கியூபிசம்

இத்தாலிய மறுமலர்ச்சி இயக்கத்துக்குப் பின்னர் உருவான கலை இயக்கங்களுள் மிக முக்கியமானதும், செல்வாக்கு மிக்கதுமான கலை இயக்கம் கியூபிசம் (Cubism) என்று சொல்லலாம். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவில், ஓவியம் மற்றும் சிற்பக்கலைத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியது கியூபிசமேயாகும்.[1][2]

கிட்டாருடன் ஒரு பெண் ஜொர்ஜெஸ் பிராக் (Georges Braque), 1913
பிராக்கிலுள்ள (Prague) கியூபிசப் பாணி வீடு.

கியூபிசக் கலை ஆக்கங்களில், பொருட்கள் துண்டுதுண்டாகப் பகுத்தாராயப்பட்டு abstract[தெளிவுபடுத்துக] வடிவில் மீளுருவாக்கம் செய்யப்படுகின்றன. பொருட்களை ஒரு கோணத்தில் பார்த்துக் கலைப் படைப்புக்களில் அவற்றின் ஒரு பகுதியை மட்டும் வெளிப்படுத்துவதற்கு மாறாக, ஒரே சமயத்தில் பொருட்களின் பல கோணப் பார்வைகளை வெளிப்படுத்திப் பொருட்களை முழுமையாகக் காட்டும் முயற்சியே கியூபிசத்தின் அடிப்படை எனலாம். பொதுவாக கியூபிசப் படைப்புக்களில் தளப்பரப்புகள் ஒன்றையொன்று பல்வேறு கோணங்களில் வெட்டுகின்ற தோற்றத்தைக் காணமுடியும். பொருட்களினதும், அவற்றின் பின்னணிகளினதும் தளங்கள் ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி அதிக ஆழம் காட்டாத பொருள்மயங்கு நிலையை உருவாக்குவதே கியூபிசத்தின் சிறப்பியல்பு ஆகும்.

வரலாறு

பிரான்சின் தலைநகரான பாரிஸில் மொண்ட்மாட்ரே வட்டாரத்தில் வாழ்ந்த ஜோர்ஜெஸ் பிராக்கும், பாப்லோ பிக்காசோவும் 1908 ஆம் ஆண்டில் கியூபிசத்தின் வளர்ச்சியை நோக்கிப் பணியாற்றி வந்தனர். 1907 இல் ஒருவரையொருவர் சந்தித்த அவர்கள் 1914 இல் முதலாவது உலக யுத்தம் வெடிக்கும்வரை மிக நெருக்கமாக இணைந்து வேலை செய்து வந்தனர்.

பிரான்சியக் கலை விமர்சகரான லூயிஸ் வௌக்ஸ்செல்ஸ் (Louis Vauxcelles) என்பார் 1908 ஆம் ஆண்டு முதன் முதலாக கியூபிசம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். பிராக் வரைந்த ஓவியமொன்றைப் பார்த்த அவர், அதனை, சிறிய கனக் குற்றிகளினால் நிறைந்துள்ளது என்னும் பொருள்பட 'full of little cubes' என வர்ணித்தார். தொடர்ந்து இவ்வகை ஓவியங்களைக் குறிக்கக் கியூபிசம் என்ற சொல் பரவலாக வழங்கி வந்தது. எனினும் இந்த ஓவியப் பாணியை அறிமுகப் படுத்திய பிராக்கும், பிக்காசோவும் இச்சொல்லைப் பயன்படுத்துவதை நீண்ட காலமாகத் தவிர்த்தே வந்தனர்.

மொண்ட்பார்னசேயில் கூடிய கலைஞர்களில் கூட்டத்தினால் கியூபிச இயக்கம் விரிவடைந்தது.ஹென்றி கான்வெய்லெர் (Henry Kahnweiler) என்னும் கலைப்பொருள் விற்பனையாளரும் கியூபிச இயக்கத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தார். இது வெகுவிரைவாகச் செல்வாக்குள்ள ஒரு இயக்கமாகியது. 1910 ஆம் ஆண்டிலேயே, பிராக்கினதும், பிக்காசோவினதும் செல்வாக்குக்கு ஆட்பட்ட கலைஞர்களைக் கொண்ட "கியூபிசக் குழுமம்" (cubist school) பற்றி விமர்சகர்கள் குறிப்பிடத் தொடங்கினார்கள். தங்களைக் கியூபிச ஓவியர்கள் என்று கூறிக்கொண்ட பலர், பிராக், பிக்காசோ ஆகியோரின் பாதையிலிருந்து வேறுபட்ட திசையில் சென்று தங்கள் படைப்புக்களை ஆக்கத் தொடங்கினர். 1920க்கு முன்னர், பிராக், பிக்காசோ ஆகியோரின் ஆக்கங்கள்கூடப் பல்வேறு வேறுபாடான கட்டங்களினூடாகச் சென்றிருந்தது.

புகழ்பெற்ற கியூபிசக் கலைஞர்

வியன்னாவிலுள்ள வொட்ரூபா தேவாலயம்
  • ஜோர்ஜெஸ் பிராக் (Georges Braque)
  • மார்சல் டுச்சாம்ப் (Marcel Duchamp)
  • ஜுவான் கிரிஸ் (Juan Gris)
  • போல் கிளீ (Paul Klee)
  • பர்னாண்ட் லெகர் (Fernand Leger)
  • ஜக்கிஸ் லிப்சிட்ஸ் (Jacques Lipchitz)
  • லூயிஸ் மார்க்கோசிஸ் (Louis Marcoussis)
  • மாரெவ்னா (Marevna)
  • ஜேன் மெட்சிங்கெர் (Jean Metzinger)
  • அலெக்சாண்ட்ரா நெச்சிதா (Alexandra Nechita)
  • பிரான்சிஸ் பிக்காபியா (Francis Picabia)
  • பாப்லோ பிக்காசோ (Pablo Picasso)
  • லியுபோவ் பொபோவா (Liubov Popova)
  • டியேகோ ரிவேரா (Diego Rivera) ("Master Cubist"[1] பரணிடப்பட்டது 2005-11-22 at the வந்தவழி இயந்திரம்)
  • மாரி வசிலியேவ் (Marie Vassilieff)
  • பிரிட்ஸ் வொட்ருபா (Fritz Wotruba)

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புக்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கியூபிசம்&oldid=3265350" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை