புகையிலை

புகையிலை ஒரு வேளாண்மை உற்பத்திப் பொருள். இதனைப் புகைத்தலுக்கு அல்லது புகையிலை பிடித்தலுக்குப் பயன்படுத்துவதனால் இது புகையிலை என்னும் காரணப்பெயரைப் பெற்றது. இதனைப் புகைத்துப் பழக்கப்பட்டவர்கள் அப் பழக்கத்துக்கே அடிமையாகி விடுவர்[1]. புகையிலை, நிக்கொட்டீனா என்னும் பேரினத்தைச் சேர்ந்த தாவரத்தின் இலைகளிலிருந்து செய்யப்படுகின்றது. மிகப் பழங்காலம் தொட்டே இது அமெரிக்காக் கண்டத்தில் பயன்பட்டு வந்துள்ளது. ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு வந்ததிலிருந்து இது ஒரு வணிகப் பண்டம் ஆனதுடன், பொழுதுபோக்குத் தேவைகளுக்கான ஒரு பொருளாகவும் பிரபலமானது. இதனால் இது, ஐக்கிய அமெரிக்காவின் தென்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது. இப்பகுதிகளில் பருத்தி அறிமுகப்படுத்தப்படும் வரை பணப்பயிராக இதன் முதன்மைத்துவம் நீடித்தது.

புகையிலை
புகையிலை சீவல்களாகவும், துண்டங்களாகவும் வெட்டப்படுகின்றன
புகையிலைச் சீவல்கள், துண்டங்கள்
Botanical nameபுகையிலை
Source plant(s)நிக்கோடினா
Part(s) of plantஇலை
Geographic originதென் அமெரிக்கா
Active ingredientsநிகோடின், ஹார்மைன்
Usesமனக்கிளர்ச்சி மருந்துகள்
Legal status
  • AU: பட்டியலில் இல்லை
  • CA: பட்டியலில் இல்லை
  • UK: 18+
  • UN: பட்டியலில் இல்லை
  • EU: பட்டியலில் இல்லை
  • காண்க: புகையிலைத்தடுப்பு

சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்த இது நிக்கொட்டீனா எனும் பேரினத்துள் அடங்கும் பல புகையிலை இனங்களும் இதில் உண்டு. இப்பேரினத்தின் பெயர் போர்த்துக்கல் நாட்டுக்கான பிரான்ஸ் தூதுவரான ஜீன் நிக்கொட் டீ வில்லமெயின் என்பவரைக் கௌரவிப்பதற்காக இடப்பட்டது[2]. இவர் 1560 ஆம் ஆண்டில் கத்தரீன் டி மெடிசியின் அரண்மனைக்கு ஒரு மருந்துப் பொருளாக அனுப்பி வைத்திருந்தார்.

இதனைப் பயன்படுத்தும் முறையையும், அளவையும் பொறுத்து மனித உடலில் இது ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதனைப் பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய முக்கியமான உடல்நலக் கேடு குருதிச் சுற்றோட்டத்தொகுதியில் ஏற்படக்கூடிய நோய்கள் ஆகும். புகைத்தல் காலப்போக்கில், வாய், தொண்டை, நுரையீரல் ஆகிய பகுதிகளில் பெருமளவு புற்று நோயைத் தூண்டும் பொருட்களைப் படியச் செய்கிறது.

2008ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு புகையிலை இறப்பின் எளிய வழியாகச் சாடியது.[3]

சொற்பிறப்பியல்

இலைகள் புகைத்தலுக்குப் பயன்படுவதால் இது புகையிலை எனக் காரணப்பெயர் பெறுகிறது.

மேலும் இதனை நுகர உலர வைத்து பொடியாக்கிய புகையிலையை நன்கு துகள்களாக்கி இலையினுள் வைத்து சுருட்டுவதால் புகையிலைச் சுருட்டு எனவும் தமிழில் வழங்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் வழங்கப்பெறும் டொபாக்கோ(tobacco) எனப்படுவது டொபாகோ(tobaco) ஸ்பானிய மற்றும் போர்ச்சுக்கல் மொழியிலிருந்து பெறப்பட்டது ஆகும். 9ஆம் நூற்றாண்டுகளில் அரபு மொழியிலிருந்து அறியப்பட்ட டுபாக் (طُباق ṭubāq) என்பது பலவகையான மருத்துவ மூலிகைகளைக் குறிப்பதாகும். இதிலிருந்தே பின்னர் 1410ஆம் ஆண்டு ஸ்பானிய, போர்ச்சுகீசிய, இலத்தீன் மொழிகளில் பயன்படுத்தப்பட்ட குறிப்புகள் உள்ளன.[4][5]

வரலாறு

புகையிலை வரலாற்றின் படி தென்னமெரிக்க மக்களால் கண்டறியப்பட்டு அமெரிக்காவிற்கும், ஸ்பானியர்கள் மூலம் ஐரோப்பாவிற்கும், பிறகு மற்ற நாடுகளுக்கும் பரவியதாக அறியப்படுகிறது.

பாரம்பரிய பயன்பாடு

  • கி.மு 1400-1000 ஆண்டுகளில் புகையிலை அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டுள்ளது, மேலும் மெக்சிகோ நாட்டில் சாகுபடி செய்யப்பட்டதாகவும் அறியப்படுகிறது.[6]
  • பூர்வ அமெரிக்க குடிகள் இவற்றை சாகுபடி செய்தும், பயன்படுத்தியும் வந்துள்ளனர்.
  • வடகிழக்கு அமெரிக்கர்கள் தங்களின் கைப்பைகளில் பயன்படுத்தும் வணிகப்பொருளாகவும், சமுதாய சடங்குப்பொருளாகவும் வணிக ஒப்பந்தத்திற்கும் பயன்படுத்தினர்.[7][8]
  • சில சமயங்களில் மக்களின் நம்பிக்கைப்படி தங்கள் கடவுளின் பரிசாகவும், சமய வழிபாட்டில் பிரார்த்தனைப் பொருளாகவும் பயன்படுத்தினர்.[9]

பிரபலம்

ஐரோப்பியர்களின் வருகையால் அமெரிக்காவிலிருந்து புகையிலையின் பயன்பாடு வணிக ரீதியாக ஐரோப்பிய நாடுகளில் பரவ ஆரம்பித்தது.

  • 1559 ஆம் ஆண்டு ஸ்பானிய அரசர் ஃபிலிப் (II)ன் ஆணைக்கிணங்க ஹெமாண்டெஸ் டி பான்கலோவால் மேற்கத்திய நாடுகளுக்கு விதைகள் கொண்டுவரப்பட்டு பரப்பப்பட்டன.
  • 1700களில் ஐரோப்பிய நாடுகளுக்கும் அதன் காலணிய நாடுகளுக்கும் புகைக்கவும், மெல்லவும், மூக்குப்பொடியாகவும் மிகப்பெரிய ஆலைப்பொருளாக பரவின.[10][11]
  • 18ஆம் நூற்றாண்டில் கியூபா நாட்டிலும், கரீபியன் தீவுகளிலும் முக்கிய பணப்பயிராகத் திகழ்ந்தது. கியூபாவின் சிகரட்டுகள் உலகப்பிரசித்தி பெற்றவை.
  • 19ஆம் நூற்றாண்டில் ஜேம்ஸ் பான்சோக் என்பவரால் கண்டறியப்பட்ட சாதனம் புகையிலை சிகரட்டுகள் உற்பத்தியை விரைவுபடுத்தி எளிமையாக்கியது. இது புகையிலை வணிகத்தின் வளர்ச்சிக்கு உதவியது. 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் புகையிலையின் தீங்கு, உடல்நலக்கேடு பற்றிய விழிப்புணர்வு பெறும் வரையிலும் புகையிலை உற்பத்தி மிகவும் வளர்ச்சியடைந்து கொண்டே இருந்தது.[12][13]
  • 17ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[14]

தற்கால பயன்பாடு

  • 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் பல்வேறு அறிவியற் கண்டுபிடிப்புகளினாலும், புகையிலையின் தாக்கம் பற்றிய அறிவாலும், புகையிலையின் கட்டுப்படு முக்கியத்துவம் பெறத்தொடங்கியது.
  • புகையிலையால் புற்று நோய், சுவாசக் கோளாறு, மற்றும் இரத்த சுழற்சி மண்டல பாதிப்புகள் போன்றவை ஆராய்ந்தறியப்பட்டன.
  • ஐக்கிய அமெரிக்காவில் கொணரப்பட்ட புகையிலை ஒப்பந்தங்களால் புகையிலைப் பொருட்கள் பற்றிய விளம்பரங்கள், சந்தைப்படுத்தல், முதலியவற்றிற்கு வருடாந்திர ஒப்பந்தத் தொகை பெறப்பட்டது.
  • 2003 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை பற்றிய தீங்கு, கட்டுபடுத்துவதன் முக்கியத்துவம், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்றவற்றிற்கான பரிந்துரைகளில் 168 நாடுகள் கையெழுத்திட்டன.[15]

தாவர-உயிரியல்

புகையிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
ஆஸ்டெரிட்ஸ்
வரிசை:
சொலனேல்
குடும்பம்:
சொலனேசி
பேரினம்:
நிகொடியானா
இனம்:
நி. டபேக்கம்
இருசொற் பெயரீடு
நிக்கொட்டியானா டபேக்கம்
லி.

புகையிலை ஆண்டுக்கொருமுறை சாகுபடி செய்யப்படும் பூண்டுத்தாவரம் பணப்பயிர் ஆகும். சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்த நிக்கோடியானா பேரினத்தைக் கொண்ட இப்புகையிலையில் பல சிற்றினங்கள் உள்ளன.

உயிர்-வேதிப்பொருள்-நிகோடின்

வேதி அமைப்பு - நிக்கோடின்
  • நிகோட்டினாத் தாவரத்தின் ஆல்கலாய்டுகள் போதையை ஏற்படுத்தி அடிமையாக்க வல்லன.
  • மேலும் பூச்சிகளின் நரம்பு நச்சாகவும் செயல்படுகிறது.
  • புகையிலையின் உலர்ந்த நிலையில் 0.6% முதல் 3.0% நிக்கோடின் உள்ளது.
  • நிக்கோடின் அசிட்டைல் கொலைன் ரிசப்டார்களில்(nAChRs), அதன் இரு துணை மூலக்கூறுகளைத் (nAChRα9 and nAChRα10) தவிர நிகோட்டின் புகுவாய்களில் (ரிசப்டார்களில்) முதன்மை இயக்கியாக (அகோனிஸ்ட்) செயல்படுகிறது. இவைகளே மூளையுடன் தொடர்பு கொண்டு புகையிலை அடிமைத்தனத்திற்கு காரணமாகின்றன.
  • புகையிலையை நுகர்ந்தவுடன் அது நிக்கோட்டின் மூலக்கூறாக இரத்த ஓட்டத்தில் கலந்து 10-20 நொடிகளில் மூளையை அடைகிறது. இப்போதை சில நொடிகளே மதிமயக்கச் செய்து அதனை நுகரத் தூண்டுகிறது.[16]

வேளாண் உற்பத்தி

  • ஏனைய பயிர்கள் உற்பத்தியைப்போன்றே புகையிலையும் விதைகளின் மூலம் வேளாண் சாகுபடி செய்யப்படுகிறது.பணப்பயிரான புகையிலை விதைகள் நன்கு உலர்ந்த மண்ணில் மேற்பரப்பில் தூவப்படுகின்றன. சூரிய ஒளி, நீர், போன்ற புறக்காரணிகளால் அவை முளைத்து மேலெழுகின்றன.
  • புகையிலை
  • ஜெனிவாவில் விதைப்படுக்கையானது மரத்தூளினாலோ, குதிரை சாணத்தாலோ ஆன உரப்படுக்கையில் விதைக்கப்படுகின்றன.
  • சில தெள்ளுப்பூச்சிகள் (எபிட்ரிக்ஸ் குகுமிரிஸ், எ.ப்யூபசென்ஸ்) புகையிலையில் நோயினை உண்டாக்குகின்றன. 1876ஆம் ஆண்டு 50% புகையிலைச் சாகுபடி பாதிப்பிற்கு காரணமாகின. பின்னர் 1890களில் கடைபிடிக்கப்பட்ட தீங்குயிரித் தடுப்பு முறைகளால் இழப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

சாகுபடி & புகையிலை பதனிடல்

நன்கு விளைந்த புகையிலைகள் அறுவடை செய்யப்பட்டு, அல்லது கிள்ளப்பட்டு பதனிடல் (அ) புகையிலைப் பதனீடு செய்யப்படுகிறது. இதனால் புகையிலையிலுள்ள ஈரத்தன்மை, பச்சையம் முதலியன முழுமையாக / பகுதியளவு நீக்கப்பட்டு சுவையும், நறுமணமுமூட்டப் படுகிறது.

பதனிடல் முறைகள்

  • காற்றில் பதனிடல்
  • தீயில் பதனிடல்
  • சூரிய ஒளியில் பதனிடல்
  • நிழலில் பதனிடல்
  • வெப்பத்தில் பதனிடல்
  • பதனிட்டு பதனிடல்

வகைகள்

புகையிலையின் வகைகளாவன,

  • நறுமணப் புகையிலை
    • சிறிய நெருப்பினால் தீட்டி புகையூட்டி உணர்த்தப்பட்டு, நறுமணமும், சுவையுமிக்க புகையிலைகள் புகையிலை நுகர்வுக்குழாய்களில் நுகர பயன்படுத்தப்படுகின்றன.
    • இவைப் பெரும்பாலும் ஐக்கிய அமெரிக்காவின் வெர்ஜீனியாவிலுள்ள டென்னஸ், மேற்கு கென்டகியில் விளைவிக்கப்படுகின்றன.
    • தீயில் உணர்த்தப்பட்ட இப்புகையிலைகள் கென்டகி, டென்னஸ் பகுதிகளில் மெல்லும் புகையிலையாகவும், சிகரட்டுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
  • லடாக்கியா புகையிலை
    • சிரியா நாட்டின் துறைமுக நகரமான லடாக்கியாவில் மிகவும் பிரபலமான புகையிலை, லடாக்கியா புகையிலை ஆகும். இது தற்போது முக்கியமாக சிப்ரஸ் தீவுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இலைகள் அறுவடை செய்யப்பட்ட பின்னர் சூரிய ஒளியில் உலர்விக்கப்பட்டு பின்னர் களஞ்சியத்தில் நிரப்பப்பட்டு பின்னர் புகை மூலம் பதனீடு (அ) உணர்த்தல் செய்யப்படுகிறது.
  • பொலிவிலைப் புகையிலை
    • அமெரிக்க குடியுரிமைப் போர்கள் நடக்கும் வரை தீயில் வாட்டப்பட்ட கரும்புகையிலைகளே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. 1812ஆம் ஆண்டிற்குப் பிறகு, மென்மையான, மிருதுவான, அதிக சுவையும், மணமும் கொண்ட புகையிலை உற்பத்தி மற்றும் தேர்வை இன்றியமையாததாக இருந்தது.
    • அமெரிக்க விவசாயிகளின் பல்வேறு ஆராய்ச்சிகளினால் பல்வேறு உணர்த்தல் முறைகள் 1839ஆம் ஆண்டு வரையிலும் முயற்சி செய்யப்பட்டன.
    • 1839ஆம் ஆண்டு வடக்கு கரோலினாவைச் சேர்ந்த மாலுமி அபிசா ஸ்லேடின் பணியாளரான ஸ்டீபன் பொலிவிலைப் புகையிலையை ஏதேச்சையாக கண்டறிந்தார். தீயிலுணர்த்த நிலக்கரியைப் பயன்படுத்தினார். இதனால் வெளிறிய மஞ்சள் (அ) தங்க நிறத்தில் புகையிலைகள் உலர்ந்து பெறப்பட்டன.
  • கொரோஜோ
  • க்ரியொலோ
  • தோகா
  • ஈக்குவடோரியன் சுமத்ரா
  • ஹபானோ
  • ஹபானோ 2000
  • மதுரோ
  • கிழக்கத்திய புகையிலை
  • பெரிக்
  • வகை 22
  • ஒய் 1 (Y1)
  • நிழல் புகையிலை
  • தோக் லாவ்

பொருளாதாரம்

உலகளாவிய உற்பத்தி

முக்கிய தயாரிப்பாளர்கள்

உலக புகையிலை உற்பத்தியாளர்கள்

தர வரிசை, 2014[17]

நாடுகள்உற்பத்தி (டன்)கள்குறிப்புகள்
 China213400
 Brazil862,396
 India720,725
 United States397,535
 Indonesia196,300
 Pakistan129,878
 Malawi126,348
 Argentina119,434
 Zambia112,049
 Mozambique97,075
 உலகம்5,755,140A
No note = official figure, F = FAO Estimate, A = Aggregate (may include official, semiofficial or estimates).

ஆண்டொன்றிற்கு , சுமார் 6.7 மில்லியன் டன்கள் புகையிலை உலகம் முழுதும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சீனா (39.6%), இந்தியா (8.3%), பிரேசில் (7.0%) ஐக்கிய அமெரிக்கா (4.6%).[18] விழுக்காட்டில் முக்கிய புகையிலை உற்பத்தி நாடுகளாக உள்ளன.

சீனா
  • உலகின் முதல்நிலை புகையிலை உற்பத்தியாளர்களாக சீனா விளங்குகிறது. சுமார் 2.1 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் 20 மில்லியன் ஊரக, கிராம சீனமக்கள் இதனை உற்பத்தி செய்கின்றனர்.[19]
  • புகையிலை உற்பத்தியில் முன்னிலை வகித்தாலும் பருத்தி, கரும்பு போன்ற இலாபம் தரும் பணப்பயிராக இவை திகழ்வதில்லை. ஏனெனில் சீன அரசு புகையிலைக்கு வரிகளும், கட்டுப்பாடுகளும், சந்தை விலைநிர்ணயமும் செய்கின்றது.
  • 1982ல் அமைக்கப்பட்ட சீன புகையிலைக்கட்டுப்பாடு முன்னுரிமை மேலாண் கழகம் (STMA), சீனாவின் எல்லைப்பகுதியின் புகையிலை உற்பத்தி, சந்தைப்படுத்தல், ஏற்றுமதி, இறக்குமதி, மற்றும் 12% மொத்த தேசிய வருவாய் வளர்ச்சி, போன்றவற்றைக் கண்காணிக்கின்றன.
  • மேலும் புகையிலை உற்பத்தியைக் கட்டுப்படுத்த சீன அரசு நிறுவனங்கள், சில்லரை விற்பனையாளார்களிடம் வரி விதிக்கின்றது.
இந்தியா
  • ஆந்திர மாநிலத்திலுள்ள குண்டூரில் புகையிலை மையத் தலைமையகம் உள்ளது.[20]
  • இந்தியாவில் சுமார் 96,865 அங்கீகரிக்கப் பட்ட விவசாயிகள் இத்தொழிலை செய்து வருகின்றனர்.[21] மேலும் பலர் அனுமதியின்றி சாகுபடி செய்கின்றனர்.
  • சுமார் 3120 புகையிலை உற்பத்தி மையங்கள் நாடு முழுவதும் இயங்குகின்றன.[22] நாடு முழுதும் உள்ள வேளாண் நிலங்களில் சுமார் 0.25 விழுக்காடு நிலங்கள் புகையிலை வேளாண்மைக்கு பயன்படுத்தப்படுகிறது.[23]
பிரேசில்

பிரேசிலில் சுமார் 1,35,000 விவசாயக் குடும்பங்கள் அவர்களின் முக்கியப் பொருளாதாரத்தேவைக்காக புகையிலை சார்ந்த தொழில்களைச் செய்கின்றனர்.

நுகர்வு

  • சுருட்டு
  • சிம்லி
  • பீடி
  • புகையிலை சீவல், துருவல்கள்
  • சிகரெட்டுகள்
  • ஹுக்கா
  • குட்கா
  • மூக்குப் பொடிகள்
  • புகையிலைக் களிம்புகள்
  • புகையிலை நீர்
  • புகையிலைத் துண்டுகள்
  • குட்கா
  • பான் மசாலா

உற்பத்தி சிக்கல்கள்

குழந்தைத் தொழிலாளர்கள்

புகையிலை சார்ந்த தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்கள் உலகில் சீனா, இந்தியா, அர்ஜெண்டினா, இந்தொனேசியா, மலாவி, பிரேசில், மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளில் [24] பயன்படுத்தப்படுகின்றனர்.

புகையிலை மற்றும் புகைப்பதனால் ஏற்படும் விளைவுகள்

இறப்பு

  • உலக அளவில் தவிர்க்கக் கூடிய மரணங்கள் நிகழ்வதற்கு புகையிலை ஒரு முன்னணிக் காரணியாக விளங்குகிறது.
  • ஒரு சிகரட் புகைக்கப்படும் போது தோராயமாக ஒருவர் தன் ஆயுட்காலத்தின் 11 நிமிடங்களை இழக்கின்றார்.
  • ஒவ்வொரு 6 நொடிப்பொழுதிலும் உலகில் ஒரு உயிரழப்பு புகையிலையால் ஏற்படுகிறது.
  • புகைப்பழக்கம் உடையவர்கள் இயல்பான இறப்பு விகிதத்தைக் காட்டிலும் 60-80% அதிகம்.[25]
  • ஒருவருடத்திற்கு சுமார் 5 மில்லியன் மக்கள் புகையிலை சார்ந்த நோயால் மடிகின்றனர்.[26][27]

புற்றுநோய்

புகையிலைப் பயன்பாடால் புற்றுநோய்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளன. சான்றாக,

  • நுரையீரல் புற்றுநோய்,[28]
  • குரல்வளை, கழுத்து புற்றுநோய்,[29][30]
  • இரத்த, இரத்தக்குழாய் புற்றுநோய்,[31]
  • சிறுநீரக புற்றுநோய்,[32]
  • வாய், உணவுக்குழாய் புற்றுநோய்,[33]
  • கணையப்புற்றுநோய்,[34]
  • வயிற்றுப் புற்றுநோய்,[35]

நுரையீரல் பாதிப்பு

நுரையீரல் வளர்ச்சியைக் குறைக்கிறது. சுவாசப்பாதை குறுக ஆரம்பிக்கிறது. புகையிலை புகைப்பதால் நுரையீரல் சீர்கெட்டு பல்வேறு சுவாசநோய்கள் ஏற்பட முக்கியக் காரணமாக அமைகிறது.

இதர பாதிப்புகள்

  • இதய நாள நோய் - ரத்த அழுத்தம் அதிகரிப்பு, இதயத் துடிப்பு அதிகரித்தல், இரத்தக் குழாய்களின் தன்மை கடினமடைகிறது.
  • வாய், முகர்தல், சுவைக் கோளாறு - வாயில் ஈறுகள் நிறமாறத்திற்குக் காரணமாகிறது. சுவை, நுகரும் திறனைக் குறைக்கிறது. புகையினால் வாய்ப்புண்களை ஏற்படுத்துகிறது.
  • பக்கவாதம்,மனநோய்கள் - புகைத்தல் மூளையை பாதித்து பக்கவாதம் வரக் காரணமாகிறது.
  • சிறுநீரக நோய்
  • நோய்த்தொற்று
  • ஆண்மைக்குறைபாடு
  • பெண் கருவுறாமை
  • கர்ப்ப பிரச்சனைகள்
  • மருந்து இடைவினைகள்
புகைக்கும் ஐரோப்பியர், கற்பனை ஓவியம் :அந்தோனி சூட்டே, 1595
ஹுக்கா புகையிலைப்புகைத்தல், தர்சுலா, நேபாளம்
கற்பனை ஓவியம் : ஃப்ரட்ரிக் வில்லியம் ஃபேர்ஹொல்ட்ன் புகையிலை, வரலாறு மற்றும் சமூகம், 1859

உலக புகையிலை ஒழிப்பு தினம்

உலக சுகாதார நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் உலக புகையிலை ஒழிப்பு தினம் மே மாதம் 31 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் அபாயம்

2017 ல் உலக சுகாதார நிறுவனம் புகையிலையும் அதன் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.[36]

  • புகையிலை சார்ந்த கழிவுகள் சுமார் 7000ற்கும் மேற்பட்ட நச்சு வேதிப்பொருட்களையும், மனித புற்று நோய்க்காரணிகளையும் சுற்றுச்சூழலில் பரப்பி, அதனை மாசுபடுத்துகின்றன.[37]
  • புகையிலையிலிருந்து வெளியேறும் புகை நச்சு சுமார் 1000 டன்கள் மனித புற்று நோய்க்காரணிகளை வளிமண்டலத்தில் பரப்புகின்றன.
  • தினமும் விற்பனையாகும் 15 பில்லியன் சிகரட்டுகளில் சுமார் 10 பில்லியன் சிகரட் கழிவுகள் சுற்றுச்சூழலில் பரப்பப்படுகின்றன.
  • சுமார் 30%-40% கடற்கரை மற்றும் ஊரகக் கழிவுகள் சிகரட் பஞ்சுகளைக் கொண்டிருக்கின்றன.

பொருளாதாரம் & விளம்பரப்படுத்தல்

புகையிலையின் தீங்கு, பக்க விளைவுகளைக் கருத்தில் கொண்டு புகையிலையின் விளம்பரங்கள் மற்றும் சந்தைபடுத்டுதலில் பல்வேறு கட்டுப்படுகள் மற்றும் தடைகள் உலகம் முழுவதிலும் கடைபிடிக்கப் படுகிறது.

  • இந்தியாவில் புகையிலை வஸ்துகளில் புகையிலையின் அபாயம் பற்றிய படங்கள் இடம் பெற வேண்டும்.
  • பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

திரைப்படம்

இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுகாதார விழிப்புணர்விற்காக,

  • திரைப்படங்களில் புகைப்பிடித்தல் பற்றிய விழிப்புணர்வு காட்சிகள் தலையங்கம், இடைவேளை, இறுதி போன்றவற்றில் இடம்பெறச் செய்தல் வேண்டும்.
  • திரைப்படங்களில் புகைப்பிடித்தல் காட்சிகள் வரும்போது "புகைப்பிடித்தல் கேடு தரும்" உள்ளிட்ட வாசகங்கள் ஆன்கிலம் மற்றும் மாநில மொழிகளில் இடம் பெறல் வேண்டும்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புகையிலை&oldid=3859242" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை