கியூபப் புரட்சி

கியூபப் புரட்சி என்பது பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான ஆயுதப் படைகள் கொரில்லா போரில் ஈடுப்ட்டு வென்ற நிகழ்வு ஆகும்.

கியூபப் புரட்சி

புரட்சித் தலைவர்கள் சே குவேரா (இடது), பிடல் காஸ்ட்ரோ (வலது), 1961
நாள்26 சூலை 1953 – 1 சனவரி 1959
(5 ஆண்டு-கள், 5 மாதம்-கள் and 6 நாள்-கள்)
இடம்கியூபா
சூலை 26 இயக்கம் வெற்றி
பிரிவினர்
சூலை 26 இயக்கம்கூபா கியூபா குடியரசு
தளபதிகள், தலைவர்கள்
பிடல் காஸ்ட்ரோ
ராவுல் காஸ்ட்ரோ
சே குவேரா
யுவான் அல்மெய்டா
கூபா புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா
கூபா யூலோஜியோ சான்டிலோ
கூபா ஒசே கிவேதோ
கூபா ஆல்பெர்ட்டோ சாவியானோ
கூபா யோக்கின் காசிலாசு மரணதண்டணை
கூபா கோர்னேலியோ ரோஜாசு மரணதண்டணை
கூபா பெர்னாண்டசு சுவேரோ
இழப்புகள்
5,000+ கியூபப் போர்வீரர்கள் பலி[1][2][3]

புரட்சியின் பின்னணி

கியூப இராணுவத் தளபதி புல்கேன்சியோ பாடிஸ்டா, அந்நாட்டு அதிபர் கார்லோஸ் ப்ரியோ சொக்கர்ராஸ் என்பவரை மார்ச் 10, 1952 இல் பதவி நீக்கம் செய்து, நடக்கவிருந்த தேர்தல்களை ரத்து செய்தார். இதனால் ஆத்திரமடைந்த இளம் வழக்கறிஞரான ஃபிடெல் கேஸ்ட்ரோ இராணுவத் தளபதியின் ஆட்சியை முடிவுக்குக் கொணர ஏழு முறை முயன்று தோற்றார். சான்டியாகோவின் இராணுவ குடியிருப்புகளின் மீது சூலை 26, 1953 இல் அவர் நடத்திய தாக்குதலும் தோல்வியில் முடிந்தது; காஸ்ட்ரோ கைதானார்.

பதினைந்து வருட சிறைவாசத் தண்டனை விதிக்கப்பட்டபோதும், 1955 ஆம் ஆண்டே ஃபிடெல் விடுதலையானார். தனது திட்டத்திலிருந்து தளராத காஸ்ட்ரோ, மெக்ஸிகோவில் ஒரு புதிய கிளர்ச்சிப் படையைத் திரட்டினார். டிசம்பர் 2,1956 இல் மீண்டும் தோற்று, ஸியாரா மெய்ஸ்ட்ரோவுக்கு ஓடினார். இதன் பிறகே நேரடியான மோதல்களைத் தவிர்த்து கொரில்லா போர் முறையைக் கையில் எடுத்தார் ஃபிடெல்; கியூபாவெங்கும் பரவலாக இருந்த வெவ்வேறு எதிர்ப்பு சக்திகளின் உதவியையும் கேட்டுப் பெற்றார். இவரது விடா முயற்சியின் பயனாக, இறுதியில் பாடிஸ்டா பதவி விலகி 1959 புத்தாண்டு தினத்தன்று நாட்டைவிட்டே வெளியேறினார்; காஸ்ட்ரோ பிப்ரவரி 1959 இல் நாட்டின் அதிபரானார். முந்திய ஆட்சியாளர்களில் பலரும் கொல்லப்பட்டனர். தேர்தல் ரத்து செய்யப்பட்டது; கியூபாவின் நிரந்தர வாழ்நாள் அதிபராக தன்னைத்தானே பிரகடனம் செய்து கொண்டார் ஃபிடெல்.

புரட்சிக்கு பின்

எதிர் புரட்சி செய்தவர்கள் சிறைவாசம் அல்லது மரண தண்டனை பெற்றனர். கம்யூனிச ஆட்சி முறையைக் கொண்டு வந்து, அமெரிக்காவின் எதிர்ப்பை ஞம்பாதித்தார் எனினும் சோவியத்துடனான நட்புறவு மறைமுக எதிர்ப்புகளை நீக்க உதவியது. வெனிசுலா, கௌதமாலா, பொலிவியா, ஆகிய நாடுகளில் இவர் மேற்கொண்ட ஆட்சி கவிழ்ப்பு கிளர்ச்சிகள் தோல்வியில் முடிந்தன; இதன் காரணமாக, கியூபா அப்பகுதி நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டது.

கியூபாவின் தோழமை, அமேரிக்காவுடனான தனது பனிப்போரில் அமேரிக்காவிற்கு அருகாமையில், வலுசேர்க்கும் ஒரு உறவை ரஷ்யாவுக்குத் தந்ததால், அணு ஆயுதப் போர் சாத்தியக்கூறுகள் உச்சத்தை எட்டின.[4]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கியூபப்_புரட்சி&oldid=3908934" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை