சாவோ சாவோ

சாவோ சாவோ (Cao Cao, சீனம்:曹操; 155 – மார்ச் 15, 220[1]) என்பவன் கீழைத்தேய ஹான் அரச வம்சத்தின் கடைசி மன்னனும், போர்ப்பிரபுவும் ஆவான். சீனாவின் ஹான் வம்சத்தின் இறுதிப்பகுதியில் இவன் பெரும் புகழடைந்திருந்தவன். மூன்று இராச்சியங்கள் என அழைக்கப்படும் சீனாவின் ஆட்சிப் பகுதியில் முக்கிய மன்னனாகக் கருதப்பட்டவ இவன் சாவோ வெய் என்ற தனி மாநிலத்தை உருவாக்குவதற்கு காரணியாக இருந்து அதற்கு தன்னையே சக்கரவர்த்தியாக அறிவித்தான். சாவொ பொதுவாக கொடுங்கோலனாக வர்ணிக்கப்பட்டாலும், மிகவும் திறமை மிக்க ஆட்சியாளனாக இருந்தான். கவிதைகள் இயற்றுவதிலும், தற்காப்புக் கலைகள்யிலும் திறமையுடையவன். அத்துடன் போர்க் கலை பற்றி பல நூல்களையும் எழுதியுள்ளான்.

சாவோ சாவோ மன்னன்

சாவோ சாவோவின் கல்லறை கண்டுபிடிப்பு

டிசம்பர் 2009 இல் சாவோவின் கல்லறை மத்திய சீனாவின் எனான் மாகாணத்தில் ஆன்யாங் என்ற பழம்பெரும் தலைநகரத்திற்குக் கிட்டவாக சிகாசூ என்ற கிராமத்தில் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது[2]. 740-சதுர மீ பரப்புடைய இந்தக் கல்லறை சாவோவினுடையதென்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் கல்லோவியங்கள் பலவும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன. கல்லறையில் மூன்று மனிதர்களின் உடல்கள் உள்ளன. 60 அகவை மதிப்புடைய ஆண், 50 மற்றும் 25 அகவை மதிப்புடைய இரு பெண்களுடைய உடல்கள் அங்கு காணப்பட்டுள்ளன. இவை சாவோ மற்றும் அவனது அரசி, தாதி ஆகியோருடையது எனத் தெரிவிக்கப்படுகிறது[3].

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாவோ_சாவோ&oldid=3367169" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை