கொஸ்டா கொன்கோர்டியா

கொஸ்டா கொன்கோர்டியா (Costa Concordia) என்பது இத்தாலியைச் சேர்ந்த கொஸ்டா குரூசசு நிறுவனத்தின் ஒரு உல்லாசப் பயணிகள் கப்பல் ஆகும். ஐரோப்பிய நாடுகளிடையே இணக்கம், ஒற்றுமை, மற்றும் அமைதி ஆகியவற்றைப் பேணும் முகமாக இக்கப்பலுக்கு கொன்கோர்டியா என்ற பெயர் வைக்கப்பட்டது. 2006 சூலையில் சேவைக்கு விடப்பட்ட இக்கப்பல் 114,500 தொன் எடையுள்ளது. இதுவே இத்தாலியில் அமைக்கப்பட்ட கப்பல்களில் மிகப் பெரியதாகும்.

கொஸ்டா கொன்கோர்டியா
கப்பல்
பெயர்:Costa Concordia
உரிமையாளர்:கார்னிவல் கார்ப்பரேசன்
இயக்குனர்:கொஸ்டா குரூசஸ்
பதியப்பட்ட துறைமுகம்:இத்தாலி ஜெனோவா, இத்தாலி
பணிப்பு:19 சனவரி 2004
கட்டியோர்:ஃபின்காண்டியெரி, இத்தாலி
செலவு:450 மில்லியன்
துறையெண்:6122
வெளியீடு:2 செப்டம்பர் 2005
பெயரிடப்பட்டது:7 சூலை 2006[1]
வாங்கியது:29 சூன் 2006
பணிக்காலம்:ஜூலை 2006
பணிவிலக்கம்:13 சனவரி 2012
அடையாளம்:Call sign: IBHD
IMO number: 9320544
MMSI no.: 247158500
நிலை:இத்தாலியின் கிகிலியோ தீவில் பகுதியாக மூழ்கியது.
குறிப்பு:[2][3]
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:கொன்கோர்டியா வகை உல்லாசப்பயணிகள் கப்பல்
நிறை:1,14,500 GT
நீளம்:290.20 m (952 அடி 1 அங்)
வளை:35.50 m (116 அடி 6 அங்)
Draught:8.50 m (27 அடி 11 அங்)
பொருத்திய வலு:6 × வார்ட்சிலா டீசல் எஞ்சின்கள், 75,600 கிலோwatts (101,400 hp)
விரைவு:சேவை: 21.5 knots (39.8 km/h; 24.7 mph)
உயர்: 23 knots (43 km/h; 26 mph)
கொள்ளளவு:3,700 பயணிகள்
பணியாளர்:1,100
குறிப்புகள்:[3][4]
கடலில் மூழ்கிய கொன்கோர்டியா

2012 சனவரி 13 ஆம் நாள் பன்னாட்டுப் பயணிகளை நடுநிலக்கடலுக்கு ஏற்றிச் சென்ற இக்கப்பல் இத்தாலியின் கிகிலியோ தீவுக்கருகில் பாறை ஒன்றுடன் மோதி மூழ்கியது. இதனை அடுத்து இக்கப்பலில் பயணம் செய்த 4,000 பேர் வரையில் வெளியேற்றப்பட்டனர். பலர் உயிர்க்காப்புப் படகுகள் மூலம் கரைக்கு வந்து சேர்ந்தனர். சிலர் நீந்தியே கரையை அடைய வேண்டியிருந்தது. 40 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர்[5][6].

மீட்பு

950 அடி நீளமுள்ள இக்கப்பல் பல நாட்கள் சாய்ந்தே இருந்தது. 17.09.2013 அன்று 5 கோடிகள் செலவு செய்து 19 மணிநேரப் போராட்டத்திற்குப்பின் பல இழுவை கப்பல்களின் உதவியால் மீட்கப்பட்டது. இதன் எடை 1,15லட்சம் டன் ஆகும். இக்கப்பலின் சொந்தக்காரர் இக்கப்பல் மறுபடியும் பயணத்திற்கு விடப்படமாட்டாது, பல பாகங்களாக உடைத்து விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தார். விபத்தின் போது, இந்த கப்பலில், 4,000 பயணிகள் இருந்தனர்; இதில் 32 பேர் உயிரிழந்தனர்.[7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை