சீனாவிலுள்ள இனக் குழுக்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

சீனாவிலுள்ள இனக் குழுக்களின் பட்டியல், சீனா என்று தம்மை அழைத்துக்கொள்ளும் சீன மக்கள் குடியரசு மற்றும் சீனக் குடியரசு (தாய்வான்) ஆகிய நாடுகளில் வாழும் இனக்குழுக்களை உள்ளடக்குகின்றது.

ஹான் சீனர்களே சீனாவின் மிகப் பெரிய இனக் குழுவினராகும். இவர்கள் சீனாவில் மொத்த மக்கள்தொகையின் 91.5% த்தினராக இருக்கின்றனர்.[1] இது ஏறத்தாழ 120 கோடி ஆகும். இவர்கள் தவிர சீனாவில் அரசினால் தேசிய இனங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 55 இனக் குழுக்கள் உள்ளன. இவர்களின் மக்கள்தொகை ஏறத்தாழ 10.5 கோடி ஆகும். இச் சிறுபான்மைக் குழுக்கள் பெரும்பாலும் வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, தெற்கு, தென்மேற்கு ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர். சில குழுக்கள் நாட்டின் நடுவிலுள்ள உட் பகுதிகளிலும் வாழ்கின்றனர்.

முக்கியமான சிறுபான்மை இனக்குழுக்கள் பின்வருமாறு: சுவாங் (16.1 மில்லியன்), மஞ்சு (10.6 மில்லியன்), ஊய் (9.8 மில்லியன்), மியாவோ (8.9 மில்லியன்), உய்குர் (8.3 மில்லியன்), துஜியா (8 மில்லியன்), யி (7.7 மில்லியன்), மங்கோலியர் (5.8 மில்லியன்), திபெத்தியர் (5.4 மில்லியன்), புயேயி (2.9 மில்லியன்), தோங் (2.9 மில்லியன்), யாவோ (2.6 மில்லியன்), கொரியர் (1.9 மில்லியன்), பாயி (1.8 மில்லியன்), ஹானி (1.4 மில்லியன்), கசக்குகள் (1.2 மில்லியன்), லி (1.2 மில்லியன்), டாய் (1.1 மில்லியன்).[2]

சீனாவில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இனக் குழுக்கள்

மக்கள்தொகைப்படி வரிசைப்படுத்தப்பட்டது.[3][4][5][6]

மக்கள் சீனக் குடியரசு, சீனக்குடியரசு (தாய்வான்) ஆகிய நாடுகளின் இனமொழிப் பரம்பல் நிலப்படம்.
  1. ஹான் (汉族: Hànzú)
  2. சுவாங் (壮族: Zhuàngzú)
  3. உய்குர் (维吾尔族 Uyghur)
  4. ஊய் (回族: Huízú)
  5. மியாவோ (苗族: Miáozú)
  6. மஞ்சு (满族: Mǎnzú)
  7. யி (彝族: Yízú)
  8. துஜியா (土家族: Tǔjiāzú)
  9. மங்கோலியர் (蒙古族: Měnggǔzú)
  10. திபேத்தியர் (藏族: Zàngzú)
  11. புயேயி (布依族: Bùyīzú)
  12. தோங் (侗族: Dòngzú)
  13. யாவோ (瑶族: Yáozú)
  14. கொரியர் (朝鲜族: Cháoxiǎnzú)
  15. பாயி (白族: Báizú)
  16. ஹானி (哈尼族: Hānízú)
  17. லி (黎族: Lízú)
  18. கசக் (哈萨克族: Hāsàkèzú)
  19. டாய் (傣族: Dǎizú)
  20. ஷெ (畲族: Shēzú)
  21. லிசு (傈僳族: Lìsùzú)
  22. கெலாவோ (仡佬族: Gēlǎozú)
  23. லாகு (拉祜族: Lāhùzú)
  24. தொங்சியாங் (东乡族: Dōngxiāngzú)
  25. வா (佤族: Wǎzú)
  26. சுயி (水族: Shuǐzú)
  27. நாக்கி (纳西族: Nàxīzú)
  28. கியாங் (羌族: Qiāngzú)
  29. து (土族: Tǔzú)
  30. சிபே (锡伯族: Xíbózú)
  31. முலாவோ (仫佬族: Mùlǎozú)
  32. கிர்கிசு (柯尔克孜族: Kēěrkèzīzú)
  33. தாவுர் (达斡尔族: Dáwòěrzú)
  34. ஜிங்போ (景颇族: Jǐngpōzú)
  35. சாலர் (撒拉族: Sǎlázú)
  36. பிளாங் (布朗族: Bùlǎngzú)
  37. மாவோனான் (毛南族: Màonánzú)
  38. தஜிக் (塔吉克族: Tǎjíkèzú)
  39. புமி (普米族: Pǔmǐzú)
  40. அச்சாங் (阿昌族: Āchāngzú)
  41. நூ (怒族: Nùzú)
  42. எவெங்கி (鄂温克族: Èwēnkèzú)
  43. ஜிங் (京族: Jīngzú)
  44. ஜினோ (基诺族: Jīnuòzú)
  45. தேயாங் (德昂族: Déángzú)
  46. உஸ்பெக் (乌孜别克族: Wūzībiékèzú)
  47. உருசியர் (俄罗斯族: Éluōsīzú)
  48. போனான் (保安族: Bǎoānzú)
  49. மொன்பா (门巴族: Ménbāzú)
  50. ஓரோகென் (鄂伦春族: Èlúnchūnzú)
  51. தெருங் (独龙族: Dúlóngzú)
  52. தாத்தார் (塔塔尔族: Těrzú)
  53. ஹெசென் (赫哲族: Hèzhézú)
  54. லூபா (珞巴族: Luòbāzú)
  55. காவோஷான் (高山族: Gāoshānzú)

தாய்வானிய முதுகுடிகள்

இது தாய்வானிய முதுகுடிகளின் பட்டியலாகும். மக்கள் சீனக் குடியரசு இவர்கள் அனைவரையும் காவோஷான் என்னும் பெயரில் ஒரே இனக்குழுவாக வகைப்படுத்தியுள்ளது. (高山族 : Gāoshān Zú). தாய்வானில் இயங்கும் சீனக் குடியரசு இவற்றுள் 13 குழுக்களை ஏற்றுக்கொண்டுள்ளது. இக்குழுக்கள் நட்சத்திரக் குறி மூலம் காட்டப்பட்டுள்ளன.[7]

  1. அமிகள் (阿美)*
  2. அத்தாயல் (தாயல், தாயன்) (泰雅)*
  3. பாபுசா (貓霧捒)
  4. பாசே (巴賽)
  5. பூனுன் (布農)*
  6. ஹோவான்யா (洪雅 or 洪安雅)
  7. காவாலான் (噶瑪蘭)*
  8. கேத்தாகலன் (凱達格蘭)
  9. லுயிலங் (雷朗)
  10. பயிவான் (排灣)*
  11. பாசே/கக்சாபு (Pazih) (巴宰 or 巴則海)
  12. போப்போரா (巴布拉)
  13. புயுமா (卑南)*
  14. கவுகாவுத் (猴猴)
  15. ரூக்காய் (魯凱)*
  16. சாயிசியத் (Saisiat) (賽夏)*
  17. சாக்கிசாயா (撒奇萊雅)*
  18. சிராயா (西拉雅)
  19. டாவோ (யாமி) (雅美/達悟)*
  20. தாவோக்கா (道卡斯)
  21. தாவோ (邵)*
  22. ரோபியாவன் (多囉美 or 多囉美遠)
  23. துருக்கு (தரோக்கோ) (太魯閣)*
  24. சூ (Cou) (鄒)*

மற்ற இனக் குழுக்கள்

இது மக்கள் சீன அரசால் அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத இனக்குழுக்களின் பட்டியல் ஆகும்.[8]ref>Mongush, M. V. (1996). "Tuvans of Mongolia and China". International Journal of Central Asian Studies (1): 225–243. </ref>

  • கேஜியா (革家人)
  • குமு (克木人)
  • குகொங் (மஞ்சள் லாகு/லாகு ஷி (苦聪人))
  • மாங் (芒人)
  • டெங் (僜人)
  • ஷெர்ப்பா (夏尔巴人)
  • பாஜியா (八甲人)
  • யி (羿人)
  • யூத்தாய் (犹太, யூதர்)

ஹாங்காங் மற்றும் மக்குவா

ஹாங்காங் மற்றும் மக்காவு என்பன மக்கள் சீனக் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் ஆகும். ஹாங்காங், மக்காவு பகுதிகளின் அரசுகள் மக்கள் சீனக் குடியரசின் இன வகைப்பாட்டைப் பயன்படுத்துவது இல்லை. அத்துடன் மேற்குறிப்பிட்ட வகைப்பாடு ஹாங்காங், மக்காவு பகுதிகளிலுள்ள இனக்குழுக்களைக் கவனத்திற்கு எடுக்கவும் இல்லை. இதனால் அப் பகுதிகளிலுள்ள சிறுபான்மையினரான பிலிப்பினோக்கள், இந்தோனீசியர், ஐரோப்பியர், தெற்காசியர், போத்துக்கீசர், மாக்கானியர்கள் (சீன, போத்துக்கீசக் கலப்பு இனத்தவர்) ஆகியோர் மக்கள் சீனாவின் பட்டியலில் இடம்பெறவில்லை.[9][10]

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை