டை நிலை பண்டகசாலைகளைக் கொண்டு இயந்திரம் மூலம் இயக்கப்படும் கூடங்களுடன் நாள் முழுவதும் அதிக அளவிலான பொருட்களை விற்பனை செய்யும் வரை அமைக்கப்பட்டு இருக்கும்.

இங்கிலாந்து லீட்டிஸ் சீருந்து நிறுத்ததுடன் கூடிய ஐ.கே.இ.ஏ (IKEA).

சில ஐ.கே.இ.ஏ அங்காடி "ஆஸ்-இஸ்" பகுதி பண்டகசாலையின் இறுதியில் காசாளருக்கு சற்று முன்பு கொண்டிருக்கும். திரும்ப பெறப்பட்ட, சேதாரமான மற்றும் முன்பு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் மற்றும் ஐ.கே.இ.ஏ அங்காடிகளில் பொருட்கள் பிரிவில் நல்ல நிலையில் இல்லாத பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும். மேலும் இங்கு விற்பனை செய்த பொருட்கள் "திரும்ப பெறப்படாது" என்ற நிபந்தனையுடன் தள்ளுபடி விலையில் இவை விற்பனை செய்யப்படும். அதிகப்படியான ஐ.கே.இ.ஏ அங்காடிகள் சுற்றுச்சுழல் சார்ந்த விவாகரங்களை "ஆஸ்-இஸ்" கொள்கையில் தொடர்பு கொள்கின்றன. இங்கிலாந்தில் இது "பார்கெயின் கார்னர்" என்று அழைக்கப்படுகிறது.

ஆங்கொங்கில் அங்காடிகளின் பரப்பளவு குறிப்பிட்ட அளவிலும் அதிக விலையுடையதாகவும் இருக்கும். ஐ.கே.இ.ஏ நிறுவனம் பல்கடை அங்காடிகளில் ஒரு பகுதியாக நகரம் முழுவதும் சேர்த்து மூன்று கடைகளைத் தொடங்கியுள்ளது. "பெரிய நீலநிற பெட்டி" போன்ற கடைகளுடன் ஒப்பிடும் போது இவை சிறியவை. ஆனால் ஆங்கொங் நகரத்தின் தரத்திற்கு மிகப் பெரியவை. பெரும்பாலான கடைகள் "ஒற்றை-வழி" மனைப்பிரிவைக் தற்போதும் கொண்டுள்ளன. இவைகளிலிருந்து விதிவிலக்காக டெல்ஃபோர்ட் ப்ளாசா என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கடையில் மூன்று தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன இந்த மூன்று தளங்களிலிருந்தும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு செல்லும் வகையில் உள்ளன. எனினும் ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் மரபைப் பின்பற்றி, காசாளார்கள் பகுதி கடைசி தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் அங்காடிகள் இடத்தின் மதிப்பு மற்றும் போக்குவரத்து இயக்கத்திற்காக பெரும்பாலும் நகரப் பகுதிகளிலிருந்து தொலைவிலே அமைக்கப்பட்டுள்ளன. சிறிய அங்காடி வடிவமைப்புகள் முந்தைய காலங்களில் வெற்றியில்லாத வகையில் சோதனையிடப்பட்டன (90களில் இருந்த "மிடி" கோட்பாடு முறையில், ஒட்டோவா மற்றும் ஹேலென் பகுதிகளில் இருந்த 9,300 மீ2, அல்லது மேன்ஹாட்டனில் இருந்த "நவநாகரீக ஆடை" கடையில் சோதனையிட்டது போன்று). முழு-அளவிலான நகர மையங்களில் அமைக்கப்படும் கடைகளுக்கான வடிவம் 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட காவெண்ட்ரி அங்காடியில் அறிமுகம் செய்யப்பட்டது. இது சில்லறை விற்பனை நிலையங்களை நகரத்தின் மையப் பகுதிகளுக்கு வெளியே அமைப்பதைத் தடை செய்யும் இங்கிலாந்து அரசின் முடிவால் எடுக்கப்பட்டதாகும். மேலும் இந்த வடிவமைப்பு எதிர்காலத்தில் இங்கிலாந்தில் அமைக்கப்படும் ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் கடைகளில் உபயோகப்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டது. 7 நிலைகளைக் கொண்டு பிற ஐ.கே.இ.ஏ அங்காடிகளிலிருந்து காவெண்ட்ரி அங்காடி வேறுபட்டு இருந்தது.

அங்காடிகளை நீண்ட நேரம் திறந்து வைத்திருப்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும். ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் அங்காடிகளில் பெரும்பாலானவை 24 மணிநேரமும் இயங்கும், மேலும் பொருட்களை மீண்டும் இருப்பு வைத்தல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகள் இரவு முழுவது மேற்கொள்ளப்படும். எனினும் பிற விற்பனையாளர்களை விட அதிகப்படியான நேரம் கடைகள் திறந்து இருக்கும், பல நாடுகளில் இரவு நேரங்களிலும் கடைகள் திறந்து இருக்கும். எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் கடைகள் இரவு 8 மணி வரை திறந்து இருக்கும் காலையில் 9-10 மணிக்கு திறக்கப்படும். அதிக நேரம் இயங்கும் கடையாக சிராய்டான் பகுதியிலுள்ள அங்காடி உள்ளது. இது காலை 10 மணி முதல் இரவு 11 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இயங்கும்.

உணவகங்கள் மற்றும் உணவுச் சந்தைகள்

நியூ யார்க் நகரம் ரெட் ஹுக் பகுதியின் பரூக்லைன் ஐ.கே.இ.ஏ சிற்றுண்டிச் சாலை.

பெரும்பாலான அங்காடிகளில் பாரம்பரிய ஸ்வீடன் உணவு வழங்கும் உணவகங்கள் இருக்கும், இவை உருளைக்கிழங்குடன் ஸ்வீடன் இறைச்சி உருண்டைகள், க்ரீம் சுவைச்சாறு மற்றும் லிங்கோன்பெர்ரி ஜாம் போன்ற ஸ்வீடனின் பாரம்பரிய உணவு வகைகளையும் பிற வகைகளையும் வழங்குகின்றன. மலேசியாவின் கோலாலம்பூரில் வேகவைத்த உருளைக்கிழங்கானது உருளைக்கிழங்குப் பொரியலாக மாற்றப்படுகிறது. இந்த ஸ்வீடன் வகைகளுடன் சேர்ந்து குளிர்பானங்கள் மற்றும் இறைச்சிகளும் 5 SEK (அதாவது €0.50) என்ற விலையில் வழங்கப்படுகிறது. மேலும் உள்ளூர் சமையல் பாணியில் தயாரித்த உணவுகள் மற்றும் லிங்கோன்ஃபெர்ரி போன்ற குளிர்பானங்களும் வழங்கப்படுகிறது. பிரின்செஸ்ட்ராடா - பிரின்சஸ் கேக் போன்ற இனிப்பு வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது. சௌதி அரேபியாவில் உள்ள ஐ.கே.இ.ஏ அங்காடிகளில் பாரம்பரியமான ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் இறைச்சி வகைகளுக்கு பதிலாக சிக்கன் ஷவர்மா என்ற பெயருடைய உணவு வழங்கப்படுகிறது. பல பகுதிகளில் உள்ள ஐ.கே.இ.ஏ உணவகங்கள் மற்ற கடைகள் திறப்பதற்கு முன்பே திறக்கப்பட்டு அதிகம் விலையில்லாத காலை உணவை வழங்குகிறது. கனடாவில் காலை உணவில் முட்டைகள், தொத்திறைச்சி மற்றும் பொரித்த உணவுகளுடன் $1 என்ற விலையில் அளிக்கின்றனர். அமெரிக்காவில் முட்டைகளின் துருவல், பன்றி இறைச்சி, நாட்டு உருளைக்கிழங்குகள் மற்றும் ஸ்வீடன் பான்கேக்ஸ் அல்லது பிரெஞ்சு டோஸ்ட் ஸ்டிக்ஸ் போன்ற விருப்பங்களுடன் பல வகையில் அளிக்கின்றனர். க்ராசியண்ட், சிறிய ரொட்டி சுருள், வெண்ணெய் அல்லது மார்கரின், ஜாம், பாலாடைக்கட்டியின் ஒரு துண்டு, வேகவைத்த முட்டை மற்றும் காப்பி அல்லது டீ ஆகியவற்றைச் சேர்த்து €1 என்ற விலையில் நெதர்லாந்தில் விற்பனை செய்கின்றனர். ஆஸ்திரேலியாவில் பன்றி இறைச்சி, முட்டைத் துருவல், தொத்திறைச்சி மற்றும் தக்காளி ஆகியவை சேர்ந்து AU$2.50 விற்பனை செய்யப்படுகிறது, தொத்திறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஆகியவற்றை தவிர்த்து வேகவைத்த பீன்ஸ் உடன் $2 க்கு முழுவதும் காய்கறியாக விற்பனை செய்யப்படுகிறது. ஐ.கே.இ.ஏ கனடா உணவகத்தில் காலை உணவுடன் பல வகையான வறுத்த மற்றும் வேகவைத்த உணவுகள் குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படுகிறது.

பிற நாடுகளில் உள்ள உணவகங்களில் வழக்கமில்லாத போதும் காஃபி, டீ மற்றும் குளிர் பானங்களை மீண்டும் பெறுவது இலவசமாக அளிக்கப்படுகிறது.

பல அங்காடிகளில் ஸ்வீடிஸ் முறையில் உருவாக்கப்பட்ட இறைச்சி உருண்டைகள், குழம்பு மற்றும் ஸ்காண்டினாவியன் இனிப்பு மற்றும் பட்டாசு வகைகள் மற்றும் சல்மோன் அண்ட் சல்மோன் மீன்சினைத்திரள் போன்ற பலசரக்கு பொருட்களை விற்பனை செய்ய சிறிய கடைகளையும் கொண்டுள்ளன. லிங்கன்பெர்ரி ஜாம்களை பெரிய வாளிகளில் அடைத்து ஐ.கே.இ.ஏ நிறுவனம் விற்பனை செய்கிறது.

ஸ்மாலாந்து

பல அங்காடிகளில் ஸ்மாலாந்து என்றுப் பெயர் கொண்ட விளையாட்டு பகுதி உள்ளது (ஸ்வீடிஸில் சிறிய நிலங்கள் , இங்வர் காம்பார்ட் பிறந்த ஸ்வீடனில் உள்ள மாகாணத்தின் பெயர்). இந்த விளையாட்டு மைதானத்தின் வாயிலில் குழந்தைகளை பெற்றோர் விட்டு விட்டு மற்றொரு வாயிலுக்கு வந்தவுடன் அழைத்துக் கொள்ளலாம். பெற்றோர்களுக்கு இலவசமாக பணியாளர் மூலம் தொலை அலைப்பான்கள் அளிக்கப்படும்; ஒரு குழந்தை தனது பெற்றோருடன் உடனடியாக தொடர்பு கொள்ளும் முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

வணிகக் குறி மற்றும் வணிகச்சின்னம்

ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் வணிகச்சின்னம் உலகம் முழ்வதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நீலநிற செவ்வக வடிவத்தில் உள்ளே நீள்வட்டத்தில் மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் வணிகக் குறி முத்திரை வாடியாளர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் விற்பனை நிலையங்கள் மற்றும் அட்டவணைகளில் உள்ளது. ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் எழுத்து வடிவமைப்பு 1963 ஆம் ஆண்டிலிருந்து உபயோகத்தில் உள்ளது, அமெரிக்காவில் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி திங்கள் கிழமை வரை பயன்பாட்டில் இல்லை. நெதர்லாந்தின் டெல்ஃப்டில் உள்ள இண்டர்-ஐ.கே.இ.ஏ சிஸ்டம்ஸ் பி.வி நிறுவனம் அமெரிக்காவின் காப்புரிமை மற்றும் வணிகக் குறி அலுவலகத்தில் (USPTO) வணிகக் குறி பெறுவதற்கான விண்ணப்பத்தை அளித்தது.

சுற்றுச்சுழல் கட்டுபடுத்தும் கருவிகள் (ஒளி அமைப்பு, வெப்பமாக்கல், குளிர்வித்தல், சமைத்தல்), மரச்சாமான் பொருட்கள், வீட்டு உபயோக மற்றும் கண்ணாடிப் பொருட்கள், துணிகள், தளம் உறையிடல் போன்ற பல்வேறு வகைகளுக்கு ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் வணிகக் குறி விண்ணப்பம் அளிக்கபட்டது. ஐ.கே.இ.ஏ நிறுவனத்திற்காக USPTO விற்கு இண்டர்-ஐ.கே.இ.ஏ அளித்த விண்ணப்பத்தில் ஒளியமைப்பு பொருத்திகள், விளக்குகள், விளக்கு நிழல்கள் மற்றும் அதன் பகுதிகள் அமைத்தல் போன்றவற்றிக்கான விளக்கங்கள் இருந்தன. ஐ.கே.இ.ஏ என்ற பெயரானது முதன்முறையாக 1963 ஆம் ஆண்டு முதல் உபயோகிக்கப்படுவதாகவும் வணிகரீதியான பயன்பாடு 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்தது. 73118839 என்ற பதிவு எண்ணுடன் 1979 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி அன்று அமெரிக்காவிற்கான வணிகக் குறி வழங்கப்பட்டது. வணிகக் குறியின் நிகழ்நிலை பதிவுசெய்யப்பட்ட புதிபிக்கப்பட்டது. இண்டர்-ஐ.கே.இ.ஏ சிஸ்டம்ஸ் பி.வி ஆப் டெல்ஃப்ட், நெதர்லாண்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கு இந்த வணிகக் குறி சொந்தமானது.[10]

தயாரிப்புகள்

மரச்சாமான்

முழுமையாக்கப்பட்ட ஐ.கே.இ.ஏவின் நூல் அடுக்கம்

ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் மரச்சாமான்கள் பெரும்பாலும் முன்பே பொருத்தப்பட்ட நிலையில் இல்லாமல் வாடிக்கையாளர்களால் பொருத்தப்படும் நிலையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இந்த முறை புத்தக அடுக்குப்பெட்டியின் அளவு போன்றவற்றை வாணிகம் செய்யும் பொதியக்கட்டணங்களைக் குறைப்பதாக ஐ.கே.இ.ஏ நிறுவனம் தெரிவித்தது. எடுத்துக்காட்டாக பொருத்தப்படாத நிலையில் வாணிகம் செய்வது பொருத்தப்பட்ட நிலையில் வாணிகம் செய்வதை விட குறைவான செலவுகளை அளிக்கும். இந்த முறையானது ஐரோப்பாவின் வாடிக்கையாளர் பலருக்கு உகந்ததாக இருந்தது. ஏனெனில் பொருட்களைக் கொண்டு செல்ல பொதுப் போக்குவரத்து முறையே பயன்படுத்தப்பட்டது; இந்த ஃப்ளாட் பேக் முறையில் அங்காடியிலிருந்து பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே கொண்டு செல்வது எளிமையானதாக இருந்தது.

ஐ.கே.இ.ஏவின் "பஹ்" கடிகாரம்.
"டீகாட்" வைண்ட-அப் விழிப்புக் கடிகை

அதிக வாடிக்கையாளர் கலாச்சாரத்தை கவர்வதில் இது ஒரு முன்னோடி முறை என்று நிரூபிக்க ஐ.கே.இ.ஏ நிறுவனம் போராடியது. உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையை நிறுவனம் செயற்படுத்துகிறது என்ற பொருளில் இந்த முறையை "ஜனநாயக வடிவமைப்பு" என்று காம்பார்ட் சுட்டிக் காட்டினார் (சுற்றுச்சூழல் வடிவமைப்பு பக்கத்தைப் பார்க்க) 20 ஆம் நூற்றாண்டு மற்றும் 21 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள மக்கட்தொகைப் பெருக்கம் மற்றும் பொருள் எதிர்பார்ப்பு ஆகியவற்றின் காரணமாக வரையறுக்கப்பட்ட அளவுகளில் உற்பத்தி செய்தல் மற்றும் பொருட்களைக் கையாளுதலில் பார்டிகில் போர்ட் என்ற முறையினைப் பயன்படுத்தி எக்னாமைஸ் ஆப் ஸ்கேல் என்ற முறையை நிறுவனம் செயற்படுத்தியது. சிறிய வீடுகள் மற்றும் குடியிருப்புகள் மேலும் பெரிய வீடுகளில் இணக்கமான, மாற்றமைவு செய்யதக்க வீட்டுபயோகப் பொருட்களை இந்த முறை அளித்தது.

அனைத்து மரச்சாமான்களும் அங்காடி மட்டத்தில் மட்டும் கையிருப்பு வைக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, மெத்தை இருக்கையில் ஒரு குறிப்பிட்ட நிறம் மட்டும் கையிருப்பு வைக்கப்பட்டு அங்காடியிலிருந்து பெற்றுக் கொள்ளுமாறு இருக்கும், அங்காடியில் இல்லாத மற்ற நிறங்களைக் கொண்ட இருக்கைகள் பண்டகசாலையிலிருந்து வாடிக்கையாளரின் வீடுகளுக்கு கூடுதல் விநியோகக் கட்டணத்துடன் விநியோகம் செய்யப்படும். பண்டக சாலையிலிருந்து அங்காடிக்கு மாற்றப்படும் பொருட்களுக்கு மற்ற விற்பனை அங்காடிகள் வசூலிப்பதைப் போன்று விநியோகக் கட்டணம் வாடிக்கையாளரிடமிருந்து பெறப்படும். விநியோகக் கட்டணம் பொருளின் வாங்குதல் விலையில் 10% முதல் 25% வரை இருக்கும். [தெளிவுபடுத்துக]

வீடுகள், அடுக்கு வீடுகள்

முதன் முறையாக வீடுகளுக்கு பொருட்களை வாங்குபவருக்கு ஒரு குறிப்பிட்ட விலையில் பொருட்களை விற்பனை செய்யும் ஃப்ளாட் பேக் வீட்டுப் பொருட்கள் உள்ளடங்கிய சாதனங்களை விற்பனை செய்வதற்கு ஐ.கே.இ.ஏ நிறுவனம் தனது சேவையை விரிவாக்கியது. ஷாகான்ஸ்கா என்ற நிறுவனத்துடன் கூட்டாக 1996 ஆம் ஆண்டில் போக்லாக் என்ற பெயரில் இந்தப் பொருள் ஸ்வீடனில் அறிமுகம் செய்யப்பட்டது. நாட்டிக் நாடுகள் மற்றும் இங்கிலாந்தில் இந்த முறை இயக்கத்தில் உள்ளது. இங்கிலாந்து நாட்டில் லண்டன், மான்செஸ்டர், லீட்ஸ், கேட்ஷெட் மற்றும் லிவர்பூல் போன்ற பகுதிகளிலும் உள்ளது.[11]

பேமிலி மொபைல்

டி-மொபைல் நெட்வொர்க்கின் உதவியுடன் பேமிலி மொபைல் (Family Mobile) என்ற விர்ச்சுவல் மொபைல் நெட்வொர்க் சேவையை 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி ஐ.கே.இ.ஏ இங்கிலாந்து நிறுவனம் வெளியிட்டது.

உற்பத்தி

ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் மரச்சாமான்கள் ஸ்வீடன் நாட்டில் வடிவமைக்கப்பட்டாலும், உற்பத்திச் செலவைக் குறைக்க வளரும் நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. 50 நாடுகளில் வழங்குபவர்களுடனும், 2/3 பொருட்களை ஐரோப்பாவிலிருந்தும் 1/3 பொருட்களை ஆசியாவிலிருந்தும் வாங்குகிறது. வடக்கு அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட அளவு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நான்காவது மிகப்பெரிய பொருட்களை வழங்கும் நாடாக ஸ்வீடன் (சீனா, போலந்து மற்றும் இத்தாலி நாடுகளுக்கு அடுத்து) உள்ளது. இங்கு சிறிய அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. சீனா ஸ்வீடனை விட 2.5 மடங்கு அதிகமாகப் பொருட்களை வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் பல பொருட்களை ஒன்று கூட்டுதல் பயனர் (வாடிக்கையாளர்) மூலமே இறுதியில் நிகழ்த்தப்படுகிறது.

பொருட்களின் பெயர்கள்

ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் பெயர்கள் ஒரே பெயரின் கீழ் அறியப்படுகின்றன. இந்தப் பெயர்களில் அதிகமானவை ஸ்வீடீஸ் நாட்டை அடிப்படையாகக் கொண்டவை. எனினும் ஒரு சில விதிவிலக்குகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட பொருள்களுக்கான பெயர்கள் ஐ.கே.இ.ஏ நிறுவனம் காலின் எட்வர்ட்ஸ் (சர்வதேச பெயரியல் நிபுணர் மற்றும் மரச்சாமான் ஆர்வம் கொண்டவர்) என்பவரின் கூட்டணியுடன் உருவாக்கிய சிறப்பு பெயரமைப்பை அடிப்படையாகக் கொண்டவை.[12]

  • மெத்தைச் சாமான், காப்பி மேசை, பிரம்பு மரச்சாமான், புத்தக அடுக்குகள், ஊடக சேமிப்பு, கதவு கைப்பிடிகள்: ஸ்வீடிஸ் இடப்பெயர்கள் (எடுத்துக்காட்டு: கில்ப்பான்).
  • படுக்கைகள், உடை அலுமாரிகள், கூடச் சாமான்கள்: நார்வேஜியன் இடப்பெயர்கள்
  • உணவு அருந்தப் பயன்படும் மேசைகள் மற்றும் நாற்காலிகள்: ஃபின்னிஷ் இடப் பெயர்கள்
  • புத்தக அடுக்குப்பெட்டி வகைகள்: வேலைகள்
  • குளியலறை பொருள்கள்: ஸ்காண்டின்வியன் ஏரிகள், ஆறுகள் மற்றும் விரிகுடாக்கள்
  • சமையலறைகள்: இலக்கண பெயர்கள், சிலநேரங்களில் மற்ற பெயர்கள்
  • நாற்காலிகள், மேசைகள்: ஆண்களின் பெயர்கள்
  • மூலப்பொருள்கள், திரைச்சீலைகள்: பெண்களின் பெயர்கள்
  • தோட்டப் பொருட்கள்: ஸ்வீடீஸ் தீவுகள்
  • தரை விரிப்புகள்: டானிஷ் இடப் பெயர்கள்
  • ஒளி அமைப்பு: இசைத் துறைச் சார்ந்த சொற்கள், வேதியியல், வானிலை ஆய்வியல், அளவீடுகள், படிகள், பருவங்கள், மாதங்கள், நாட்கள், படகுகள், கப்பல் துறைச் சார்ந்த சொற்கள்
  • மெத்தைநார்த்துணி, மெத்தை விரிப்புகள், தலையணைகள்/மெத்தகள்: பூக்கள், தாவரங்கள், மதிப்புள்ள கற்கள்
  • குழந்தைகளுக்கான பொருட்கள்: பாலூட்டிகள், பறவைகள், உரிச்சொல்கள்
  • திரைச்சீலை பொருட்கள்: கணிதம் மற்றும் பெருக்கற்குரிய சொற்கள்
  • சமையலறை பாத்திரங்கள்: அயல்நாட்டுப் வார்த்தைகள், மசாலாப் பொருட்கள், மூலிகைப் பொருட்கள், மீன், காளான்கள், பழங்கள் அல்லது பெர்ரி பழங்கள், நடைமுறைச் சார்ந்த விளக்கங்கள்
  • பெட்டிகள், சுவர் அலங்கரிப்பு, படங்கள் மற்றும் சட்டங்கள், கடிகாரங்கள்: பேச்சு வழக்கு உச்சரிப்புகள், மேலும் ஸ்வீடிஸ் இடப் பெயர்கள்

எடுத்துக்காட்டு, டக்டிக் (DUKTIG) (பொருள்: சிறப்பு, நல்லமுறையில்-நடந்துகொளவது) குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களுக்கான வரி, ஓஸ்லோ (OSLO) படுக்கையின் பெயர், பில்லே (BILLY) (ஸ்வீடிஸ் ஆண்பால் பெயர்) பிரபலமான அடுக்கு, டின்னெரா (DINERA) (பொருள்: உணவு கொடுத்தல்) மேசைப் பொருள்கள், காசாட் (KASSETT) (பொருள்: ஒலி நாடா) ஊடக சேமிப்பு. அலுவலக சாமான்களின் ஒரு பிரிவுக்கு இஃப்க்டிவ் (EFFEKTIV)(பொருள்: திறமையான), சமையலறை கத்திகளின் வரிசைகளுக்கு ஸ்கார்ப்ட் (SKÄRPT) (பொருள்: கூர்மையான அல்லது சாதுரியமான)

ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்கு ஐவர் (IVAR) அடுக்கு அமைப்பு, 1970களின் ஆரம்பத் தேதிகளைக் கொண்டது. இது இந்த பொருளின் வடிவமைப்பாளருக்காகப் பெயரிடப்பட்டது.

ஏனெனில் ஐ.கே.இ.ஏ பல நாடுகளில் பல மொழிகளில் உலகம் முழுவதும் இயங்கும் நிறுவனமாகும், சில நேரங்களில் நார்டிக் பெயர்களின் பெயர்கள் பொருட்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கலாம் இதனால் சில நேரங்களில் சிக்கல்கள் உருவாகும். விந்தையான ஒலி கொண்ட பெயர்கள் கவனத்தை ஈர்க்கும் எ.கா ஆங்கிலத்தை முதன்மையாகப் பேசும் (anglophone) நாடுகளில் ஒரு குறிப்பிட்டவர் சிரிப்பதற்கு இணையாக அழைப்பர். குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகள் "ஜெர்கர்" மேசை மற்றும் "ஃபார்ட்ஃபுல்" வேலைமேசை.[13] சமீபத்திய புதிய பொருள், லைக்கெம் (பேரின்பம் என்பது பொருள்). யாராவது பெருந்தவறு என்று குறிப்பிட்டால் பொருட்கள் உடனடியாக திரும்பப் பெறப்படும், ஏதேனும் செய்தி உருவாகுவதற்கு முன்பாக இல்லை. மற்ற நிறுவனங்களுடன் இந்த பெருந்தவறுகள் நிகழும்.[14]

புரிந்து படிக்க இயலாமை காரணமாக பொருட்களுக்கு குறியீடுகளை வைத்துக் குறிப்பதற்கு பதிலாக சரியான பெயர்கள் மற்றும் வார்த்தைகளை வைத்து குறிப்பது அவற்றை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள உதவும் என்று நிறுவனத்தின் நிறுவனர் இங்வர் காம்பார்ட் கூறினார்.[15]

அட்டவணை

வருடாந்திர அட்டவணையை ஐ.கே.இ.ஏ நிறுவனம் வெளியிடுகிறது. முதன்முறையாக ஸ்வீடிஸ் நாட்டில் 1951 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது, தற்போது 36 நாடுகளில் 27 மொழிகளில் 55 வது பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது,[16] மேலும் நிறுவனத்தின் வருடாந்திர வணிக நிதிநிலை அறிக்கையில் 70% கொண்டு சில்லறை வணிகத்தில் மாபெரும் கருவியாக கருதப்படுகிறது.[17]

இந்த அட்டவணையானது கடைகள் மற்றும் மின்னஞ்சல் மூலம் பங்கிடப்படுகிறது.[18] ஸ்வீடன் நாட்டின் ஆல்ம்ஹல்ட் என்ற பகுதியில் உள்ள ஐ.கே.இ.ஏ கம்யூனிகேசன்ஸ் எபி என்ற நிறுவனத்திலிருந்து அட்டவணைகள் பெரும்பாலும் தயாரிக்கப்படும், வடக்கு ஐரோப்பாவில் 8,000 சதுர மீட்டர் அளவில் அமைந்துள்ள ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் பெரிய புகைப்பட ஸ்டுடியோ நிறுவனம் இங்கு தான் உள்ளது.[19] இந்த அட்டவணைகள் க்ளோரின்-இல்லாத காகிதங்களில் 10-15% நுகர்வோர் வீண்பொருள்கள் மூலம் அச்சிடப்படுகிறது. ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் அட்டவணைகளின் பிரதிகள் ஒவ்வொரு ஆண்டும் விவிலியம் புத்தகத்தை விட அதிகமாக அச்சிடப்படுகிறது.[20]

கனடாவின் அலைபரப்பு நிறுவனம் CTV யைப் பொறுத்த வரையில், ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் வெளியீடுகள் பெரும்பாலும் நம்பிக்கை முறையில் உருவாக்கப்பட்டன. திகைப்பூட்டு பூனைப் படங்கள், தெளிவான மிக்கி மவுஸ் குறிப்புதவி நூல்கள் மற்றும் வினோதமானப் புத்தகங்கள் போன்றவை அடங்கிய புத்தக அடுக்களிலிருந்து அட்டவணைகளை கண்டறிந்து சுவையான (செய்தித்) துணுக்குகளை வாசகர்கள் எளிதாக அறியலாம்.

ஐ.கே.இ.ஏ குடும்பம்

பொதுவாக பிற விற்பனையாளர்களிடம் உள்ளது போன்று "ஐ.கே.இ.ஏ குடும்பம்" என்ற பெயரில் ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்திரியா, ரஷ்யா, சீனா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, ஸ்லோவாகியா, செக் குடியரசு, ஐயர்லாந்து, போலந்து, இத்தாலி, ஹங்கேரி, பிரான்ஸ், டொம்னிக் குடியரசு, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் உள்ள தங்கள் கடைகளில் பற்றுறுதி அட்டையை வழங்கியுள்ளது. ஆரஞ்சு நிறத்தில் உள்ள ஒரு சிறப்புடைய அட்டை மூலம் ஐ.கே.இ.ஏ நிறுவனங்களில் காணப்படும் குறிப்பிட்ட பொருட்களின் சிறப்பு வகைகளுக்கு தள்ளுபடியை பெறுவதற்காக உபயோகப்படுத்தலாம். குறிப்பாக, இந்த அட்டையை அளித்து முகவர் சேவைக் கட்டண வகையைச் சார்ந்த ஐ.கே.இ.ஏ பொருட்களில் 25% வரை தள்ளுபடி பெற இயலும். உணவு விடுதியில் வாங்கப்படும் உணவுகள் ம்ற்றும் ஸ்வீடிஸ் உணவுச் சந்தையில் வாங்கும் பொருட்களுக்கும் இந்த அட்டையில் தள்ளுபடி பெறலாம். நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்திரியா, ரஷ்யா, ஜப்பான், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேகியா, செக் குடியரசு, இத்தாலி மற்றும் போலந்து போன்ற நாடுகளில் இந்த அட்டையை வைத்திருப்பவர்களுக்கு உணவு விடுதிகளில் இலவசமாக காஃபி வழங்கப்படும். ஸ்பெயின், ஹங்கேரி, ஐயர்லாந்து மற்றும் போலந்து போன்ற நாடுகளில் வேலை நாட்களில் மட்டும் இந்தச் சலுகை இருக்கும்.

அட்டையுடன் இணைத்து, ஐ.கே.இ.ஏ ஃபேமிலி லைவ் என்ற பெயரில் காலாண்டு பத்திரிகையை ஐ.கே.இ.ஏ நிறுவனம் அட்டவணை மற்றும் அட்டையின் இணைப்பாக அச்சிட்டு விற்பனை செய்கிறது. இந்த பத்திரிகையானது இதுவரை பதின்மூன்று மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது மேலும் 2007 ஆம அண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து நாட்டிற்கான ஆங்கிலப் பதிப்பு வெளியிடப்பட்டது. 500,000 மேற்பட்ட உறுப்பினர்களை இந்த பதிப்பு அடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.[21]

நிறுவன அமைப்பு

இத்தாலி ரோம் நகரில் உள்ள ஐ.கே.இ.ஏ அனஜினா
அமெரிக்க, மின்னிசோட்டா, ப்ளூமிங்டனில் உள்ள ஐ.கே.இ.ஏ இரட்டை நகரங்கள்
இஸ்ரேல், நெட்டன்யாவில் உள்ள ஐ.கே.இ.ஏ அங்காடி

ஸ்வீடிஸை அடிப்படையாக கொண்டு, ஐ.கே.இ.ஏ நிறுவனம் பல இலாப நோக்கற்ற மற்றும் இலாபத்திற்காக இயங்கும் நிறுவனங்கள் போன்றவற்றின் மூலம் நிர்வகிக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

ஐ.கே.இ.ஏ வின் நிறுவன அமைப்புபானது செய்பணிகள் மற்றும் உரிமையளித்தல் என்று இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க செய்பணிகளில் இதன் அங்காடிகளை மேலாண்மை செய்வது மற்றும் மரச்சாமான்களை வடிவமைப்பது மற்றும் உருவாக்குவது போன்றவை அடங்கும். பொருட்களை வாங்குவது மற்றும் விற்பனை செய்வது டச்சு நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனமான INGKA ஹோல்டிங்ஸ் மூலம் நடைபெறுகிறது. 36 நாடுகளில் உள்ள ஐ.கே.இ.ஏ அங்காடிகளில் 235 அங்காடிகள் INGKA ஹோல்டிங் நிறுவனம் மூலம் இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 30 அங்காடிகள் INGKA ஹோல்டிங் நிறுவனத்தின் உரிமை பெற்ற நிறுவனங்கள் மூலம் இயக்கப்படுகிறது.[22]

INGKA ஹோல்டிங் என்பது தனிப்பட்ட நிறுவனம் அல்ல, 1982 ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் காம்பார்ட்ஸ்டி நிறுவிய இலாப நோக்கற்ற வரி-விலக்கு நிறுவனமான ஸ்டிசிங் இன்கா பவுண்டேசன் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இன்கா நிறுவனமானது ஐந்து பேரைக் கொண்ட செயற்குழு உறுப்பினர்களான காம்பார்ட் மற்றும் அவரது மனைவி மற்றும் வழக்குரைஞரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.[23]

ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் அங்காடிகளில் பெரும்பாலானவை இன்கா ஹோல்டிங் மற்றும் த இன்கா பவுண்டேசன் நிறுவனத்தின் நேரடி கண்கானிப்பில் உள்ளது. ஐ.கே.இ.ஏ வணிகக் குறியீடு மற்றும் கோட்பாடுகள் இண்டர் ஐ.கே.இ.ஏ சிஸ்டம்ஸ் என்ற டச்சு நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இன்கா ஹோல்டிங் நிறுவனத்தை உள்ளடக்கிய ஒவ்வொரு ஐ.கே.இ.ஏ நிறுவனமும் வருவாயில் 3% ஐ உரிமைக் கட்டணமாக இண்டர் ஐ.கே.இ.ஏ சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். இண்டர் ஐ.கே.இ.ஏ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் உரிமை நிலையற்ற, இறுதியாக மற்றும் சிக்கலாக இருக்கும். லக்ஸம்பர்கில் பதிவுச் செய்யப்பட்ட இண்டர் ஐ.கே.இ.ஏ ஹோல்டிங் என்ற நிறுவனம் மூலம் இண்டர் ஐ.கே.இ.ஏ நிறுவனம் நிர்வகிக்கப்படுகிறது. குராசியோ என்ற இடத்தில் இயங்கி வரும் தொண்டு நிறுவனம் மூலம் இயக்கப்படும் நெதர்லாண்ட்ஸ் ஆண்டில்ஸ் என்ற நிறுவனத்திற்கு இண்டர் ஐ.கே.இ.ஏ ஹோல்டிங் நிறுவனம் சொந்தமானது. இந்த தொண்டு நிறுவனத்தின் உரிமையாளர்கள் யார் என்பது அறியப்படாமல் உள்ளது (ஐ.கே.இ.ஏ நிறுவனம் அவர்கள் பற்றிய தகவலைக் கொடுக்க மறுத்து விட்டது) எனினும் காம்பார்ட் குடும்ப உறுப்பினர்கள் தான் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்று கருதப்படுகிறது.[23]

ஆஸ்திரேலியாவில் ஐ.கே.இ.ஏ இரண்டு நிறுவனங்களை இயக்குகிறது. குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், மற்றும் விக்டோரியா போன்ற கிழக்கு கடற்கரைப் பகுதிகளைச் சார்ந்த நிறுவனங்களை இன்கா ஹோல்டிங் நிறுவனம் நிர்வகிக்கிறது. தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நிறுவனங்கள் சீபாஸ் பிடி லிட் என்ற நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.[24] வேறு எங்கும் இல்லாத அளவில் அனைத்து அங்காடிகளும் ஐ.கே.இ.ஏ அமைப்புகளின் உரிமைச் சார்ந்த ஒப்பந்தம் பேரில் இயக்கப்படுகிறது.

வரியில்லா இலாபம்

2004 ஆம் ஆண்டு, இன்கா ஹோல்டிங் குழு கடந்த வருடத்திற்கான கணக்குகளைப் பதிவு செய்தது அதன்படி €12.8 பில்லியன் விற்பனையில் €1.4 பில்லியன் அதாவது விற்பனையில் 11 சதவீதம் என்றுக் கூறப்பட்டது. ஏனெனில் இன்கா ஹோல்டிங் நிறுவனம் இன்கா பவுண்டேசன் எனப்படும் இலாப நோக்கற்ற நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்பட்டது, இந்த இலாபங்கள் வரிக்குட்படுத்தப் படவில்லை. கம்பாராட் குடும்பம் இந்த நிறுவனத்தின் இலாபங்களை நேரடியாக பங்கிட முடியாது இது தான் நிறுவனத்தின் இலாப நோக்கற்ற நிலை ஆகும், ஆனால் இன்கா ஹோல்டிங் மற்றும் இண்டர் ஐ.கே.இ.ஏ சிஸ்டம்ஸ் நிறுவனங்களுக்கிடையே உள்ள உரிமையியல் தொடர்பு காரணமாக ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் விற்பனை இலாபத்தில் ஒரு பகுதியை காம்பராட் குடும்பம் பெற்றுக் கொள்ளும்.

2004 ஆம் ஆண்டில் இண்டர் ஐ.கே.இ.ஏ நிறுவனம் உரிமையியல் கட்டணமாக €631 மில்லியனைப் பெற்றது, ஆனால் வரிக்கு முந்தைய இலாபம் €225 மில்லியன் மட்டுமே என்று 2004 ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டது. மற்ற செயல்முறை கட்டணங்கள் என்ற வகையில் வரிக்கு முந்தைய செலவுகளாக €590 மில்லியனை இண்டர் ஐ.கே.இ.ஏ சிஸ்டம்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. ஐ.கே.இ.ஏ நிறுவனம் இந்த கட்டணங்களைப் பற்றி விவரிக்க மறுத்து விட்டது, ஆனால் இண்டர் ஐ.கே.இ.ஏ சிஸ்டம்ஸ் ஐ.ஐ.ஹோல்டிங், மற்றொரு லக்ஷம்பெர்க்கில் பதிவு செய்யப்பட்ட குழு ஆகியவைகளுக்கு அதிகப்படியான தொகையை அளிக்க முன்வந்தது, த எக்னாமிஸ்ட் நாளிதழைப் பொறுத்த வரையில் கிட்டதட்ட காம்ப்ராட் குடும்பம் மூலம் இவை கட்டுப்படுத்தப்பட்டது. 2004 ஆம் ஆண்டு ஐ.ஐ ஹோல்டிங் நிறுவனம் €328 மில்லியன் இலாபத்தை ஈட்டியது.

2004 ஆம் ஆண்டில் இண்டர் ஐ.கே.இ.ஏ குழு நிறுவனங்கள் மற்றும் ஐ.ஐ ஹோல்டிங் €553 மில்லியன் இலாபம் ஈட்டியதாகவும் இதில் €19 மில்லியனை வரியாகச் செலுத்தியதாகவும் அதாவது தோராயமாக 3.5 சதவீதம் இருக்கும் என்று அறிக்கை அளித்தது.[23]

பெர்னே டெக்லரேஷன் பரணிடப்பட்டது 2010-06-05 at the வந்தவழி இயந்திரம் என்ற சுவிட்சர்லாந்து நாட்டின் இலாப நோக்கற்ற நிறுவனம் ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் வரி செலுத்தாமல் இருக்கும் உத்திக்காக முன்பு குற்றங்கூறியது. 2007 ஆம் ஆண்டு ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் பொறுப்பின்மையை மையமாகக் கொண்டு பப்ளிக் ஐ விருதுக்கு ஐ.கே.இ.ஏ நிறுவனத்தை பெர்னே டெக்லரேஷன் நிறுவனம் பரிந்துரைத்தது, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற வேல்ர்ட் எக்னாமிக் ஃபோரம் நிகழ்ச்சியில் இந்த செய்தி வெளியிட்பட்டது.[25]

காம்ப்ராட் மூலம் கட்டுப்பாடு

ஐ.கே.இ.ஏ நிறுவனத்தை வரிகள் செலுத்தாத இலாபகரமான நிறுவனமாக மாற்ற, காம்ப்ராட்டுக்கு இங்கா ஹொல்டிங் நிறுவனத்தின் கட்டுப்பாடு முழுவதையும் எடுத்துக் கொள்ள மற்றும் ஐ.கே.இ.ஏ அங்காடிகளின் செயல்பாடுகள் முழுவதையும் கட்டுப்படுத்த ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் அமைப்புகள் அனுமதி வழங்கின. இங்கா குழுமங்களின் ஐந்து பேர் கொண்ட செயற்குழுவில் காம்ப்ராட் தலைமைப் பொறுப்பு வகித்தார். இது இங்கா ஹோல்டிங் நிறுவனத்தில் சட்டரீதியாக மாற்றங்களைக் கொண்டு வர மற்றும் புதிய பங்குகளை விற்பனை செய்வதற்கான அதிகாரத்தை குழுவிற்கு வழங்கியது. இந்த செயற்குழுவில் உள்ள உறுப்பினர் இறந்தாலோ அல்லது விலகினாலோ, மற்ற நான்கு உறுப்பினர்கள் அவருக்கு பதிலான உறுப்பினரை நியமனம் செய்வர்.

காம்ப்ராட்டின் இல்லாமையின் போது நிறுவனத்தின் சட்டங்கள் குறிப்பிட்ட சட்டங்களை உள்ளடக்கி இங்கா ஹோல்டிங் குழுவை தொடர்ந்து இயக்கும் வகையிலும் மேலும் பங்குகளை மற்ற நிறுவனங்களுக்கு அதாவது இங்கா நிறுவனத்தைப் போன்ற நோக்கங்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது போன்றவற்றை குறிப்பிட்டது.[23]

அறக்கட்டளை மூலம் கொடுத்தல்

INGKA பவுண்டேசன் நிறுவனம் "கட்டமைப்பு மற்றும் உட்பகுதி வடிவமைப்பில் புதிய எண்ணங்களைத் தோற்றுவிக்க" அதிகாரப்பூர்வமாக உரித்தாக்கப்பட்ட நிறுவனம் ஆகும்.[23] தோராயமாக $33 மில்லியன் மதிப்பைக் கொண்ட உலகில் நன்கு அறியப்பட்ட பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் நிறுவனத்தை விட $36 மில்லியன் என்ற மதிப்பீடு செய்யப்பட்ட செலவு கணக்குகளைக் கொண்டு உலகின் மிகப்பெரிய அலுவல் முறைசாராத் தொண்டு நிறுவனமாக உள்ளது.[26]

அதிகப்படியான செல்வங்கள் இருந்த போதிலும் இங்கா பவுண்டேசன் அறக்கட்டளை மூலம் கொடுத்தலை குறைவாகவே கொண்டிருந்தது. அறக்கட்டளை மூலம் உதவி செய்வதைப் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை, நெதர்லாந்து நாட்டில் உள்ள நிறுவனங்கள் இவற்றைப் பற்றிய பதிவுகளை வெளியிடத் தேவையில்லை. ஆனால் 2004-2005 ஆம் ஆண்டுகளில் இங்கா பவுண்டேசன் நிறுவனம் ஸ்வீடன் நாட்டில் உள்ள லண்ட் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மையத்திற்கு நன்கொடைகள் வழங்குவதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறியது, மேலும் இந்த இரண்டு ஆண்டுகளையும் சேர்த்து இங்கா பவுண்டேசன் நிறுவனம் $1.7 மில்லியன் தொகையை வழங்கியுள்ளதாக லண்ட் இன்ஸ்டியூட் தெரிவித்தது. ஒப்பிடும் போது கேட்ஸ் பவுண்டேசன் 2005 ஆம் ஆண்டில் $1.5 பில்லியனுக்கு அதிகமாக அன்பளிப்புகளை உருவாக்கியுள்ளது.[26]

ஏழைகளுக்கு உதவி புரிவதில் இங்கா பவுண்டேசன் குறைவாக இருந்தாலும், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் உடன் இணைந்து பல்வேறு சர்வதேச அறநலப்பண்புகளை மேற்கொள்கிறது. இவைகளில் சில:

  • 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி நிகழ்விற்காக ஐ.கே.இ.ஏ ஆஸ்திரேலியா நிறுவனம் இணை-வேலையாட்களின் பங்களிப்புகளை டாலருக்கு டாலராக மாற்றவும் மேலும் ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் விற்பனைகள் முழுவதையும் இந்த நிகழ்விற்காக கொடுப்பதாக ஒப்புக் கொண்டது.
  • 2006 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுத்தில் பாதிக்கப்பட்டோருக்காக சுமார் 500,000 போர்வைகளை இந்தப் பகுதியில் ஐ.கே.இ.ஏ நிறுவனம் வழங்கியது.[27]
  • லைப்ரியாவில் உள்ள நூற்றுக்கணக்கான "ப்ரிட்ஜ் பள்ளிகளுக்கு" மரச்சாமான்களை வழங்கியுள்ளது.[28]
  • சீனாவில் ஏற்பட்ட 2008 சிச்சுவேன் நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக ஐ.கே.இ.ஏ பெய்ஜிங் நிறுவனம் முதலை பொம்மையை 40 யூவன் (US$5.83, €3.70) விற்பனை செய்தது.

சுற்றுப்புறத் தூய்மைக் கேட்டை குறைப்பதற்காக அமெரிக்க காடுகளை மீட்டெடுக்கும் பணிக்கு ஐ.கே.இ.ஏ நிறுவனம் ஆதரவளிக்கிறது.[29][30]

கல்வியல் சார்ந்த தொடர்புஇளநிலை பயில் மாணவர்களுக்கான வடிவமைப்பு போட்டியில் டிசைன் வேல்ஸ் ஃப்ஃப்ரெஸ் அவார்ட்ஸ்களுக்கு ஆதரவாளராக 2008 ஆம் ஆண்டில் இருந்தது.

ஐ.கே.இ.ஏ சமூக முனைப்பு

2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலக அளவில் நிறுவனத்தின் சமூக ஈடுபாடுகள் போன்றவற்றை மேலாண்மை செய்ய ஐ.கே.இ.ஏ சமூக முனைப்பு உருவாக்கப்பட்டது. மாரிஅனே பார்னர் என்பவரின் தலைமையில் ஐ.கே.இ.ஏ சமூக முனைப்பு உருவாக்கப்பட்டது.

ஐ.கே.இ.ஏ சமூக முனைப்பு செயல்பாடுகளில் முக்கிய பங்குதாரராக யுனிசெப் (UNICEF) [31] மற்றும் சேவ் தி சில்றன் (Save the Children)[32] அமைப்புகள் உள்ளன.

நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற ECOSOC நிகழ்வில், ஐ.கே.இ.ஏ சமூக முனைப்பு செயல்பாடுகள் 180 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமான பங்களிப்புகளுடன் மிகப் பெரிய நிறுவன பங்குதாராக இருப்பதாக 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி யுனிசெப் அறிவித்தது.[33][34]

ஈடுபாடுகளுக்கான எடுத்துக்காட்டுகள்:

  • ஐ.கே.இ.ஏ சமூக முனைப்பு செயல்பாடு மூலம் விடுமுறை தினங்களில் விற்கப்படும் பொம்மைகளிலிருந்து €1 வை UNICEF மற்றும் Save the Children இயங்களுக்கு அளித்தது, இதன் மூலம் €16.7 மில்லியன் வரை நிதி திரட்டப்பட்டது.[35]
  • மியான்மரில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஐ.கே.இ.ஏ சமூக முனைப்பு அமைப்பு மென்மையான பொம்மைகளை வழங்கியது.[36]
  • உலகம் முழுவதும் உள்ள ஐ.கே.இ.ஏ அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் சுன்னான் சோலர்-திறனுள்ள விளக்குகளின் விற்பனையிலிருந்து ஒரு சுன்னான் அளவு பணத்தை UNICEF உதவிக்காக ஐ.கே.இ.ஏ சமூக முனைப்பு அமைப்பு மூலம் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வழங்கியது.[37]

சூழ்நிலைக்கான செயல்பாடு

இயக்குநர் குழு உறுப்பினர்களை வரவேற்கும் விதமாக த நேச்சுரல் ஸ்டெப் இயக்கத்தின் நிறுவனர் கார்ல்-ஹென்ரிக் ராபர்ட் என்பவருக்கு ஐ.கே.இ.ஏ நிறுவனம் 1990 ஆண்டு அழைப்பு விடுத்தது. சரியென நிரூபிக்கக் கூடிய ராபர்டின் அமைப்பு நிலைமைகள் நிறுவனத்தின் சூழ்நிலைச் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் சிறப்பான அணுகுமுறையை வழங்கியது. இந்த முயற்சி சூழ்நிலைக்கான செயல் திட்டம் உருவாக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது 1992 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த திட்டம் அமைப்புக்குரிய மாற்றங்களை மையமாகக் கொண்டு வள அடிப்படையிலான முதலீடுகளை அதிகப்படுத்துதல் மற்றும் தனித்து விடப்பட்ட விவகாரங்களை விளக்கும் ஆற்றல் குறைத்தல் போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண ஐ.கே.இ.ஏ நிறுவனத்தை அனுமதித்தது.[7] சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதில் பின்வருவனவற்றை உள்ளடக்கியது:

  1. பாலிவினைல்க்ளோரைட் தனிமம் உபயோகிப்பது சுவர் ஒப்பனைத்தாள்கள், வீட்டுத் துணிகள், குளியலறை திரைச்சீலை, விளக்குநிழல்கள், மற்றும் மரச்சாமான்கள் ஆகியவற்றில் மாற்றப்பட்டது-PVCயானது பொதியல் மற்றும் மின் கம்பிகளிலிருந்து நீக்கப்பட்டது.
  2. ஃபார்மல்டைடே தனிமத்தை தங்களது பொருள்களில் உபயோகிப்படுத்துவதைக் குறைப்பது, துணிவகைகளையும் சேர்த்து;
  3. அமில-அரக்கு சாயங்களை நீக்குவது;
  4. 100% வாடிக்கையாளர் உபயோகப்படுத்திய பிளாஸ்டிக் கழிவிலிருந்து (OGLA) நாற்காலி மாதிரியை தயாரிப்பது.
  5. காற்றை உமிழும் பொருட்களின் வகைகளை தங்களது தயாரிப்பு வரிசையில் அறிமுகம் செய்தது. இந்தப் பொருட்கள் மூலங்களை உறுதிப்படுத்துதல் மற்றும் திணித்தல் போன்றவற்றைக் குறைத்தது, மேலும் போக்குவரத்து எடை மற்றும் அளவை வழங்குமுறையை மரச்சாமானிலிருந்து 15% அளவிற்கு குறைத்தது.
  6. உலோகங்களில் குரோமியம் உபயோகத்தைக் குறைப்பது;
  7. காடிமம், ஈயம், PCB, PCP, மற்றும் AZO வண்ணப்பொருள்களின் உபயோகத்தைக் குறைப்பது;
  8. உயிரியல் மாறுபாடு முறையில் மாற்றியமைக்கப்பட்ட மற்றும் பராமரிக்கப்பட்ட காடுகளில் நன்கு வளர்க்கப்பட்ட மரங்களை உபயோகிப்பது;
  9. மறுசுழற்சி மூலங்களை பொதிப்பதற்கு மற்றும் சுத்தமான மூலங்களின் மூலம் மறுசுழற்சி செய்ய உபயோகிப்பது.[7]
  10. இழுவை வண்டிகளுடன் கூடிய மிதிவண்டிகளை டென்மார்க்கில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்தது.[38]

பிளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதை தற்போது ஐ.கே.இ.ஏ நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது மீண்டும் உபயோகப்படுத்தும் பைகளை விற்பனை செய்கிறது. ஐ.கே.இ.ஏ உணவங்களும் மறுமுறை உபயோகிக்கும் தட்டுகள், கத்திகள், முட்கரண்டி, கரண்டி போன்றவற்றை வழங்குகிறது. ஐ.கே.இ.ஏ கழிவறைகளில் சில இரட்டை-செயல்முறை அலசிகளைக் கொண்டுள்ளன. அடக்கமான ஃப்ளோரசண்ட் விளக்குகள், ஆற்றலைச் சேமிக்கும் விளக்குகால், மற்றும் மின்கலம் ஆகியவற்றில் மறுசுழற்சி செய்யும் முறையை ஐ.கே.இ.ஏ நிறுவனம் கொண்டுள்ளது. ஐரோப்பவில் உள்ள பல நாடுகளுக்கு சரக்கு தொடர்வண்டிகளை இயக்கிய நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக ஐ.கே.இ.ஏ நிறுவனம் 2001 ஆம் ஆண்டு தொடங்கியது.

ஐ.கே.இ.ஏ க்ரீண்டெக் என்ற பெயரில் €50 மில்லியன் முதலீட்டுடன் ஒரு திட்டத்தை துவக்கியுள்ளதாக 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.கே.இ.ஏ நிறுவனம் அறிவித்தது. சோலார் மரச்சட்டங்கள், பதிலீட்டு ஒளி ஆதாரம், பொருள் மூலகங்கள், ஆற்றல் பயன்திறன், மற்றும் தண்ணீரைச் சேமித்து தூய்மையாக்கும் முறை ஆகியவற்றைக் லண்ட் நகரில் (ஸ்வீடனில் உள்ள ஒரு கல்லூரி நகரம்) தொடங்கி வரப்போகும் ஐந்து ஆணடுகளில் 8-10 நிறுவனங்களில் அமைப்பதற்காக முதலீடு செய்தது. 3-4 ஆண்டுகளில் க்ரீன் தொழில்நுட்பத்தை ஐ.கே.இ.ஏ அங்காடிகளில் வணிக முறையில் விற்பனை செய்வதற்கான எண்ணமாக இருந்தது.[39][40]

சமூகத் தாக்கம்

விற்பனைப் பொருள் அங்காடிகளில் நிலைநிறுத்தத்தக்க மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பை நிர்வகிக்கும் ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் குறிக்கோள் ஒரு சமூகத்தில் உள்ள ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் புதிய அங்காடிகளில் சில தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

  • சௌதி அரேபியாவில் உள்ள ஜெத்தாஹ் நகரில் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பித்த புதிய அங்காடியில் குறிப்பிட்ட அளவில் $150 இலவச கூப்பன்களை அளிப்பதாக அறிவித்த காரணத்தினால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மிதிபட்டு மூன்று நபர்கள் உயிரிழந்தனர்.[41]
  • [42] ஊர்திகள் நிறுத்துமிடங்களுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களை[43] குறைந்தபட்சம் ஒரு முறையாவது ஐ.கே.இ.ஏ நிறுவனம் அழித்திருக்கும். (அமெரிக்கா, மேரிலாண்ட் நகரத்தில் உள்ள காலேஜ் பார்க் பகுதியில் அருந்தகம் பற்றிய வரலாறுகளைச் விளக்கும் டிஜிட்டல் விளக்கப்படம் உள்ள இடத்தில் தற்போது அங்காடி அமைக்கப்பட்டுள்ளது.)
  • 2004 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் (க்ரேட் மான்செஸ்டர் பகுதியின் ஸ்டாக்போர் பகுதியைச் சார்ந்து) அமைக்கப்பட இருந்த ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் புதிய அங்காடிக்கான திட்டத்திற்கு துணை பிரதம மந்திரியின் அலுவலகம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது. இது நீதிமன்ற பார்வைக்கு அனுப்பப்பட்டது, ஆனால் 2005 ஆம் ஆண்டு தோல்வியுற்றது.[44][45] இறுதியில் முன்பு திட்டமிட்ட பகுதியிலிருந்து சில மைல் தொலைவில் க்ரேட் மான்செஸ்டர் பகுதியின் ஆஸ்டோன்-அண்டர்-லைனி என்ற பகுதியில் புதிய அங்காடியை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.[46] ஆஸ்டோன் பகுதியின் M60 மோட்டார்வே பகுதியில் வாகனப் போக்குவரத்தை மாற்றம் செய்யவும் மேலும் போக்குவரத்து காவல் துறைக்குமாக £10,000 பணம் செலவு செய்ததாக மதிப்பிடப்பட்டது.
  • ராண்டி லியோனோர்ட் பகுதியின் போர்லாண்ட் சர்வதேச வானூர்தி நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் 100-அடி உயரமுள்ள ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் புதிய அங்காடி கட்டிடம் மற்றும் எதிர்காலத்தில் இங்கு வரப்போகும் கட்டிடங்களை கட்டுவதற்கு போர்லாண்ட், ஆரேகன் பகுதியில் உள்ள உரிமம் வழங்கும் நகர ஆணையர் அலுவலகம் இடைக்காலத் தடை விதித்தது.[47]

விமர்சனங்கள்

பாரிஸ் நார்ட் 2, ரோய்ஸி, பிரான்ஸ்

ஐ.கே.இ.ஏ (IKEA) பற்றிய சில விமர்சனங்கள்:

  • 1990 ஆம் ஆண்டில் ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவனத்தின் ஆங்கிலத் தொலைக்காட்சி விளம்பரப் பிரச்சாரம் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.
    • "மிகவும் ஆங்கிலமாக இருப்பதை நிறுத்துங்கள்:" 'ஆங்கில' மரச்சாமான்கள் மீதான இவர்களின் எண்ணம் காரணமாக ஆங்கிலம் இறுக்கமான நிலைக்கு மாறுவதாக "ஸ்வீடிஸ் உளவியலாளர்" கூறினார் (புகார்கள் நிராகரிக்கப்பட்டன).[48]
    • ஒரு விளம்பரத்தில் ஒரு அலுவலக பணியாளரை நீக்கி எவ்வளவு மரச்சாமான்களை ஒரு நிறுவனம் வாங்க இயலும் என்று மேலாண்மை ஆலோசகர் ஒருவர் யோசனை கூறியிருந்தார் (புகார்கள் நிராகரிக்கப்பட்டன ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவனம் தானாக முன்வந்து விளம்பரத்தை திரும்பப் பெற்றது).[49]
    • பொருட்களை ஒன்றினைத்து, அனுப்பி வைத்து, உங்களுக்கான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்ற வாசகம் அடங்கிய பிரச்சாரம். அனைத்தும் உங்களின் புதியப் பொருள்கள், உங்களுக்கு தெரியும் எங்கே வரவேண்டும் என்று. புத்துணர்ச்சியுடன் தொடருங்கள், "புகார்கள் பெற்றால் திருமண முறிவுகளை மிகச் சிறுதிறமான குறிக்கும் (புகார்கள் நிராகரிக்கப்பட்டன).[50]
  • ஐ.கே.இ.ஏ (IKEA)நிறுவனத்தின் நிறுவனர் இங்வர் காம்ப்ராட் சிறு வயதாக இருந்த போது நேரடியாக ப்ரோ-நாஸி நியூ ஸ்வ்டீஸ் இயக்கம் (நைஸ்வென்ஸ்கா ரோரெல்சென் ) என்ற இயக்கத்தில் 1948 வரை கலந்து கொண்டார், ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவனம் இஸ்ரேல் நாட்டில் அங்காடிகளை திறந்ததனால் நெருக்கடியை ஏற்படுத்தியது.[51] நைஸ்வென்ஸ்கா ரோரெல்சென் இயக்கத்தைப் பற்றி தனது புத்தமான லீடிங்க் பை டிசைன்: த IKEA ஸ்டோரி என்ற புத்தகத்தில் இரண்டு அதிகாரங்கள் எழுதினார் மேலும் 1994 ஆம் ஆண்டு IKEA பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் நிறுவனத்துடன் தனக்கு இருந்த இணைப்பு தனது "வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு" என்று எழுதி இருந்தார்.[52]
  • நார்வேயின் முன்னாள் பிரதம மந்திரி க்ஜெல் மாஹ்னே போண்ட்விக் ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவனம் தங்களது செயல்முறை கையேடுகளில் பெண்கள் வடிவமைத்த மரச்சாமான்கள் பற்றி வெளியிடுவது இல்லை பல்வேறு செய்முறைகள் இருக்கலாம் பெண்களை காட்டுங்கள் என்று கூறி விமர்சனம் செய்தார்.[53]
  • 2004 ஆம் ஆண்டில் ஐரிஷ் சட்டங்கள் தங்கள் சில்லறை விற்பனை நிலையங்களின் அளவை 6,000 மி2 அளவிற்கு குறைப்பதாக ஒரு விமர்சனம் எழுந்தது. டப்லின் நகரில் மிகப் பெரிய அங்காடியைத் திறக்க ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவனம் திட்டமிட்டு இருந்தது இந்த சட்டத்தின் காரணமாக விவாதத்தில் முடிந்தது. நீடித்துழைக்கக்கூடிய பொருள்களை சில்லறை விற்பனை செய்யும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் அங்காடிகளின் அளவை குறைக்கும் சட்டத்தை மாற்றியது.[54] ஒரு நிறுவனத்திற்கு மட்டும் பயன்படும் வகையில் சட்டத்தை மாற்றியது மற்ற சிறிய நிறுவனங்களின் வியாபாரத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் போராட்டம் செய்யத் தூண்டும் என்று சுற்றுச்சூழல் மந்திரி குற்றங்கூறினார் தற்போதைய இந்த தீர்மானம் ஐரிஷ் வணிகர்களுக்கு சாதகமான ஒன்று தான் என்று அரசாங்கம் ஆதரித்தது. டப்லினில் உள்ள ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவனம் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி திறக்கப்பட்டது.[55]
  • ஜூன் 2007: தேசியவாதியாக பணியமர்த்தப்பட்ட சோஸியல் டெமோக்ரடிக் அண்ட் லேபர் பார்டி கட்சியின் உறுப்பினர்கள் பெல்ஃபாஸ்டில் உள்ள ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் அங்காடி முன்னாள் ஒன்றியக் கொடி மற்றும் அல்ஸ்டர் பேனர் ஆகிய இரண்டு கொடிகளைச் சேர்ந்து மூன்று கொடிகளை கலைஞர் ஒருவர் வைத்திருந்ததாக குற்றம் சாட்டினர். கட்சியினரால் "அப்மார்கெட் ஆரன்ஞ் ஹால்" என்று பெயரிடப்பட்ட பிறகு, இனிமுதல் ஸ்வீடிஸ் கொடிகள் மட்டுமே அங்காடிகள் முன்பு காணப்படும் என்று ஐ.கே.இ.ஏ நிறுவனம் அதன் வாடிக்கையாளார்கள் மற்றும் (சக) தொழிலாளிகளுக்கு உறுதியளித்தது.[56]
  • ஜூன் 2007: கேள்விகள் கேட்கும் விளம்பர நகலைக் கொண்ட மின்னஞ்சல் செய்தி மடலுக்கு எதிராக சில வருங்கால வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டி வழக்குத் தாக்கல் செய்தனர். "உங்கள் பட்டதாரிகளின் தங்குமிடங்களை பொலிவாக்குகிறது என்று பர்ன்கிர்ஸ்லா படுக்கைக் குறிப்புகள் கூறியது. தவறான தாக்கத்தை ஏற்படுத்தும் பழமைத் தனமான அறைத் தோழரைப் போன்று இல்லாமல்", பழமைக் துணைப்பண்பாடு உறுப்பினர்கள் இந்த ஒரே தன்மையான முறையை குறையாக எடுத்துக் கொண்டனர்.[57]
  • மலிவான தரை விரிப்புக் கம்பளங்களுக்கு டானிஷ் இடப்பெயர்களையும், விலை கூடுதலான மற்றும் ஆடம்பரமான மரச்சாமான்களுக்கு ஸ்வீடிஷ் இடப்பெயர்களையும் ஐ.கே.இ.ஏ நிறுவனம் வைப்பதாக கோம்பென்ஹென் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கண்டறிந்தார். மோசமான வாக்கியங்களை வெளியிடுவதன் மூலம் நன்கு அறியப்பட்ட ஆய்வாளரான க்ளாஸ் க்ஜோலர் ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் ஏகாதிபத்திய செயல்களைக் குற்றஞ்சாட்டினார்.[58]
  • கனடியன் டாலர் அமெரிக்காவின் டாலருக்கு இணையாக இருந்த போதிலும் அமெரிக்க அங்காடிகளில் விற்பனை செய்த அதே பொருட்களை கனடாவின் அங்காடிகளில் இரட்டை விலைக்கு ஐ.கே.இ.ஏ நிறுவனம் விற்பனை செய்ததை சிட்டிடிவி (Citytv) மூலம் அறிந்த கனடா நாட்டு மக்கள் மிகவும் வருத்தமடைந்தனர்.[59]
  • ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் ஆன்லைன் கடைகள் எல்லாப் பகுதிகளிலும் திறக்கப்பட்டுள்ளன ஆனால் இவை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் மட்டும் செயல்முறையில் இருக்கும் என்று பிரித்தானிய வாடிக்கையாளர்களுக்கு ஐ.கெ.இ.எ நிறுவனம் 2008 ஆம் ஆண்டு ஒரு மின்னஞ்சலை அனுப்பியது. 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வடக்கு ஐரிஷ் மற்றும் ஸ்காடிஷ் பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்ய இயலாமல் இருந்தனர், எனினும் சில ஸ்காடிஷ் வாடிக்கையாளர்கள் ஐ.கே.இ.ஏ எடின்பர்க் மூலம் பொருட்களைப் பெற்றனர்.[60] இந்த திட்டம் ஐ.கே.இ.ஏ டைரக்ட் என்று அழைக்கப்பட்டது மேலும் குறிப்பிட்ட அஞ்சல் முகவரிகளைக் கொண்டு £35 (எடின்பர்க் நகரம்) முதல் £120 (அபர்டீன்ஷைர்) வரை மதிப்பு கொண்ட பொருட்களை விநியோகம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.[61]

எழுத்துரு மாற்றம்

வரைப்பட விளக்க வடிவமைப்பு உலகில் ஐ.கே.இ.ஏ நிறுவனம் தனது அட்டவணைகளில் உபயோகிப்படுத்தி வந்த சான்ஸ் எழுத்துருவிற்கு பதிலாக வெராண்டா எழுத்துருவை ஊடங்கள் மற்றும் அச்சுப்பதிப்பில் வரும் தங்களது பொருள்களின் பெயர்களை ஒறுமைப்படுத்த 2009 ஆம் ஆண்டு பயன்படுத்தியது.

இந்த சர்ச்சையைப் பற்றி டைம் நாளிதழ் மற்றும் இணைப்பு பதிப்பகங்கள் ஐ.கே.இ.ஏ (IKEA) பிரதிநிதி ஒருவரின் பேட்டியுடன், டைப்போக்ராபர்ஸ் மற்றும் வடிவமைப்பாளர்களின் கருத்துக்களை மையமாகக் கொண்டு கட்டுரைகளை வெளியிட்டது.[62] பிசினஸ் வீக் போன்ற வடிவமைப்பு மற்றும் விளம்பர நிறுவனங்கள் இணைந்து ஆன்லைன் வெளியீடுகளில் நலிவுண்டாக்கியது. சிட்ரிக் ப்ளாக், ப்ராண்ட் நியூ போன்றவை வெர்டனகேட் பெயர்களை உபயோகித்தவகைகளில் ஒன்றாகும்.[63] க்ரிகே என்ற ஆஸ்திரேலியன் ஆன்லைன் தினசரி செய்தி தளமும் இந்த சர்ச்சைப் பற்றிய கட்டுரையை வெளியிட்டது.[64] த கார்டியன் என்ற செய்தி நிறுவனம் "ஐ.கே.இ.ஏ நிறுவனம் தனது எழுத்துருவை வெர்டானா முறைக்கு மாற்றியது பதிப்பாளர்களிடம் சீற்றமடைதலை ஏற்படுத்தி உள்ளது என்ற கேள்வியுடன் கட்டுரையை வெளியிட்டது. இதைப் பற்றி மற்றவர்கள் அக்கறை கொள்ள வேண்டுமா? முற்றிலும்."[65] வெர்டானா எழுத்துரு முறைக்கு மாற்றியது இந்த முறையில் வடிவமைத்து உபயோகப்படுத்துபவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறி த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது".[66]

விளம்பரம்

பெர்லின்-நியூக்லினில் உள்ள ஜெர்மன்-துர்கிஸ் விளம்பரம்

ஓரினைச்சேர்க்கையாளர்களைக் கொண்டு விளம்பரம் செய்த முதல் நிறுவனமாக ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவனம் பரவலாக கருதப்படுகிறது. ஒரே ஒரு முறை இந்த விளம்பரம் 1994 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[67] தன்பால் உடலுறவுடைய குழுவை மையமாகக் கொண்ட விளம்பரங்களையும் ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவனம் கொண்டிருந்தது மேலும் திருநங்கைகள் பங்கு கொண்ட விளம்பரங்களையும் கொண்டிருந்தது.[68]

"உலகில் மிக முக்கியமான இடம் வீடு தான்" என்ற வாசகங்களைக் கொண்ட விளம்பரப் பிரச்சாரத்தை "விற்பனைக்கு அல்ல" என்ற வாசகத்துடன் இங்கிலாந்து முழுவதும் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.கே.இ.ஏ (IKEA) தொடங்கியது. எனினும், மெட்ரோ நியூஸ்பேப்பர் லண்டன் வணிக வலைத்தளம் www.mad.co.uk இல் இந்த பிரச்சாரம் இடம்பெற்ற பிறகு ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவனத்தின் பிரச்சாரம் இங்கிலாந்தின் வீடு புதுப்பிக்கும் நிறுவனமான ஓனிஸ் லிவிங் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக அமைத்த விற்பனைக்கு அல்ல வியாபாரச் செயல்பாடுகளுடன்[69] ஒத்துப் போவதாக கூறப்பட்டது மேலும் £25,000 குறைவாக விளம்பரப் பிரச்சாரம் செய்ததற்காக 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இண்டர்பில்ட் 2006 கன்ஸ்டரக்சன் மார்கெட்டிங் அவார்ட் விருதையும் வென்றது.

ஓனிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஃப்ராசர் பாட்டர்சன் மற்றும் பியாட்டே மக்கின்னஸ் பன்கே நிறுவனத்தின் பங்குதாரார் ஆண்ட்ரூ மக்கின்னஸ் ஆகியோர் இடையில் ஏற்பட்ட விவாதம் காரணமாக விளம்பர மற்றும் பி.ஆர் நிறுவனம் ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவனத்திற்கு £12 மில்லியன் வழங்கியது.[70][71] இந்த விவாதத்தின் முக்கிய சாராம்சம் ஓனிஸ்'ஸ் பிரச்சாரம் விளம்பர நிறுவனம் இல்லை என்பதை தெரியாத நிலையில் BMB நிறுவனம் இருந்தது. விற்பனைக்கு அல்ல பிரச்சாரத்திற்காக தாங்கள் ஏற்கனவே உரிமம் பெற்றுள்ளோம் மேலும் தங்களது விளம்பரங்கள் லண்டன் நகரின் முக்கிய இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது ஆனால் ஐ.கே.இ.ஏ (IKEA) பிரச்சாரம் தங்களது விளம்பரத்தை ஆதாரமாக கொண்டுள்ளதாகவும் ஓனிஸ்'ஸ் நிறுவனம் வாதத்தில் ஈடுபட்டது.

ஒரு சில ஒப்பந்தங்களுக்கு பிறகு BMB மற்றும் ஐ.கே.இ.ஏ நிறுவனம் தங்களது விளம்பரப் பிரச்சார தளத்தில் (www.notgoinganywhere.co.uk) ஓனிஸ்'ஸ் நிறுவனத்தின் தளத்தை (www.onishome.co.uk) ஒரு வருடத்திற்கு இணைத்து விளம்பரம் செய்வதாக ஒப்புக்கொண்டது. ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவனத்தின் மூலம் இந்த முறையில் விளம்பரம் செய்த ஒரே ஒரு நிறுவனம் ஓனிஸ் மட்டும் தான். தன்னியலாக கலைத்தல் முறையில் 2008 ஆம் ஆண்டு ஓனிஸ் ஹோம்ஸ் நிறுவனம் மாற்றப்பட்டது மற்றும் www.onishome.com வளைத்தளம் நிறுத்தப்பட்டது.

ஓனிஸ் ஹோம்ஸ் நிறுவனத்தின் அறிவாற்றலுள்ள உடைமைகள் மற்றும் விற்பனை உரிமைகள் புதிய பங்குதாரர்களால் வாங்கப்பட்டு ஓனிஸ் லிவிங் (www.onisliving.co.uk) என்ற வணிகப் பெயருடன் வீடுகளைப் புதுப்பிக்கும் ஒரே அங்காடியாக உரிமை பெற்று இங்கிலாந்து முழுவதும் ஓனிஸ் வகைகளை விற்பனை செய்யும் நோக்கத்தில் மாற்றப்பட்டது.

த சிம்ஸ் 2 ஐ.கே.இ.ஏ (IKEA) ஹோம் ஸ்டஃப் என்ற பெயரில் ஸ்டஃப் பேக்குகளை உருவாக்க த சிம்ஸ் 2 என்ற பிரபலமான வீடியோ விளையாட்டை உருவாக்கிய நிறுவனத்துடன் தற்போது ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவனம் இணைந்துள்ளது. ஐ.கே.இ.ஏ (IKEA) அங்காடிகளில் காணப்படும் பொருட்கள் இடம்பெற்றுள்ள இந்த விளையாட்டு 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி வடக்கு அமெரிக்காவிலும் 2008 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி ஐரோப்பாவிலும் வெளியிடப்பட்டது. சிறந்த தரவகைகளுடன் வெளியிடப்பட்ட இரண்டாவது ஸ்டஃப் பேக் இதுவாகும் த சிம்ஸ் 2 ஹச்&எம் ஃபேசன் ஸ்டஃப் முதலாவதாக இருந்தது, இவை இரண்டும் ஸ்வீடிஸ் பகுதியை ஒன்றிய நிறுவனங்களாகும்.

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடன் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பாஸ்கோவ்'ஸ் நிறுவனத்திற்கு பதிலாக பிலாடெல்ஃபியாவில் நடைபெற்ற வருடாந்திர விழாவான தேங்ஸ்கிவ்விங் டே பரேட் என்ற நிகழ்ச்சியில் தலைப்பு விளம்பரத்துடன் ஐ.கே.இ.ஏ (IKEA) 2008 ஆம் ஆண்டில் பங்குப்பெற்றது.

ரஷ்யா நோவோஸிபிர்ஸ்க் நகரத்தில் ஐ.கே.இ.ஏ (IKEA) மாதிரியில் வடிவமைக்கப்பட்ட சுரங்கப் பாதை தொடர்வண்டி 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்வீடிஷ் வடிவத்தில் நான்கு சீருந்துகள் நடமாடும் காட்சி அறையாக மாற்றப்பட்டது. இந்த மாற்றியமைக்கப்பட்ட தொடர்வண்டியில் இருக்கைகள் மற்றும் திரைச்சீலைகல் வண்ணத்தில் மாற்றப்பட்டு 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் தேதி வரை பயணிகளை எடுத்துச் சென்றது.

ஓஸ்டர் கார்ட்ஸ் (லண்டன் சுரங்கப்பாதைகளுக்கான இலவச-பயணச்சீட்டு முறை) ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவனத்தின் பணப்பைகளுடன் தற்போது வழங்கப்பட்டு வருகிறது மேலும் டியூப் மேப் சேவையையும் வழங்கி வருகிறது.

த ரெட் ஆஸ்பரேவில் ஐ.கே.இ.ஏ வின் அடையாள உடை.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சௌதாம்ப்டன் நகரில் ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவனத்தின் புதிய அங்காடி திறப்பதற்கு முன்பு ரெட் ஃபன்னலில் உள்ள எம்வி ரெட் ஓஸ்ப்ரே கப்பல் ஐ.கே.இ.ஏ (IKEA) வின் புதிய அங்காடி திறப்பை கொண்ட்டாடும் வகையில் மஞ்சள் மற்றும் நீல நிறங்களினால் மாற்றியமைக்கப்பட்டது. வெள்ளை மற்றும் சிவப்பு நிற வண்ணங்களிலிருந்து ரெட் ஃபன்னல் கப்பல் முதன்முறையாக மாற்றப்பட்டது இது தான். இஸ்லே ஆச்ப் வைட் பகுதிகளில் பொருள்களை நேரடியாக வீடுகளுக்கு வழங்குவதற்காக 12 மாதங்களுக்கு இந்த வண்ணங்கள் கப்பலில் இருக்குமாறு ரெட் ஃபன்னல் மற்றும் ஐ.கே.இ.ஏ (IKEA) இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் போடப்பட்டது.

2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி டப்லினில் புதிய அங்காடியை ஐ.கே.இ.ஏ நிறுவனம் தொடங்கியதும் 2010 ஆண்டு பருவத்திற்கான டப்லின் GAA சீனியர் ஃபுட்பால் & ஹர்லிங் அணிகளுக்கு புதிய ஆதரவாளர்களாக ஐ.கே.இ.ஏ நிறுவனம் செயல்படப் போவதாக வதந்திகள் பரவின.

பாரீஸ் நகரின் நான்கு முக்கிய நகரங்களில் 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவனம் முக்கியமான நிகழ்வு ஒன்றை உருவாக்கியது. நெரிசல் மிக்க பகுதிகளில் மரச்சாமானகள் காட்சிக்கு வைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையானப் பொருள்களை நேரடியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வண்ணம் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சுரங்கப்பாதை சுவர்கள் முழுவதும் ஐ.கே.இ.ஏ (IKEA)நிறுவனத்தின் பொருள்களை விவரிக்கும் வண்ணம் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.

விருதுகள்

2004 மற்றும் 2005 ஆம் ஆண்டில் வொர்கிங் மதர்ஸ் நாளிதழில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக ஐ.கே.இ.ஏ (IKEA) இடம்பெற்றது. ஃபார்ச்சூன் நாளிதழின் வேலைச் செயவதற்கான சிறந்த நிறுவனமாக 2006 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் 96 வது இடம் பிடித்தது மேலும் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐ.கே.இ.ஏ (IKEA) கனடா எல்.பி நிறுவனம் கனடாவின் சிறந்த 100 பணியாளர் விருதை மீடியாகார்ப் கனடா இன்க் நிறுவனத்திடமிருந்து பெற்றது., மேலும் மெக்லேன்ஸ் செய்திநாளிதழிலும் இடம் பெற்றது.[72]

மேலும் காண்க

  • ஐ.கே.இ.ஏ (IKEA) அட்டவணை
  • பொருத்துவதற்கு தயாராக உள்ள மரச்சாமான்

குறிப்புதவிகள்

புற இணைப்புகள்

நிறுவனத் தரவுகள்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஐ.கே.இ.ஏ&oldid=3924755" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை