கண் அழுத்த நோய்


கண் அழுத்த நோய் (ஆங்கிலம்:Glaucoma) எனப்படும் கண் அழுத்த நோயானது, பார்வை நரம்பு சேதமாவதால் பார்வை இழப்பு நிலைக்கு விரைந்து முன்னேறுவதும், பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு செல்ல முடியாததுமான ஒரு கண் நோய் ஆகும். பல நேரங்களில். கண்ணில் உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதனாலேயே, இது விளைகிறது. ஆனால், வேறு பல காரணங்களினாலும், இந்நோய் கண்களில் உருவாகிறது..[1]

கண் அழுத்த நோய்
இந்நோயுள்ள கண்கள்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புகண் மருத்துவம்
ஐ.சி.டி.-10H40.-{{ICD10|H|42||h|40}
ஐ.சி.டி.-9365
நோய்களின் தரவுத்தளம்5226
ஈமெடிசின்oph/578
ம.பா.தD005901

இது தனக்கே உரித்தான ஒரு குறிப்பிட்ட முறையில், விழித்திரையின் நரம்பு முடிச்சு அணுக்கள் இழப்பை ஈடுபடுத்துகிறது. கண்ணழுத்த நோயில், பல துணை வகைகள் உள்ளன. ஆனால், அவை யாவும் பார்வை நரம்பு இயக்கத்தடை என்பதன் வகைகளாகவே கருதலாம்.

அதிகரித்த உள்விழி அழுத்தம் (21 mmHg அல்லது 2.8 kPa இற்கு மேல்) கண் அழுத்த நோய் விளைவதற்கான ஒரு முக்கிய ஆபத்துக் காரணியாகும். ஒப்புமையில், சற்றே குறைந்த அளவு அழுத்தத்திலேயே ஒருவருக்கு நரம்புச் சேதம் உருவாகலாம், மற்றொருவருக்கு வருடக் கணக்காக மிக அதிகமான விழி அழுத்தம் இருப்பினும் சேதம் ஒன்றும் விளையாதிருக்கலாம். சிகிச்சை பெறாத கண் அழுத்த நோய் நிரந்தரமாக பார்வை நரம்பு சேதத்தில் விளையக் கூடும். இதன் விளைவாக, பார்வைத் தள இழப்பு ஏற்பட்டு, நிரந்தரமான, பார்வையின்மையை உருவாக்குகிறது.

வகைகள்

கண் அழுத்த நோயை, "திறந்த கோண கண் அழுத்த நோய்" என்றும், "மூடிய கோண கண் அழுத்த நோய்" என்றும், இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

மூடிய கோண கண் அழுத்த நோய்

மூடிய கோண கண் அழுத்த நோய் திடுமென்று உருவாகக் கூடும், மேலும் அது மிகுந்த வலியுண்டாக்குவது. இதில் பார்வையிழப்பு என்பதானது சடுதியில் விளைவதாக இருக்கும். ஆனால், இதில் உண்டாகும் அசௌகரியத்தினால், நோயாளிகள் நிரந்தர சேதம் உண்டாகும் முன்னரே மருத்துவ சிகிச்சையை நாடுகின்றனர். திறந்த கோண, நாள்பட்ட கண் அழுத்த நோய் மெல்ல முன்னேறும் தன்மை கொண்டது. இதில் நோய் மிகவும் முதிர்ந்த நிலையை அடையும் வரையிலும் நோயாளிகள் தாம் பார்வையிழப்பை அடைந்திருக்கிறோம் என்பதை அறியாமலேயே இருக்கக் கூடும்.

நோயின் தாக்கம்

"பதுங்கும் பார்வைத் திருடன்" என்று கண் அழுத்த நோய்விற்கு புனைபெயர் உண்டு. ஏனெனில், இதில் பார்வை இழப்பானது பொதுவாக ஒரு நீண்ட கால அளவில் ஏற்படுகிறது; மற்றும் நோய் மிகவும் முற்றிய பின்னரே இது கவனிக்கப்படுகிறது. ஒரு முறை இழப்பு நேர்ந்து விட்டால், பிறகு சேதமுற்ற பார்வைத் தளத்தை திரும்பப் பெறவே முடியாது. உலகெங்கும் பார்வையின்மைக்கான இரண்டாவது காரணமாக முன்னணியில் இது உள்ளது.[2] ஆப்பிரிக்க அமெரிக்க சமுதாயங்களில் பார்வையின்மைக்கு இதுவே முழு முதற் காரணமாக உள்ளது.[3] கண் அழுத்த நோய் நோயானது, ஐம்பது அல்லது அதற்குக் கீழ் வயதானவர்களில் 200 பேரில் ஒருவரையும், எண்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் பத்துப் பேரில் ஒருவரையும் பாதிக்கிறது. ஆரம்பக் கட்டத்திலேயே இந்த நிலையைக் கண்டறிந்து விட்டால், பிறகு அது மேலும் முன்னேறிச் செல்வதைத் தடுக்க இயலும் அல்லது மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைமைகள் மூலம் அதன் முன்னேற்றத்தை மட்டுப்படுத்த இயலும்.

ஊடகங்கள்

குறிகளும் அறிகுறிகளும்

இந்த நோயின் ஆரம்ப கட்டங்களில் இதற்கான அறிகுறிகள் மிகவும் அரிதாகவே காணப்படும். ஆகவே, தேர்ந்த தொழில் முறையாளர்களிடம் முறையான கால இடைவெளிகளில் கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

ஆப்தால்மொலாஜிஸ்ட் எனப்படும் கண் நோய் சிகிச்சை இயல் மருத்துவர்கள் மற்றும் ஆப்டொமிட்ரிஸ்ட் எனப்படும் பார்வைத் திறன் இயல் நிபுணர்கள், உள்விழி அழுத்தம், பார்வைத் தளத்திற்கான சோதனைகள் மற்றும் பார்வை நரம்புத் தலையின் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் கிளௌகோமா நோயைக் கண்டறிவார்கள்.

நோயாளிகள் சில சமயங்களில் மேற்பரப்பான பார்வையில் ஒட்டு போன்றதொரு பார்வையிழப்பையோ அல்லது நிறங்களின் துல்லியம் குறைந்து காண்பதையோ உணரலாம். ஒரு கண் ஆய்வு நிபுணரின் மறு ஆய்வின் மூலமாக இவர்கள் பயன் அடையலாம்.

கோணம் மூடிய கிளௌகோமாவின் அறிகுறிகள் விழிப்பந்தின் உள்ளே அல்லது அதைச் சுற்றிலுமான வலி, தலைவலி, குமட்டல்/ வாந்தி எடுத்தல் மற்றும் உதாரணமாக விளக்குகளைச் சுற்றிலுமான வட்டம் போன்ற பார்வையில் இடையூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கும். சில நேரங்களில் இத்தகைய அறிகுறிகள் ஒன்றும் இல்லாமலும் இருக்கலாம்.

உடற்கூறு நோயியல்

பலவகை கிளௌகோமாக்களின் ஆபத்துக் காரணி மற்றும் அதற்கான சிகிச்சையின் குவிமையம் ஆகியவற்றில் முதன்மையானது அதிகரித்த உள்விழி அழுத்தம்.

உள்விழி அழுத்தம், விழியின் சிலியரி செயற்பாடுகள் காரணமாக அக்வஸ் ஹ்யூமர் என்னும் திரவம் உற்பத்தியாவது மற்றும் அது சிறு தாங்கு திசு வலைப் பின்னல் வழியாக வடிமானம் கொள்வது ஆகியவற்றால் உருவாவதாகும். அக்வஸ் ஹ்யூமரானது சிலியரி செயற்பாடுகளிலிருந்து, பின்புறமாக விழி வில்லை மற்றும் ஜின்னின் ஜோன்னுல்கள் மற்றும் முன்புறமாக கருவிழிப் படலம் ஆகியவற்றால் எல்லையமைக்கப்பட்ட பின்புற அறையின் உள்ளே ஓடுகிறது. பிறகு அது கண் கருவிழிப் படலத்தின் கண்பாவையிலிருந்து, பின்புறமாக கருவிழிப் படலத்தினாலும் முன்புறமாக விழி வெண்படலத்தாலும் எல்லையமைக்கப்பட்டுள்ள முன்புற அறையின் உள்ளே ஓடுகிறது. இங்கிருந்து, சிறு தாங்கு திசு வலைப் பின்னல், அக்வஸ் ஹ்யூமரை ஸ்க்லெம்ஸ் கால்வாய் வழியாக ஸ்கெலெரல் ப்ளெக்ஸ்யூசஸ் மற்றும் பொதுவான ரத்தவோட்டத்தில் வெளியேற்றுகிறது.[5] திறந்த கோண கிளௌகோமாவில், சிறு தாங்கு திசு வலைப் பின்னல் வழியாகக் குறைந்த அளவு ஓட்டமே உள்ளது;[6] கோணம் மூடிய கிளௌகோமாவில், கருவிழிப் படலம் சிறு தாங்கு திசு வலைப் பின்னலை எதிர்த்துத் தள்ளப்பட்டு, திரவம் ஓடாமல் அடைக்கிறது.

கிளௌகோமேடௌஸ் பார்வை நரம்பு இயக்கத்தடை மற்றும் பார்வை அதியழுத்தம் இவற்றிற்கு இடையிலான சீரற்ற தொடர்பு, உடற்கூறு கட்டமைப்பு, விழி மேம்பாடு, நரம்பழுத்த அதிர்வு நோய், பார்வை நரம்பில் ரத்தவோட்டம், எக்சிடேடரி நியூரோடிரான்ஸ்மிட்டர், டிரோஃபிக் காரணிகள், விழித்திரைக் நரம்பு முடிச்சு அணுக்கள்/ ஆக்ஸான் சிதைவு, கிலியல் ஆதரவணு, நோய் எதிர்ப்பு மற்றும் முதுமை அடையும் செயற்பாடுகளினால் நரம்பணு இழப்பு ஆகியவை பற்றிப் பல கருத்தாக்கங்களையும் ஆய்வுகளையும் உருவாக்கியுள்ளது.[7][8][9][10][11][12][13][14][15][16][17]

கிளௌகோமாவின் பெரும்பான்மையான வகைகளைக் கீழே காணலாம்:

காரணங்கள்

கிளௌகோமாவால் முற்றிய பார்வை இழப்பில் அதே காட்சி.]]பெரும்பாலான கிளௌகோமாக்களுக்கான மிகப் பெரும் ஆபத்துக் காரணி விழி அதியழுத்தமாகும் (விழியுனுள் அதிகரித்த அழுத்தம்). ஆனால், சில வகை மக்களில் முதன்மை திறந்த கோண கிளௌகோமா கொண்டுள்ள நோயாளிகளில் 50 சத விகிதத்தினரே உண்மையில் உயர்ந்த நிலையிலான விழியழுத்தம் கொண்டுள்ளனர்.[18]

ஆப்பிரிக்க மரபில் வந்தவர்களுக்கு மற்றவர்களை விட மூன்று மடங்கு அதிகமாக முதன்மை திறந்த கோண கிளௌகோமா பெறும் வாய்ப்பு உள்ளது. வயதானவர்கள், மெலிதான கருவிழிப் பருமன் கொண்டவர்கள் மற்றும் கிட்டப்பார்வை உடையவர்கள் ஆகியோரும் முதன்மை திறந்த கோண கிளௌகோமாவிற்கான அதிக அளவு ஆபத்தைக் கொண்டுள்ளார்கள். கிளௌகோமா நோய் உள்ள குடும்ப வரலாறு உள்ளவர்கள் அந்த நோயைப் பெறுவதற்கு ஆறு சத வாய்ப்பு கொண்டுள்ளார்கள்.

பல கிழக்கு ஆசிய சமூகங்களும் கோணம் மூடிய கிளௌகோமா பெறும் வாய்ப்பினைக் கொண்டுள்ளார்கள். இதற்குக் காரணம் தாழ்நிலையிலான அவர்களது ஆண்டிரியர் சேம்பரின் ஆழமாகும். இந்தச் சமூகத்தில் கிளௌகோமா கொண்டுள்ள பலர் கோணம் மூடிய கிளௌகோமாவின் ஏதாவது ஒரு வடிவத்தைப் பெற்றுள்ளார்கள்.[19] இனுயிட் மக்களும், காகசியன்களை விட இருபது முதல் நாற்பது மடங்கு அதிகமான அளவில் முதன்மை கோணம் மூடிய கிளௌகோமாவிற்கான ஆபத்தை கொண்டுள்ளார்கள். தீவிரமான கோணம்-மூடிய கிளௌகோமா உருவாவது என்பது ஆண்களை விட பெண்களுக்கு இது மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் அவர்களது தாழ்நிலையிலான ஆண்டிரியர் சேம்பராகும்.

இரண்டாம் நிலை கிளௌகோமா எனப்படும் கிளௌகோமாவை உண்டாக்கும் மற்ற காரணிகள் ஊக்க மருந்துகளை நெடுங்காலம் பயன்படுத்துதல் (ஊக்க மருந்தால்-உருவாகும் கிளௌகோமா), தீவிரமான நீரிழிவு விழித்திரை அழிவு மற்றும் மைய விழித்திரை நரம்பு இடையூறு (நியோவாஸ்குலர் கிளௌகோமா); ஆக்குலர் டிரௌமா (ஆங்கிள் ரெசெஷன் கிளௌகோமா) மற்றும் யுவெயிட்டிஸ் (யுவெயிடிக் கிளௌகோமா) போன்ற கண்ணுக்குள் ரத்தவோட்டத்தைக் கட்டுப்படுத்தும் நிலைகள் ஆகும்.

முதன்மை திறந்த கோண கிளௌகோமா (பிஓஏஜி) லோகி எனப்படும் மரபணுவிடங்கள் பலவற்றில் உள்ள மரபணுக்களில் நிகழும் திசு மரபுப் பிறழ்வுடன் தொடர்பு கொண்டுள்ளதாகக் காணப்பட்டுள்ளது.[20] சாதாரண வலித்திழுவை கிளௌகோமா, பிஓஜியில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது. இது மரபியல் திசுமரபுப் பிறழ்வுடன் தொடர்புள்ளதாக உள்ளது.[21]

கிளௌகோமாவின் நோயுருவாக்கத்தில் விழியின் ரத்தவோட்டம் ஈடுபடுகிறது என்பதற்கான ஆதாரம் அதிகரித்த அளவில் கிடைத்து வருகிறது. தற்போதுள்ள தரவுகள், ரத்தவோட்டம் நிலையாகக் குறைவதை விட அதில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கிளௌகோமேட்டஸ் என்னும் பார்வை நரம்பு இயக்கத் தடை நோய்க்கான அதிக அளவு ஆபத்தை உண்டாக்குவதாக சுட்டிக் காட்டுகின்றன. நிலையில்லாத ரத்த அழுத்தமும், அதன் தாழ்நிலைகளும் பார்வை நரம்புத் தலை சேதத்திற்கு தொடர்புடையதாகி, பார்வைத் தளம் மோசமடைவதுடன் ஊடாடுகின்றன.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் கிளௌகோமா உருவாவது ஆகிய இரண்டிற்கும் இடைத் தொடர்பு இருப்பதாக மேலும் பல ஆய்வுகளும் அறிவிக்கின்றன. சாதாரண வலித்திழுவை கிளௌகோமாவில் இரவு நேரங்களில் நிகழும் உயர் ரத்த அழுத்தம் பெரும் பங்கு வகிக்கலாம். மனிதர்களில் சத்துக் குறைவு கிளௌகோமாவை ஏற்படுத்துகிறது என்பதற்குத் தெளிவான ஆதாரம் ஏதும் இல்லை. இதன் மூலம் சத்துப் பொருட்களை வாய்வழி இணைப் பொருட்களாக அளிப்பதால் கிளௌகோமா சிகிச்சையில் பயன் ஒன்றும் இருக்காது என்பது தெரிய வருகிறது.[22]

கிளௌகோமாவுடன் பல்வேறு அரிதான பிறவியில் வரும்/ மரபியல் ரீதியாகப் பெறப்படும் மாறுபட்ட கண் அமைப்புக்களும் தொடர்பு கொண்டுள்ளன. சில வேளைகளில், ஹையலாய்ட் கால்வாய் மற்றும் டியூனிகா வாஸ்குலோசா லெண்டிஸ் ஆகியவை கர்ப்பத்தின் மூன்றாவது பருவத்தின்போது சிக்கலுக்குள்ளாவதும் மற்ற பிறழ்வுகளுடன் தொடர்புடையவையாகின்றன.

கோணம் மூடுவதால் தூண்டப்படும் விழி அதியழுத்தம் மற்றும் கிளௌகோமேட்டஸ் பார்வை நரம்பு இயக்கத் தடை ஆகியவையும் இத்தகைய பிறழ்வுகளுடன் நிகழலாம்.[23][24][25] மற்றும் எலிகளின் மாதிரிகளின்படி.[26]

கிளௌகோமாவுக்கான ஆபத்தைக் கொண்டிருப்பவர்கள் குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒரு முறையாவது விரி விழிப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.[27]

நோய் கண்டறிதல்

கிளௌகோமாவிற்கான முன்பரிசோதனை பொதுவாக ஒரு வழக்கமான கண் பரிசோதனையின் பகுதியாகவே கண் நோய் சிகிச்சை மருத்துவர் மற்றும் பார்வைத் திறன் இயல் நிபுணர் ஆகியோரால் நிகழ்த்தப்படுகிறது. கிளௌகோமாவிற்கான பரிசோதனை டோனோமெட்ரி வழியிலான உள்விழி அழுத்தம், கண்ணின் அளவு மற்றும் வடிவம் ஆகியவற்றில் உள்ள மாற்றங்கள், ஆண்டீரியர் சேம்பர் கோணத்தின் பரிசோதனை அல்லது கோனிஸ்கோபி மற்றும் பார்வை நரம்பு சேதமுற்றிருப்பது போலத் தெரிகிறதா என்பதற்கான பரிசோதனை அல்லது கோப்பையிலிருந்து-தகடு-விகிதம் மற்றும் விளிம்பின் தோற்றம் மற்றும் ரத்த நாடி மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கும். பார்வைத் தளப் பரிசோதனையை நிச்சயம் ஒரு மரபு விதியாகவே நிகழ்த்தியாக வேண்டும். விழித்திரை நரம்பு நார் அடுக்கு ஆப்டிகல் கொஹிரன்ஸ் டோமோகிராஃபி, ஸ்கானிங் லேசர் போலாரிமெட்ரி (ஜிடிஎக்ஸ்) மற்றும்/ அல்லது ஹெயிடெல்பெர்க் ரெடினா டோமோகிராஃபி என்றும் அறியப்படும் ஸ்கானிங் லேசர் ஆப்தல்மாஸ்கோபி போன்ற நிழற்படமெடுக்கும் உத்திகளைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்யப்படலாம்.[28][29]

கருவிழிப் பருமனுக்கு டோனோமெட்ரி முறைமைகள் அனைத்தும் மிகு உணர்வு கொண்டிருப்பதனால், கோல்ட்மேன் டோனோமெட்ரி போன்ற முறைமைகள் பாகிமெட்ரி போன்றவற்றினால் நிறைவு பெற்று மையக் கருவிழிப் பருமன் (சிசிடி) அளவீட்டில் பயன்படுத்தப்பட வேண்டும். சராசரியை விட அதிகப் பருமன் உள்ள கருவிழி 'உண்மையான' அழுத்தத்தை விட அதிக அழுத்த அளவு காணப்படுவதை விளைவிக்கலாம். இவ்வாறே சராசரியை விடக் குறைவான பருமன் உள்ள கருவிழி 'உண்மையான' அழுத்தத்தை விட குறைவான அழுத்த அளவு காணப்படுவதை விளைவிக்கலாம். சிசிடியை விடவும் மற்றவையே (அதாவது கருவிழி நீருளமை, இழுபடு பண்பு போன்றவை) அழுத்த அளவீட்டில் தவறு ஏறபடக் காரணமாகும் என்பதால், சிசிடி அளவீடுளின் அடிப்படையிலேயே அழுத்த அளவீடுகளைச் 'சரி செய்வது' என்பது அசாத்தியமானதாகும். இரட்டை மாயத்தோற்ற விரைநிகழ்வும் விரைநிகழ்வு இரட்டை தொழில்நுட்ப (எஃப்டிடி) சுற்றெல்லைக் கருவியைப் பயன்படுத்தி கிளௌகோ நோய் கண்டறிதலில் பயன்படுத்தப்படலாம்.[30] மேலும், பாலினம், இனம், மருந்து பயன்பாடுகளுக்கான வரலாறு, ஒளிமுறிவு, மரபுவழி மற்றும் குடும்ப வரலாறு ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டு கிளௌகோமாவிற்கான பரிசோதனையை மதிப்பிட வேண்டும்.[28]

மேலாண்மை

கிளௌகோமா மேலாண்மையில் நவீன கால இலக்குகள் கிளௌகோமேட்டஸ் சேதம், நரம்புச் சேதம் ஆகியவற்றைத் தவிர்த்து, பார்வைத் தளம் மற்றும் குறைந்த பட்ச பக்க விளைவுகளுடன் நோயாளிகளுக்கான வாழ்க்கைத் தரத்தைப் பேணிக் காத்தல் ஆகியவையாக உள்ளன.[31][32] இதற்கு உகந்த நோய் கண்டறியும் முறைமைகளும், பின் தொடர்வுப் பரிசோதனைகளும் மற்றும் நோயாளியின் தனிப்பட்ட நிலைமைக்குப் பொருந்துவதான சிகிச்சைகளின் சிறப்பான தேர்வும் அவசியமாகும். உள்விழி அழுத்தம், கிளௌகோமாவிற்கான பல பெரும் ஆபத்துக் காரணிகளில் ஒன்றுதான் என்றாலும், பல்வேறு மருந்துகள் மற்றும்/ அல்லது அறுவை சிகிச்சை உத்திகள் ஆகியவற்றின் மூலம் அதைக் குறைப்பது தற்போது கிளௌகோமா சிகிச்சையில் பிரதானமாகக் கடைப்பிடிக்கப்படுவதாக உள்ளது. கிளௌகோமேட்டஸ் பார்வை நரம்பு இயக்கத் தடையின் நாளம் சார்ந்த ரத்தவோட்டம் மற்றும் நரம்புச்சிதைவு பற்றிய கருத்தாக்கங்கள், ஊட்டச் சத்து கலவைகள் அளிப்பதை உள்ளிட்ட பல திறன்மிக்க நரம்புக் காப்பு சிகிச்சை முறைமைகள் பற்றிய ஆய்வுகளையும் தூண்டியுள்ளன. இவற்றில் சில பயன்பாட்டுக்கு பாதுகாப்பானவை என மருந்தக நிபுணர்கள் மதிப்பிடப்பிடுகின்றனர். இவற்றில் சில, பரிசோதனை நிலையில் உள்ளன.

மருத்துவம்

உள்விழி அழுத்தம், பொதுவாக, கண் சொட்டு மருந்து போன்ற மருத்துவத்தால் குறைக்கப்படக் கூடியது. கிளௌகோமாவிற்கான சிகிச்சையில் பல பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் பல வகையான மருத்துவங்களும் உள்ளன.

இந்த மருந்துகள் ஒவ்வொன்றிற்கும் பகுதி சார்ந்த மற்றும் மண்டலியப் பக்க விளைவுகள் இருக்கலாம். மருத்துவ நெறிமுறையைப் பின்பற்றுதல் மிகுந்த குழப்பத்தையும், செலவீனத்தையும் உண்டாக்குவதாக இருக்கலாம். பக்க விளைவுகள் தோன்றும் பட்சத்தில் நோயாளி அவற்றை சகித்துக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் அல்லது மருத்துவரிடம் கூறி மருத்துவத் திட்ட முறையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தொடக்கத்தில், கிளௌகோமாவிற்கான சொட்டு மருந்தை இரண்டு கண்களில் ஒன்றிலோ அல்லது இரண்டு கண்களிலுமோ துவங்கலாம்.[33]

கிளௌகோமா நோயாளிகளின் பார்வை இழப்பிற்கு பெரும் காரணமாக விளங்குவது அவர்கள் மருத்துவம் மற்றும் பின் தொடர்வு வருகைகளைச் சரிவரப் பின்பற்றாமல் இருப்பதுதான். 2003ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒருஆய்வில் ஹெச்எம்ஓவில் உள்ள நோயாளிகளில் பாதிப் பேர் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை முதன் முறையே எடுத்துக் கொள்ளவில்லை என்றும் நான்கு நபர்களில் ஒருவர் தங்களது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை இரண்டாம் முறை வாங்கத் தவறிவிட்டனர் என்றும் கண்டறிந்தது.[34] வாழ்நாள் முழுதும் இருக்கக் கூடிய, ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் எதையும் கொண்டிருக்காத இந்த நோய்க்கான சிகிச்சைத் திட்டங்களின் வெற்றி தொடர்வதற்கு, இதைப் பற்றிய அறிவை நோயாளிக்குப் புகட்டுவதும் அவருடன் தொடர்ச்சியான வகையில் தொடர்பில் இருப்பதும் அவசியமாகும்.

பகுதி சார்ந்த மற்றும் மண்டலிய மருந்துகளின் சாத்தியமான நரம்பு பாதுகாப்பு தொடர்பான விளைவுகள் பற்றியும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.[22][35][36][37]

பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருத்துவங்கள்

  • லடன்ப்ரோஸ்ட் (எக்ஸாலடன்) போன்ற ப்ரோஸ்டாக்லாண்டின் ஒத்திசை மருந்துகள், பிமாடோப்ரோஸ்ட், (லுமிகன்) மற்றும் டிராவோப்ரோஸ்ட் (ட்ராவடன்) ஆகியவை அக்வஸ் ஹ்யூமரின் யுவோஸ்கெலார் வெளியீட்டை அதிகரிக்கின்றன. பிமாட்ரோபோஸ்டும் சிறு தாங்கு திசு வெளியீட்டை அதிகரிக்கிறது.
  • பகுதி சார்ந்த பேட்டா-அட்ரெனர்ஜிக் ஏற்பி முதன்மை இயக்கிகளான டிமொலோல், லெவுபுனொலோல் (பெடாகன்) மற்றும் பெடாக்ஸிலோல் ஆகியவை சிலியரி திசு வின் அக்வஸ் ஹ்யூமர் உற்பத்தியைக் குறைக்கின்றன.
  • அல்ஃபா-2 அட்ரெனர்ஜிக் முதன்மை இயக்கிகளான ப்ரிமொனிடைன் (அல்ஃபாகன்) போன்றவை இரண்டு விதங்களில் வேலை செய்கின்றன: அக்வாஸ் உற்பத்தியைக் குறைக்கின்றன மற்றும் சிறுதாங்கு திசு வெளியீட்டை அதிகரிக்கின்றன.
  • குறைவான அளவில் தேர்ந்தெடுக்கப்படும் சிம்பாதோமிமெடிக் மருந்துகளான எபினெரிஃப்ரைன் மற்றும் டிவிப்ஃப்ரின் (ப்ரொபைன்) ஆகியவை சிறு தாங்கு திசு வலைப் பின்னலின் வழியாகவும் ஒரு பேட்டா-2 முதன்மை இயக்கி நடவடிக்கையால் யுவெஸ்கெலர வெளியீட்டுப் பாதைவழியாகவும் அக்வஸ் ஹ்யூமர் வெளியீட்டை அதிகரிக்கின்றன.
  • பாராசிம்போதெமிமெடிக் போன்ற மயோடிக் முகமைகளான பிலொகார்பைன் சிலியரி தசைகளைச் சுருக்கி, சிறு தாங்கு திசு வலைப் பின்னலை இறுக்குவது மற்றும் அதிக அளவில் அக்வஸ் ஹ்யூமர் வெளியாவதை அனுமதிப்பது ஆகியவற்றின் மூலம் வேலை செய்கின்றன.

ஈகோதியோபேட் நாள்பட்ட கிளௌகோமாவில் பயன்படுத்தப்படுகிறது.

  • கார்போனிக் அன்ஹைட்ரஸ் தணிப்பிகளான டொரோஜோலமைட் (ட்ரஸாப்ட்), ப்ரின்ஜொலமைட் (அஜோப்ட்), ஏஸ்டாஜோலமைட் (டியாமாக்ஸ்) ஆகியவை சிலியரி திசுவில் கார்போனிக் அன்ஹைட்ரஸைத் தணிப்பதனால், அக்வாஸ் ஹ்யூமர் சுரப்பைக் குறைக்கின்றன.
  • ஃபிசோஸ்டிக்மைன் மருந்தும் கிளௌகோமா மற்றும் டிலேட் கேஸ்ட்ரிக் எம்ப்டியிங் ஆகியவற்றின் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது

அறுவை சிகிச்சை

கிளௌகோமாவுக்கான பாராம்பரிய அறுவை சிகிச்சை முறைமை வலைப்பின்னலில் ஒரு புதிய திறவாகிறது. இந்தத் திறவானது திரவம் விழியை விட்டு நீங்கவும் உள் விழி அழுத்தம் குறையவும் உதவுகிறது.

கிளௌகோமா சிகிச்சையில் ஒளிக்கதிர் மற்றும் பாராம்பரிய அறுவை சிகிச்சை ஆகிய இரண்டுமே நிகழ்த்தப் பெறுகின்றன.

பிறவிக் கூறான கிளௌகோமா கொண்டுள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சையே முதன்மையான சிகிச்சை முறையாகும்.[38] பொதுவாக இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தும் தாற்காலிகமான நிவாரணம்தான்; ஏனெனில், கிளௌகோமாவிற்கான பிணி நீக்க முறைமை என்று இதுவரை ஏதுமில்லை.

கனலோபிளாஸ்டி

கனலோபிளாஸ்டியானது நுண்செருகு வடிகுழாய் தொழில் நுட்பம் கொண்டு செயயப்படும் ஒரு துளையிடப்படாத நடைமுறையாகும். கனலோபிளாஸ்டி நடைமுறையில் ஸ்கெல்ம் கால்வாயை அடைவதற்காகக் கண் சற்றே கீறப்படுகிறது. இது விஸ்கோகனாலோஸ்டமி என்னும் நடைமுறையை ஒத்ததேயாகும். ஒரு நுண்செருகு வடிகுழாய் கருவிழிப் படலத்தைச் சுற்றியுள்ள கால்வாயைச் சுற்றிச் செல்கிற முதன்மையான வடித்தடம் மற்றும் அதன் சிறு சேகரிப்புத் தடங்கள் ஆகியவற்றில் விஸ்கோஎலாஸ்டிக் என்னும் கிருமிகள் அகற்றப்பட்ட ஒரு களிம்பு போன்ற பொருளைச் செலுத்தி அவற்றைப் பெரிதாக்குகிறது. பிறகு நுண்செருகு வடிகுழாய் நீக்கப்பட்டு கால்வாயின் உட்புறம் தையலிடப்பட்டு இறுக்கப்படுகிறது. கால்வாயைத் திறப்பதன் மூலம், கண்ணுக்குள் இருக்கும் அழுத்தம் வெளியேறுகிறது. இதற்கான காரணம் தெளிவாகவில்லை. ஏனெனில் கிளௌகோமா கொண்டுள்ள அல்லது ஆரோக்கியமான கண்களின் திரவ எதிர்ப்பில் ஸ்கெலம் கால்வாய்க்கு எந்த விதமான முக்கியத்துவமும் இல்லை. இதன் நீண்ட-கால முடிவுகள் கிடைக்கப் பெறவில்லை.[39][40]

ஒளிக்கதிர் அறுவை சிகிச்சை

திறந்த கோண கிளௌகோமா சிகிச்சையில் ஒளிக்கதிர் டிராபெகுலோபிளாஸ்டி பயன்படுத்தப்படலாம். இது தாற்காலிகமான ஒரு தீர்வுதான், பிணி நீக்கமல்ல. ஒரு 50 μm ஆர்கான் ஒளிக்கதிரால் சிறு தாங்கு திசு வலைப் பின்னல் குறிவைக்கப்பட்டு அந்த வலைப்பின்னல் திறக்குமாறு தூண்டப்பட்டு அக்வஸ் திரவம் வெளிப்படுவது அனுமதிக்கப்படுகிறது. வழமையாக, கோணத்தில் பாதிதான் சிகிச்சையின் ஒரு நேரத்தில் உள்ளாகிறது. மரபுவழி டிராபெகுலோபிளாஸ்டி, ஒரு வெப்ப வளிக்கூறு ஒளிக்கதிரைப் பயன்படுத்துகிறது. இந்த நடைமுறையானது வளிக்கூறு ஒளிக்கதிர் டிராபெகுலோபிளாஸ்டி அல்லது ஏஎல்டி என்று அழைக்கப்படுகிறது. புதிய முறைமையிலான ஒளிக்கதிர் டிராபெகுலோபிளாஸ்டி "குளிர்ந்த" (வெப்பம்-அல்லாத) ஒளிக்கதிரைப் பயனப்டுத்தி சிறு தாங்கு திசு வலைப் பின்னல் வடிமானத்தைத் தூண்டுகிறது. இந்தப் புது நடைமுறை க்யூ-ஸ்விட்ச் இடப்பட்டNd:YAG laser ஒரு 532 இருபங்கு என்எம் நுண்ணலையைப் பயன்படுத்துகிறது. இது சிறு தாங்கு திசு வலைப் பின்னல் அணுக்களில் உள்ள மெலனின் திட்டுகளை குறிப்பாக இலக்காக்குகிறது. இதற்குத் தெரிவு சார்ந்த ஒளிக்கதிர் டிராபெகுலோபிளாஸ்டி அல்லது எஸ்எல்டி என்று பெயராகும். ஏஎல்டியைப் போல எஸ்எல்டியும் விழி அழுத்தத்தைக் குறைப்பதில் திறன் கொண்டிருப்பதாக ஆய்வுகள் அறிவிக்கின்றன. மேலும், எஸ்எல்டி மூன்று நான்கு முறைகள் கூடத் திரும்பத் திரும்பச் செய்யப்படலாம். ஆனால், ஏஎல்டியை வழக்கமாக ஒரு முறைதான் திரும்பச் செய்யலாம்.

கோணம் மூடிய கிளௌகோமா அல்லது பிக்மெண்ட் டிஸ்பர்ஷன் சிண்ட்ரோம் என்னும் நிறத்திட்டு சிதறல் நோய்க்குறித் தொகுதி ஆகியவற்றின் பாதிப்பிற்கான சாத்தியம் கொண்டுள்ள நோயாளிகளில் Nd:YAG laserபெரிஃபெரல் இரிடோடொமி (எல்பிஐ) பயன்படுத்தப்படலாம். ஒளிக்கதிர் இரிடோடொமியில் ஒளிச் சக்தி கருவிழிப் படலத்தில் ஒரு சிறு முழு-திட்ப நுழைவை உண்டாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் திறப்பானது கருவிழிப் படலத்தின் முன்புறம் மற்றும் பின்புறம் ஆகியற்றில் உள்ள அழுத்தத்தைச் சமன்படுத்துகிறது. இதனால் கருவிழிப் படலத்தில் உள்ள அசாதாரண வீக்கம் போன்றவை சரி செய்யப்படுகின்றன.

குறுங்கோணம் கொண்டுள்ள நபர்களில், சிறு தாங்கு திசு வலைப் பின்னலைத் திறக்க இது உதவும். சில நேரங்களில், கோணம் மூடிய கிளௌகோமா வகை நோயில் இது இடையிடையிலோ அல்லது குறுகிய காலத்திற்கோ விழி அழுத்தத்தைக் குறைக்கலாம்.

தீவிரமான கோணம் மூடிய கிளௌகோமாவிற்கான ஆபத்தை ஒளிக்கதிர் இரிடோடொமி குறைக்கிறது. பல நேரங்களில், இது நாள்பட்ட கோணம் மூடிய கிளௌகோமா அல்லது சிறு தாங்கு திசு வலைப் பின்னலின் மீதான கருவிழிப்படலத்தின் பரப்பிணைவு உருவாகும் ஆபத்தையும் குறைப்பதாக உள்ளது.

டயோட் ஒளிக்கதிர் சைக்ளோப்லேஷன் சிலியன் எபிதிலியம் சுரப்பியை அழித்து, அக்வஸ் சுரப்பைக் குறைத்து ஐஓபியைக் குறைக்கிறது.[28]

டிராபெகுலெக்டோமி

டிராபெகுலெக்டோமி என்பது மிகவும் பொதுவானதும் தலைமுறைகளாகச் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சையாகும். இதில் விழியின் ஸ்கெலிரல் சுவரில் ஒரளவு பருமன் கொண்ட மூடு விளிம்பு உருவாக்கப்பட்டு, அதன் அடியில் ஒரு சாளரத் திறப்பு அமைக்கப்பட்டு சிறு தாங்கு திசு வலைப் பின்னலின் ஒரு பகுதி அகற்றப்படுகிறது. பின்னர் இந்த ஸ்கெலிரல் மூடு விளம்பு அதன் இடத்தில் தளர்வாகத் தையல் இடப்படுகிறது. இந்த திறவின் மூலமாக கண்ணிலிருந்து திரவம் வெளியேறுவதை இது அனுமதிக்கிறது. இதன் விளைவாக உள்விழி அழுத்தம் குறைந்து கண்ணின் மேற்புறத்தில் சிறு கொப்புளம் அல்லது திரவக் குமிழி உருவாவது தடுக்கப்படுகிறது. இந்த மூடு விளிம்பின் மீதோ அல்லது அதைச் சுற்றிலுமோ வடு உண்டாகலாம். இதனால், இதன் செயல் திறன் ஒரளவோ அல்லது முழுவதுமாகவோ குறைந்து விடலாம். ஒரே வகையிலான அல்லது பல வகைகளிலான பல அறுவை சிகிச்சை நடைமுறைகள் ஒரே நபருக்குச் செய்யப்படலாம்.

கிளௌகோமா வடிமான உள்வைப்புகள்

பல வகையான கிளௌகோமா வடிமான உள்வைப்புகள் உள்ளன. அவை, இவற்றின் மூலமான மோல்டனோ உள்வைப்பு (1966), பேயெர்வெல்ட் ட்யூப் ஷண்ட் அல்லது அஹ்மத் கிளௌகோமா மடக்குத் தடுப்பு உள்வைப்பு போன்ற மடக்குத் தடுப்பு உள்வைப்புகள் அல்லது எக்ஸ்பிரஸ் மினி ஷண்ட் மற்றும் பின் தலைமுறையைச் சார்ந்த பிரஷர் ரிட்ஜ் மோல்டனோ உள்வைப்புகள் ஆகியவையாகும். அதிகபட்ச மருந்துச் சிகிச்சைக்கும் பதிலிறுக்காத வரலாறு கொண்ட, முன்னர் பாதுகாக்கப்பட்ட வடிகட்டு அறுவைசிகிச்சை முறை (டிராபெகுலெக்டோமி) தோல்வியடைந்த கிளௌகோமா நோயாளிகளுக்காக இது சுட்டிக் காட்டப்படுகிறது. இதில் விழியின் பின்புற அறையில் ஓடுகுழாய் நுழைக்கப்பட்டு, அக்வஸ் திரவம் விழியிலிருந்து பிளெப் என்னும் ஒரு அறையினுள் ஓடுவதற்கு ஏதுவாக விழி வெண்படலத்திற்கு அடிப்புறமாக ஒரு தகடு உள்வைக்கப்படுகிறது.

  • சில சமயங்களில் முதல்-தலைமுறை மோல்டெனோ மற்றும் மடக்குத் தடுப்பு-அற்ற உள்வைப்புகள் ஏற்பட்டு விட்ட கொப்புளம் நார் இழைகள் நீர்-புகாமல்[41] முடிச்சிடப்படுவதை அவசியமாக்கலாம். இது அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உள்விழி அழுத்தத்தில் (ஐஓபி) அறுவை சிகிச்சைக்குப் பின்னரான ஹைபோடனி-திடீர் என்று சொட்டுவதைக் குறைப்பதற்காகச் செய்யப்படுகிறது.
  • அஹ்மத் கிளௌகோமா மடக்குத் தடுப்பு போன்ற மடக்குத் தடுப்பு உள்வைப்புகள் ஒரு இயந்திர மூடுவிளிம்பைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சைக்குப் பின்னரான ஹைபோடனியைக் கட்டுப்படுத்துகின்றன.

விழி வெண்படலச் சிதறல் பகுதிக்கு மீதான வடுவினால் அக்வஸ் ஹ்யுமர் வடிபட்டுப் போக முடியாத அளவு ஷண்ட் பருமனாகி விடலாம். இதற்கான தடுப்பு முறைகளாக நாரிழையெதிர் மருந்துகளான 5-ஃப்ளூரோசில் (5-ஃபு) அல்லது மிடோமிசின் (நடைமுறையின்போது) அல்லது கூடுதல் அறுவை சிகிச்சை ஆகியவை தேவைப்படலாம். மேலும், கிளௌகோமேட்டஸ் வலிமிகுந்த பார்வையற்ற கண் மற்றும் கிளௌகோமாவின் சில வகைகளில் சிலியரி திசு அகற்றலுக்காக சைக்ளோக்ரி சிகிச்சை கருதப்படலாம்.[28]

கால்நடை மருத்துவம்சார் உள்வைப்பு

டிஆர் பயோசர்ஜிகல் டிஆர்-கிளாரிஃப்ஐ என்னும் ஒரு புதிய உள்வைப்பைக் குறிப்பாக கால்நடைசார் மருத்துவத்திற்காக சந்தைப்படுத்தியுள்ளது. இந்த உள்வைப்பு நட்சத்திர உயிரியல் பொருள் என்னும் புதிய உயிரியல் பொருளைக் கொண்டுள்ளது. இது மிகச் சீரான துளைகள் கொண்ட சிலிகான் கொண்டுள்ளது. இதனால் நாரிழைத் தன்மை அகற்றப்பட்டு திசுவின் ஒருங்கிணைப்பு மேம்படுகிறது. இந்த உள்வைப்பில் மடக்குத் தடுப்புகள் ஏதும் கிடையாது. இது தையல்கள் ஏதும் இல்லாமல் கண்ணுக்குள் வைக்கப்படுகிறது. முதிர் கிளௌகோமாவுடன் ஒளி முறிவு கொண்டுள்ள நாய்களின் மீதான ஒரு வெள்ளோட்ட ஆய்வில் இது (ஒரு வருடத்திற்கும் அதிகமான) நீண்ட நாள் வெற்றியாக இன்றுவரை இருந்து வருகிறது.[42]

ஒளிக்கதிர் துணையுடனான துளையிடப்படாத ஆழ் ஸ்கெலரெக்டோமி

கிளௌகோமாவிற்கான சிகிச்சையில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் அறுவை சிகிச்சை அணுகல் டிராபெகுலெக்டோமியாகும். இதில் உள் விழி அழுத்தத்தை அகற்றுவதற்காக சுரப்பித் தடுப்பி துளையிடப்படுகிறது. துளையிடப்படாத ஆழ் ஸ்கெலரெக்டோமி அறுவை சிகிச்சை (என்பிடிஎஸ்) என்பது இதை ஒத்த ஆனால் சற்று மாறுபட்ட நடைமுறையாகும். இதில் சுரப்பித் தடுப்பியின் சுவரைத் துளையிடுவதற்குப் பதிலாக, சுரப்பித் தடுப்பியில் ஒரு ஒட்டு மிதவையாகச் செய்யப்பட்டு, அதன் முலமாக உள் விழியிலிருந்து திரவம் ஊடுருவிச் செல்வது சாத்தியமாகிறது. இதன் மூலம் கண்ணில் துளையிடாமலேயே ஐஓபி அகற்றப்படுகிறது. டிராபெகுலெக்டோமியை விட குறிப்பிடத் தக்க அளவில் குறைவான பக்க விளைவுகளைக் கொண்டதாக என்பிடிஎஸ் உள்ளது.[சான்று தேவை] இருப்பினும், என்பிடிஎஸ் கையால்தான் செய்யப்படுகிறது; மேலும் இதில் நீண்ட காலத் திறன் பெறுவதற்கு மிகுந்த அளவில் ஆற்றல் தேவைப்படுகிறது.[சான்று தேவை]

ஒளிக்கதிர் துணையுடனான என்பிடிஎஸ் கரியமில வாயுவுடனான (சிஓ2) ஒளிக்கதிர் அமைப்பில் செய்யப்படும் என்பிடிஎஸ் ஆகும். ஒளிக்கதிர் அடிப்படையிலான முறைமை, சுரப்பித் தடுப்பின் பருமன் மற்றும் உள் விழி திரவம் வடிமானம் அடைவது ஆகியவை தேவையான அளவை அடந்ததும் தனக்குத் தானே முடிவுறும் தன்மையிலானது. கரியமில வாயுவுடனான (சிஓ2) ஒளிக்கதிர் உள்விழியிலிருந்து ஊடுருவும் திரவத்தைத் தொடர்பு கொண்ட உடனேயே நீக்குவதை நிறுத்தி விடுவதால், இந்த சுயக் கட்டுப்பாட்டு விளைவு சாத்தியமாகிறது. ஒளிக்கதிர்,எஞ்சியுள்ள முறிவுறாத படிமத்தின் உகந்த அளவை அடைந்தவுடன் இது நிகழ்கிறது.

ஆராய்ச்சி

  • முன்னேறிய கிளௌகோமா இடையூடு ஆய்வு பரணிடப்பட்டது 2014-10-04 at the வந்தவழி இயந்திரம் (ஏஜிஐஎஸ்)- அமெரிக்க தேசிய கண் நிறுவனம் (என்ஈஐ), "கிளௌகோமாவிற்கான ஆரம்ப கட்ட மருத்துவ சிகிச்சை தோல்வியடைந்த நிலையில், விழியில் டிராபெகுலெக்டோமி மற்றும் ஆர்கான் லேசர் டிராபெகுலோபிளாஸ்டி ஆகியவற்றை ஈடுபடுத்தும் தொடர் இடையூடுகளின் நீண்ட-காலத்திற்கான வெளிப்பாடுகளை மதிப்பீடு செய்ய" வடிவமைக்கப்பட்ட ஒரு பெரும் ஆய்விற்கு

நிதியுதவி அளித்தது. இது இன அடிப்படையில் பல்வேறு வகையான சிகிச்சை முறைமைகளைப் பரிந்துரைக்கிறது.

  • கிளௌகோமாவின் ஆரம்ப வெளிப்பாடு பரிசோதனை (ஈஜிஎம்டி) பரணிடப்பட்டது 2014-07-29 at the வந்தவழி இயந்திரம் - கிளௌகோமாவின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை செய்வதனால் நோய் முன்னேற்றமடைவதைத் தாமதப்படுத்தலாம் என்று மற்றொரு என்ஈஐ ஆய்வு கண்டறிந்தது.
  • விழி அதியழுத்த சிகிச்சை ஆய்வு (ஓஹெச்டிஎஸ்) பரணிடப்பட்டது 2009-09-24 at the வந்தவழி இயந்திரம் - என்ஈஐ ஆய்வின் கண்டுபிடிப்புகள்:"...பகுதி சார்ந்த பார்வை குறைவழுத்த மருத்துவம், அதிகரித்த உள்விழி அழுத்தம் (ஐஓபி) கொண்டிருந்த தனிப்பட்ட நபர்களில், முதன்மையான திறந்த கோண கிளௌகோமா (பிஓஏஜி) உருவாவதை தாமதப்படுத்தும் அல்லது தடுக்கும் திறன் கொண்டிருந்தது. ஐஓபியின் எல்லைக்கோட்டில் உள்ள அல்லது அதிகரித்த அளவைக் கொண்டுள்ள அனைத்து நோயாளிகளும் இந்த மருத்துவத்தைப் பெற வேண்டும் என்று இது உணர்த்தாவிடினும், விழி அதியழுத்தம் கொண்டுள்ள தனி நபர்களில் பிஓஏஜி உருவாவதற்கான நடுத்தர அல்லது அதிக அளவு ஆபத்தை உடையவர்களுக்கு மருத்துவம் துவக்குவதை மருந்தக நிபுணர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்."
  • ப்ளூமௌண்டன்ஸ் விழி ஆய்வு பரணிடப்பட்டது 2014-03-11 at the வந்தவழி இயந்திரம் "ப்ளூமௌண்டன்ஸ் விழி ஆய்வுதான், வயது முதிர்ந்த ஒரு ஆஸ்திரேலிய மாதிரி சமூகத்தில் பார்வைப் பழுது மற்றும் பொதுவான கண் நோய்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்த அதிக அளவு மக்கள் தொகை அடிப்படையிலான முதல் ஆய்வு." இதில் கிளௌகோமா மற்றும் இதர கண் நோய்களுக்கான ஆபத்துக் காரணிகள் அறுதியிடப்பட்டன.

ஆராய்ச்சியிலுள்ள பல் பொருள் கூட்டுக்கள்

இயற்கையில் அமைந்த பல்பொருட்கூட்டுக்கள்

கிளௌகோமா தடுப்பு அல்லது சிகிச்சை முறைமைகளில் ஆராய்ச்சி ஆர்வம் ஏற்படுத்தும் இயற்கைப் பல் பொருட்கூட்டுக்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்: மீன் எண்ணெய் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பில்பெரிகள், விடமின் ஈ, கானாபினோயிடுகள், கார்னிடைன், கோஎன்சைம் க்யூ10, குர்குர்மின்,சலிவியா மில்டியோரிஜா, கருப்பு சாக்லேட், எரித்ரோபொயிடின், ஃபோலிக் அமிலம், ஜிங்கோ பிலோபா, ஜின்செங், எல்-க்ளுடாதியோன், திராட்சை விதை சாறு, பச்சைத் தேனீர், மாக்னீஷியம், மெலடோனின், மெதில்கோபால்மின், என்-ஏஸ்டில்-எல் சிஸ்டைன், பிக்னொஜெனோல்கள், ரிஸ்வரேட்டரோல், க்யூயர்சிடின் மற்றும் உப்பு.[35][36][37] மக்னிஷியம், ஜிங்கோ, உப்பு மற்றும் ஃப்ளுரோகார்டிசோன் ஆகியவற்றை ஏற்கனவே சில மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.

கஞ்சா

1970களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மரிஜுவானா புகைப்படும்பொழுது, அது உள்விழி அழுத்தத்தைக் குறைப்பதாகக் காட்டின.[43] மரிஜுவானா அல்லது மரிஜுவானாவிலிருந்து பெறப்படும் மருந்துகள் கிளௌகோமா சிகிச்சையில் திறன் கொண்டவையாக இருக்குமா என்று அறுதியிடுவதற்கான ஒரு முயற்சியாக, ஐக்கிய அமெரிக்க தேசிய கண் நிறுவனம் 1978 தொடங்கி 1984 வரை பல ஆய்வுகளுக்கு ஆதரவளித்தது. இவற்றில் சில ஆய்வுகள், மரிஜுவானாவின் வழி பெறப்படும் பொருட்களில் சில வாய்வழி அளிக்கப்படும்போதோ அல்லது நரம்பு வழியாக செலுத்தப்படும்போதோ அல்லது புகைக்கப்படும்போதோ உள்விழி அழுத்தத்தை குறைப்பதாக வெளிக்காட்டின. ஆனால், பகுதி சார்ந்து விழியின் மேல் அவை தடவப்படும்போது இவ்வாறான விளைவு நிகழவில்லை.

2003வது வருடம் அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆப்தல்மொலாஜி இந்த இருப்பின் மீதான ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் இவ்வாறு கூறப்பட்டது: "மரிஜுவானாவின் வழி பெறப்படும் பொருட்களில் சில வாய்வழி அளிக்கப்படும்போதோ அல்லது நரம்பு வழியாக செலுத்தப்படும்போதோ அல்லது புகைக்கப்படும்போதோ ஐஓபியைக் குறைப்பதாக ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன. ஆனால், பகுதி சார்ந்து விழியின் மேல் அவை தடவப்படும்போது இவ்வாறான விளைவு நிகழவில்லை. இவ்வாறு அழுத்தம்-குறைக்கும் விளைவானது 3-4 மணி நேரங்களுக்கு நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது."[43][44]

இருப்பினும், பரிந்துரை மருந்துகளை விட மரிஜுவானா அதிகத் திறன் கொண்டதல்ல என்று இந்த இருப்பு அறிக்கை தகுதி விளக்கமும் அளித்தது. அதாவது, "தற்போது பெரும் வகைகளில் கிடைக்கப்பெறும் மருந்துசார் செயலூக்கிகளுடன் ஒப்பிடும்போது, கிளௌகோமாவின் சிகிச்சையில் மரிஜுவானாவின் பயன்பாடு அதிகரித்த பயன்கள் மற்றும்/ அல்லது ஆபத்துக்களின் அளவு குறைவது ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருப்பதாக அறிவியல் பூர்வமாக ஆதாரங்கள் ஒன்றும் வெளிக்காட்டப் பெறவில்லை."

ஐக்கிய அமெரிக்க கூட்டரசின் பரிவுள்ள ஆராய்ச்சி புதிய மருந்து நிரல் ஆய்வில் முதல் நோயாளியான ராபர்ட் ராண்டால் கிளௌகோமாவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மரிஜுவானா விவசாயம் தொடர்பாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை, அது ஒரு மருத்துவத் தேவையாகக் கருதப்படுவதாக வெற்றிகரமாக எதிர்த்துப் போராடினார். 1976ல் யூ.எஸ். வர்சஸ் ராண்டால் .[45]

5-ஹெச்டி2ஏமுதன்மை இயக்கிகள்

புறவெல்லைத் தெரிவியான 5-ஹெச்டி 2ஏ இன்டாஜோலிலிருந்து பெறப்படும் ஏஎல்-34662 போன்ற முதன்மை இயக்கிப் பொருட்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அவை முக்கியத்துவம் வாய்ந்த அளவில் கிளௌகோமா சிகிச்சை பற்றிய நம்பிக்கையை வெளியிடுகின்றன.[46][47]

கிளௌகோமாவின் வகைகள்

கிளௌகோமா குறிப்பான மாதிரிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது:[48]

முதன்மை கிளௌகோமாவும் அதன் மாற்று வடிவங்களும் (ஹெச்40.1-ஹெச்40.2)

  • முதன்மை கிளௌகோமா
  • முதன்மை மூடிய-கோண கிளைகோமா என்றும் அறியப்படும் முதன்மை கோணம்-மூடிய கிளைகோமா, குறுகிய கோண கிளௌகோமா,கண்பாவை-தடை கிளௌகோமா,தீவிரமான குவியடர்த்தி கிளௌகோமா
  • தீவிரமான கோணம்-மூடிய கிளௌகோமா
  • நாள்பட்ட கோணம்-மூடிய கிளௌகோமா
  • இடைவிட்ட கோணம்-மூடிய கிளௌகோமா
  • நாள்பட்ட திறந்த-கோணம் மூடிய கிளௌகோமாவின் மேற்பொருத்தப்பட்டது ("கூட்டிணைப்புச் செயற்பாடு"- அசாதாரணமானது).
  • நாள்பட்ட திறந்த கோண கிளௌகோமா என்றும் அறியப்படும் முதன்மையான திறந்த-கோண கிளௌகோமா, நாள்பட்ட எளிய கிளௌகோமா, கிளௌகோமா சிம்ப்ளெக்ஸ்
  • அதிக-வலித்திழுவை கிளௌகோமா
  • குறைந்த-வலித்திழுவை கிளௌகோமா
  • முதன்மை கிளௌகோமாவின் மாற்று வடிவங்கள்
  • பிக்மெண்டரி கிளௌகோமா
  • எக்ஸ்ஃபோலியேஷன் கிளௌகோமா. இது சியூடோஎக்ஸ்ஃபோலியேடிவ் கிளௌகோமா அல்லது கிளௌகோமா காப்சுலாரே என்றும் வழங்கப்படுகிறது.

முதன்மை கோணம்-மூடிய கிளௌகோமா - இது கருவிழிப் படலம் மற்றும் சிறுதாங்கு திசை வலைப்பின்னல் ஆகியவற்றின் இடையிலான தொடர்பால் ஏற்படுகிறது. இதனால், விழியிலிருந்து அக்வஸ் ஹ்யூமர் வெளிவருவது தடைப்படுகிறது. கருவிழிப் படலம் மற்றும் சிறு தாங்கு திசு வலைப் பின்னல் (டிஎம்) இவற்றிற்கிடையேயான தொடர்பு மெல்ல மெல்ல வலைப் பின்னலின் செயல்பாட்டை, அது அக்வஸ் உற்பத்தி வேகத்துடன் ஒருசாரச் செல்ல முடியாத அளவை அடையும் வரை, சேதப்படுத்துகிறது. இதனால், அழுத்தம் அதிகரிக்கிறது. பாதிக்கும் மேலான நிகழ்வுகளில், கருவிழிப் படலம் மற்றும் டிஎம் ஆகியவற்றிற்கு இடையிலான நீண்ட காலத் தொடர்பினால் சைனகியா (பொருத்தமாகச் சொல்வதானால், "வடுக்கள்") உருவாகிறது. இதனால் அக்வஸ் வெளியேறுவது நிரந்தரமாகத் தடைப்படுகிறது. சில நிகழ்வுகளில், கண்ணில் அழுத்தம் மிக வேகமாக உருவாகி வலி மற்றும் சிவந்து போதல் ஆகியவற்றை உருவாக்கலாம் (அறிகுறி சார்ந்த அல்லது "தீவிரமான" கோணம் மூடுதல் என்றழைக்கப்படுகிறது). இந்த நிலையில்தான் பார்வையில் மசமசப்பு உருவாகிறது மற்றும் பிரகாசமான விளக்குகளைச் சுற்றி வட்டம் போன்ற உருவங்கள் தோன்றத் துவங்குகின்றன. இதனுடன் வரும் அறிகுறிகள் தலைவலி மற்றும் வாந்தியை உள்ளடக்கியிருக்கலாம். உடற்கூறு சார்ந்த குறிகள் மற்றும் அறிகுறிகளின்படியே நோய் கண்டறியப்படுகிறது: கண் பாவை பாதி-விரிவடைதல், ஒளிக்கு பதிலிறுக்காது இருத்தல், கருவிழி மேகமூட்டம் அடைதல், பார்வை குறைதல், சிவத்தல், வலி ஆகியவை. இருப்பினும், பெரும்பான்மையான நிகழ்வுகள் அறிகுறிகள் இல்லாமல் வருவன. பொதுவாக, இந்த நிகழ்வுகளை மிகவும் தீவிரமான பார்வை இழப்பிற்கு முன்னால், ஒரு தொழில்முறை கண் மருத்துவர் செய்யும் பரிசோதனையின் மூலமே அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

அறிகுறிகள் கட்டுப்படுத்தப்பட்டு விட்டால், முதன்மை (மற்றும் அநேக காலங்களில் நிச்சயமான) சிகிச்சை ஒளிக்கதிர் இரிடோடொமியாகும். இது எண்டி:யாக் அல்லது ஆர்கான் ஒளிக்கதிர்கள், அல்லது சில நிகழ்வுகளில் பாராம்பரியமான துளையிடும் அறுவை சிகிச்சை ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்படலாம். இந்த சிகிச்சையின் இலக்கு கருவிழிப் படலம் மற்றும் சிறு தாங்கு திசு வலைப் பின்னல் இவற்றிற்கு இடையிலுள்ள தொடர்பைப் பின் திருப்புவது மற்றும் தடுப்பதாகும். ஆரம்ப கட்டம் துவங்கி மத்திம நிலை வரை வளர்ந்துள்ள நிகழ்வுகளில் 75 சதவிகிதம் வரை இரிடோடொமி கோணத்தைத் திறப்பதில் வெற்றி அடைகிறது.

மற்ற 25 சத நிழவுகளில், ஒளிக்கதிர் இரிடோடொமி, மருத்துவம் (பிலோகார்பைன்) அல்லது துளையிடும் அறுவை சிகிச்சை ஆகியவை தேவைப்படலாம்.

முதன்மையான திறந்த-கோண கிளௌகோமா - பார்வை நரம்பு சேதம் காரணமாக முன்னேறும் பார்வைத் தள இழப்பு.[49] இதுவும் விழியில் அதிகரிக்கும் அழுத்தத்துடன் தொடர்புடையதுதான். முதன்மை திறந்த-கோண கிளௌகோமா கொண்டுள்ள அனைவருக்குமே சாதாரண அளவை விட உயர்ந்த அளவில் விழி அழுத்தம் இருப்பதில்லை. ஆனால், விழி அழுத்தத்தைக் குறைப்பதானது இத்தகைய நிகழ்வுகளிலும் கிளௌகோமா முன்னேறுவதை நிறுத்துவதாக காட்டப்பட்டுள்ளது. அதிகரித்த அழுத்தமானது, கண்ணில் அக்வஸ் ஹ்யுமர் வடிமானம் ஆக வேண்டிய இடமான சிறு தாங்குதிசு தடைப்படுவதனால் உருவாகிறது. இத்தகைய நுண் செல் பாதைகள் தடைப்படுவதனால், கண்ணில் அழுத்தம் அதிகரித்து எளிதில் அறிய இயலாத மிக மெதுவான பார்வை இழப்பை உருவாக்குகின்றன. முதலில் மேற்பரப்பிலான பார்வை பாதிப்புக்குள்ளாகிறது. ஆனால், சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், நாளாவட்டத்தில், முழுப் பார்வையுமே பறிபோய்விடும். பார்வை நரம்பு கோப்பையிடப்படுவதைக் கொண்டு இந்த நோய் கண்டறியப்படுகிறது. யுவியோஸ்கெலரைத் திறப்பதன் மூலம் ப்ரோஸ்டோக்ளாண்டின் முதன்மை இயக்கிகள் செயல்படுகின்றன. டிமொலோல் போன்ற பேட்டா தடைமானிகள் அக்வஸ் உருவாக்கத்தைக் குறைப்பதன் மூலம் செயல்படுகின்றன. கார்போனிக் ஆன் ஹைட்ரேஸ் தணிப்பிகள் கண்ணில் சிலியரி செயற்பாட்டின்போது பைகார்பொனேட் உருவாக்கத்தைக் குறைத்து அதன் மூலம் அக்வஸ் ஹ்யுமர் உருவாவதைக் குறைக்கின்றன. அனுபரிவுள்ள ஒத்திசைவுகள் சிறுதாங்கு திசு வெளியீட்டின் மீது செயலாற்றி கண்பாவையை நெருக்குவதான செல்பாதைகளைத் திறக்கும் மருந்துகளாகும். பிரிமொனிடைன், அப்ராக்ளோனிடைன் ஆகிய இரண்டு ஆல்ஃபா முதன்மை இயக்கிகளும் (ஏசியைத் தணிப்பதன் மூலம்) திரவ உற்பத்தியைக் குறைத்து வடிமானத்தை அதிகரிக்கின்றன.

பெருக்கம் அடையும் கிளௌகோமா (க்யூ15.0)

  • பெருக்கம் அடையும் கிளௌகோமா
  • முதன்மை பிறவிக் கூறு கிளௌகோமா
  • இளஞ்சிறார் கிளௌகோமா
  • மரபியல் ரீதியாக வரும் வம்சாவளி நோய்களுடன் தொடர்புடைய கிளௌகோமா

இரண்டாம் நிலை கிளௌகோமா (ஹெச்40.3-ஹெச்40.6)

  • இரண்டாம் நிலை கிளௌகோமா
  • வீக்கம் அடையும் கிளௌகோமா
  • யூவெயிடிசின் எல்லா வகைகளும்
  • ஃபுக்ஸ் ஹெடரோக்ரோமிக் இரிடொசைக்லிடிஸ்
  • ஃபாகோஜெனிக் கிளௌகோமா
  • முதிர் கண்புரையுடன் கூடிய கோண-மூடு கிளௌகோமா
  • விழிவில்லை உறை கிழிதலுக்கான இரண்டாம் நிலை ஃபாகோனாஃபிலேக்டிக் கிளௌகோமா
  • ஃபாகோடாக்சிக் வலைப்பின்னல் அடைபடுவதன் காரணமான ஃபாகோலிடிக் கிளௌகோமா
  • விழி வில்லையில் துணை இட நழுவல்
  • உள் விழி ரத்தக்கசிவுக்கு இரண்டாம் நிலை கிளௌகோமா
  • ஹைஃபெமா
  • எரித்ரொகிளேஸ்டிக் கிளௌகோமா என்றும் அறியப்படும் ஹெமோலிடிக் கிளௌகோமா.
  • ட்ரௌமேடிக் கிளௌகோமா
  • கோணப் பின்னடைவு கிளௌகோமா: பின்னறைக் கோணத்தின் மீதான அதிர்நிழவுப் பின்னடைவு.
  • அறுவை சிகிச்சைக்குப் பின்னரான கிளௌகோமா
  • அஃபாகிக் ப்யூபில்லரி அடைப்பு
  • சிலியரி அடைப்பு கிளௌகோமா
  • நியோவாஸ்குலர் கிளௌகோமா (மேலும் விபரங்களுக்கு கீழே பார்க்கவும்)
  • மருந்தினால் தூண்டப்படும் கிளௌகோமா
  • கார்டிகோஸ்டெராய்டுகளினால் தூண்டப்படும் கிளௌகோமா
  • ஆல்ஃபா-கெமொட்ரிஸ்பின் கிளௌகோமா. ஆல்ஃபா கிமோட்ரிஸ்பின் பயன்பாட்டினால் ஏற்படும் அறுவை சிகிச்சைக்குப் பிறகான விழி அதியழுத்தம்
  • இதர தோற்றுவாய்களினால் உருவாகும் கிளௌகோமா
  • விழிக்குள் உருவாகும் கட்டிகள் தொடர்பான கிளௌகோமா
  • விழித்திரை நகர்வதுடன் தொடர்புடைய கிளௌகோமா
  • விழியில் தீவிர ரசாயனத் தகனத்தின் இரண்டாம் நிலை
  • அடிப்படையான கருவிழிப் படல அட்ரோஃபியுடன் தொடர்பானது
  • நச்சுத் தன்மை கிளௌகோமா

நியோவாஸ்குலர் கிளௌகோமா என்பது கிளௌகோமாவின் அசாதாரணமான ஒரு வகை. இதற்கு சிகிச்சை அளிப்பது என்பது மிகவும் கடினம் அல்லது ஏறத்தாழ அசாத்தியமானது. இது பல நேரங்களில், விரைவாகப் பெருகும் நீரிழிவு விழித்திரை அழிவு (பிடிஆர்) அல்லது மைய விழித்திரை நரம்பு இறுக்கம் (சிஆர்விஓ) ஆகியவற்றால் உருவாகிறது. வேறு பல நிலைகளாலும் இது தூண்டப்படலாம். இதன் விளைவாக விழித்திரை அல்லது சிலியரித் திசு வின் இஸ்கிமியா உருவாகிறது.

விழிக்குச் செல்லும் ரத்தவோட்டம் குறைவாகப் பெற்றிருக்கும் நபர்கள் இந்த நிலைக்கான ஆபத்தை அதிக அளவில் கொண்டுள்ளார்கள். விழியின் கோணத்தில் புதிய அசாதாரணமான ரத்த நாளங்கள் உருவாகத் தொடங்கி அதன் வடிகாலை அடைக்கும்போது நியோவாஸ்குலர் கிளௌகோமா விளைகிறது. இந்த நிலையிலுள்ள நோயாளிகள் தங்கள் கண் பார்வையை சடுதியில் இழந்து விடுகிறார்கள். சில நேரங்களில், குறிப்பாக கண்புரை அறுவை சிகிச்சை நடைமுறைக்குப் பிறகு, இந்த நோய் வெகு விரைவாகத் தோன்றுகிறது. முதன் முதலாக கஹூக் மற்று அவரது உடன் பணிபுரிபவர்களும் அறிவித்தபடி, இந்த நோய்க்கான ஒரு சிகிச்சை முறைமை விஈஜிஎஃப்-எதிர் செயலூக்கிகள் என்னும் புதுமையான ஒரு மருந்துக் குழுமத்தின் பயன்பாட்டை ஈடுபடுத்துகிறது. ஊசியிடப்படக் கூடிய இந்த மருந்துகள் புதிய நாளங்கள் உருவாவதை பிரமிக்கத் தக்க அளவில் குறைக்கின்றன; மற்றும் நோயின் ஆரம்ப கட்டங்களிலேயே ஊசியிடப்பட்டு விட்டால், இது உள்விழி அழுத்தம் சாதாரண நிலையை அடைவதற்குக் கொண்டு செல்லப்படலாம்.

நச்சுத் தன்மை கிளௌகோமா எனபது அறியப்படாத நோய்த் தோற்றவாய் காரணமாக, விளக்கப்பட இயலாத பெரும் அளவில் உள்விழி அழுத்தம் அதிகரிப்பதனுடன் விளையும் திறந்த கோண கிளௌகோமாவாகும். உள்விழி அழுத்தம் சில சமயங்களில்80 mmHg (11 kPa)அடையலாம். இது சிலியரித் திசு வீக்கமாகவும், சில வேளைகளில் ஸ்கெலம் கால்வாய் வரை மிகப் பெரும் அளவில் நீண்டுவிடுகிற சிறு தாங்குதிசு நீர்க்கட்டு வடிவிலும் வெளிப்படும் தன்மை உடையதாக உள்ளது. இந்த நிலையானது ஒரு ஆழமான மற்றும் தெளிவான முன்புற அறை இருப்பினாலும், அக்வஸ் தவறாக திசைதிருப்பப்படாத தன்மையாலும் பரவுகின்ற கிளௌகோமாவிலிருந்து வேறுபடுகிறது. மேலும், கருவிழித் தோற்றமும் மசமசப்பாக இருப்பதில்லை. விழித்திரை நரம்புகள் பழுதடைவதால் காரணமாக பார்வையின் கூர்மை குறையலாம். இதனுடன் தொடர்புள்ள காரணிகள் வீக்கம், மருந்துகள், உணர்வதிர்ச்சி, கண்புரை அறுவை சிகிச்சையை உள்ளிட்ட உள்விழி அறுவை சிகிச்சை மற்றும் விட்ரெட்க்டொமி நடைமுறை ஆகியவையாகும். நச்சுத் தன்மை கிளௌகோமா கொண்ட நான்கு நோயாளிகளைப் பற்றி ஜெட் பார்டியாண்டோ (2005) அறிவிக்கிறது. இவர்களில் ஒருவர் சிறுதுகள் அணுச் சொட்டுக்களுடனான ஃபேகோமல்சிஃபிகேஷன் நடைமுறைக்கு உட்சென்றார்.

இந்த நோயின் சில நிகழ்வுகள் மருந்துகள், விட்ரெக்டொமி நடைமுறை அல்லது டிராபெகுலெக்டொமி ஆகியவற்றால் தீர்வு பெறலாம். மடக்குத் தடப்பு அமைக்கும் நடைமுறைகள் சற்றே நோவு தணிப்பை அளிக்கலாம், ஆனால் இது தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு தேவைப்படுகின்றன.[50]

முழுமையான கிளௌகோமா (ஹெச்44.5)

  • முழுமையான கிளௌகோமா

மேலும் பார்க்க

  • விழி நோய்கள் மற்றும் கோளாறுகளின் பட்டியல்
  • விழி அதியழுத்தம்
  • கிளௌகோமா மடக்குத் தடுப்புகள்
  • மான்சௌர் எஃப்.ஆர்மலி
  • லாஸ்ஜ்லோ இஜட். பிடோ
  • சார்லெஸ் டி.ஃபெல்ப்ஸ்
  • அமெரிக்க கிளௌகோமா கழகம்

குறிப்புகள்

புற இணைப்புகள்

தைம் ஐஎஸ்பிஎன் 0865779155 கூகிள் புத்தகங்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கண்_அழுத்த_நோய்&oldid=3792471" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை