நோர்வே மொழி

நோர்வேயில் பேசப்படும் வட செருமானிய மொழி

நோர்வே மொழி அல்லது நோர்வேஜிய மொழி அல்லது நோர்வேசிய மொழி அல்லது நொர்ஸ்க் மொழி என்பது இந்தோ இந்தோ-ஐரோப்பிய மொழிகுடும்பத்தை சேர்ந்த செருமானிய மொழிகளுள் ஒன்றாகும். இது முதன்மையாக நோர்வேயில் வாழும் மக்களால் பேசப்படுகின்றது. நோர்வேயில் வாழும் கிட்டத்தட்ட 4.8 மில்லியன் மக்களும், நோர்வேயிலிருந்து முன்னைய நாளில் அமெரிக்காவில் குடியேறி அங்கே வாழ்ந்துவரும் மக்களும், அவரது சந்ததியினருமாகிய கிட்டத்தட்ட 50,000 மக்களும், கனடாவிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்துவரும் கிட்டத்தட்ட 7,700 மக்களும் இந்த மொழியைப் பேசுகின்றவர்களாய் உள்ளனர்.

நோர்வே மொழி
நொர்ஸ்க்
உச்சரிப்பு[nɔʂk]
நாடு(கள்)
 நோர்வே (4.8 million),
 ஐக்கிய அமெரிக்கா (55,311)
 கனடா (7,710)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
5 million நோர்வேஜியர்கள்  (date missing)
இந்தோ ஐரோப்பிய மொழி
  • Germanic
    • North Germanic
      • Mainland Scandinavian
        • நோர்வே மொழி
Standard forms
நீநொர்ஸ்க் மொழி (அரச கரும மொழி)
பூக்மோல் மொழி (அரச கரும மொழி) / பூக்மோல் மொழி (அரச கரும மொழியல்ல)
இலத்தீன் (நோர்வேஜிய அரிச்சுவடி வேறுபாட்டுடன்)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
நோர்வே
Nordic Council
Regulated byNorwegian Language Council (Bokmål and Nynorsk)
Norwegian Academy (Riksmål)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1no – நோர்வே மொழி
nbபூக்மோல்
nnநீநொர்ஸ்க்
ISO 639-2[[ISO639-3:nor – நோர்வே மொழி
nobபூக்மோல்
nnoநீநொர்ஸ்க்|nor – நோர்வே மொழி
nobபூக்மோல்
nnoநீநொர்ஸ்க்]]
ISO 639-3Variously:
nor — நோர்வே மொழி
nob — [[பூக்மோல்]]
nno — [[நீநொர்ஸ்க்]]

நோர்வே மொழியில், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சி மொழி வடிவங்களாக பூக்மோல், நீநொர்ஸ்க் என்னும் இருவேறு எழுத்து மொழி வடிவங்கள் உள்ளன. இவ்விரு மொழி வடிவங்களுமே நோர்வேயில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

  • பூக்மோல் (Bokmål - நேரடி மொழிபெயர்ப்பு 'நூல் மொழி')- நோர்வே நாடு டென்மார்க் நாட்டுடன் இணைந்து இருந்த காலத்தில் டேனிய மொழியை தழுவி உருவானது இந்த மொழி வடிவம். பழமையைப் பாதுக்காக்கும் மொழியாகவும் கொள்ளப்படுகின்றது.
  • நீநொர்ஸ்க் (Nynorsk - நேரடி மொழிபெயர்ப்பு 'புதிய நோர்வே மொழி')- இது 19 ஆம் நூற்றாண்டில் நோர்வேயில் பயன்பாட்டில் இருந்த டேனிய மொழிக்கு ஒரு மாற்றாக உருவாக்கப்பட்ட ஒரு மொழி வடிவமே ஆகும். இது அதிகளவில் மேற்கு நோர்வேயில் பயன்பாட்டில் உள்ளது.

இவை தவிர அரசாங்க கரும மொழியாக ஏற்றுக் கொள்ளப்படாத வேறு இரு எழுத்து மொழி வடிவங்களும் உள்ளன. அவையாவன:

  • றிக்ஸ்மோல் (Riksmål - நேரடி மொழிபெயர்ப்பு 'தேசிய மொழி') - இது அதிகளவு பூக்மோலை ஒத்திருப்பதுடன் ஓரளவுக்கு டேனிய மொழியுடன் தொடர்புள்ளதாக இருக்கும்.
  • ஹோய்க்நொர்ஸ்க்(Høgnorsk - நேரடி மொழிபெயர்ப்பு 'உயர் நோர்வே மொழி') - இது நீநொர்ஸ்க்கின் துய்மையான வடிமாகக் கருதப்படுகின்றது. அத்துடன் 20 ஆம் நூற்றாண்டில் இருந்து செய்யப்பட்ட அநேகமான எழுத்துச் சீர்திருத்தத்தையும் நிராகரித்துள்ளதுடன், பரந்தளவிலான பாவனையற்றும் உள்ளது.

அரிச்சுவடி

நோர்வே மொழியின் இரு மொழி வடிவங்களும் நோர்வேசிய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது. நோர்வே மொழியில் 29 எழுத்துக்கள் உள்ளன. இவை இலத்தீன் மொழியின் எழுத்து வடிவத்தை அடிப்படையாகக் கொண்டன . அவற்றில் 26 எழுத்துக்கள் ஆங்கிலத்திலுள்ள அதே எழுத்தைக் கொண்டிருப்பினும் உச்சரிப்பில் வேற்பாட்டைக் கொண்டன. மேலதிகமாக மூன்று எழுத்துக்களும் உள்ளன.

ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZÆØÅ
abcdefghijklmnopqrstuvwxyzæøå
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நோர்வே_மொழி&oldid=3679580" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை