கிமேஜி கோட்டைமனை

கிமேஜி கோட்டைமனை (Himeji Castle (姫路城 Himeji-jō?)} என்பது சப்பானின் கிமேஜி எனுமிடத்தில் சிறு மலையின் மேல் அமைந்துள்ள சப்பானியக் கோட்டையகத் தொகுதியாகும். மேம்பட்ட பாதுகாப்புமுறைகளைக் கொண்ட பண்ணைமுறைக் கால 83 கட்டடங்களைக் கூட்டாகக் கொண்ட இக்கோட்டைமனை, முன்னோடியான சப்பானியக் கோட்டைமனைக் கட்டடக்கலையின் எஞ்சியிருக்கின்ற நேர்த்தியானதொரு எடுத்துக்காட்டாகும்.[7] இக்கோட்டைமனையின் வெளிப்புறம் பளிச்சிடும் வெண்மைநிறத்தில் பறவை பறப்பதைப் போன்ற அமைப்பை வெளிப்படுத்துவதால், இது "வெள்ளைக் கொக்குக் கோட்டைமனை" (Hakuro-jō) அல்லது "வெள்ளை நாரைக் கோட்டைமனை" (Shirasagi-jō) எனவும் அழைக்கப்படுகிறது.[6][8]

கிமேஜி கோட்டைமனை
姫路城
கிமேஜி, ஜப்பான்
கிமேஜி கோட்டைமனை, 2015
ஐந்து வருட சீரமைப்புக்குப்பின் மே 2015 இல் கிமேஜி கோட்டைமனை
வகைஅசூச்சி மொமொயாமா கோட்டைமனை[1]
இடத் தகவல்
நிலைமைநிலைத்துள்ளது, அண்மையில் பாதுகாப்பதற்காக புனரமைக்கப்பட்டது[2]
இட வரலாறு
கட்டிய காலம்* 1333, 1300 (கிமேயாமா கோட்டை)[3]
  • 1581 (விரிவாக்கம்)[3]
  • 1601–1609 (விரிவாக்கம்)[3]
  • 1617–1618 (விரிவாக்கம்)[4]
பயன்பாட்டுக்
காலம்
1333–1868[3][6]
கட்டியவர்* அகமட்சு நோரிமுரா (1333–1346)[3]
  • டோயோடோமி கிடேயோசி (1581)[3]
  • இக்கேடா டேருமாசா (1601–1609)[3]
  • கோண்டா டடாமாசா (1617–1618)
கட்டிடப்
பொருள்
மரம், கல், சுண்ணாம்புக்கலவை, ஓடு[4]
உயரம்46.4 m (152 அடி)[5]
காவற்படைத் தகவல்
காவற்படை* ~500 (இக்கேடா குடும்பம், வீரர்கள்)[4]
  • ~4,000 (கோண்டா குடும்பம், வீரர்கள்)[4]
  • ~3,000 (சக்கபூரா குடும்பம், வீரர்கள்)[4]
  • ~2,200 (சகாய் குடும்பம், வீரர்கள்)[4]
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
கிமேஜி ஜோ (Himeji-jo)
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
இடம்கையோகோ
ஜப்பான்
வகைபண்பாடு
ஒப்பளவுi, iv
உசாத்துணை661
ஆள்கூற்று34°50′00″N 134°42′00″E / 34.83333°N 134.70000°E / 34.83333; 134.70000
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1993 (17th தொடர்)
கிமேஜி கோட்டைமனை is located in யப்பான்
கிமேஜி கோட்டைமனை
சப்பானில் அமைவிடம்

கிமேயாமா குன்றின் மீது 1333 காலப்பகுதியில் அகமட்சு நோரிமுரா ஒரு கோட்டையைக் கட்டினார். அக்கோட்டை பிரிக்கப்பட்டு, கிமேயாமா கோட்டைமனையாக 1346 இல் மீளக்கட்டப்பட்டது. பின்னர் இரு நூற்றாண்டுகளில் இது மாற்றப்பட்டு, கிமேஜி கோட்டைமனையாகப் புத்துருவாக்கப்பட்டது. 1581 இல் டோயோடோமி கிடேயோசியால் மீண்டும் புத்துருவாக்கப்பட்டு, மூன்று மாடிகள் இணைக்கப்பட்டன. செகிககாரா சண்டையில் உதவியதற்காக இக்கேடா டேருமாசாவிற்கு 1600 இல் டோடுகாவா இயேயாசுவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதன் பின் 1601 முதல் 1609 வரையான காலப்பகுதியில் இக்கேடாவினால் முற்றிலும் புதுப்பித்தலுக்குள்ளாகி, பெரிய கோட்டைமனைத்தொகுதியாக விரிவாக்கத்துக்குள்ளானது.[3] பின்பு 1617 முதல் 1618 வரையான காலப்பகுதியில் பல கட்டடங்கள், கோண்டா டடாமாசாவால் இணைக்கப்பட்டன.[4] இரண்டாம் உலகப் போரின் போது கிமேஜியில் நிகழ்ந்த பாரிய குண்டுவீச்சிலும் 1995 ஆம் ஆண்டு கோபே நகருக்கருகில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திலும் சேதமடையாமல் கிமேஜி கோட்டைமனை 400 வருடங்களுக்கும் மேலாக நிலைத்துநிற்கின்றது.[3][2][9]

கிமேஜி கோட்டைமனை, சப்பானில் பெரியதும், பெரும்பாலோரால் பார்வையிடப்படும் கோட்டைமனையாகவும், 1993 இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பதிவு செய்த அந்நாட்டின் முதலாவது உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகவும் உள்ளது.[2] கோட்டைமனைத் தொகுதியின் நடுஅகழிக்குட்பட்ட பகுதிகள் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களாக வரையறுக்கப்பட்டு, கோட்டைமனையின் ஐந்து கட்டமைப்புகள் சப்பான் நாட்டின் சொத்தாக வரையறுக்கப்பட்டுள்ளன.[4][10] மட்சுமோட்டோ கோட்டைமனை, குமமோட்டோ கோட்டைமனை என்பனவற்றுடன் கிமேஜி கோட்டைமனை சப்பானின் மூன்று முதன்மைக் கோட்டைமனைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.[11] கோட்டைமனைக் கட்டடங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சில ஆண்டுகள் இது சீரமைப்பு வேலைக்கு உட்படுத்தப்பட்டு மார்ச்சு 27, 2015 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.[12] இதன் மூலம் பல்லாண்டுகளாக இருந்த அழுக்கு, கறை போன்றவை அகற்றப்பட்டு, மங்கியநிறத்தில் காணப்பட்ட கூரை அதனுடைய மூல நிறமான பளிச்சிடும் வெள்ளை நிறத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

வடிவமைப்பு

கிமேஜி கோட்டைமனை சப்பானில் உள்ள கோட்டைமனைகளில் பெரியதாகும்.[2] இது முன்னோடியான சப்பானியக் கோட்டைமனைக் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் சப்பானிய கோட்டைமனைகளுக்கு உரித்தான பல பாதுகாப்பு மற்றும் கட்டிடக்கலையின் சிறப்பியல்புகளைக் கொண்டும் அமைந்துள்ளது.[7] கிமேஜி கோட்டைமனையின் வளைந்த சுவர்கள் பாரிய விசிறிகள் போன்று காட்சியளித்தாலும், அவற்றின் கட்டமைப்பு மரத்தாலும் கல்லாலும் உருவாக்கப்பட்டவையாகும்.[4][6] சப்பானிய குடும்பச் சின்னங்கள் கட்டடங்கள் முழுவதிலும் நிறுவப்பட்டுள்ளன.

கிமேஜி கோட்டைமனை கடல் மட்டத்திற்கு மேல் 45.6 m (150 அடி) உயரத்திலுள்ள கிமேயாமா குன்றின் மீது கிமேஜி எனுமிடத்தின் மத்தியில் அமைந்துள்ளது.[5] இது களஞ்சியச்சாலை, வாயில்கள், தாழ்வாரங்கள், மேடைகள் என 83 கட்டடங்களின் வலையமைப்புனைக் கொண்டு காணப்படுகிறது.[4] இந்த 83 கட்டடங்களில், 11 தாழ்வாரங்கள், 16 மேடைகள், 15 வாயில்கள், 32 மண் சுவர்கள் உள்ளிட்ட 74 கட்டடங்கள் முதன்மைப்பண்பாட்டுச் சொத்துக்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.[9] இதன் உயரமான சுவர் 26 m (85 அடி) உயரம் கொண்டாதாகவுள்ளது.[4] கிமேஜி நகரின் 100 வது ஆண்டை கொண்டாடுமுகமாக 1992 இல் உருவாக்கப்பட்ட சப்பானியத் தோட்டம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.[13]

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

காணொளி


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கிமேஜி_கோட்டைமனை&oldid=3581813" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை