கோக்கைன்


கோகோயின் (Cocaine, பென்சாயில்மெத்திலெகோனைன்) என்பது கோகோ தாவர இலைகளில் இருந்து பெறப்படும் ஒரு பளிங்குரு கொண்ட டிரோபேன் அல்கலாய்டு ஆகும்.[5] “கோகோ” என்ற பெயருடன் சேர்ந்து அல்கலாய்டு துணைப் பெயரான -ine என்பது சேர்ந்து கோகோயின் என்ற வார்த்தையை உருவாக்குகிறது. இது மத்திய நரம்பு மண்டலத்தின் கிளர்ச்சியூட்டியாக இருப்பதுடன் பசி அடக்கியாகவும் செயல்படுகிறது. குறிப்பாக, இது ஒரு செரோடோனின்-நோரெபினிஃப்ரைன்-டோபமைன் மறுஉறிஞ்சல் தடுப்பான் ஆகும், இது புறத்திலமைந்த கடேகாலமைன் டிரான்ஸ்போர்ட்டர் ஈந்தணைவியின் (exogenous catecholamine transporter ligand) செயல்பாட்டை மத்தியஸ்தம் செய்கிறது. மீஸோலிம்பிக் ரிவார்ட் பாதையை இது பாதிக்கும் விதத்தின் காரணமாக, கோகோயின் அடிமைப்பழக்கத்திற்கு ஆட்படுத்தத் தக்கதாய் இருக்கிறது.[6]

கோக்கைன்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
methyl (1R,2R,3S,5S)-3- (benzoyloxy)-8-methyl-8-azabicyclo[3.2.1] octane-2-carboxylate
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகைC
சட்டத் தகுதிநிலைControlled (S8) (AU) Schedule I (CA) ? (UK) Schedule II (அமெரிக்கா)
பழக்கடிமைப்படல்High
வழிகள்Topical, Oral, Insufflation, IV, PO
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்புOral: 33%[1]
Insufflated: 60[2]–80%[3]
Nasal Spray: 25[4]–43%[1]
வளர்சிதைமாற்றம்Hepatic CYP3A4
அரைவாழ்வுக்காலம்1 hour
கழிவகற்றல்Renal (benzoylecgonine and ecgonine methyl ester)
அடையாளக் குறிப்புகள்
CAS எண்50-36-2
ATC குறியீடுN01BC01 R02AD03, S01HA01, S02DA02
பப்கெம்CID 5760
DrugBankAPRD00080
ChemSpider10194104
ஒத்தசொல்smethylbenzoylecgonine, benzoylmethylecgonine
வேதியியல் தரவு
வாய்பாடுC17

H21Br{{{Br}}}NO4 

மூலக்கூற்று நிறை303.353 g/mol
SMILESeMolecules & PubChem
இயற்பியல் தரவு
உருகு நிலை195 °C (383 °F)
நீரில் கரைதிறன்1800 mg/mL (20 °C)

ஏறக்குறைய உலகின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவம் சாராத நோக்கங்களுக்கு அல்லது அரசு ஒப்புதலின்றி இதனை வைத்திருப்பது, வளர்ப்பது மற்றும் விநியோகம் செய்வது சட்டவிரோதமாக இருக்கிறது. ஏறக்குறைய எல்லா நாடுகளிலும், இதனை சுதந்திர வர்த்தகமயமாக்குவது சட்டவிரோதமானதாகவும் கடுமையான தண்டனைக்கு உரியதாகவும் இருந்த போதிலும், உலகளாவிய அளவில் இதன் பயன்பாடு பல்வேறு சமூக, கலாச்சார, மற்றும் தனிநபர் அந்தரங்க மட்டங்களில் பரந்துபட்டதாய் இருக்கிறது.

வரலாறு

கோகோ இலை

ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமாக தென் அமெரிக்காவின் பூர்வீக மக்கள் கோகோ இலையினை (எரித்ராக்சிலோன் கோகோ ) மென்று சுவைத்து வந்தனர், இது உயிர்ச் சத்துகளையும் அத்துடன் கோகோயின் உள்ளிட்ட ஏராளமான அல்கலாய்டுகளையும் கொண்ட ஒரு தாவரமாகும். இந்த இலை அன்றும் இன்றும் உலகளாவிய அளவில் ஏறக்குறைய எல்லா பூர்வீக பழங்குடி சமுதாயத்தினரும் மென்று சுவைப்பதாக அமைந்துள்ளது - புராதன பெருவியன் மம்மிக்கள் கோகோ இலைகளின் எச்சங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன, அத்துடன் அந்த காலகட்டத்து பாண்டங்கள் சித்தரிக்கும் மனிதர்கள் கன்னங்கள் உப்பியிருக்க ஏதோ ஒன்றை சுவைத்துக் கொண்டிருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.[7] அத்துடன் இந்த நாகரிகங்களில் கோகோ இலைகள் மற்றும் எச்சிலின் கலவை தான் அறுவைச் சிகிச்சைக் காலத்திற்கான மயக்கமருந்தாய் பயன்பட்டது என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன.[8]

ஸ்பேனியர்கள் தென் அமெரிக்காவை ஆட்சி செய்த போது, இந்த இலை தங்களுக்கு வலிமையும் சக்தியும் அளித்ததாக பழங்குடியினர் கூறிய கூற்றை நிராகரித்து, இந்த இலையை மெல்லும் பழக்கத்தை சாத்தானின் வேலை என அறிவித்தனர்.  ஆனால் இந்த கூற்றுக்கள் எல்லாம் உண்மை என்று கண்டறியப்பட்ட போது, அந்த இலையை சட்டப்பூர்வமாக்கி வரிவிதித்தனர், ஒவ்வொரு பயிரின் மதிப்பிலும் 10% எடுத்துக் கொண்டனர்.[9] 1569 ஆம் ஆண்டில் நிகோலஸ் மோனார்டெஸ் விவரிக்கையில், ”மகா அமைதி”யை தூண்டுவதற்கு பூர்வீக குடியினர் புகையிலை மற்றும் கோகோ இலைகள் கலவையை மென்று வந்தனர் என்று தெரிவித்தார்:

In 1609, பட்ரே ப்ளாஸ் வலேரா எழுதினார்:

பிரித்தெடுத்தல்

கோகோவின் கிளர்ச்சி தூண்டும் மற்றும் பசியடக்கும் பண்புகள் பல நூற்றாண்டு காலமாய் அறியப்பட்டிருந்தது என்றாலும், கோகோயின் அல்கலாய்டு பிரித்தெடுப்பது 1855 ஆம் ஆண்டு வரை சாதிக்கப்படாததாய் இருந்தது. ஏராளமான ஐரோப்பிய விஞ்ஞானிகள் கோகோயினை பிரித்தெடுக்க முயற்சி செய்து தோற்றனர், அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன: போதுமான வேதியியல் அறிவு அச்சமயத்தில் வளர்ச்சியுறாதிருந்தது, மற்றும் கோகோ யூரோ-ஆசியப் பகுதிகளில் வளரவில்லை, அத்துடன் கண்டம் கடந்த போக்குவரத்தில் அவை சேதாரமுற்று கோகோயின் மோசமானது.

1855 ஆம் ஆண்டில் ஜேர்மன் வேதியியல் விஞ்ஞானியான பிரெடரிக் கேட்கெ மூலம் தான் முதன்முதலில் கோகோயின் அல்கலாய்டு பிரித்தெடுக்கப்பட்டது.  இந்த அல்கலாய்டுக்கு “எரித்ராக்சிலின்” என்று பெயரிட்ட கேட்கெ, ஆர்சிவ் டெர் பார்மஸி  (Archiv der Pharmazie) ஜர்னலில் இதன் விவரிப்பையும் வெளியிட்டார்.[11]

1856 ஆம் ஆண்டில், நோவாரா வில் (உலகத்தைச் சுற்ற சக்கரவர்த்தி ஃபிரான்ஸ் ஜோசபால் அனுப்பப்பட்ட ஒரு ஆஸ்திரிய போர்க்கப்பல்) சென்ற விஞ்ஞானியான டாக்டர் கார்ல் ஸ்கெர்சரிடம், தென் அமெரிக்காவில் இருந்து பெருமளவில் கோகோ இலைகளைக் கொண்டு வருமாறு பிரெடரிக் வோஹ்லர் கேட்டுக் கொண்டார். 1859 ஆம் ஆண்டில், இந்த கப்பல் தனது பயணங்களை முடித்துத் திரும்பிய போது, வோஹ்லர் ஒரு பெட்டி நிரம்ப கோகோ இலைகளைப் பெற்றார். இந்த இலைகளை ஜேர்மனி கோட்டிங்கென் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மாணவராய் இருந்த ஆல்பர்ட் நீமென் என்னும் பிஎச்.டி. மாணவருக்கு வோஹ்லர் அனுப்பினார், அவர் ஒரு மேம்பட்ட சுத்திகரிக்கும் நிகழ்முறையை உருவாக்கினார்.[12]

கோகோயினைப் பிரித்தெடுக்க தான் மேற்கொண்ட ஒவ்வொரு படியையும் நீமேன் Über eine neue organische Base in den Cocablättern (கோகோ இலைகளில் ஒரு புதிய கரிம காரம் குறித்து ) என்ற தலைப்பிலான ஒரு ஆய்வுக்கட்டுரையில் விவரித்தார், 1860 ஆம் ஆண்டில் வெளியான இக்கட்டுரை இவருக்கு டாக்டர் பட்டம் பெற்றுத் தந்தது, இக்கட்டுரை இப்போது பிரித்தானிய நூலகத்தில் உள்ளது. அல்கலாய்டின் “நிறமற்ற ஒளிஊடுருவும் பட்டகம்” குறித்து எழுதிய அவர், “அதன் கரைசல்கள் ஒரு காரத்தன்மைக்கான வேதிவினையையும், ஒரு கடும் சுவையையும் கொண்டிருக்கின்றன, எச்சில் ஊறுவதை அதிகப்படுத்துவதோடு ஒரு விசித்திரமான மரத்த உணர்வை விட்டுச் செல்கின்றன, அதன்பின் நாக்கில் பட்டால் சளி பிடித்த உணர்வும் பின்தொடர்கிறது” என்று கூறினார். மற்ற அல்கலாய்டுகள் “-ine" என்கிற துணைப் பெயரைக் கொண்டு (இலத்தீன் -ina என்பதில் இருந்து வந்தது) உருவாக்கப்பட்டிருந்த வழக்கத்தால் நீமேன் இந்த அல்கலாய்டுக்கு “கோகோயின்” எனப் பெயரிட்டார்.[12]

1898 ஆம் ஆண்டில் ரிச்சர்டு வில்ஸ்டாட்டர் தான் கோகோயின் மூலக்கூறுக் கட்டமைப்பை முதன்முதலில் கூட்டுச் சேர்க்கை செய்து விளங்கப்படுத்தினார்.[13] இந்த கூட்டுச் சேர்க்கை டிரோபினோன் என்னும் தொடர்புபட்ட இயற்கை தயாரிப்பில் இருந்து துவங்கியதோடு ஐந்து படிகளை எடுத்தது.

மருத்துவ பயனாக்கம்

இந்த புதிய அல்கலாய்டின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, மேற்கத்திய மருத்துவம் இந்த தாவரத்தின் சாத்தியமான பயன்பாடுகளை துரிதமாகச் சுரண்டத் துவங்கியது.

1879 ஆம் ஆண்டில், வுர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் (University of Würzburg) வாஸிலி வோன் ஆன்ரெப், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் அல்கலாய்டின் வலி நிவாரணக் குணங்களை விளங்கப்படுத்த ஒரு பரிசோதனையை வடிவமைத்தார். இரண்டு தனித்தனியான ஜாடிகளை அவர் தயாரிப்பு செய்தார், ஒன்றில் கோகோயின்-உப்பு கரைசல் இருந்தது, இன்னொன்றில் வெறுமனே உப்பு நீர் மட்டும் இருந்தது. இப்போது ஒரு தவளையின் கால்களை இந்த ஜாடிகளுக்குள் அமிழ்த்தினார், ஒரு கால் சிகிச்சை கரைசலிலும் இன்னொன்று கட்டுப்பாடு கரைசலிலும் அமிழ்த்தப்பட்டது, அதன்பின் இரண்டு கால்களுக்கும் பல்வேறு மாறுபட்ட வழிகளில் உணர்ச்சியூட்டினார். கோகோயின் கரைசலில் மூழ்கியிருந்த கால் உப்பு நீரில் மூழ்கியிருந்த காலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் எதிர்வினையாற்றியது.[14]

கார்ல் கோலர் (கோகோயின் பற்றி பின்னாளில் எழுதிய சிக்மண்ட் ஃபிராய்டுடன் நெருக்கமாய் பணியாற்றியவர்) கண்சிகிச்சை பயன்பாட்டில் கோகோயின் கொண்டு பரிசோதனை செய்தார். 1884 இல் பெரும் பரபரப்பைச் சம்பாதித்த ஒரு பரிசோதனையில் இவர் தன்னைக் கொண்டே சோதனை செய்தார், கோகோயின் கரைசலை தனது சொந்த கண்ணுக்கு அளித்த அவர் அதன் பின் ஊசி கொண்டு அதனைக் குத்தி பரிசோதனை செய்தார். அவரது கண்டறிவுகள் ஹெய்டல்பெர்க் ஆப்தல்மலாஜிக்கல் சொசைட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் 1884 ஆம் ஆண்டில், சுவாச அமைப்பு மயக்கமருந்தாக கோகோயின் விளைவுகளை ஜெல்லினெக் விளங்கப்படுத்திக் காட்டினார். 1885 ஆம் ஆண்டில், வில்லியம் ஹால்ஸ்டெட் நரம்புத் தொகுப்பு அனஸ்தீசியாவையும்,[15] ஜேம்ஸ் கார்னிங் பெரிடூரல் அனஸ்தீசியாவையும்[16] விளங்கப்படுத்திக் காட்டினர். 1898 ஆம் ஆண்டில் ஹெயின்ரிக் குவின்க் கோகோயினை முதுகுத்தண்டு அனஸ்தீசியாவுக்கு பயன்படுத்தினார்.

இன்று, கோகோயினின் மருத்துவத் துறை பயன்பாடு வரம்புபட்டிருக்கிறது. உடல்பகுதிக்கான மயக்கமருந்தாக கோகோயின் என்கிற பகுதியைக் காணவும்.

பிரபலமுறல்

1859 ஆம் ஆண்டில் பவுலா மன்டெகசா என்னும் இத்தாலிய டாக்டர் பெருவில் இருந்து திரும்பினார், அங்கு பூர்வீக குடியினர் கோகோ பயன்படுத்துவதை அவர் முதல்முறையாகக் கண்டிருந்தார். தன் மீதே பரிசோதனைகள் செய்து கொண்டிருந்த அவர், மிலனுக்குத் திரும்பியதும் விளைவுகளை விவரிக்கும் ஒரு ஆய்வுக்கட்டுரையை எழுதினார். இந்த கட்டுரையில் கோகோவும் கோகோயினும் (அந்த சமயத்தில் அவை இரண்டும் ஒன்றே எனக் கருதப்பட்டது) மருத்துவரீதியாக பயனுள்ளவை என அறிவித்தார், "காலையில் தடித்த நாக்கு, வாய்வு, [மற்றும்] பல் வெண்மை சிகிச்சைகளில்" இது பயன்கொண்டிருப்பதாய் கூறினார்.

போப் லியோ XIII கோகோ கலந்த வின் மரியானி கொண்ட குடுவையை தன்னுடன் சுமந்து சென்று, ஏஞ்சலோ மரியானிக்கு வாடிகன் தங்க பதக்கத்தை வழங்கினார்.
மான்டெகஸாவின் ஆய்வறிக்கையை படித்த ஏங்கலோ மரியானி என்னும் ஒரு வேதியியல் அறிஞருக்கு உடனடியாக கோகோ மற்றும் அதன் பொருளாதார திறன் குறித்த சிந்தனை சுற்றிக் கொண்டது.  1863 ஆம் ஆண்டில், வின் மரியானி என்கிற பெயரிலான ஒரு ஒயினை மரியானி சந்தைப்படுத்தத் துவங்கினார், கோகோ இலைகள் சேர்க்கப்பட்டிருந்த இது கோகோஒயின் ஆனது.  ஒயினில் இருந்த எத்தனால் கரைப்பானாகச் செயல்பட்டு கோகோயினை கோகோ இலைகளில் இருந்து பிரித்தெடுக்கும் வேலையைச் செய்தது, இது அந்த மதுபானத்தின் விளைவை மாற்றியமைத்தது.  ஒரு அவுன்ஸ் ஒயினுக்கு இது 6 மிகி கோகோயின் கொண்டிருந்தது, ஆனால் அமெரிக்காவில் இதே போன்ற பானங்கள் உயர்ந்த அளவில் கோகோயின் கொண்டிருந்ததால் அவற்றுடனான போட்டித் திறனைப் பராமரிக்க ஏற்றுமதி செய்யப்படும் மதுபானங்களில் இந்த அளவு அவுன்ஸ்க்கு 7.2 மிகி ஆக இருந்தது.  கோகோ-கோலாவுக்கு ஜான் ஸ்டித் பெம்பர்டன் அளித்த ஆரம்ப தயாரிப்புக் குறிப்பில் "கோகோ இலைகளைக் கிள்ளி போடுவதும்" இருந்தது, ஆனாலும் 1906 ஆம் ஆண்டில் நிறுவனம் துவங்கிய போது சுத்த உணவு மற்றும் மருந்து சட்டம் (Pure Food and Drug Act) நிறைவேறியிருந்ததால், கோகோயின் நீக்கப்பட்ட இலைகள் தான் பயன்படுத்தப்பட்டது.  கோகோ-கோலா நிறுவனத்தின் முதல் இருபது ஆண்டுகள் தயாரிப்பில் கோகோயினின் உண்மையான அளவைக் கண்டறிய நடைமுறைச் சாத்தியமில்லாமல் இருந்தது.

1879 ஆம் ஆண்டில் மார்பின் பழக்க சிகிச்சையில் கோகோயின் பயன்படுத்துவது ஆரம்பமானது. ஜெர்மனியில் 1884 ஆம் ஆண்டுவாக்கில் உடல்பகுதிக்கான மயக்கமருந்தாக மருத்துவப் பயன்பாட்டில் கோகோயின் அறிமுகப்படுத்தப்பட்டது, ஏறக்குறைய அதே சமயத்தில் சிக்மண்ட் ஃபிராய்டு தனது படைப்பான உபெர் கோகோ வை (Über Coca) வெளியிட்டார், இதில் அவர் கோகோயின் பின்வருவதற்கு காரணமாய் இருப்பதாய் எழுதினார்:

exhilaration and lasting euphoria, which in no way differs from the normal euphoria of the healthy person...You perceive an increase of self-control and possess more vitality and capacity for work....In other words, you are simply normal, and it is soon hard to believe you are under the influence of any drug....Long intensive physical work is performed without any fatigue...This result is enjoyed without any of the unpleasant after-effects that follow exhilaration brought about by alcohol....Absolutely no craving for the further use of cocaine appears after the first, or even after repeated taking of the drug...

1885 ஆம் ஆண்டில் அமெரிக்க தயாரிப்பாளர் பார்க்-டேவிஸ் கோகோயினை பல்வேறு வடிவங்களிலும் விற்றார், சிகரெட்டுகள், பொடி, மற்றும் பயன்படுத்துபவரின் ரத்தக்குழாய்களில் ஊசி கொண்டு நேரடியாக செலுத்தக் கூடிய ஒரு கோகோயின் கலவையும் கூட இதில் அடக்கம். தனது கோகோயின் தயாரிப்புகள் "உணவின் இடத்தை நிரப்பும் என்றும், கோழையை வீரராக்கும் என்றும், அமைதியாய் இருப்பவரையும் தைரியமாய் பேச வைக்கும் என்றும்....அடிபட்டவருக்கும் வலி தெரியாமல் செய்யும் என்றும்" அந்த நிறுவனம் வாக்குறுதியளித்தது.

விக்டோரிய சகாப்தத்தின் பிற்பகுதி இலக்கியத்தில் கோகோயின் பயன்பாடு ஒரு பிறழ்வாகக் கருதப்பட்டது. உதாரணமாக, ஆர்தர் கொனான் டோயிலின் கற்பனை நாயகனான ஷெர்லாக் ஹோம்ஸால் இது ஏற்றப்படுகிறது.

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்னெஸ் மாகாண, மெம்பிஸ் பகுதியில், பீலே வீதியின் அருகிலிருக்கும் மருந்துக் கடைகளில் கோகோயின் விற்கப்பட்டது, ஐந்து அல்லது பத்து சென்டுகளுக்கு ஒரு சிறு டப்பா நிறையக் கிடைக்கும். மிசிசிபி நதியோரம் இருந்த கப்பல் சுமைதூக்கித் தொழிலாளர்கள் இந்த மருந்தை ஒரு உற்சாகப்பொருளாகப் பயன்படுத்தினர், வெள்ளை முதலாளிகள் கறுப்பினத் தொழிலாளர்கள் இதனைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தனர்.[17]

1909 ஆம் ஆண்டில் எர்னெஸ்ட் ஷேக்கில்டன் "ஃபோர்ஸ்டு மார்ச்" பிராண்ட் கோகோயின் மாத்திரைகளை அண்டார்டிகாவுக்கு எடுத்துச் சென்றார், ஒரு வருடத்திற்குப் பின் தென் துருவம் பயணம் சென்ற கேப்டன் ஸ்காட் இதனையே செய்தார், அவருக்கு இது மோசமான தலைவிதியுடனான பயணமாக அமைந்து விட்டது.[18]

தடை

இருபதாம் நூற்றாண்டு பிறந்த சமயத்தில், கோகோயினின் அடிமையாக்கும் குணங்கள் தெளிவாகி இருந்தன, கோகோயின் துஷ்பிரயோக பிரச்சினை அமெரிக்காவில் பொதுமக்களின் கவனத்தில் இடம்பிடிக்கத் துவங்கியிருந்தது. அந்த நாளில் ஆதிக்கம் செலுத்திய இனவெறி மற்றும் சமூக கவலைகளுடன் பிணைந்ததாய் இருந்த சமூக ஒழுக்கம் குறித்த ஒரு பீதியில் கோகோயின் துஷ்பிரயோக அபாயமும் ஒரு பகுதியானது. கோகோயினை துஷ்பிரயோகம் செய்வோரில் அநேகம் பேர் "ஒழுக்கக் கவலையற்றவர்களாக, சூதாடுவோராக, உயர் வகுப்பு மற்றும் கீழ் வகுப்பு விபச்சாரிகளாக, இரவு நேர சுமைதூக்கிகளாக, பெல் பாய்களாக, கொள்ளையராக, மோசடி செய்பவர்களாக, விபச்சார ஊடகர்களாக, மற்றும் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர்" என்று 1903 ஆம் ஆண்டில் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பார்மசி தெரிவித்தது. 1914 ஆம் ஆண்டில் பென்சில்வேனியாவின் மாநில பார்மசி வாரியத்தைச் சேர்ந்த டாக்டர் கிறிஸ்டோபர் கோச் வெளிப்படையான இனவெறி அவமதிப்பாக இவ்வாறு கூறினார்: "தெற்கின் வெள்ளை இனப் பெண்கள் மீதான அநேக தாக்குதல்கள் கோகோயின் வெறி பிடித்த நீக்ரோ மூளைகளின் நேரடி விளைவாகும்." அந்த சகாப்தத்தின் இனவெறி மூடத்தனங்களை சுரண்டும் வகையில் வெகுஜன ஊடகங்கள், அமெரிக்காவின் தெற்குப் பகுதி ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடையே கோகோயின் பயன்பாட்டு தொற்று இருப்பதாக கருத்தை உற்பத்தி செய்தன, ஆனாலும் அப்படி ஒரு தொற்று உண்மையில் ஏற்பட்டது என்பதற்கான ஆதாரம் அதிகம் இல்லை. அதே வருடத்திலேயே, ஹாரிசன் நார்கோடிக்ஸ் டேக்ஸ் ஆக்ட் அமெரிக்காவில் கோகோயின் விற்பனை மற்றும் விநியோகத்தை சட்டப்படி தடை செய்தது. இந்த சட்டம் கோகோயினை போதை மருந்தாக தவறாகக் குறிப்பிட்டது, இந்த தவறான வகைப்படுத்தல் வெகுஜனக் கலாச்சாரத்திற்குள்ளும் ஊடுருவியது. மேலே கூறியது போல, கோகோயின் ஒரு தூண்டியே அன்றி, போதை மருந்து அல்ல. விநியோகம் மற்றும் பயன்பாடுக்கு தொழில்நுட்பரீதியாய் சட்டவிரோதமாக்கப்பட்டாலும், பதிவு செய்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைப் பொறுத்த வரை அப்போதும் கோகோயின் விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு சட்டப்பூர்வமானதாகவே இருந்தது. கோகோயினை போதை மருந்தாக தவறாக வகைப்படுத்தியதால், இந்த சட்டங்களை உண்மையில் அரசாங்கம் கடுமையாக அமல்படுத்தியா என்பதைக் குறித்த விவாதம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 1970 ஆம் ஆண்டு வரை கோகோயின் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாகக் கருதப்படவில்லை, அந்த ஆண்டில் கோகோயினை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் சட்டத்தின் கீழ் அமெரிக்கா பட்டியலிட்டது. அந்த தருணம் வரை, கோகோயின் பயன்பாடு அமெரிக்காவில் வெளிப்படையுற்றதாக இருந்ததோடு பொதுவாக விவாதிக்கப்படும் ஒழுக்கரீதியான மற்றும் உடல்ரீதியான விவாதங்களின் காரணங்களின் பேரில் மட்டும் அவ்வப்போது விசாரணைக்குட்படுவதாய் இருந்தது.

நவீன பயன்பாடு

பல நாடுகளில், கோகோயின் பிரபலமான உற்சாக மருந்தாக இருக்கிறது. அமெரிக்காவில் "கிராக்" கோகோயின் உருவாக்கமானது பொதுவாக ஏழைகள் வசிக்கும் நகருக்குட்பட்ட பகுதிகளின் சந்தைக்கு இந்த பொருளை அறிமுகப்படுத்தியது. பொடி வடிவத்தில் இதனைப் பயன்படுத்துவது ஏறக்குறைய தொடர்ந்து இருந்து வருகிறது, இது 1990களின் இறுதியில் மற்றும் 2000களின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் ஒரு புதிய பயன்பாட்டு உச்சநிலையை எட்டியது, அத்துடன் இங்கிலாந்திலும் கடந்த சில வருடங்களில் மிகவும் கூடுதலான பிரபலமுற்றிருக்கிறது.

வயது, மக்களமைப்பு, பொருளாதார, சமூக, அரசியல், மத, மற்றும் வாழ்க்கைத்தர ரீதியாக அனைத்து சமூகத் தட்டுகளிலும் கோகோயின் பயன்பாடு நீக்கமற நிறைந்திருக்கிறது.

அமெரிக்க கோகோயின் சந்தையின் மதிப்பு 2005 ஆம் ஆண்டுக்கான தெரு மதிப்பில் $70 பில்லியன்களைத் தாண்டி விட்டது, ஸ்டார்பக்ஸ்[19][20] போன்ற கார்பரேஷன்களின் வருவாயைத் தாண்டியதாகும் இது. அமெரிக்க சந்தையில், குறிப்பாக மணமாகாதவர்கள் மற்றும் தனக்கென வருவாய் கொண்ட தொழில் செய்வோர் போன்ற ஆடம்பர செலவுக்கு பணம் கொண்டிருக்கும் வகையில் சம்பாதிப்போரிடையே, கோகோயின் தேவை நிறைய இருக்கிறது. ஒரு கிளப் மருந்தாக கோகோயினின் அந்தஸ்து "பார்ட்டி பிரியர்களிடம்" பெரும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது.

1995 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பும் (WHO) ஐநா பிராந்தியங்களுக்கு இடையிலான குற்றம் மற்றும் நீதி ஆய்வு நிறுவனமும் (UNICRI) உலகளாவிய அளவில் கோகோயின் பயன்பாடு குறித்து இதுவரை எடுக்கப்பட்டுள்ளவற்றுள் மிகப் பெரியதொரு ஆய்வின் முடிவுகளை ஒரு பத்திரிகை செய்தியில் வெளியிட்டன. ஆயினும், உலக சுகாதார சபையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு இந்த ஆய்வை வெளியிடுவதை தடை செய்தது. "மருந்துகள் தொடர்பான WHO நடவடிக்கைகள் நிரூபணமான போதை மருந்து கட்டுப்பாட்டு அணுகுமுறைகளை வலுப்படுத்த தவறினால், தொடர்புபட்ட திட்டங்களுக்கு நிதியாதாரம் குறைக்கப்படும்" என்று பி கமிட்டியின் ஆறாவது கூட்டத்தில் அமெரிக்க பிரதிநிதி அச்சுறுத்தினார். இதனையடுத்து இந்த வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டது. ஆய்வின் ஒரு பகுதி மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது.[21] 20 நாடுகளில் கோகோயின் பயன்பாடு குறித்த விவரங்கள் தான் கிடைத்திருக்கிறது.

சட்டவிரோதமான கோகோயின் பயன்பாட்டின் ஒரு சிக்கல், அதிலும் அலுப்பை நீக்க (உற்சாகத்தை அதிகப்படுத்துவதைக் காட்டிலும்) வெகு காலம் பயன்படுத்தி வருபவர்களால் உயர்ந்த அளவில் பயன்படுத்துகிற சமயங்களில், என்னவென்றால் கலப்படம் செய்யப்படும் பொருட்களால் உருவாகும் சேர்மங்களால் உண்டாகும் துர் விளைவுகள் அல்லது சேதார அபாயமாகும். ஊசியால் செலுத்தப்படும்போது தோன்றும் விளைவுகளைத் தூண்ட சில சேர்மங்களை உடைத்தல் (கட்டிங்) அல்லது "ஸ்டாம்பிங்" என அழைக்கப்படும் வகையில் படிகங்களாக அல்லது பொடியாகக் கலப்பது சாதாரண நிகழ்வாக இருக்கிறது, வலிமையான மரத்த உணர்வு என்பது வலிமையான மற்றும்/அல்லது தூய கோகோயினின் விளைவு தான் என்று பல பயனாளிகள் நம்புவதால் தற்காலிக மயக்கத்தை உண்டுபண்ணும் நோவோகேய்ன் (புரோகேய்ன்), எபிடெரின் அல்லது இதே போன்ற தூண்டிகள் சேர்க்கப்படுகின்றன, இவை இதயத் துடிப்பை அதிகமாக்கும் சக்தி படைத்தவையாகும். லாப நோக்கத்திற்காக பொதுவாக செயலற்ற சர்க்கரைகள் தான் கலப்படம் செய்யப்படும், மானிடோல், கிரியேடின் அல்லது குளுகோஸ் ஆகியவை இந்த வகைகளாகும், எனவே செயலாக்கமிக்க கலப்படப் பொருட்களைக் கலப்பது தூய்மையாய் இருப்பதாக அல்லது 'நீட்டிக்கும் சக்தி பெற்றதாக' ஒரு மாயை அளிப்பதால் ஒரு விற்பனையாளர் கலப்படமில்லா பொருளை விட அதிகமாய் அதனை விற்பனை செய்ய முடியும். சர்க்கரையைக் கலப்படம் செய்வதும் தூய்மைக்கான தோற்றத்தை அளிப்பதால் விற்பவர் அதனை அதிக விலைக்கு விற்க முடிகிறது, கலப்படப் பொருட்கள் விலை மலிவானவை என்பதால் இதன் மூலம் விற்பவர் பெருத்த லாபம் பார்க்கிறார். கோகோயின் வியாபாரம் அநேக நீதி எல்லைகளுக்குள் பெரும் அபராதங்களைக் கோருவதாக இருப்பதால் விற்பவர்கள் தூய்மை குறித்து ஏமாற்றி மிக உயர்ந்த லாபத்தைப் பார்ப்பதென்பது இத்துறையில் இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டில் போதை மருந்துகள் மற்றும் போதை மருந்துக்கு அடிமையாதலுக்கான ஐரோப்பிய கண்காணிப்பு அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில் தெருவில் வாங்கப்படும் கோகோயினின் தூய்மை அளவுகள் பெரும்பாலும் 5%க்கும் கீழ் இருந்ததாகவும் சராசரியாக 50% க்கும் கீழான தூய்மையுடன் தான் சந்தையில் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது.[22]

உயிரியல் தொகுப்புமுறை

கோகோயின் மூலக்கூறின் முதலாவது கூட்டுச்சேர்க்கையும் விளக்கசோதனையும் 1898ஆம் ஆண்டில் ரிச்சர்டு வில்ஸ்டாட்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.[23] வில்ஸ்டாட்டரின் கூட்டுச்சேர்க்கை கோகோயினை ட்ரோபினோனில் இருந்து தருவித்தது. அப்போது தொடங்கி, ராபர்ட் ராபின்சனும் எட்வர்டு லீடெயும் கூட்டுச்சேர்க்கை வகைமுறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஆற்றியுள்ளனர்.

N -மெத்தில்-பைரோலினியம் எதிர்மின் அயனியின் உயிரியல் கூட்டுச்சேர்க்கை

N-மெத்தில்-பைரோலினிய எதிர்மின் அயனியின் உயிரியல் கூட்டுச் சேர்க்கை

உயிரியல் கூட்டுச்சேர்க்கை L-க்ளுடமைனில் இருந்து துவங்குகிறது, இது தாவரங்களில் L-ஒர்னிதைனாக தருவிக்கப்படுகிறது. ட்ரோபேன் வளையத்திற்கு முன்னறிவிப்பாக L-ஒர்னிதைன் மற்றும் L-அர்ஜினைனின் பெரும் பங்களிப்பை எட்வர்ட் லீடெ உறுதிப்படுத்தினார்.[24] அதன்பின் ஒர்னிதைன் பைரிடாக்ஸல் பாஸ்பேட் சார்ந்த டிகார்பாக்ஸிலேஷனுக்கு உட்பட்டு ப்யுட்ரெசைனை உருவாக்குகிறது. ஆயினும், விலங்குகளில் யூரியா சுழற்சியானது ஒர்னிதைனில் இருந்து ப்யுட்ரெஸைனை தருவிக்கிறது. L-ஒர்னிதைன் L-அர்ஜினைன் ஆக மாற்றப்படுகிறது,[25] அது பின் பிஎல்பி வழியாக டிகார்பாக்ஸிலேட் செய்யப்பட்டு அக்மடைன் உருவாக்குகிறது. ஐமைனின் நீர்ப்பகுப்பு N -கார்பமோயில்ப்யுட்ரெசைனைத் தருவிக்கிறது, இதனைத் தொடர்ந்து யூரியாவின் நீர்ப்பகுப்பு ப்யுட்ரெசைனை உருவாக்குகிறது. தாவரங்களிலும் விலங்குகளிலும் ஒர்னிதைனை ப்யுட்ரெசைனாக மாற்றும் தனித்தனியான பாதைகள் ஒருங்குபட்டிருக்கின்றன. ப்யுட்ரெசைனின் ஒரு SAM-சார்ந்த N -மெத்திலேஷன் N -மெத்தில்ப்யுட்ரெசைன் தயாரிப்பைக் கொடுக்கிறது, அது அதன்பின் டையமின் ஆக்ஸிடேஸ் செயல்பாட்டினால் ஆக்ஸிடேடிவ் டியமைனேஷனுக்கு ஆட்பட்டு அமினோஅல்டிஹைடைக் கொடுக்கிறது. ஸ்கிஃப் கார உருவாக்கமானது N -மெத்தில்-Δ1-பைரோலினியம் எதிர்மின் அயனியின் உயிரியல் கூட்டுச்சேர்க்கையை உறுதிப்படுத்துகிறது.

கோகோயினின் உயிரியல் கூட்டுச்சேர்க்கை

கோகோயினின் உயிரியல் கூட்டுச்சேர்க்கை

கோகோயின் கூட்டுசேர்க்கைக்கான கூடுதல் கார்பன் அணுக்கள் அசிடைல்-CoA இல் இருந்து தருவிக்கப்படுகிறது, இரண்டு அசிடைல்-CoA அலகுகளை N -மெத்தில்-Δ1-பைர்ரோலினியம் எதிர்மின் அயனி[26] உடன் சேர்ப்பதன் மூலம் இது நிகழ்கிறது. முதல் சேர்க்கை மானிச்-போன்ற வேதிவினையாகும், இதில் அசிடைல்-CoA இல் இருந்தான எனோலேட் நேர் அயனி பைரோலினியம் எதிர் அயனியை நோக்கி ஒரு நியூக்ளோபைல் ஆக செயல்படுகிறது. இரண்டாவது சேர்க்கை ஒரு கிளெய்சென் சுருங்குதல் நிகழ்முறை மூலம் நிகழ்கிறது. இது கிளெய்சென் சுருங்குதல் மூலம் தியோஸ்டர்களை தக்க வைத்து 2-பதிலீடு செய்யப்பட்ட பைரோலிடைனின் ஒரு ரேஸ்மிக் கலவையை உருவாக்குகிறது. ரேஸ்மிக் எத்தில் [2,3-13C2]4(Nமெத்தில்-2-பைரோலிடைனைல்)-3-ஆக்ஸோப்யூடனோட் இல் இருந்து ட்ரோபினோன் உருவாக்கத்தில்எந்த ஸ்டீரியோஐஸோமெருக்கும்[27] விருப்பத்தெரிவு இருப்பதில்லை. ஆயினும், கோகோயின் உயிரியல் கூட்டுச்சேர்க்கையில், (S)-எனான்டியோமெர் மட்டுமே கோகோயின் ட்ரோபேன் வளைய அமைப்பை உருவாக்க சுழற்சியுற முடியும். இந்த வேதிவினையின் ஸ்டீரியோதெரிவானது ப்ரோகைரல் மெத்திலீன் ஹைட்ரஜன் பகுப்பாய்வு[28] மூலமாக இன்னும் ஆய்வு செய்யப்படுகிறது. C-2[29] இல் இருக்கும் கூடுதல் கைரல் மையம் தான் இதன் காரணம். இது ஒரு ஆக்சிஜனேற்ற நிகழ்முறை மூலம் நிகழ்கிறது, பைரோலினியம் எதிர் அயனியையும் ஒரு எனோலேட் நேர் அயனியையும் உருவாக்கி, ஒரு மூலக்கூறுக்குள்ளான மானிச் வேதிவினையை இது மீண்டும் உருவாக்குகிறது. ட்ரோபேன் வளைய அமைப்பு நீர்ப்பகுப்பு, SAM-சார்ந்த மெத்திலாக்கம் மற்றும் NADPH வழியான குறைப்புக்கு உட்பட்டு மெத்திலெகோனைனை உருவாக்குகிறது. கோகோயின் டயஸ்டரை உருவாக்குவதற்கு தேவையான பென்சோயில் பகுதிக் கூறு சினமிக் அமிலத்தின்[30] வழியாக பினைலானைனில் இருந்து கூட்டுச்சேர்க்கை செய்யப்படுகிறது. பென்சோயில்-CoA பின் கோகோயினை உருவாக்க அந்த இரண்டு அலகுகளையும் ஒன்றுசேர்க்கிறது.

ராபர்ட் ராபின்சனின் அசெடோனெடிகார்போக்ஸிலேட்

ட்ரோபேனின் ராபின்சன் கூட்டுச் சேர்க்கை

ஆயினும், ட்ரோபேன் அல்கலாய்டின் உயிரியல் கூட்டுச்சேர்க்கை இன்னும் உறுதிப்படாததாய் தான் இருக்கிறது. ராபின்சனின் அசெடோனெடிகார்போக்ஸிலேட் இந்த வேதிவினையின்[31] ஒரு சாத்தியமான இடைப்பொருளாக எழுவதாக ஹெஸ்செய்டிட் முன்மொழிகிறார். N -மெத்தில்பைரோலினியம் மற்றும் அசெடோனெடிகார்போக்ஸிலேட்டின் சுருக்கமானது ஆக்ஸோப்யூடிரேட்டை உருவாக்கும். டிகார்பாக்ஸிலேஷன் ட்ரோபேன் அல்கலாய்டு உருவாக்கத்திற்கு இட்டுச் செல்கிறது.

ட்ரோபினோன் ஆக்சிஜனிறக்கம்

ட்ரோபினோன் ஒடுக்கம்

ட்ரோபினோன் ஆக்சிஜனிறக்கம் NADPH-சார்ந்த ரிடக்டேஸ் என்சைம்களால் மத்தியஸ்தம் செய்யப்படுகிறது, இவை பல் தாவர இன வகைகளில்[32] குணநலம் காட்டப் பெற்றுள்ளது. இந்த தாவர வகைகள் அனைத்தும் ட்ரோபினோன் ரிடக்டேஸ் I மற்றும் ட்ரோபினோன் ரிடக்டேஸ் II ஆகிய இரண்டு வகையான ரிடக்டேஸ் என்சைம்களைக் கொண்டிருக்கின்றன. ட்ரோபினோன் ரிடக்டேஸ் I ட்ரோபைனையும் ட்ரோபினோன் ரிடக்டேஸ் II சூடோட்ரோபைனையும் உருவாக்குகின்றன. என்சைம்களின் மாறுபட்ட இயக்க மற்றும் pH/செயல்பாட்டு குணநலன் காரணமாகவும், ட்ரோபினோன் ரிடக்டேஸ் II -ஐ விட ட்ரோபினோன் ரிடக்டேஸ் I 25 மடங்கு பெரிய செயல்பாடு கொண்டதாய் இருப்பதாலும், ட்ரோபினோன் ஆக்சிஜனிறக்கத்தில் பெரும்பான்மையாக ட்ரோபினோன் ரிடக்டேஸ் I இல் இருந்து ட்ரோபின்[33] உருவாவதற்கு தான் இருக்கிறது.

மருந்தியல்

தோற்றம்

கோகோயின் ஹைட்ரோகுளோரைடின் குவிப்பு
அழுத்தப்பட்ட கோகோயின் துகளின் ஒரு துண்டு

கோகோயின் தூய வடிவத்தில் முத்தைப் போல் வெண்மையாய்க் காட்சியளிக்கும். தூள் வடிவத்தில் காணப்படும் கோகோயின் ஒரு உப்பாகும், இது பொதுவாக கோகோயின் ஹைட்ரோகுளோரைடு ஆக இருக்கும் (CAS 53-21-4). தெருச் சந்தைகளில் விற்கப்படும் கோகோயின் பல சமயங்களில் எடையை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு தூள்களைக் கொண்டு கலப்படம் செய்யப்படுகிறது; இந்த கலப்பட செயல்பாட்டில் பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்களாவன: சமையல் சோடா; லாக்டோஸ், டெக்ஸ்ட்ரோஸ், இனோஸிடால், மற்றும் மானிடோல் போன்ற சர்க்கரைகள்; அத்துடன் லிடோகெயின் அல்லது பென்சோகெயின் போன்ற உடல்பகுதிக்கான மயக்கமருந்துகள், இவை சீதச் சவ்வுகளில் கோகோயின் மரக்கச் செய்யும் விளைவை ஆற்றுகின்றன அல்லது அதற்கு வலுச் சேர்க்கின்றன. மீத்தாம்பெடாமைன் போன்ற மற்ற தூண்டுபொருட்களும் கோகோயினில் ”கலக்க”ப்படலாம்.[34] கலப்படம் செய்த கோகோயின் பெரும்பாலும் வெண்மையாக, அல்லது வெளிர் நிறத்தில் அல்லது இளஞ்சிவப்பு நிறமாய் இருக்கும்.

”கிராக்” கோகோயினின் நிறமானது பல்வேறு காரணிகளைச் சார்ந்ததாகும், பயன்படுத்தப்படும் கோகோயினின் மூலம், தயாரிப்பு முறை - அம்மோனியா கொண்டா அல்லது சமையல் சோடா கொண்டா என்பது - மற்றும் கலப்படப் பொருட்களின் இருப்பு ஆகியவை இந்தக் காரணிகளில் அடக்கம், ஆயினும் வெள்ளை நிறத்தில் இருந்து மஞ்சள் க்ரீம் நிறம் வரையிலோ அல்லது மெல்லிய பழுப்பு நிறம் வரையிலோ மாறுபடுவதாய் இந்த நிறம் அமையும். கலப்படப் பொருட்கள், துகளாக்கிய கோகோயினின் மூலம் மற்றும் தயாரிப்பு நிகழ்முறை, மற்றும் காரத்தை மாற்றும் வழிமுறை ஆகியவற்றைப் பொறுத்து இதன் இழைமம் அமைந்திருக்கும். நொறுங்கத்தக்கதாய் இருக்கும் இழைமமாக, சில சமயங்களில் அதீதமாய் எண்ணெய் போல் இருப்பதில் இருந்து, கடினமாக ஏறக்குறைய படிக தன்மையுடையதாய் இருப்பது வரை இது மாறுபடும்.

கோகோயினின் வடிவங்கள்

உப்புகள்

கோகோயினும் மற்ற பல அல்கலாய்டுகள் போன்றே, ஹைட்ரோகுளோரைடு (HCl) மற்றும் சல்பேட் (-SO4) போன்ற பல வேறுபட்ட உப்புகளை உருவாக்கலாம். வெவ்வேறு உப்புகள் கரைப்பான்களில் வெவ்வேறு கரையும் நிலையைப் பெற்றுள்ளன. இதன் ஹைட்ரோகுளோரைடு, மற்ற பல அல்கலாய்டு ஹைட்ரோகுளோரைடு போன்றே போலார் தன்மையுடனும் நீரில் கரைவதாயும் இருக்கிறது.

அடிப்படை

பெயர் குறிப்பிடுவது போல, “ஃப்ரீபேஸ்” என்பது கோகோயினின் உப்பு வடிவம் போல் இல்லாமல் தூய்மையான கார வடிவமாகும். ஹைட்ரோகுளோரைடு உப்பு நீரில் கரைவதாக இருக்கிற சமயத்தில் இது நடைமுறையளவில் நீரில் கரையாததாகும்.

ஃப்ரீபேஸ் கோகோயினை புகைப்பது பொருளானது பைரோலிஸிஸ் நிகழ்முறைக்குள்ளாவதால் பயனரின் அமைப்புக்குள் மெத்திலெகோனைடினை வெளியிடும் கூடுதல் விளைவையும் கொண்டிருக்கிறது (இது தூள் வடிவ கோகோயினை உறிஞ்சும்போதோ அல்லது உட்கொள்ளும்போதோ ஏற்படாத ஒரு பக்க விளைவாகும்). மெத்திலெகோனைடின் நுரையீரல் திசுக்கள்[35] மற்றும் கல்லீரல் திசுக்களில்[36] ஏற்படுத்தும் விளைவுகளின் காரணமாக மற்ற வகைகளில்[37] எடுத்துக் கொள்வதை விட ஃப்ரீபேஸ் கோகோயினை புகைப்பது தான் கூடுதலாய் இருதயத்திற்கு அபாயம் பயக்கக் கூடியது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

தூய கோகோயினானது, அதன் கூட்டுச்சேர்க்கை உப்பினை ஒரு கார கரைசல் கொண்டு சமன்படுத்தி அயனிப்பகுப்புத் திறனற்ற அடிப்படை கோகோயினாக வீழ்படிவுறுகிறது. இது மேலும் நீர்-கரைப்பான் திரவம்-திரவம் பிழிவு மூலம் கூடுதலாக சுத்திகரிக்கப்படுகிறது.

கிராக் கோகோயின்

கிராக் கோகோயினை ஒரு பெண் புகைக்கிறார்.

கிராக் என்பது ஃப்ரீபேஸ் கோகோயினின் குறைவான தூய்மையுடனான வடிவமாகும், இது சோடியம் பைகார்பனேட் கலந்திருக்கிறது. ஃப்ரீபேஸ் மற்றும் கிராக் இரண்டும் பல சமயங்களில் புகைப்பதன் மூலம் பயன்படுத்தப்படுகிறது.[38] கலப்படமுற்று தூய்மையற்ற நிலையில் இருக்கும் கோகோயினை சூடுபடுத்தும்போது உருவாகும் வெடிக்கும் சப்தத்தில் இருந்து தான் (அதனால் தான் “கிராக்” என்கிற ஒலிவார்த்தை) இந்த பெயர் தோன்றியது.[39]

கோகோ இலை சாறுகள்

உலகின் மற்ற பகுதிகளில் மூலிகை மருந்து வடிசாறுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறதோ அதேபோல கோகோ-இலை உற்பத்தி செய்யும் நாடுகளில் கோகோ மூலிகை வடிசாறுகள் (கோகோ தேநீர் என்றும் குறிப்பிடப்படுகிறது) பயன்படுத்தப்படுகின்றன. ”கோகோ தேநீராக”ப் பயன்படுத்த உலர்ந்த கோகோ இலைகளை வடிகட்டி பைகளின் வடிவத்தில் சுதந்திரமாக சட்டப்பூர்வமாக வர்த்தகமயப்படுத்துவதை, பெரு மற்றும் பொலிவிய அரசாங்கங்கள் மருத்துவ சக்திகள் கொண்ட ஒரு பானமாக பல ஆண்டுகளாக செயலூக்கத்துடன் ஊக்கப்படுத்தி வருகின்றன. பெரு நாட்டில் குஸ்கோ (Cuzco) நகரத்திற்கும், பொலிவியாவில் லா பாஸ் (La Paz) நகரத்திற்கும் வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கோகோ இலை வடிநீர் கொடுத்து (முழுக்க கோகோ இலைகள் கொண்ட தேநீர் பாத்திரங்களில் தயாரிக்கப்படுகிறது) வரவேற்பு அளிக்கப்படுகிறது, புதிதாக வரும் பயணிகளுக்கு உயர்ந்த முகட்டு உபாதையின் சுகவீனத்தைப் போக்க உதவும் நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்படுகிறது. கோகோ தேநீர் அருந்துவதன் விளைவுகள் லேசான தூண்டலையும் உற்சாக அதிகரிப்பையும் கொடுக்கிறது. இது வாயில் குறிப்பிடத்தக்க மரத்த உணர்வையும் ஏற்படுத்துவதில்லை, அத்துடன் கோகோயினை நாசிவழி இழுப்பது போல ஒரு துரித மாற்ற உணர்வையும் ஏற்படுத்துவதில்லை. இந்த தயாரிப்பு குறித்த அவப்பெயரைத் தடுக்கும் பொருட்டு, இதனை விளம்பரப்படுத்துவோர், ’கோகோ இலை வடிசாறை பருகுவதால் வரும் விளைவுகளில் அநேகமானவை இரண்டாம்நிலை அல்கலாய்டுகளால் தான் தோன்றுகின்றன, இந்த அல்கலாய்டுகள் தூய கோகோயினில் இருந்து அளவில் மட்டுமல்லாது அல்லது பண்பிலும் மாற்றத்தை தோற்றுவிக்கின்றன’ என்பதான நிரூபிக்கப்படாத கருத்தை விளம்பரப்படுத்துகின்றனர்.

கோகோயின் பழக்கத்திற்கு அளிக்கப்படும் சிகிச்சையில் துணைபுரியும் பொருளாக இது விளம்பரப்படுத்தப்படுகிறது. பெரு நாட்டின் லிமா நகரில் கோகோ-பேஸ்ட் புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களைக் குணப்படுத்த மனநல ஆலோசனையுடன் சேர்த்து கோகோ இலை வடிசாறும் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சைக்குரிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மீளமுடியாமல் அப்பழக்கத்தை தொடர்வது என்பது கோகோ தேநீர் உடனான சிகிச்சைக்கு முன்னதாக மாதத்திற்கு சராசரியாய் நான்கு முறை என்பதாக இருந்ததில் இருந்து சிகிச்சை சமயத்தில் மாதத்திற்கு ஒன்று என்பது வரை குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு முன்னதாக பழக்கத்தை தவிர்க்க இயன்ற நாட்கள் சராசரியாக 32 என இருந்தது சிகிச்சை சமயத்தில் சராசரியாக 217 நாட்கள் என அதிகரித்தது. இந்த முடிவுகள் எல்லாம், கோகோயின் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு அளிக்கப்படும் மறுவாழ்வு சிகிச்சையில் கோகோ இலை வடிநீர் உடன் மனநல ஆலோசனைகள் இரண்டும் கொடுப்பது பயனளிக்கும் வழிமுறையாக இருக்கிறது என்பதாக எடுத்துக்காட்டுகின்றன.[40] முக்கியமாக, கோகோ இலை வடிநீர்களில் பிரதான மருந்தியல் செயலூக்க சிதைமாற்ற பொருளாக இருப்பது உண்மையில் கோகோயினே அன்றி இரண்டாம் நிலை அல்கலாய்டுகள் அல்ல என்பதை இந்த முடிவுகள் உறுதியுடன் எடுத்துக் காட்டுகின்றன.

ஒரு கோப்பை கோகோ இலை வடிநீரைப் பருகிய சில மணி நேரத்தில் அந்த மனிதரின் சிறுநீரில் கோகோயின் சிதைமாற்றப் பொருளான பென்சோயிலெகோனைனைக் கண்டறிய முடியும்.

பயன்படுத்தும் வழிகள்

வாய்வழி

சமையல் சோடா, கோகோயின் மற்றும் கொஞ்சம் நீர் கொண்ட ஒரு கரண்டி. ”ஏழையின்” கிராக் கோகோயின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.

பல பயனர்கள் இந்த தூளை ஈறு வரிசையில் தேய்க்கிறார்கள், அல்லது ஒரு சிகரெட் ஃபில்டரில் திணித்து புகைக்கிறார்கள், இது ஈறுகளையும் பற்களையும் மரக்கச் செய்கிறது - இதனால் தான் இதற்கு பேச்சுவழக்கில் “நம்பீஸ் (numbies)”, "கம்மர்ஸ் (gummers)" அல்லது "கோகோ பஃப்ஸ் (cocoa puffs)" ஆகிய பெயர்கள் வழங்கப்படுகின்றன. உறிஞ்சியதின் பின் ஒரு மேற்பரப்பில் எஞ்சியிருக்கும் கோகோயின் சிறு அளவைக் கொண்டு தான் இது பெரும்பாலும் செய்யப்படுகிறது. வாய்வழி உட்கொள்ளும் இன்னொரு முறையாக கொஞ்சம் கோகோயினை ஒரு சுருட்டைக் காகிதத்துக்குள் வைத்து, அதனை விழுங்கும் முறை உள்ளது. இது சில சமயங்களில் “ஸ்னோ பாம் (snow bomb)" என்று அழைக்கப்படுவதுண்டு.

கோகோ இலை

கோகோ இலைகள் பொதுவாக ஒரு காரப் பொருளுடன் (சுண்ணாம்பு போன்று) கலந்து மடித்துத் திணிக்கப்பட்டு மென்று சுவைக்கப்படுகிறது, ஈறுகளுக்கும் கன்னத்திற்கும் இடையில் தொடர்ந்து இருக்கும் நிலையில் (புகையிலை சுவைப்பதில் இருப்பது போலவே), இதன் சாறு உறிஞ்சப்படும். இந்த சாறு மெதுவாக கன்னத்தின் உள்பகுதி சவ்வினால் உறிஞ்சப்பட்டு பின் விழுங்கப்படும் போது இரைப்பை குடல் பாதையின் வழியே உறிஞ்சப்படுகிறது. மற்றொரு வகையில், கோகோ இலைகள் ஒரு திரவத்தில் அமிழ்த்தப்பட்டு தேநீர் போல் பருகப்படலாம். கோகோ இலைகளை விழுங்குவது என்பது பொதுவாக கோகோயின் பயன்பாட்டின் திறம்பட்டதல்லாத வழியாகும். கோகோ இலை நுகர்வை ஆதரிப்போர், அது முழுதாய் கோகோயின் அல்ல என்பதால் அதனை சட்டவிரோத போதைமருந்தாய் கருதி குற்றமாக்கக் கூடாது என்று வாதிடுகின்றனர். கோகோயின் நீர்ப்பகுப்பு செய்யப்பட்டு அமில வயிற்றில் செயலற்ற நிலையில் வழங்கப்படுவதால், தனியாக விழுங்கப்படும்போது அது உடனடியாக உறிஞ்சப்படுவதில்லை. (சுண்ணாம்பு போன்ற) ஒரு உயர்ந்த காரப் பொருளுடன் கலந்து பயன்படுத்தப்படும்போது தான் வயிற்றில் அது ரத்த ஓட்டத்துடன் கலக்க முடியும். வாய்வழி உட்கொள்ளப்படும் கோகோயின் திறம்பட உறிஞ்சப்படுவதை இன்னும் இரண்டு கூடுதல் காரணிகள் வரம்புபடுத்துகின்றன. முதலாவதாக, மருந்தின் ஒரு பகுதி கல்லீரலால் சிதைமாற்றத்திற்கு ஆளாக்கப்படுகிறது. இரண்டாவதாக, மருந்து படுகையில் வாய் மற்றும் உணவுக்குழாயில் இருக்கும் ரத்ததந்துகிகள் சுருங்குவதால் மருந்து உறிஞ்சப்படும் மேற்பரப்பு பகுதியின் அளவும் குறைகிறது. ஆயினும், கோகோ இலை கலந்த ஒரு கோப்பை அருந்தியவராயிருந்தாலும் அவரது சிறுநீரில் கோகோயின் சிதைமாற்றப் பொருட்களைக் கண்டறிய முடியும். எனவே, திறம்பட்டதல்ல என்றாலும் கோகோயின் உட்கொள்ளலில் இதுவும் ஒரு கூடுதல் வடிவமாகவே கருதப்படுகிறது.

வாய்வழி உட்கொள்ளப்படும் கோகோயின் ரத்த ஓட்டத்தில் கலக்க ஏறத்தாழ 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. பொதுவாக, வாய் வழி உட்கொள்வதில் மூன்றில் ஒரு பங்கு தான் உறிஞ்சப்படுகிறது, ஆயினும் கட்டுப்படுத்தப்பட்ட அமைவுகளில் உறிதல் 60% வரை எட்டியிருப்பதாக காண்பிக்கப்பட்டுள்ளது. உறியப்படுவதின் குறைவான விகிதத்தால், கோகோயின் உள்ளே சென்ற பின் சுமார் 60 நிமிடங்களில் அதிகப்பட்ச உடலியல் மற்றும் மனோவியல் விளைவுகள் எட்டப்படுகின்றன. இந்த விளைவுகளின் தோற்றம் மெதுவாய் அரும்பினாலும், இந்த விளைவுகள் அவற்றின் உச்சத்தை எட்டியதில் இருந்து சுமார் 60 நிமிடங்கள் வரை நீடித்திருக்கும்.

பொதுவாக நம்பப்படுவதற்கு மாறாய், வாய் வழியாய் எடுத்துக் கொண்டாலும் மூச்சின் வழி உறிஞ்சினாலும் ஏறக்குறைய ஒரே அளவு மருந்து தான் உறிஞ்சப்படுகிறது: 30 முதல் 60%. வாய்வழி உட்கொள்ளப்படுவதைக் காட்டிலும் மூச்சு வழி உறிஞ்சப்படும் கோகோயின் உச்சகட்ட மருந்து விளைவுகளை துரிதத்தில் எட்ட வகைசெய்கிறது. கோகோயினை மூக்கின் வழி உறிஞ்சும்போது, உச்சகட்ட உடலியல் விளைவுகள் 40 நிமிடங்களுக்குள்ளாகவும் அதிகப்பட்ச மனோவியல் விளைவுகள் 20 நிமிடங்களுக்குள்ளாகவும் எட்டப்படுகிறது, ஆயினும் உண்மையான செயல்பாட்டு துவக்கம் 5 முதல் 10 நிமிடங்களில் துவங்குகிறது, இது கோகோயினை வாய்வழி உட்கொள்வதற்கு ஒத்த அளவாகவே இருக்கிறது. நாசித் துவாரங்கள் வழி உறிஞ்சப்பட்ட கோகோயினின் விளைவுகள் உச்சகட்ட விளைவுகள் எட்டப்பட்ட பின் சுமார் 40 - 60 நிமிடங்களுக்கு நீடிக்கிறது.[41]

கோகோ தேநீர் அல்லது கோகோ-இலை நீர் என்பது மரபு வழியான கோகோயின் நுகர்வு முறைகளில் ஒன்றாக உள்ளது, பெரு மற்றும் பொலிவியா போன்ற கோகோ உற்பத்தி செய்யும் நாடுகளில் உயரமான இடத்தில் இருப்பதால் வரும் உபாதைகளின் சில அறிகுறிகளைக் குறைக்க இது பல சமயங்களில் பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த முறை நுகர்வு என்பது பல நூற்றாண்டுகளாக தென் அமெரிக்காவின் பூர்வீக பழங்குடியினரால் பின்பற்றப்பட்டு வரும் ஒரு முறையாகும். பல்வேறு குடியேற்றங்களுக்கிடையே பல நாட்கள் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டியிருக்கும் செய்தித்தூதர்களாக வேலை செய்தவர்களுக்கு சக்தியை அதிகப்படுத்துவதும் அயற்சியைக் குறைப்பதும் பழங்கால கோகோ நுகர்வுக்கான காரணங்களில் ஒன்றாய் இருந்தது.

1986 ஆம் ஆண்டில் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் ஜர்னலில் வெளியான ஒரு கட்டுரை, அமெரிக்க சுகாதார உணவு ஸ்டோர்களில் உலர்த்திய கோகோ இலைகள் "ஹெல்த் இன்கா டீ" தயாரிக்கப்படுவதற்கு விற்பனை செய்யப்பட்டதை வெளிப்படுத்தியது.[42] "கோகோயின் நீக்கம்" செய்யப்பட்டிருப்பதாக உறையில் இருந்த விவரம் தெரிவித்தாலும், அப்படி ஒரு நிகழ்முறை உண்மையில் செய்யப்பட்டிருக்கவில்லை. ஒரு நாளைக்கு இந்த தேநீரை இரண்டு கோப்பை பருகினால் ஒரு லேசான தூண்டலும், இதயத் துடிப்பு அதிகரிப்பும், மனோநிலை உற்சாகமும் கிடைப்பதாகவும், இந்த தேநீர் அடிப்படையில் தீங்கற்றதே என்றும் அந்த கட்டுரை தெரிவித்தது. ஆயினும், ஹவாய், சிகாகோ, இலினாய்ஸ், ஜார்ஜியா மற்றும் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையின் பல பகுதிகளில் இருந்தும் DEA ஏராளமான உற்பத்திப் பெட்டகங்களை பறிமுதல் செய்தது, அத்துடன் அந்த பொருள் கடை அலமாரிகளில் இருந்தும் அகற்றப்பட்டது.

மூக்கு வழி உறிஞ்சுதல்

மூக்கு வழி உறிஞ்சுதல் (பேச்சு வழக்கில் ”ஸ்னார்ட்டிங்,” “ஸ்னிஃபிங்,” அல்லது “ப்ளோயிங்”) என்பது மேற்கத்திய உலகில் பொழுதுபோக்குக்கு பயன்படுத்தப்படும் கோகோயின் தூள் உள்ளிழுப்பின் மிக சாதாரண முறையாக இருக்கிறது. பூசி ஒட்டிய போதை மருந்து புரைகளை மூடிய சீதச் சவ்வுகளால் உறிஞ்சப்படுகிறது. கோகோயின் உள்ளுதலில், நாசி சவ்வுகள் வழியான உறிஞ்சல் சுமார் 30-60% ஆகும், உயர்ந்த டோஸ்கள் அதிகமான உறிஞ்சல் செயல்திறன் அளிக்கும். சீதச் சவ்வுகள் வழியே நேரடியாய் உறிஞ்சப்படாத தூள் சீதத்தில் சேகரமாகும் பின் விழுங்கப்படும் (இந்த “ட்ரிப்”பை சிலர் இனிய அனுபவமாகக் கருதுகிறார்கள், சிலர் அருவெறுப்பாய் கருதுகிறார்கள்). கோகோயின் பயனர்களிடையே நடத்திய ஒரு ஆய்வில்,[43] உச்சகட்ட விளைவுகளை உணர்வதற்கு எடுக்கப்படும் சராசரி நேரம் 14.6 நிமிடங்கள் என கண்டறியப்பட்டது. கோகோயின் பெருமளவில் ரத்தக் குழாய்களை – சுருக்கி விடும் எனவே அந்த பகுதிக்கு பாயும் ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன்/சத்து பாய்வும் – சுருங்கி விடும் என்பது தான் மூக்கின் உட்பகுதிக்கு விளையும் எந்த சேதாரத்திற்கும் காரணமாய் இருக்கிறது.

மூக்கின் வழி இழுப்பதற்கு முன்னதாக, கோகோயின் தூள் நுண்ணிய தூளாய் பொடி செய்யப்பட வேண்டும். வெகு தூய்மையான கோகோயின் மிக எளிதாக நுண்ணிய தூளாய் உடைந்து விடும், விதிவிலக்காக ஈரமுற்று "கட்டிகட்டியாய்" இருந்தால் (சரியாக சேமிக்கப்படாமல்) எளிதில் உடையாது என்பதோடு நாசிவழி உறிஞ்சலின் செயல்திறனையும் பாதிக்கும்.

சுருட்டிய காகிதப்பணம், உள்ளீடற்ற பேனாக்கள், துண்டு வைக்கோல்நார்கள், சாவிக்களின் கூரிய முனைகள், சிறப்பு வடிவமைப்பு கொண்ட ஸ்பூன்கள், நீண்ட நகங்கள், மற்றும் (சுத்தமான) உறிபஞ்சுகள் ஆகியவையே பெரும்பாலும் கோகோயினை மூக்கு வழி உறிஞ்ச பயன்படும் சாதனங்களாக உள்ளன. இத்தகைய சாதனங்களை பயனர்கள் பல சமயங்களில் "டூட்டர்கள்" என்று அழைக்கிறார்கள். பொதுவாக கோகோயின் ஒரு தட்டையான சொரசொரப்பான தளத்தில் (கண்ணாடி, சிடி கேஸ் அல்லது புத்தகம் போன்று) கொட்டப்பட்டு, "கூறுகளாக" "வரிசைகளாக" "தடவாளங்களாக" பிரிக்கப்பட்டு அதன்பின் உள்ளப்படுகிறது.[44] குறுகிய காலத்தில் (மணி நேரங்கள்) ஏற்புவரம்பு துரிதமாய் வளர்ச்சியுறுவதால், பல சமயங்களில் அதிகமான விளைவுகளை உருவாக்க பல வரிசைகளும் உள்ளப்படுகின்றன.

ஊசியை பகிர்ந்து கொள்வதில் இருப்பது போலவே, கோகோயினை உள்ளப் பயன்படும் வைக்கோல்நார்களை பகிர்ந்து கொள்வதும் ஹெபாடிடிஸ் சி போன்ற ரத்த நோய்கள் பரவக் காரணமாகலாம் என்று போன்கோவ்ஸ்கி மற்றும் மேத்தாவின்[45] ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.[46]

அமெரிக்காவில், 1992 காலம் வரையிலும் கூட, கோகோயின் தூள் தொடர்பான குற்றங்களுக்காக பெடரல் அதிகாரிகளால் தண்டிக்கப் பெற்றவர்களில் பலரும் ஹிஸ்பானிக் இனத்தவராய் இருந்தனர்; ஹிஸ்பானிக் அல்லாத வெள்ளையர்கள் மற்றும் ஹிஸ்பானிக் அல்லாத கறுப்பினத்தவரைக் காட்டிலும் அதிகமான ஹிஸ்பானிக் இனத்தவர் கோகோயின் தூள் தொடர்பான குற்றங்களில் தண்டனை பெற்றனர்.[47]

ஊசி வழி

ஊசி வழி மருந்து செலுத்துவதென்பது குறைந்த காலத்தில் ரத்தத்தில் மருந்தின் அளவுகளை அதிகமாய்க் கொண்டுசேர்க்கிறது. உட்கொள்வோருக்கு நேரும் விளைவுகளில், செலுத்திய சில கணங்களில் 2 முதல் 5 நிமிடங்கள் வரை நீடிக்கிற வகையில் காதில் ரீங்காரம் கேட்பது மற்றும் டினிடஸ் & கேட்பு திரிவது ஆகியவை எல்லாம் மற்ற உட்கொள்ளும் வழிமுறைகளில் பொதுவாகக் காணப்படாதவை. இது “மணியடிப்பான்” என பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுவதுண்டு.[48] கோகோயின் பயனர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில்,[43] உட்கொள்வோருக்கு நேரும் விளைவு உச்சத்தை எட்ட எடுத்துக் கொண்ட நேரம் 3.1 நிமிடங்கள் என கண்டறியப்பட்டது. பரவச நிலை துரிதமாய் அகன்று விடுகிறது. கோகோயினின் நச்சு விளைவுகள் தவிர, மருந்தை தூளாக்க பயன்படும் கரையாத பொருட்களில் இருந்து உருண்டையான திரட்சி ரத்தத்தில் உருவாகும் அபாயமும் உள்ளது. ஊசி மூலம் செலுத்தப்படும் எல்லா சட்டவிரோத பொருட்களில் போலவே, இதிலும் சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரைல்) பாதுகாப்பான ஊசி இல்லாதிருந்தாலோ அல்லது பயன்படுத்தப்பட்டிருந்தாலோ, பயனருக்கு ரத்தவழி தொற்றுகள் ஏற்படும் அபாயம் உண்டு.

“ஸ்பீட்பால்” என்று அழைக்கப்படும் ஊசி மூலம் செலுத்தப்படும் கோகோயின் மற்றும் ஹெராயின் கலவை குறிப்பாக பிரபலமான[சான்று தேவை] மற்றும் அபாயமிகுந்த சேர்க்கையாக இருக்கிறது, ஏனெனில் அதிகமாய் எடுத்துக் கொண்டதற்கான அறிகுறிகள் போல் தோன்றினாலும் கூட இந்த மருந்துகளின் எதிர்மறை விளைவுகள் உண்மையில் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்கின்றன. ஜான் பெலுஷி, கிறிஸ் ஃபார்லே, மிட்ச் ஹெட்பெர்க், ரிவர் பீனிக்ஸ் மற்றும் லேய்ன் ஸ்டாலே ஆகிய பிரபலங்கள் உட்பட இதன் காரணத்தால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனைரீதியாக, கோகோயின் போதைப் பழக்கத்தின் அமைப்புவகையை ஆய்வு செய்ய பழ வண்டுகள் போன்ற விலங்குகளுக்கு கோகோயின் ஊசிகள் செலுத்தப்படலாம்.[49]

இன்ஹேலேஷன் (புகைபோடுதல்)

இன்ஹேலேஷன் அல்லது புகைப்பது கோகோயின் எடுத்துக் கொள்ளப்படும் பல்வேறு வழிகளில் ஒன்றாகும். திட கோகோயினை சூடுபடுத்தும்போது வெளியாகும் ஆவியை மூச்சிழுப்பதன் மூலம் கோகோயின் புகைக்கப்படுகிறது.[50] 2000 ஆவது ஆண்டில் கோகோயின் பழக்கமுடைய 32 பேர் பங்குபெற்ற ஒரு ஆய்வு ப்ரூக்ஹேவன் தேசிய ஆய்வகத்தின் மருத்துவத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது, இதில் சராசரியாக 1.4நிமி. +/- 0.5 நிமிடங்களில் ”உச்சம்” எட்டப்பட்டதாக கண்டறியப்பட்டது.[43]

ஃப்ரீபேஸ் அல்லது கிராக் கோகோயின் புகைக்க பெரும்பாலும் ஒரு கண்ணாடி குழாயால் ஆன ஒரு பைப் பயன்படுகிறது, இந்த பைப் பெரும்பாலும் "லவ் ரோசஸ்" எனப்படும் காதல் பரிசுகளாகப் பெயர்பெற்ற காகித ரோஜாக்கள் உடனான சிறு கண்ணாடிக் குழாய்களில் இருந்து எடுக்கப்படுகின்றன.[51] இவை சிலசமயங்களில் "ஸ்டெம்ஸ்", "ஹார்ன்ஸ்", "ப்ளாஸ்டர்ஸ்" மற்றும் "ஸ்ட்ரெய்ட் ஷூட்டர்ஸ்" என்று அழைக்கப்படுகின்றன. சுத்தமான கன தாமிரம் அல்லது சில சமயங்களில் "ப்ரில்லோ" என்றழைக்கப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆன சுரண்டித்தேய்க்கும் அட்டையின் – (உண்மையில் ப்ரில்லோ அட்டைகள் சோப் தான் கொண்டிருக்கும், இவை பயன்படுத்தப்பட மாட்டா) ஒரு சிறு துண்டு, அல்லது "சோர்" (சோர் பாய் பிராண்டு தாமிர தேய் அட்டைகளின் – பெயரால்) ஆக்சிஜன் ஒடுக்க காரமாகவும் பாய்வு மாடுலேட்டராகவும் சேவை செய்கிறது, இதில் "ராக்" உருக்கப்பட்டு ஆவியாக மாற்றப்பட முடியும். ஒரு சோடா கேனில் அடிப்பக்கத்தில் சிறு துளைகளிட்டும் கிராக் புகைபிடிப்போர் சில சமயங்களில் பயன்படுத்துகின்றனர்.

பைப்பின் முனையில் வைத்து கிராக் புகைக்கப்படுகிறது; அதனருகில் நெருப்பு கொண்டுசெல்லப்படும்போது அது ஆவியை உண்டாக்குகிறது, பின் அதனைப் புகைப்பவர் ஆவிபிடித்துக் கொள்கிறார். ஏறக்குறைய புகைத்த உடனேயே உணரத்தக்கதாக இருக்கும் விளைவுகள் மிகத் தீவிரமானதாய் இருப்பதோடு பொதுவாக ஐந்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் – நீடிப்பதில்லை.

புகைக்கையில் சில சமயங்களில் கோகோயின் கனாபிஸ் போன்ற மற்ற மருந்துகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது, பெரும்பாலும் ஒரு இணைப்பில் அல்லது சுருட்டில் சுற்றிக் கொள்ளப்படுகிறது. தூளாக்கப்பட்ட கோகோயினும் சில சமயங்களில் புகைக்கப்படுகிறது, இதில் வெப்பம் வேதிப்பொருளில் பெரும்பாலானவற்றை அழித்து விடுகிறது; புகைப்பவர்கள் இதனை மரிஜூவானா மீது தூவிக் கொள்கிறார்கள்.

வீதி மட்டத்திலான விற்பனையில் அளவு-விலை முறைகள் எப்படி மாறுபடுகிறதோ, அதேபோல் கோகோயின் புகைப்பு சாதனங்கள் மற்றும் நடைமுறைகளும் மாறுபடுகின்றன.

இயற்பியல் இயங்குமுறைகள்

கோகோயின் DAT1 டிரான்ஸ்போர்ட்டருக்கு நேரடியாய் பைண்ட் செய்கிறது, அதனை பாஸ்போரைலேட் செய்து இன்டர்னலைஷேசனை ஏற்படுத்தும் அம்பீடமைன்களைக் காட்டிலும் கூடுதல் திறனுடன் ரீஅப்டேக்கை தடுக்கிறது, பதிலாக DAT ஐ பிரதானமாக வெளியிட்டு (கோகோயின் இவ்வாறு செய்வதில்லை) அதன் ரீஅப்டேக்கை தடுப்பதை இரண்டாம் நிலையான, கோகோயின் மூலமானதைக் காட்டிலும் இன்னும் சிறிய, செயல்பாட்டு வழியில் இன்னொரு வகையில் இவை செய்கின்றன: DATக்கு எதிர் உறுதிப்பாடு/இணக்கநிலையில் இருந்து.

கோகோயினின் மருந்தியல்ரீதியான இயக்கம் நியூரோடிரான்ஸ்மிட்டர்களுக்கு இடையிலான சிக்கலான உறவுகளை அடக்கியிருக்கிறது (எலிகளில் தடுப்பு மோனோஅமின் அப்டேக் அளவுகள் இவ்வாறு உள்ளன: டோபாமைன் = 2:3, செரோடோனின்:நோரிபைன்ப்ரைன் = 2:5[52]) மைய நரம்பு மண்டலத்தில் கோகோயினின் மிகவும் விரிவாக ஆராயப்பட்ட விளைவு டோபமைன் ட்ரான்ஸ்போர்ட்டர் சிஸ்டத்தின் தடுப்பு ஆகும். நியூரல் சிக்னலிங் சமயத்தில் வெளியிடப்படும் டோபமைன் டிரான்ஸ்மிட்டர் பொதுவாக டிராஸ்போர்ட்டர் வழியாக மறுசுழற்சி செய்யப்படுகிறது, அதாவது, டிரான்ஸ்போர்ட்டர் டிரான்ஸ்மிட்டரை பைண்ட் செய்வதோடு அதனை சினாப்டிக் கிளெஃப்டில் இருந்து பம்ப் செய்து மீண்டும் ப்ரீசினாப்டிக் நியூரானுக்கு அனுப்புகிறது, அங்கு அது சேகரிப்பு வெசிகிள்ஸ்க்கு உள் எடுத்துச் செல்லப்படுகிறது. டோபமைன் டிரான்ஸ்போர்ட்டரில் கோகோயின் இறுக்கமாய் பைண்ட் செய்து கொண்டு டிரான்ஸ்போர்ட்டரின் செயல்பாட்டைத் தடுக்கும் ஒரு சேர்க்கையை உருவாக்குகிறது. டோபமைன் டிரான்ஸ்போர்ட்டர் அதன்பின்னும் அதன் ரீஅப்டேக் செயல்பாட்டை மேற்கொள்ளமுடியாது, எனவே டோபமைன் சினாப்டிக் கிளெஃப்டில் பெருகிக் கொண்டு செல்கிறது. இதனால், பெறும் நியூரானின் டோபமைன் ரிசப்டார்களில் டோபமைனர்ஜிக் சிக்னலிங்கின் ஒரு மேம்பட்ட மற்றும் நீடித்த போஸ்ட்சினாப்டிக் விளைவு நிகழ்கிறது. பழக்கமாகி விட்டது போன்ற இடங்களில் நேர்வதான கோகோயினை நெடுநாள் பயன்படுத்தி வருவதென்பது, டோபமைன் ரிசப்டார்களின் டவுன்-ரெகுலேஷன் மற்றும் மேம்பட்ட சிக்னல் டிரான்ஸ்டக்‌ஷன் மூலமாக இயல்பான (அதாவது கோகோயின் அற்ற) டோபமைனர்ஜிக் சிக்னலிங்கின் ஹோமியோஸ்டேடிக் டிஸ்ரெகுலேஷனுக்கு இட்டுச் செல்கிறது. நெடுநாள் கோகோயின் பயன்படுத்தியதால் நேரும் குறைந்து விட்ட டோபமைனர்ஜிக் சிக்னலிங் மனச்சோர்வு மனநிலை குறைபாடுகளுக்கு பங்களிக்க முடியும் மற்றும் இந்த முக்கியமான மூளை ரிவார்ட் சுற்றை கோகோயினின் வலுப்படும் விளைவுகளுக்கு(அதாவது கோகோயின் சுய-நிர்வாகம் செய்யப்படும்போது மட்டும் தான் மேம்பட்ட டோபர்மைனர்ஜிக் சிக்னலிங்) உணர்வுறத்தக்கதாயும் ஆக்கலாம். இந்த உணர்வுறுதல் போதைப் பழக்கம் மற்றும் மீட்சியை நிர்வகிக்க இயலாத தன்மைக்கு பங்களிப்பு செய்யலாம்.

மூளையின் டோபமைன் செறிந்த பகுதிகளான வென்ட்ரல் டெக்மென்டல் பகுதி, நியூக்ளியஸ் ஆகும்பென்ஸ், மற்றும் ப்ரீஃபிரன்டல் கார்டெக்ஸ் ஆகியவை தான் கோகோயின் பழக்க ஆராய்ச்சியின் பெரும்பாலான இலக்குகளாக இருக்கின்றன. வென்ட்ரல் டெக்மென்டல் பகுதியில் துவங்கி நியூக்ளியஸ் ஆகும்பென்ஸில் முடியும் டோபமைனர்ஜிக் நியூரான்களைக் கொண்ட பாதை தான் குறிப்பான கவனம் செலுத்தப்படுவதாய் இருக்கிறது. உணவு மற்றும் செக்ஸ் போன்ற இயற்கை பரிசுகளுக்குக் கூடுதலாக கோகோயின் போன்ற போதை மருந்துகளுக்கும் இது செயல்பாட்டை மறுமொழியளிப்பதாகத் தோன்றுவதால், இந்த துருத்தல் ஒரு "ரிவார்ட் சென்டராக" செயல்படலாம்.[53] ரிவார்ட் மீதான பங்குபெறுபவரின் அனுபவத்தில் டோபமைனின் துல்லியமான பாத்திரம் குறித்து நரம்பியல் விஞ்ஞானிகளுக்கு இடையே சர்ச்சை இருந்தாலும், நியூக்ளியஸ் அகும்பென்ஸில் டோபமைன் வெளியீடு கோகோயினின் ரிவார்டிங் விளைவுகளுக்கு பகுதியேனும் காரணமாக அமைந்திருக்கிறது என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த கருதுகோளானது பெருமளவில் கோகோயினை சுய நிர்வாகம் செய்து கொள்ள பயிற்சியளிக்கப்பட்ட எலிகள் மீதான ஆராய்ச்சியின் ஆய்வகத் தரவினை அடிப்படையாகக் கொண்டதாகும். டோபமைன் அன்டகோனிஸ்டுகளை நேரடியாக நியூக்ளியஸ் அகும்பென்ஸுக்குள் செலுத்தும்போது, கோகோயினை சுயநிர்வாகம் செய்து கொள்ளும் நன்கு பயிற்சி பெற்ற எலிகள் தேய்வுநிலைக்கு (அதாவது ஆரம்பத்தில் பெருகிய முறையில் மறுமொழியளித்து இறுதியில் முழுமையாய் நின்று விடும்) உட்செல்லும், இதன்மூலம் கோகோயின் அதன்பின்னும் போதைமருந்து கோரும் நடத்தையை வலுப்படுத்துவதில்லை (அதாவது ரிவார்டிங்) என்பது தெரிகிறது.

செரடோனின் மீது கோகோயினின் விளைவுகள் (5-ஹைட்ராக்ஸிட்ரைப்டமைன், 5-HT) பல எண்ணிக்கையிலான செரடோனின் ரிசப்டார்களிடையே காண்பிக்கிறது, குறிப்பாக கோகோயின் விளைவுகளுக்கான ஒரு முக்கியமான பங்களிப்பாளராக 5-HT3 இன் ரீ-அப்டேக்கைத் தடுப்பது காட்டப்படுகிறது. கோகோயினுக்கு பழக்கப்படுத்திய எலிகளில் 5-HT3 ரிசெப்டார்கள் மிதமிஞ்சிக் காணப்படுவது இந்தப் பழக்கத்தை வெளிப்படுத்துவதாய் உள்ளது, ஆயினும் இந்த நிகழ்முறையில் 5-HT3 இன் துல்லியமான விளைவு தெளிவின்றி இருக்கிறது.[54] 5-HT2 ரிசப்டார் கோகோயின் பயன்பாட்டில் வெளிப்படுத்தப்படும் மிகைசெயல்பாட்டின் இடமாற்றத்தில் செல்வாக்கை காட்டுகிறது.[55]

மேலே காட்டப்பட்ட சார்ட்டின் இயக்கமுறைக்கு கூடுதலாய், திறந்த வெளிநோக்கி அமைந்திருக்கும் வெளியமைப்பின் மீதான DAT டிரான்ஸ்போர்ட்டரை நேரடியாக ஸ்திரப்படுத்தும் வகையில் கோகோயின் பைண்ட் செய்வது விளங்கப்படுத்தப்பட்டுள்ளது, அதே சமயத்தில் மற்ற தூண்டிகள் (பீனெத்திலமைன்கள்) மூடிய வெளியமைப்பினை ஸ்திரப்படுத்துகின்றன. மேலும், DAT உடன் வரும் ஒரு ஹைட்ரஜன் பாண்டை தடுக்கும் வகையில் கோகோயின் பைண்ட் செய்கிறது, ஆம்பெடமைன் மற்றும் அதுபோன்ற மூலக்கூறுகள் பைண்ட் செய்யப்படும் மற்ற சமயங்களில் அது எவ்வாறாயினும் உருவாகி விடுகிறது. கோகோயின் மூலக்கூறின் இறுக்கமாய்ப் பூட்டிய நோக்குநிலையின் காரணமாக இந்த ஹைட்ரஜன் பாண்ட் உருவாகாத அல்லது உருவாவதில் இருந்து தடுக்கப்படுகிற வகையில் கோகோயினின் பைண்டிங் குணங்கள் அமைந்துள்ளன. டிரான்ஸ்போர்ட்டரில் மூலக்கூறு எங்கு எவ்வாறு பைண்ட் ஆகிறது என்பதில் வெளிவடிவ அமைப்பு மற்றும் பைண்டிங் குணங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் அளவுக்கு பொருள் மீதான விடாப்பழக்கத்தில் டிரான்ஸ்போர்ட்டருக்கான ஈர்ப்பு சம்பந்தப்படவில்லை என்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.[56]

சிக்மா ரிசப்டார்கள் கோகோயினால் பாதிப்புறுகின்றன, ஏனென்றால் கோகோயின் சிக்மா லிகாண்ட் அகானிஸ்ட் ஆக செயல்படுகிறது.[57] NMDA மற்றும் D1 டோபமைன் ரிசப்டார் ஆகியவையும் இது செயல்படுவதாக விளங்கப்படுத்தப்பட்டிருக்கும் இன்னும் கூடுதலான குறிப்பிட்ட ரிசப்டார்கள் ஆகும்.[58]

கோகோயின் சோடியம் சானல்களையும் தடுக்கிறது, இதன்மூலம் செயல்பாட்டு திறன்கள் பரவுவதில் குறுக்கிடுகிறது; இவ்வாறாக, லிக்னோகெயின் மற்றும் நோவோகெயின் போல, இது ஒரு உடல்பகுதிக்கான மயக்கமருந்தாய் பயன்படுகிறது. டோபமைன் & செரடோனின் சோடியம் சார்ந்த டிரான்ஸ்போர்ட் பகுதியை இலக்குகளாகக் கொண்ட பைண்டிங் தளங்களின் மீதும் அந்த டிரான்ஸ்போர்ட்டர்களின் ரீஅப்டேக்கில் இருந்தான தனியான இயங்குமுறைகளாக இது செயல்படுகிறது; இது உடல்பகுதிக்கான மயக்கமருந்தாக இதன் மதிப்பிற்கென தனித்துவமானதாய் விளங்குகிறது, இது இதிலிருந்து தருவிக்கப்பட்டு அச்செயல்பாடு நீக்கப்பட்டதான பீனைல்ட்ரோபேன்களின் வகை மற்றும் அது ஒட்டுமொத்தமாய் இல்லாதிருக்கும் ஆம்பீடமைன் வகை இந்த இரண்டில் இருந்தும் இதனை வித்தியாசப்படுத்துகிறது. இதனுடன் சேர்த்து, கபா-ஓபியோய்ட் ரிசப்டாரின் தளத்திற்கும் கோகோயின் சில இலக்கு பைண்டிங் கொண்டுள்ளது.[59] கோகோயின் ரத்தக்குழாய் சுருக்கத்திற்கும் காரணமாகிறது, இதனால் சிறு அறுவைச்சிகிச்சை நடைமுறைகளின் போது ரத்தப்போக்கைக் குறைக்கிறது. கோகோயினின் லோகோமோட்டார் அதிகரிக்கும் குணங்களுக்கு, சப்ஸ்டன்சியா நைக்ராவில் இருந்தான அதன் டோபமைனர்ஜிக் டிரான்ஸ்மிசன் அதிகரிப்பைக் காரணமாய்க் கூறலாம். கோகோயினின் நடத்தை செயல்பாடுகளில் கிர்காடியன் இயக்கமுறைகள்[60] மற்றும் கடிகார மரபணுக்கள்[61] முக்கிய பங்கு கொண்டிருப்பதை சமீபத்திய ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

நிகோடின் மூளையில் உள்ள டோபமைன் அளவுகளை அதிகப்படுத்துகிறது என்பதால், கோகோயின் பயன்பாட்டின் போது புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது பரவசத்தை அதிகப்படுத்துவதாய் கோகோயின் பயன்படுத்தும் பலரும் உணர்கிறார்கள். ஆயினும், கோகோயின் பயன்பாட்டின் போது தொடர்ந்து கட்டுப்படுத்த இயலாமல் புகைத்துக் கொண்டிருப்பது (பொதுவாக சிகரெட் புகைக்காதவர்களும் கூட கோகோயின் பயன்படுத்தும்போது தொடர்ந்து புகைக்க பழக்கப்படுவர்) போன்ற விரும்பத்தகாத பின்விளைவுகளை இது அளிக்கலாம், அத்துடன் சேதாரமுறுத்தும் சுகாதார விளைவுகளும் இருதயரத்தக் குழாய் அமைப்பில் புகையிலையால் கூடுதல் நலிவும் நேரக் கூடும்.

எரிச்சல், மனோநிலை தொந்தரவுகள், உளைச்சல், அச்ச உணர்வு, மற்றும் குரல் பிரமைகள் ஆகியவற்றுடன் சேர்ந்து, பல அபாயகரமான உடல் நிலைமைகளையும் கோகோயின் பயன்பாடு கொண்டுவரக் கூடும். இருதயத் துடிப்பின் ஒத்திசைவில் தொந்தரவுகளுக்கும் மாரடைப்புக்கும், அத்துடன் நெஞ்சுவலி மற்றும் இன்னும் சுவாச செயலிழப்புகளுக்கும் கூட இது கொண்டு செல்லலாம். இது தவிர, நெஞ்சடைப்புகள், திடீர் வலிகள் மற்றும் தலைவலிகள் ஆகியவை தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு அடிக்கடி வரக் கூடியதாகும்.

கோகோயின் உணவில் விருப்பத்தைக் குறைக்கலாம், நெடுங்காலம் உபயோகிப்போரில் பலரும் தங்களது பசியை இழந்து விடுவதோடு சத்துக் குறைவு மற்றும் குறிப்பிடத்தக்க எடை இழப்பினை அனுபவிக்கிறார்கள். புதிய சூழல்கள் மற்றும் தூண்டிகள், அல்லது புதுமையான சூழல்களில் கோகோயினையும் சேர்த்துப் பயன்படுத்துவது அதன் விளைவுகளை இன்னும் திறனுற்றதாய் ஆக்குவதாக தெரியவந்துள்ளது.[62]

சிதைமாற்றமும் வெளியேற்றமும்

கோகோயின் விரிவாக, முதன்மையாக கல்லீரலில், சிதைமாற்றத்திற்குள்ளாகிறது, சுமார் 1% மட்டும் தான் மாற்றமில்லாமல் சிறுநீரில் வெளியேறுகிறது. சிதைமாற்றத்தில் நீர்ப்பகுப்பு ஈஸ்டர் பிளப்பு ஆதிக்கம் செலுத்துவதால், அகற்றப்படும் சிதைமாற்றப் பொருட்களில் அதிகமாய் பென்சோயிலெகோனைன் (BE) என்கிற பிரதான சிதைமாற்றப் பொருள் இருக்கும், எகோனைன் மெத்தில் ஈஸ்டர் (EME) மற்றும் எகோனைன் போன்ற மற்ற முக்கிய சிதைமாற்றப் பொருட்களும் குறைந்த அளவுகளில் காணப்படும். கோகோயினின் இன்னும் கூடுதலான சிறிய சிதைமாற்றப் பொருட்களில், நோர்கோகோயின், p-ஹைட்ராக்ஸிகோகோயின், m-ஹைட்ராக்ஸிகோகோயின், p-ஹைட்ராக்ஸிபென்ஸோயிலெகோனைன் (pOHBE), and m-ஹைட்ராக்ஸிபென்ஸோயிலெகோனைன் ஆகியவை அடக்கம்.[63] மனித உடலில் இந்த மருந்தின் இயல்பான சிதைமாற்றத்தைக் கடந்து உருவாகும் சிதைமாற்றப் பொருட்கள் இதில் அடங்காது, உதாரணமாக பைரோலிஸிஸ் நிகழ்முறையின் மூலம் மெத்திலெகோனைடின் உருவாவதைக் கூறலாம்.

கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டைப் பொறுத்து, கோகோயின் சிதைபொருட்கள் சிறுநீரில் கண்டறியத்தக்கதாய் இருக்கிறது. கோகோயின் எடுத்துக் கொண்ட நான்கு மணி நேரங்களுக்குள் சிறுநீரில் பென்ஸோயிலெகோனைனைக் கண்டறிய முடியும், அத்துடன் பொதுவாக கோகோயின் பயன்படுத்திய எட்டு நாட்கள் வரையிலும் 150 ng/ml க்கும் அதிகமான செறிவில் இது கண்டறியத்தக்கதாகவே தொடர்கிறது. தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு கோகோயின் சிதைபொருட்கள் தலைமுடியில் திரள்வதையும் கூட காண முடிவதுண்டு, பயன்பாட்டின் போது வளர்ந்து தலைமுடியின் பகுதி வெட்டப்படும் வரை அல்லது விழும் வரை இதனைக் காண முடியும்.

ஆல்கஹாலுடன் இணைந்து எடுத்துக் கொள்ளும்போது, கல்லீரலில் கோகோயின் ஆல்கஹாலுடன் இணைந்து கோகோஎத்திலீனை உருவாக்குகிறது. கோகோ எத்திலீன் கூடுதல் உற்சாகமூட்டுவதாய் அமைந்திருக்கும், அத்துடன் கோகோயினைக் காட்டிலும் கூடுதலாக இதய ரத்தநாள நச்சுத்தன்மையைக் கொண்டிருக்கவும் செய்யும் என்பதாய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[64][65][66]

எலியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு, மிளகு விசிறலில் காணப்படும் கேப்சைசின் கோகோயினுடன் வினைபுரிந்து மரண விளைவுகளை அளிக்கலாம் என்பதாக தெரிவிக்கிறது. ஆயினும் அவை எந்த வகையில் வினைபுரியும் என்பது அறியப்படவில்லை.[67][68]

விளைவுகளும் ஆரோக்கியப் பிரச்சினைகளும்

கோகோயின் ஒரு சக்தி வாய்ந்த நரம்பு மண்டல தூண்டியாகும்.[69] இதன் விளைவுகள் உட்கொள்ளப்படும் முறையைப் பொறுத்து, 15-30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நீடிக்கலாம்.[70]

கோகோயின் எச்சரிக்கையுணர்வை, உற்சாக உணர்வை, சக்தி மற்றும் இயங்கும் நடவடிக்கையை, போட்டித்திறன் மற்றும் பாலியல் செயல்பாட்டு உணர்வை அதிகப்படுத்துகிறது. தடகள செயல்பாடும் அதிகரிக்கப்பட முடியும். பதட்டம், பயம் மற்றும் உளைச்சல் உணர்வும் பல சமயங்களில் காணப்படும். அதிகமான டோஸ்கள் எடுத்துக் கொண்டால், நடுக்கம், இழுப்பு மற்றும் அதிகரித்த உடல் வெப்பம் ஆகியவையும் காணப்படலாம்.[69]

சட்டப்பூர்வ பொருட்களின், குறிப்பாக ஆல்கஹால் மற்றும் புகையிலையின், பயன்பாட்டால் உருவாகும் ஆரோக்கிய பிரச்சினைகள் கோகோயின் பயன்பாட்டால் வரும் ஆரோக்கியப் பிரச்சினைகளைக் காட்டிலும் அதிகமானவை. எப்போதாவது கோகோயின் பயன்படுத்துவது பொதுவாக கடுமையான அல்லது சிறிய அளவில் கூட உடல்ரீதியான அல்லது சமூக ரீதியான பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்வதில்லை.[71][72]

கூர்மைப்பட்டது

அதிகமாய் பயன்படுத்தினால் அல்லது நெடுங்காலம் பயன்படுத்தினால், இந்த மருந்து அரிப்பு, டாசிகார்டியா, மனப்பிரமைகள், மற்றும் பயப் பிரமைகள் ஆகியவை உண்டாகலாம். ஓவர்டோஸ்கள் டாசியாரித்மியாஸ் மற்றும் ரத்த அழுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட அதிகரிப்பு ஆகியவற்றுக்கு காரணமாக முடியும். இவை உயிருக்கே ஆபத்தாகலாம், குறிப்பாக பயன்படுத்துவோருக்கு ஏற்கனவே இதயப் பிரச்சினைகள் இருக்குமாயின்.[சான்று தேவை] எலிகளுக்கு பரிவிரிஅகமுறையில் கொடுக்கப்படுகையில் கோகோயினின் LD50 95.1 மிகி/கிகி ஆக இருக்கிறது.[73] நச்சுத்தன்மை திடீர்வலிகளில் முடிகிறது, அதன்பின் மஜ்ஜை வழி சுவாச மற்றும் ஓட்டப் பிரச்சினைகள் வரலாம். சுவாசம் செயலிழப்பு, நெஞ்சடைப்பு, மூளையில் ரத்த அடைப்பு, அல்லது இருதய-செயலிழப்பு ஆகியவற்றின் மூலமான மரணத்திற்கு இது இட்டுச் செல்லலாம். கோகோயின் மிகுந்த காய்ச்சலையும் உருவாக்கக் கூடியது, ஏனென்றால் தூண்டப்படுவதும் பெருகிய தசை செயல்பாடுகளும் அதிகமான வெப்பம் உற்பத்தியாகக் காரணமாகின்றன. நாளச் சுருக்கம் தீவிரமுறுவதன் மூலம் வெப்ப இழப்பு குறைந்து விடுகிறது. கோகோயினால் தூண்டப்படும் ஹைபர்தெர்மியா தசை செல் அழிவுக்கும் மையோக்ளோபினூரியாவுக்கும் காரணமாகி சிறுநீரக செயலிழப்பில் விளையலாம். அதிகரித்த இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு டயாசிபம் (வாலியம்) போன்ற பென்சோடயஸெபைன் தணிப்பு ஏஜென்டை கொடுப்பது உள்ளிட்டவை அவசர சிகிச்சை சமயத்தில் பின்பற்றப்படுகின்றன. குளிர்ச்சியுறச் செய்வது (ஐஸ், குளிர்ந்த போர்வைகள், போன்றவை) மற்றும் பாராசெடமால் (அசிடாமினோபென்) ஆகியவை ஹைபர்தெர்மியா சிகிச்சையில் பயன்படுத்தப்படலாம், எந்த கூடுதலான சிக்கல்களுக்கும் குறிப்பிட்ட சிகிச்சைகள் அதன்பின் உருவாக்கப்படுகின்றன.[74] கோகோயின் ஓவர்டோஸ்க்கு அதிகாரப்பூர்வமான குறிப்பிட்ட மாற்றுமருந்து என்று எதுவும் இல்லை, விலங்குகள் மீதான ஆய்வில் டெக்ஸ்மெடெடோமைடின் மற்றும் ரிம்கஸோல் போன்ற சில மருந்துகள் கோகோயின் ஓவர்டோஸ்க்கான சிகிச்சையில் பயனளிக்கின்றன என்பது கண்டறியப்பட்டாலும், மனிதர்களில் முறையான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.[சான்று தேவை]

ஒரு நோயாளி மருத்துவ கவனிப்பை பெற முடியவில்லை அல்லது விரும்பவில்லை என்றால், மிதமான டாசிகார்டியாவில் (அதாவது 120 bpm ஐக் காட்டிலும் அதிகமான ரெஸ்டிங் பல்ஸ்) விளையக் கூடிய கோகோயின் ஓவர்டோஸ்களுக்கு வாய்வழியாக 20மிகி டயசிபம் அல்லது அதற்கு சமமான பென்சோடயசிபைன் (உ-ம்: 2 மிகி லோராசிபம்) கொடுப்பது மூலம் ஆரம்ப சிகிச்சையளிக்கப்படலாம். அசெடமினோபென் மற்றும் உடலைக் குளிர்ச்சிப்படுத்துவதெல்லாம் மெல்லிய ஹைபர்தெர்மியாவைக் குறைக்க பயன்படுத்தப்படலாம் (<39C). ஆயினும், கடந்த காலத்தில் உயர் ரத்த அழுத்தம் அல்லது இருதயப் பிரச்சினைகள் கொண்டிருந்தவராக இருந்தால் அது நோயாளிக்கு மாரடைப்பு அல்லது நெஞ்சுவலி வருவதற்கான அதிகமான அபாயத்தைக் கொண்டிருக்கிறது, உடனடி மருத்துவ சிகிச்சை அவசியமாகும். இதேபோல், பென்ஸோடியாஸெபைன் தணிப்பு இருதயத் துடிப்பை குறைக்கத் தவறினால் அல்லது உடல் வெப்பநிலை குறையத் தவறினால், மருத்துவ நிபுணர்களின் தலையீடு அவசியப்படும்.[75][76][77]

மூளை ரசாயனத்தில் கோகோயின் ஏற்படுத்தும் கூர்மையான விளைவு நியூக்ளியஸ் அகும்பென்ஸில் (மூளையின் மகிழ்ச்சி மையம்) டோபாமைன் மற்றும் செரோடோனின் அளவை உயர்த்துவதாகும்; கோகோயின் செயலற்ற சேர்மங்களாக சிதைமாற்றமுறுவதால், குறிப்பாக டிரான்ஸ்மிட்டர் ஆதாரங்கள் (டாசிபைலாக்ஸிஸ்) குறைவதால் இந்த விளைவு தணிகிறது. இதனை மனச்சோர்வு உணர்வு மூலம் கூர்மையாய் உணர முடியும், ஆரம்ப உச்சத்திற்குப் பிறகு ஒரு ”முறிவு” தோன்றும். வெகுகாலமாய் கோகோயின் பயன்படுத்துவதில் இன்னும் கூடுதலான வகைமுறைகளும் தோன்றுகின்றன. இந்த ”முறிவு”டன் ”நடுக்கம்” எனப்படும் உடல் முழுக்க சதை நடுங்குவது, தசை பலவீனம், தலைவலிகள், தலைச்சுற்றல், மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஆகியவையும் ஏற்படும்.[சான்று தேவை]

கர்ப்ப காலத்தில் கோகோயின் பயன்படுத்துவது அரைகுறைப் பிரசவத்தை[78] தூண்டலாம் என்பதோடு பனிக்குடம் முன்கூட்டியே உடைந்து போவதற்கும் இட்டுச்செல்லலாம்.[79]

நீடித்த வகை

நீடித்த கோகோயின் பயன்பாட்டின் பிரதான விளைவுகள்.

வெகுகாலம் கோகோயின் எடுத்துக் கொண்டிருந்தால், மூளையில் டிரான்ஸ்மிட்டர் அளவுகளின் வலிமைவாய்ந்த ஏற்ற இறக்கங்களுக்கு சமநிலை செய்யும் வகையில் செயல்பாட்டுரீதியாக மூளை செல்கள் தகவமைத்துக் கொள்கின்றன. எனவே, செல் பரப்பில் ரிசப்டார்கள் மறைந்து விடுகின்றன அல்லது மீண்டும் தோன்றுகின்றன, இது ஏறக்குறைய “அணைவு” மற்றும் ”இயக்க” நிலைகளுக்கு இடையே மாறி மாறி ஏற்படுகிறது, அல்லது டவுன்/அப்ரெகுலேஷன் என்று அழைக்கப்படும் இணைப்பு பார்ட்னர்களுக்கான (லிகான்ட்கள்) – இணக்கநிலையை மாற்றிக் கொள்கின்றன. ஆயினும், வழக்கமான வயது தொடர்பாக நேரும் ஸ்ட்ரையாடல் DAT எலும்புகளின் இழப்பு கோகோயின் பயன்படுத்துபவர்கள் காட்டுவதில்லை என ஆய்வுகள் கூறுகின்றன, கோகோயின் டோபமைன் நியூரான்களுக்கான நரம்பியல்பாதுகாப்பு குணங்கள் இருப்பதாக அவை கூறுகின்றன.[80] தணிக்கமுடியாத பசி, வலிகள், தூக்கமின்மை/அதிகதூக்கம், சோம்பல், மற்றும் தொடர்ந்து இருக்கும் ஜலதோஷம் ஆகியவற்றின் அனுபவம் மிகவும் இடரளிப்பதாக பெரும்பாலும் விவரிக்கப்படுகிறது. தற்கொலை எண்ணத்துடனான மனச்சோர்வு மிகவும் அதிகமாகப் பயன்படுத்துவோரிடையே தோன்றலாம். இறுதியாக, வெசிகுலார் மோனமைன் டிரான்ஸ்போர்ட்டர்களின் இழப்பு, நியூரோஃபிலமென்ட் புரோட்டீன்கள், மற்றும் பிற உருமாற்ற மாற்றங்கள் டோபமைன் நியூரான்கள் நீண்டகால சேதமுற்றிருப்பதை சுட்டிக் காட்டுவதாய் தோன்றுகின்றன. இந்த விளைவுகள் அனைத்தும் ஏற்புவரம்பின் அதிகரிப்புக்கு பங்களிப்பு செய்கின்றன, அதாவது அதே விளைவைப் பெறுவதற்கு அதிகமான டோஸ் அவசியப்படுவதாய் இருக்கும்.[சான்று தேவை]

மூளையில் செரோடோனின் மற்றும் டோபமைனின் இயல்பான அளவுகள் குறைந்திருப்பது தான் ஆரம்ப உச்சத்திற்கு பின் உணரும் சோர்வு மற்றும் டிஸ்போரியாவின் காரணமாகும். உடல்ரீதியான பின்னிழுப்பு அபாயமானது அல்ல, உண்மையில் மீட்கத்தக்கது. கோகோயின் பழக்கத்தில் இருந்து விடுபடும்போதான நோயறிதல் தகுதிவகைகளாக இருப்பவை, மகிழ்ச்சியற்ற மனோநிலை, அலுப்பு, விரும்பத்தகாத கனவுகள், தூக்கமின்மை அல்லது மிதமிஞ்சிய தூக்கம், விறைப்பு செயலின்மை, பெருகிய பசி, சைகோமோட்டார் ரிடார்டேஷன் அல்லது அஜிடேஷன், மற்றும் பதற்றம் ஆகியவை ஆகும்.[சான்று தேவை]

கோகோயினை வெகுநாள் புகைப்பதால் வரும் உடல்ரீதியான பக்க விளைவுகளில் ஹெமோப்டிசிஸ், ப்ராஞ்சோஸ்பேஸ்ம், ப்ரூரிடஸ், காய்ச்சல், எஃப்யுசன்கள் அற்ற டிஃப்யுஸ் அல்வியோலார் இன்பில்ட்ரேட்டுகள், பல்மோனரி மற்றும் சிஸ்டமடிக் ஈஸினோபிலியா, நெஞ்சு வலி, நுரையீரல் பாதிப்பு, தொண்டைப் புண், ஆஸ்துமா, குரல் கம்முவது, டிஸ்ப்னி (மூச்சு சுருங்குவது), மற்றும் வலியெடுக்கும் ஃபுளு போன்ற அறிகுறி ஆகியவை அடக்கம். கோகோயின் புகைப்பது வேதியியல்ரீதியாக பல் இனாமல்களை சிதைத்து பற்சிதைவுக்கு காரணமாகிறது என ஒரு பொதுவான நம்பிக்கை நிலவுகிறது, இது உண்மையில்லை. ஆனாலும் கோகோயின் பலசமயங்களில் எதிர்பாராத பல் அரைபடுதலுக்குக் காரணமாகிறது, இது ப்ருக்ஸிசம் என்று அழைக்கப்படுகிறது, இது பல் இனாமலை சிதைக்கலாம் என்பதோடு ஜிஞ்சிவிடிஸுக்கும் இட்டுச் செல்லலாம்.[81]

நாசித்துவாரங்கள் வழியே நெடுங்காலம் கோகோயின் பயன்படுத்தி வந்தால் நாசித்துவாரங்களைப் (செப்டம் நாசி) பிரிக்கும் குருத்தெலும்பு சேதாரமுற்று, இறுதியில் குருத்தெலும்பே முற்றிலுமாய் மறைந்து போகும் நிலைக்கு கொண்டு செல்லலாம். கோகோயின் ஹைட்ரோகுளோரைடில் இருந்து கோகோயின் உறிஞ்சப்படுவதால், எஞ்சிய ஹைட்ரோகுளோரைடு ஒரு நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உருவாக்குகிறது.[82]

லுபஸ், குட்பாஸ்சர் நோய், வாஸ்கலிடிஸ், க்ளோமெருலோனெப்ரிடிஸ், ஸ்டீவன்ஸ்-ஜான்சன் அறிகுறி மற்றும் பிற நோய்கள் போன்ற அபூர்வமான தன்னுடல்தாங்கும் அல்லது இணைப்பு திசு நோய்களை உருவாக்கும் அபாயத்தையும் கோகோயின் பெருமளவில் அதிகரிக்கலாம்.[83][84][85][86] கிட்னி நோய்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பின் பரந்துபட்ட பல்வேறு நோய்களுக்கும் கூட இது காரணமாகலாம்.[87][88]

ரத்த ஒழுக்கு மற்றும் ரத்த அடைப்புகள்[89] இரண்டின் அபாயங்களையும் கோகோயின் பயன்பாடு இரட்டிப்பாக்குகிறது என்பதோடு மையோகார்டியல் இன்ஃபார்க்சன்[90] போன்று மற்ற இன்ஃபார்க்சன்களின் (திசு இறப்பு) அபாயங்களையும் இது அதிகப்படுத்துகிறது.

அடிமையாதல்

கோகோயின் சார்பு (அல்லது அடிமையாதல் ) என்பது உளவியல்ரீதியாக கோகோயினைத் தொடர்ந்து பயன்படுத்தும் தேவையைச் சார்ந்திருப்பதாகும். கோகோயினுக்கு அடிமையாதல் உடலியல் சேதாரம், சோம்பல், மனப்பிணி, மனச்சோர்வு, மற்றும் அபாயகரமான ஓவர்டோஸ் ஆகியவற்றில் விளையலாம்.

உடல்பகுதிக்கான மயக்கமருந்தாக கோகோயின்

மருத்துவ பயன்பாட்டிற்கான கோகோயின் ஹைட்ரோகுளோரைடு.

வரலாற்றுரீதியாக கண் மற்றும் நாசி அறுவைச்சிகிச்சைகளின் போது கோகோயின் பயனளித்திருக்கிறது என்றாலும் இப்போது அது அதிகமாக நாசி மற்றும் கண்ணீர்ச் சுரப்பு சிரைப் பாதை அறுவைச்சிகிச்சையில் தான் அதிகமான அளவில் பயன்படுத்தப்படுகிறது. கோகோயின் ரத்தக்குழாய்களை சுருக்கும் திறன் பெற்றிருப்பதும் இருதயரத்தத்தில் நச்சு உருவாக்கும் சாத்தியத்தைக் கொண்டிப்பதும் இத்தகைய பயன்பாட்டில் இருக்கும் அனுகூலக் குறைபாடுகளாகும். அதுமுதல் மேற்கத்திய மருத்துவத்தில் பென்சோகேயின், ப்ரோபாராகேயின், லிக்னோகேய்ன்/ஸைலோகேய்ன்/லிடோகேய்ன், மற்றும் டெட்ராகேய்ன் போன்ற உடல்பகுதிக்கான சிந்தடிக் மயக்கமருந்துகளைக் கொண்டு கோகோயின் இடம்பெயர்க்கப்பட்டது, என்றாலும் குறிப்பிடப்படுகிற இடங்களில் பயன்பாட்டுக்கு கிடைக்கத்தக்க நிலையிலேயே தொடர்கிறது. ஒரு செயல்முறைக்கு ரத்தக்குழாய்சுருக்கம் அவசியம் என்று கருதப்பட்டால் (ஏனெனில் அது ரத்தப் போக்கை குறைக்கிறது), அப்போது மயக்கமருந்தானது பீனைலெப்ரைன் அல்லது எபினெப்ரைன் போன்ற ரத்தக்குழாய்சுருக்கியுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியாவில், வாய் மற்றும் நுரையீரல் புண்களுக்கான நிலைமைகளில் உடல்பகுதிக்கான மயக்கமருந்தாக இப்போது அது பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. சில கண்மூக்குதொண்டை நிபுணர்கள் நாசித் தீய்த்தல் போன்ற செயல்முறைகளை மேற்கொள்ளும் தங்கள் பயிற்சி எல்லைக்குள்ளாக கோகோயினை அவ்வப்போது பயன்படுத்துகின்றனர். இந்த சூழலில், கரைக்கப்பட்ட கோகோயின் பருத்தி கம்பளியின் ஒரு பந்து திரட்சியில் அமிழ்த்தி எடுக்கப்பட்டு, செயல்முறைக்கு முன் நாசியில் 10-15 நிமிடங்கள் வரை வைத்திருக்கப்படுகிறது, இதன்மூலம் அந்த பகுதி தீய்த்தலுக்கேற்ற வகையில் மரக்கச் செய்யப்படுவதோடு ரத்தக்குழாய்சுருக்கமும் நிகழ்த்தப்படுகிறது. இந்த வழியில் பயன்படுத்தும் போதும் கூட, பயன்படுத்திய கோகோயினில் கொஞ்சம் வாய் அல்லது நாசியின் சீதச்சவ்வுகளால் உறிஞ்சப்பட்டு அது கொஞ்சம் கொஞ்சமாய் விளைவுகளைத் தரக் கூடும்.

2005 ஆம் ஆண்டில் கியோடோ பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள், பார்கின்சன் நோய்க்கான நோயறியும் சோதனையாக கோகோயினை பீனைலெப்ரைன் உடன் சேர்த்து ஒரு கண் சொட்டுமருந்து வடிவத்தில் பயன்படுத்த பரிந்துரை செய்தனர்.[91]

பெயர் வரலாறு

”கோகோயின்” என்கிற பெயர் “கோகோ” + துணைப்பெயர் “-ine" என்பதில் இருந்து உருவாக்கப்பட்டது; உடல்பகுதிக்கான மயக்கமருந்தாக இது பயன்படுத்தப்பட்டதால் இதில் இருந்து “கேயின்” என்கிற துணைப் பெயர் எடுக்கப்பட்டு உடல்பகுதிகளுக்கான மயக்கமருந்துகளின் பெயர்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டது.

தற்போதைய தடை

சிங்கிள் கன்வென்ஷன் ஆன் நர்கோடிக் டிரக்ஸ் (Single Convention on Narcotic Drugs), மற்றும் யுனைடெட் நேஷன்ஸ் கன்வென்ஷன் எகென்ஸ்ட் இல்லிசிட் டிராபிக் இன் நர்கோடிக் டிரக்ஸ் அன்ட் சைகோட்ராபிக் சப்ஸ்டன்சஸ் (United Nations Convention Against Illicit Traffic in Narcotic Drugs and Psychotropic Substances) கட்டுப்பாடுகளின் கீழ் அநேக நாடுகளில் கோகோயின் தயாரிப்புகளின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது (அநேக அர்த்தத்தில் சட்டவிரோதமாக்கப்பட்டிருக்கிறது எனலாம்). அமெரிக்காவில் கூடுதலாக 1970 கன்ட்ரோல்டு சப்ஸ்டன்சஸ் ஆக்டின் (1970 Controlled Substances Act)கீழ் கோகோயினின் உற்பத்தி, இறக்குமதி, வைத்திருப்பது, மற்றும் விநியோகம் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

பெரு மற்றும் பொலிவியா போன்ற சில நாடுகள் உள்நாட்டின் பூர்வீகக் குடியின மக்களின் பாரம்பரிய நுகர்வுக்காக கோகோ இலை பயிரிடுவதை அனுமதிக்கின்றன, ஆனாலும் கோகோயின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் தடை செய்யப்பட்டதாகவே இருக்கிறது. இது தவிர, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகள் மருந்து பயன்பாடுகளுக்கு மட்டும் பக்குவப்படுத்தப்பட்ட கோகோயினை அனுமதிக்கின்றன.

பறிமுதல் செய்து அழித்தல்

2004 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் கணக்கின் படி, உலகளவில் 589 மெட்ரிக் டன்கள் கோகோயின் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. கொலம்பியா 188 டன்களையும், அமெரிக்கா 166 டன்களையும், ஐரோப்பா 79 டன்களையும், பெரு 14 டன்களையும், பொலிவியா 9 டன்களையும், உலகின் எஞ்சிய பகுதிகள் 133 டன்களையும் கைப்பற்றியுள்ளன.[92]

சட்டவிரோத வர்த்தகம்

கோகோயின் செங்கல்கள், இது பொதுவாக அனுப்பப்படுகிற ஒரு சரக்கு வடிவம்.

தயாரிப்பின் போது இது உட்செல்லக்கூடிய விரிவான சுத்திகரிப்பு முறையின் காரணமாக, கோகோயின் பொதுவாக ஒரு ”அடிமையாக்கும் மருந்தாக” (hard drug) கருதப்பட்டு, இதனை வைத்திருந்தால் அல்லது கடத்தினால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகிறது. தேவை தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது, எனவே கறுப்பு சந்தையில் கோகோயின் மிக விலையுயர்ந்து காணப்படுகிறது. கோகோ இலைகள் போன்ற பச்சையான கோகோயின் அவ்வப்போது தான் கொள்முதல் செய்யப்படுவதும் விற்கப்படுவதும் நடக்கிறது, ஏனெனில் தூள் வடிவத்தில் அதனை மறைத்து வைப்பதும் கடத்துவதும் கூடுதல் எளிமையானது கூடுதல் லாபமளிக்கக் கூடியது என்பதால் பச்சையாகக் கடத்துவது என்பது மிகவும் அபூர்வமான ஒன்றாகவே இருக்கிறது. சந்தையின் அளவு மிகப் பெரியது: சில்லறையில் கிராமுக்கு $100 ஆக 770 டன்கள் தடவை = $77 பில்லியன் வரை.[சான்று தேவை]

உற்பத்தி

கொலம்பியா தான் உலகின் முன்னணி கோகோயின் உற்பத்தியாளராக உள்ளது.[93]1994 ஆம் ஆண்டில், கோகோயின் விற்பனை அப்போதும் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தனிநபர் பயன்பாட்டுக்கு சிறு அளவுகளில் கோகோயின் பயன்படுத்துவதை கொலம்பியா சட்டப்பூர்வமாக்கியதை அடுத்து, உள்நாட்டு தேவையைக் காரணம் காட்டி உள்நாட்டில் கோகோ பயிர்கள் பரவின.

உலகின் வருடாந்திர கோகோயின் விளைச்சலில் நான்கில் மூன்று பங்கு கொலம்பியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது, பெரு ( பிரதானமாக ஹூலாகா பள்ளத்தாக்கு) மற்றும் பொலிவியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோகோயின், மற்றும் உள்நாட்டில் வளர்க்கப்படும் கோகோ இரண்டும் இதில் சேரும். கொலம்பியாவில் வளர்க்கப்படும் விளைச்சலளிக்கும் கோகோ செடிகளின் அளவு 1998 ஆம் ஆண்டில் 28% அதிகரிப்பைக் கண்டது. அதே சமயத்தில் பொலிவியா மற்றும் பெருவில் பயிர் பரப்பு குறைந்ததை அடுத்து, 1990களின் மத்திய காலத்திற்குப் பிறகு பயிர்வளர்ப்பில் மிகப் பெரும் கோகோ வளர்ப்பு பரப்பைக் கொண்ட தேசமாக கொலம்பியா ஆனது. பாரம்பரிய காரணங்களுக்காக இதற்கென உள்ள சமுதாயங்களால் கோகோ வளர்க்கப்படுவது இன்னும் உள்ளதோடு கொலம்பிய சட்டங்களாலும் அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால் இது மொத்த கோகோ உற்பத்தியில் ஒரு சிறு பகுதியையே பங்களிப்பு செய்கிறது, அநேக பகுதி சட்டவிரோத மருந்து வர்த்தகத்திற்கே பயன்படுத்தப்படுகிறது.

பயிர்க்கொல்லிகளைப் பயன்படுத்தி கோகோ வயல்களை அழிக்க செய்யப்பட்ட முயற்சிகள், கொலம்பியாவின் சில கோகோ வளர்ப்பு பகுதிகளில் விவசாய பொருளாதாரத்தின் ஒரு பகுதியையே சீரழித்து விட்டிருக்கிறது, அத்துடன் இப்பயிர்கொல்லிகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டிருக்கிற அல்லது தடுப்பு கொண்டிருக்கிற இனவகைகளும் உருவாக்கியிருப்பதாகத் தோன்றுகிறது. இந்த இனவகைகள் எல்லாம் இயற்கை பரிணாமங்களா அல்லது மனித கைவரிசையின் விளைபொருளா என்பது தெளிவுறத் தெரியவில்லை. இந்த இனவகைகள் முன்பு வளர்க்கப்பட்டதை விட அதிகமான திறனுற்றவையாகவும் நிரூபணமாகி உள்ளன, இது கோகோயின் ஏற்றுமதிக்கு பொறுப்பான மருந்து நிறுவனங்களுக்கு லாபத்தை அதிகரிக்கும் ஒன்றாகும். தற்காலிகமாக உற்பத்தி வீழ்ந்தாலும், கொலம்பியாவில் பெருந்தோட்டங்களுக்குப் பதிலாக சிறிய வயல்களாக ஏராளமாய் பெருகியதை அடுத்து மீண்டும் கோகோ பயிர் உற்பத்தி எழுச்சி பெற்றது.

நாட்டின் பல பகுதி விவசாயிகளுக்கும் கோகோ வளர்ப்பு என்பது ஈர்ப்பு மிகுந்த, சில சந்தர்ப்பங்களில் அவசியமானதாகவும் கூட ஆகியிருக்கும் ஒரு பொருளாதார முடிவாக இருக்கிறது, உலகளாவிய தேவை இருப்பது, மற்ற வேலைவாய்ப்பு வசதிகள் குறைந்து காணப்படுவது, அதிகாரப்பூர்வமான மாற்றுப் பயிர் திட்டங்களில் மாற்றுப் பயிர்கள் அதிக லாபகரமாய் இல்லாதது, போதை மருந்தல்லாத பண்ணைகளுக்கும் நேர்ந்த பயிர்க்கொல்லி தொடர்பான சேதாரங்கள், மற்றும் கோகோ தாவரத்தில் புதிய இனவகைகள் பரவியது ஆகியவை உள்ளிட்ட பல்வேறு காரணிகளும் இதற்குக் காரணமாய் அமைந்துள்ளன.

ஆன்டீன் பிராந்தியத்தில் (Andean region) கோகோ விளைச்சல் மற்றும் தூய கோகோயின் உற்பத்தியின் மதிப்பீட்டளவுகள், 2000–2004.
[94]
20002001200220032004
மொத்த பயிரிடல் பரப்பு (கிமீ2)187522182007.516631662
சாத்தியமான தூய கோகோயின் உற்பத்தி (டன்கள்)770925830680645

கூட்டுச்சேர்க்கை

சிந்தடிக் கோகோயின் சட்டவிரோத போதை மருந்து துறைக்கு மிகவும் விருப்பமான ஒன்றாக இருக்கிறது, ஏனென்றால் இது பெரும் புலப்பாட்டில் சிக்காமல் இருக்க முடியும் என்பதோடு நாடுகடந்த ஆதாரங்கள் மற்றும் சர்வதேச கடத்தலை முழுமையாக நம்ப வேண்டிய அவசியமும் இல்லை, இவற்றை எல்லாம் சட்டவிரோத மீதம்பெடமைன் விஷயத்தில் பொதுவான விஷயமாக இருக்கும் ரகசிய உள்நாட்டு ஆய்வகங்களைக் கொண்டு அவர்கள் இடம்பெயர்த்து விட முடியும். ஆயினும், இயற்கை கோகோயின் தான் குறைந்த விலையில் உயர்ந்த தரம் கொண்டதான கோகோயினாக இருக்கிறது. கோகோயினின் முழுமையான கூட்டுச்சேர்க்கை அபூர்வமாகவே மேற்கொள்ளப்படுகிறது. செயல்பாடற்ற எனான்டியோமெர்களின் உருவாக்கம் (கோகோயின் 4 கைரல் மையங்கள் - 1R,2R,3S,5S - கொண்டுள்ளது, எனவே மொத்தம் 16 எனான்டியோமெர்கள் மற்றும் டிஸ்டெரோய்சோமெர்களுக்கான சாத்தியத் திறன் கொண்டுள்ளது) சிந்தடிக் விளைபொருட்களுடன் சேர்ந்து விளைச்சலையும் தூய்மையையும் பாதிக்கிறது.கவனிக்க, ‘சிந்தடிக் கோகோயின்’ மற்றும் ‘நியூ கோகோயின்’ போன்ற பதங்கள் பென்சைக்ளைடின் (PCP) மற்றும் பல்வேறு வடிவமைப்பு மருந்துகளுக்கும் தவறாக பொருத்தப்படுகிறது.

கடத்தல் மற்றும் விநியோகம்

சராங்கோவில் கடத்தப்பட்ட கோகோயின், 2008.

பெரிய அளவில் செயல்படும் ஒழுங்குபட்ட குற்றக் கூட்டங்கள் கோகோயின் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதிகமான கோகோயின் தென் அமெரிக்காவில், குறிப்பாக கொலம்பியா, பொலிவியா, பெரு ஆகிய நாடுகளில் தான் வளர்க்கப்படுகிறது செயல்முறைக்குட்படுத்தப்படுகிறது, பின் அது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குள் கடத்திக் கொண்டுவரப்படுகிறது, அமெரிக்கா தான் உலகின் மிகப் பெரிய கோகோயின் நுகர்வோராக இருக்கிறது,[95] இங்கு கோகோயின் அதிகமான அளவில் விலை உயர்த்தப்பட்டு விற்கப்படுகிறது; பொதுவாக அமெரிக்காவில் 1 கிராமுக்கு $80–$120 எனவும், 3.5 கிராம்களுக்கு (ஒரு அவுன்ஸ், அல்லது ஒரு “எய்ட் பால் (eight ball)” அளவில் 1/8 பகுதி) $250–$300 எனவும் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

கரீபியன் மற்றும் மெக்சிகன் வழிகள்

தென் அமெரிக்காவில் இருந்து மெக்சிகோ அல்லது மத்திய அமெரிக்கா வழியாக கடத்தப்படும் கோகோயின் பெட்டிகள் பொதுவாக சாலை வழியாகவோ அல்லது வான் வழியாகவோ வட மெக்சிகோவின் முகாந்திர தளங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன. அமெரிக்கா-மெக்சிகோ எல்லை வழியே கடத்துவதற்காக, அங்கு கோகோயின் சிறு சிறு சுமைகளாக மாற்றப்படுகிறது. அமெரிக்காவின் கோகோயின் வந்திறங்கும் புள்ளிகளாக பிரதானமாக இருப்பவை அரிசோனா, தெற்கு கலிபோர்னியா, தெற்கு புளோரிடா, மற்றும் டெக்சாஸ் ஆகியவையாகும். பொதுவாக, சாலை வாகனங்கள் வழியே அமெரிக்க மெக்சிகோ எல்லையின் ஊடாக கடத்தப்படுகின்றன. அமெரிக்காவில் 65% கோகோயின் மெக்சிகோ வழியாக நுழைகின்றது, எஞ்சியதில் பெரும்பகுதி புளோரிடா வழியாக நுழைகிறது.[96]

கொலம்பியா, மற்றும் சமீபத்தில் மெக்சிகோவின் கோகோயின் கடத்தல்காரர்களும், கரீபியன், பஹாமா தீவு சங்கிலி, மற்றும் தெற்கு புளோரிடா முழுவதிலும் எண்ணற்ற கடத்தல் தடங்களை ஸ்தாபித்திருக்கின்றனர். பெரும்பாலும் மெக்சிகோ அல்லது டொமினியன் குடியரசில் இருந்து கடத்தல் பேர்வழிகளை இந்த மருந்தை கடத்தும் போக்குவரத்திற்கு வாடகைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். கடத்தல்காரர்கள் தங்களது மருந்தினை அமெரிக்க சந்தைகளுக்கு கடத்துவதற்கு பல்வேறுபட்ட கடத்தல் உத்திகளைப் பயன்படுத்துகின்றனர். பஹாமா தீவுகள் அல்லது பூர்டோ ரிகோ கரைகளில் வான் வழியே 500-700 கிலோ வரை போடுவது, 500-2000 கிலோ வரை நடுக்கடலில் படகுக்கு படகு மாற்றுவது, மற்றும் மியாமி துறைமுகம் வழியே டன்கணக்கான கோகோயின்களை வர்த்தக போக்குவரத்தின் வழி கொண்டுவருவது ஆகியவை இவற்றில் அடக்கம்.

சிலி வழி

கோகோயின் கடத்தலின் இன்னொரு வழி சிலி வழியே நடக்கிறது, பொலிவியாவுக்கு மிக அருகிலான கடல்துறைமுகங்கள் வடக்கு சிலி பகுதியில் அமைந்திருப்பதால் பொலிவியாவில் உற்பத்தி செய்யப்படும் கோகோயின் பிரதானமாக இந்த வழியாகக் கடத்தப்படுகிறது. வறண்ட பொலிவிய-சிலி எல்லைப்பகுதி 4x4 வாகனங்களால் எளிதில் கடக்கப்பட்டு பின் அங்கிருந்து இகுவிக் மற்றும் அன்டோஃபகஸ்டா நோக்கி செல்கின்றன. கோகோயின் விலை பெரு மற்றும் பொலிவியாவைக் காட்டிலும் சிலியில் அதிகமாய் இருக்கும் என்றாலும் இறுதி இலக்கு பொதுவாக ஐரோப்பாவாகத் தான் இருக்கிறது, அதிலும் ஸ்பெயினில் குறிப்பாக தென் அமெரிக்காவில் இருந்து குடியேறியவர்களிடையே போதைக் கடத்தல் வலைப் பின்னல்கள் நிலவுகின்றன.

உத்திகள்

கோகோயின் சிறிய, மறைக்கப்பட்ட, கிலோகிராம் அளவுகளில் “குருவிகள்” என்று அழைக்கப்படுகிற கொரியர்களின் வழியாகவும் கடத்தப்படுகிறது, அவர் ஒரு எல்லையை சட்டப்பூர்வமாக, உதாரணமாக ஒரு துறைமுகம் அல்லது ஏர்போர்ட் வழியாகவோ, அல்லது சட்டவிரோதமாக வேறெந்த வழியிலோ கடக்க முயல்வார். இந்த கடத்தல்பொருட்கள் இடுப்பு அல்லது கால்கள் அல்லது பைகளில் மறைக்கப்பட்டிருக்கும், அல்லது உடம்பில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். இந்த குருவி பிடிபடாமல் கடந்து விட்டால், இந்த கும்பல் லாபத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்ளும். ஆனால் அந்த ஆண்/பெண் மாட்டிக் கொண்டு விட்டால், அவருடனான அனைத்து தொடர்புகளையும் கடத்தல் கும்பல் துண்டித்துக் கொண்டு விடும், அதன்பின் கடத்தல் குற்றத்திற்கான விசாரணையில் பொதுவாக அந்த நபர் தனிமனிதனாகத் தான் நிற்பார்.

மேற்கு கரீபியன்-மெக்சிகோ வளைகுடா பகுதிகளில் உள்ள தளங்களுக்கு கோகோயினைக் கடத்த மொத்த சரக்கு கப்பல்களும் கூட பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இந்த கப்பல்கள் சராசரியாய் சுமார் 2.5 டன்களை சுமந்து செல்லும் 150-250-அடி (50-80 மீ) கடல் போக்குவரத்து கப்பல்களாய் இருக்கும். வர்த்தகரீதியான மீன்பிடி படகுகளும் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுகின்றன. பொழுதுபோக்கு கடல் பயணங்கள் அதிக அளவில் நிகழக் கூடிய பகுதிகளில், உள்ளூர் மக்கள் இதற்கு பயன்படுத்தக் கூடிய விரைவுப் படகுகள் போன்ற அதே வாகனங்களை கடத்தல்காரர்களும் பயன்படுத்துகின்றனர்.

கோகோயினை கொலம்பியாவில் இருந்து வடக்கில் கொண்டுவர போதை மருந்து கடத்தல் கும்பல் பயன்படுத்தும் சமீப சாதனங்களில் நவீன மருந்து சுமக்கும் நீர்மூழ்கிப் படகுகளும் இருப்பதாக, மார்ச் 20, 2008 அன்று செய்தி வெளியானது. ஒரு காலத்தில் இவை போதை மருந்து யுத்தத்தின் பக்கவாட்டு காட்சிப்பொருள் போல் பார்க்கப்பட்டன என்றாலும், ஆரம்ப கால மாடல்களை விட அதிகமான சுமைகளை ஏற்றி செல்லும் திறனுடையதாகவும், விரைந்து செல்வனவாகவும், கூடுதல் கடல்தாங்கு திறனுடையதாகவும் ஆகியிருக்கின்றன, என்று இவற்றைப் பிடிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.[97]

நுகர்வோருக்கான விற்பனை

அனைத்து பெரிய நாடுகளின் மெட்ரோபொலிட்டன் பகுதிகளிலும் கோகோயின் தயாராய் கிடைக்கத்தக்கதாய் இருக்கிறது. அமெரிக்காவின் தேசிய மருந்து கட்டுப்பாட்டுக் கொள்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சம்மர் 1998 பல்ஸ் செக் கணக்கின் படி, கோகோயின் பயன்பாடு நாடெங்கிலும் ஸ்திரமுற்றிருந்தது, சான் டியகோ, பிரிட்ஜ்போர்ட், மியாமி, மற்றும் பாஸ்டன் ஆகிய இடங்களில் மட்டும் சிறு அதிகரிப்புகள் அறியப்பட்டன. மேற்கில் கோகோயின் பயன்பாடு சற்று குறைந்திருந்தது என்றால், மீதாம்பெடமைனுக்கு சில பயனர்கள் மாறி விட்டிருந்ததே காரணம் என்று கூறப்பட்டது; மீதாம்பெடமைன் விலை மலிவு என்பதோடு நீண்ட நேரம் உச்சத்தை பராமரிக்கிறது. ஆயினும் கோகோயின் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகு அதிகமாகவே இருக்கிறது, நகர்ப்புற இளைஞர் இடையே தான் இது செறிவுற அமைந்துள்ளது.

முன்னர் குறிப்பிட்ட அளவுகளுக்குக் கூடுதலாய், கோகோயின் “பில் சைஸ்” அளவுகளிலும் விற்கப்படலாம்: உதாரணமாக, $10 கொண்டு ஒரு “டய்ம் பேக்” வாங்கலாம், இதில் கோகோயின் மிகச் சிறு அளவில் (0.1-0.15கி) கொண்டிருக்கும். இருபது டாலர்கள் கொடுத்து 0.15-0.3கி வரை வாங்க முடியும். ஆயினும் கீழ் டெக்சாஸ் பகுதியில், கிடைக்க எளிதாய் இருப்பதால் அது இன்னும் விலை மலிவாய் கிடைக்கிறது: $10 க்கு 0.4கி, $20 க்கு 0.8-1.0 கிராமும் ஒரு எய்ட் பால் (3.5 கி) கோகோயினை $60 முதல் $80 வரையான விலையிலும் தரம் மற்றும் டீலரைப் பொறுத்து மாறுபடும் விலைகளில் வாங்கலாம். இந்த விலைகளும் அளவும் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானதாகும், ஏனெனில் இவை செலவு குறைந்தவையாக இருப்பதோடு ஒருவரின் உடம்பில் எளிதில் மறைத்துவிடக் கூடிய அளவாகவும் இருக்கிறது. தரமும் விலையும் தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்தும், புவியியல் அமைவிடத்தைப் பொறுத்தும் மிகப்பெரும் வேறுபாடுகளைக் கொண்டிருக்கும்.[98]

அநேக ஐரோப்பிய நாடுகளில் கோகோயினின் பொதுவான சில்லறை விலை கிராமுக்கு 50€ முதல் 75€ வரை இருப்பதாக போதை மருந்து மற்றும் போதைக்கு அடிமைப் பழக்கத்திற்கான ஐரோப்பிய கண்காணிப்பு மையம் தெரிவிக்கிறது, ஆயினும் சைப்ரஸ், ரோமானியா, ஸ்வீடன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் விலை இன்னும் உயர்ந்து காணப்படுவதாகத் தெரிவிக்கின்றன.[99]

கோகோயின் பைகள், பழ வாசனைப் பொருட்கள் கலக்கப்படுகின்றன.

நுகர்வு

வருடாந்திர உலக கோகோயின் நுகர்வு இப்போது சுமார் 600 மெட்ரிக் டன்களாக உள்ளது, இதில் அமெரிக்கா சுமார் 300 மெட்ரிக் டன்களை, அதாவது மொத்த அளவில் 50%, நுகர்கிறது, ஐரோப்பா சுமார் 150 மெட்ரிக் டன்களை, அதாவது மொத்த அளவில் 25%, நுகர்கிறது, உலகின் எஞ்சிய பகுதிகள் எஞ்சிய 150 மெட்ரிக் டன்கள் அல்லது 25% ஐ நுகர்கின்றன.[100]

கோகோயின் கலப்படப்பொருட்கள்

கோகோயின் இதுபோன்ற பலபொருட்களுடன் “உடைக்க”ப்படுகிறது:

மயக்கவஸ்துகள்:

  • லிடோகேயின்
  • பென்ஸோகேயின்
  • புரோகேயின்

மற்ற தூண்டிகள்:

  • கஃபெயின்
  • எபெட்ரைன்
  • மெதாம்பெடமின்

மந்த துகள்கள்:

  • சமையல் சோடா
  • இனோஸிடால்

பயன்பாடு

ஐநா 2007 அறிக்கையின் படி, கோகோயின் பயன்பாடு மிக அதிகமாகக் கொண்டிருக்கும் நாடு ஸ்பெயின் ஆகும் (ஆய்வுக்கு முந்தைய ஆண்டில் வயது வந்தோரில் 3.0% சதவீதமாக இருந்தது).[101] பயன்பாட்டு விகிதம் 1.5% ஐ எட்டுகிற அல்லது தாண்டுகிற மற்ற நாடுகளாக அமெரிக்கா (2.8%), இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் (2.4%), கனடா (2.3%), இத்தாலி (2.1%), பொலிவியா (1.9%), சிலி (1.8%), மற்றும் ஸ்காட்லாந்து (1.5%) ஆகியவை உள்ளன.[101]

அமெரிக்காவில்:

பொதுவான பயன்பாடு

அமெரிக்காவில் இரண்டாவது மிகப் பிரபல ஊக்க மருந்தாக (மரிஜூவானா[102] வுக்கு அடுத்து) கோகோயின் இருக்கிறது, அத்துடன் உலகின் மிகப் பெரிய கோகோயின்[95] நுகர்வோராய் அமெரிக்கா உள்ளது. கோகோயின் நடுத்தர மற்றும் மேல் தட்டு மக்களிடையே பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. கல்லூரி மாணவர்களிடையே பார்ட்டி மருந்தாகவும் இது புகழ்பெற்றுள்ளது. இதனைப் பயன்படுத்துவோர் பரந்துபட்ட வயது, இனம் மற்றும் தொழில் வகைகளைச் சேர்ந்தவர்களாய் உள்ளன. 1970கள் மற்றும் 80களில், இந்த மருந்து டிஸ்கோ கலாச்சாரத்தில் குறிப்பாகப் பிரபலமானது, ஏனெனில் ஸ்டுடியோ 54 போன்ற பல டிஸ்கோக்களில் கோகோயின் பயன்பாடு என்பது மிகச் சாதாரண ஒன்றாகவும் பிரபலமான ஒன்றாகவும் இருந்தது.

ஊக்க மருந்து துஷ்பிரயோகத்திற்கான தேசிய வீட்டுவாரியான கணக்கெடுப்பு (NHSDA) 1999 ஆம் ஆண்டில் கூறியதன் படி, கோகோயின் 3.7 மில்லியன் அமெரிக்கர்களால், அல்லது 12 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டு மக்கள்தொகையின் 1.7% பேரால் பயன்படுத்தப்பட்டது. கோகோயினைத் தொடர்ந்து பயன்படுத்துவோரின் (குறைந்தது மாதத்திற்கு ஒருமுறையேனும்) தற்போதைய எண்ணிக்கை குறித்த மதிப்பீடுகள் மாறுகின்றன என்றாலும் ஆராய்ச்சி வட்டங்களில் 1.5 மில்லியன் என்பது பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு எண்ணிக்கையாக இருக்கிறது.

1999 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஆறு ஆண்டு காலத்தில் கோகோயின் பயன்பாட்டு அளவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இருந்திருக்கவில்லை என்றாலும், முதல் முறையாகப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1991 ஆம் ஆண்டில் 574,000 ஆக இருந்ததில் இருந்து 1998 ஆம் ஆண்டில் – 934,000 ஆக 63% அதிகரித்திருந்தது. இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் கோகோயின் இன்னும் அமெரிக்காவில் பரவலான பயன்பாட்டில் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிற அதே சமயத்தில் 1980களின் ஆரம்பத்தில் இருந்ததைக் காட்டிலும் கோகோயின் பயன்பாடு என்பது குறிப்பிடத்தக்க அளவுக்கு வியாபகம் குறைந்திருக்கிறது என்பதையும் காட்டுகின்றன.

இளைஞரிடையேயான பயன்பாடு

1999 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மானிடரிங் தி ஃப்யூச்சர் (MTF) கணக்கெடுப்பில் தூளாக்கப்பட்ட கோகோயின் பயன்படுத்துவாதக் கூறும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கை 1990களில் கணிசமாக உயர்ந்திருந்தது கண்டறியப்பட்டது. 1991 ஆம் ஆண்டில், எட்டாவது கிரேடில் படித்துக் கொண்டிருந்தவர்களில் 2.3% பேர் தாங்கள் கோகோயினை சுவைத்திருப்பதாகக் கூறியிருந்தனர். இந்த அளவு 1999 இல் 4.7 சதவீதமாக அதிகரித்தது. முதிர்ந்த கிரேடுகளுக்கு, அதிகரிப்புகள் 1992 ஆம் ஆண்டில் துவங்கி 1999 ஆம் ஆண்டின் துவக்கம் வரை தொடர்ந்தது. இந்த வருடங்களுக்கு இடையே, கோகோயினின் ஆயுள்கால பயன்பாடு பத்தாவது கிரேடில் படித்துக் கொண்டிருந்தவர்களிடையே 3.3% இல் இருந்து 7.7% க்கும், உயர்நிலைப் பள்ளி சீனியர்களிடையே 6.1% இல் இருந்து 9.8% க்கும் அதிகரித்திருந்தது. இதேபோல் கிராக் கோகோயினின் ஆயுள்காலப் பயன்பாடும், MTF கணக்கெடுப்பின் படி, எட்டாவது-, பத்தாவது-, மற்றும் பன்னிரண்டாவது- கிரேடு மாணவர்களிடையே, 1991 ஆம் ஆண்டில் சராசரியாய் 2% ஆக இருந்ததில் இருந்து 1999 இல் சராசரியாய் 3.9% ஆக அதிகரித்திருந்தது.

கோகோயின் மற்றும் கிராக் பயன்பாட்டினை அபாயம் என உணர்வது மற்றும் அதனைக் கண்டு முகம்சுளிப்பது இரண்டுமே இந்த மூன்று கிரேடு மாணவர்களிடையே 1990களில் குறைந்துபட்டிருந்தது. மாதாந்திர கோகோயின் பயன்பாட்டில் மிக உயர்ந்த விகிதம் 1.7% என்கிற அளவில் 18-25 வயதினரிடையே இருந்தது என்பதை 1999 NHSDA கண்டறிந்தது, இது 1997 ஆம் ஆண்டில் 1.2% ஆக இருந்தது. 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டிற்கு இடையே 26-34 வயதினருக்கு இடையே இந்த விகிதங்கள் சரிந்திருந்த அதே வேளையில், 12-17 மற்றும் 35+ வயதினைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விகிதங்கள் லேசான அதிகரிப்பைக் கண்டிருந்தன. இளம் வயதில் கோகோயின் கொண்டு சிறுவர்கள் பரிசோதனை செய்து கொள்கிறார்கள் என்பதையும் ஆய்வுகள் காட்டின. முதன்முறை பயன்படுத்துகிற சராசரி வயது 1992 ஆம் ஆண்டில் 23.6 ஆக இருந்ததில் இருந்து 1998 ஆம் ஆண்டில் 20.6 ஆக தொடர்ந்து சரிந்து வந்திருந்ததை NHSDA கண்டறிந்தது.

ஐரோப்பாவில்

பொதுவான பயன்பாடு

ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய பிரபல சட்டவிரோத ஊக்க மருந்தாக (மரிஜுவானாக்குப் பின்னால்) கோகோயின் இருக்கிறது. 1990களின் மத்தி துவங்கி, ஐரோப்பாவில் ஒட்டுமொத்த கோகோயின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது, ஆனால் பயன்பாட்டு விகிதங்களும் மனோபாவங்களும் நாடுகளுக்கிடையே வேறுபடுவதைக் காண முடியும். மிக அதிக பயன்பாட்டு விகிதங்கள் கொண்ட நாடுகள் பின்வருமாறு: இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, மற்றும் அயர்லாந்து.

ஏறத்தாழ 12 மில்லியன் ஐரோப்பியர்கள் (3.6%) குறைந்தது ஒருமுறையேனும் கோகோயின் பயன்படுத்தியுள்ளனர், சென்ற ஆண்டில் 4 மில்லியன் (1.2%) பேரும், சென்ற மாதத்தில் 2 மில்லியன் பேரும் (0.5%) பயன்படுத்தியுள்ளனர்.

இளம் மத்திய வயதினரிடையேயான பயன்பாடு

சென்ற ஆண்டில் பயன்படுத்தியவர்களில் சுமார் 3.5 மில்லியன் அல்லது 87.5% பேர் இளம் மத்திய வயதினர் (15-34 வயதானவர்கள்) ஆவர். இந்த மக்களமைப்பு வகையில் தான் பயன்பாடு குறிப்பாக பரந்துபட்டதாய் இருக்கிறது: ஸ்பெயின், டென்மார்க், அயர்லாந்து, இத்தாலி மற்றும் இங்கிலாந்தில் சென்ற ஆண்டில் 4% முதல் 7% ஆண்கள் கோகோயின் பயன்படுத்தியுள்ளனர். ஆண் பெண்ணுக்கு இடையிலான பயன்பாட்டு விகிதம் சுமார் 3.8:1 என்பதாக இருக்கிறது, ஆனால் இந்த புள்ளிவிவரமானது நாட்டைப் பொறுத்து 1:1 முதல் 13:1 வரை மாறுபடுகிறது.[103]

குறிப்புதவிகள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கோக்கைன்&oldid=3924906" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை