கண் மருத்துவம்

கண் மருத்துவம்(அ) கண்ணியல் (Ophthalmology) /ˌɒfθælˈmɒləi/[1] என்பது கண் தொடர்பான நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகளைக் குறிக்கும் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சையின் பிரிவினைக் குறிப்பதாகும்.[2]

கண் மருத்துவம்
(அ) கண்ணியல்
(Ophthalmology)
அமெரிக்க கடற்படைத் தளபதி கென்னத் குபிஸ் மற்றும் அமெரிக்க விமானப்படை கேப்டன் டைகே ரிச்சர்ட்சன் ஆகியோர் கோடாபாடோவைச் சேர்ந்த 12 வயது சிறுமியான மேரிலின் கன்சிக்கு கண்புரை கண் அறுவை சிகிச்சையின் போது இயக்க நுண்ணோக்கியைப் பயன்படுத்துகின்றனர்.
அமைப்புகண் மற்றும் பார்வைத் தொகுதி
குறிப்பிடத்தக்க நோய்கள்கண் புரை நோய், விழித்திரை நோய், கண் அழுத்த நோய், கருவிழிப்படலம் நோய், Eyelid and Orbital disorders, Uveitis, மாறுகண், Ocular neoplasms, Neuro-ophthalmologic disorders
குறிப்பிடத்தக்கச் சோதனைகள்Ophthalmoscopy, Visual field test, Optical coherence tomography
நிபுணர்கண் மருத்துவர்
கண் மருத்துவர்
(Ophthalmologist)
தொழில்
பெயர்கள்மருத்துவர்
அறுவைச் சிகிச்சை நிபுணர்
வகைSpecialty
செயற்பாட்டுத் துறைமருத்துவம், அறுவைச் சிகிச்சை
விவரம்
தேவையான கல்வித்தகைமைDoctor of Medicine (MD),
Doctor of Osteopathic Medicine (DO),
Bachelor of Medicine, Bachelor of Surgery (MBBS),
Bachelor of Medicine, Bachelor of Surgery (MBChB)
தொழிற்புலம்மருத்துவமனைகள், சிகிச்சையகம்கள்

கண் மருத்துவர் என்பவர் கண் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மருத்துவரைக் குறிப்பதாகும்.[3][4] மருத்துவத்தில் பட்டமும், அதைத் தொடர்ந்து கண் மருத்துவத்தில் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் உறைவிடப் பயிற்சியும் பெற்று இருப்பர். கண் மருத்துவத்திற்கான உறைவிடப் பயிற்சி திட்டங்களுக்கு உள் மருத்துவம், குழந்தை மருத்துவம் அல்லது பொது அறுவை சிகிச்சை ஆகியவற்றில் பயிற்சியுடன் ஒரு வருட உள்ளகப் பயிற்சியும் தேவைப்படலாம். கண் நோயியலின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் கூடுதல் சிறப்புப் பயிற்சி பெறப்படலாம்.[5]

கண் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும், ஒருங்கொளி சிகிச்சையை செயல்படுத்துவதற்கும், தேவைப்படும்போது அறுவை சிகிச்சை செய்வதற்கும் கண் மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரைக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.[6] கண் மருத்துவர்கள் கண் நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றிய கல்வி ஆராய்ச்சியில் பங்கேற்கலாம்.[7]

நோய்கள்

கண் மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்படும் பொதுவான நோய்களின் ஒரு பகுதி பட்டியல் பின்வருமாறு:[8]

நோய் கண்டறிதல்

விழித்திரை கேமரா
விழியடி நோக்கி (பிளவு விளக்குடன் 90 டையோப்டர் ஆடியினைப் பயன்படுத்தல்)

கண் பரிசோதனை

கண் பரிசோதனையின் போது செய்யப்படும் பரிசோதனை முறைகளின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு

பண்டைய இந்தியா

இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணரான சுஷ்ருதர் சுமார் ஆறாவது நூற்றாண்டில் சமசிகிருதத்தில் சுஷ்ருதாவை சம்ஹிதா எனும் நூலினை எழுதினார்[11]. அதில் 76 விழியின் நோய்கள் விவரிக்கப்பட்டுள்ளது (இவற்றில், 51 அறுவை சிகிச்சை) அத்துடன் பல கண் சார்ந்த அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.[12][13] கண்புரை அறுவை சிகிச்சை பற்றிய அவரது விளக்கம் புரைவில்லை நெறித்தல் முறையுடன் இணக்கமாக இருந்தது.[14] அவர் முதல் கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவராக விவரிக்கப்படுகிறார்.[15][16]

தொழில்முறை தேவைகள்

இந்தியா

இந்தியாவில், இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவையியல் (இந்தியா) பட்டப்படிப்பை முடித்த பிறகு, கண் மருத்துவத்தில் முதுகலை பட்டம் தேவை.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கண்_மருத்துவம்&oldid=3928489" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை