சூலு சுல்தானகம்

சூலு சுல்தானகம் (ஆங்கிலம்: Sultanate of Sulu Dar al-Islam)[1] என்பது சூலு கடல், பிலிப்பீன்சின் தெற்குப் பகுதித் தீவுகள், போர்னியோவின் வடக்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு இசுலாமிய தவுசூக் மக்களின் இறைமையுள்ள நாடு ஆகும். இச்சுல்தானகம் 1457 ஆம் ஆண்டில்[2] ஜொகூரில் பிறந்த அரபு நாடுகாண் பயணியும், இசுலாமியக் கல்விமானுமான சய்யிது அபூபக்கர் அபிரின் (சூலுவின் சரிப் உல்-அசீம்) (Sayyed walShareef Abubakar Abirin AlHashmi.) என்பவரால் உருவாக்கப்பட்டது.

சூலு தார் அல்-இசுலாம் அரசு சுல்தானகம்
Royal Sultanate of Sulu Dar al-Islam
سلطنة سولو دار الإسلام
1457–1917
கொடி of சூலுவின்
கொடி
தலைநகரம்ஜோலோ, சூலு
பேசப்படும் மொழிகள்அரபு மொழி (அதிகாரபூர்வம்), தவுசூக், மலாயு, பங்கூங்கி, பசாவு மொழிகள்
சமயம்
இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
சுல்தான் 
• 1457–1480
சரீப் உல்-அசீம்
• 1480-1505
கமலுத்-தின்
• 1505-1527
அமிருல்-உமாரா
• 1884–1899
ஜமா உல்-கிராம் I
வரலாறு 
• தொடக்கம்
1457
• சுல்தானகம் கலைப்பு
1917
தற்போதைய பகுதிகள்இந்தோனேசியா இந்தோனேசியா
மலேசியா மலேசியா
பிலிப்பீன்சு பிலிப்பைன்சு

அபூபக்கர் உள்ளூர் இளவரசி பரமிசூலி (Paramisuli) என்பவளைத் திருமணம் முடித்ததை அடுத்து, அவர் சுல்தானகத்தை அமைத்து பாதுகா மகாசரி மவுலானா அல் சுல்தான் சரீப் உல்-ஹாசிம் (Paduka Mahasari Maulana al Sultan Sharif ul-Hashim) என்ற பட்டப் பெயரைப் பெற்றார்.

இந்த சுல்தானகம் தற்போது எந்த நாட்டாலும் இறைமையுள்ள நாடாக அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும், சூலு சுல்தான் அல்லது வடக்கு போர்னியோவின் சுல்தான் எனப் பலர் உரிமை கோரி வருகின்றனர்.

2013-ஆம் ஆண்டில், மூன்றாம் ஜமாலுல் கிராம் சுல்தான் (Sultan Jamalul Kiram) எனத் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டவரின் தலைமையில் சில பிலிப்பீன்சு குழு ஒன்று மலேசியாவின் சபா மாநிலத்தின் லகாட் டத்துவுக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றைக் கைப்பற்றித் தம் வசப் படுத்தியுள்ளனர்.[3]

வரலாறு

புட்டுவான் ராஜா நாடு

1578-ஆம் ஆண்டில் சுலு சுல்தானகம், தன் சுதந்திரத்தைப் பெறுவதற்கு முன்னர், புரூணை பேரரசின் கீழ் இருந்தது. 13-ஆம் நூற்றாண்டின் போது சுலுவின் மக்கள், வடகிழக்கு மிண்டனாவோவில் (Mindanao) உள்ள தங்களின் பூர்வீக இடங்களில் இருந்து இன்றைய ஜாம்போங்கா (Zamboanga) மற்றும் சுலு தீவுக் கூட்டங்களுக்கு இடம்பெயரத் தொடங்கினர்.[4]

பழங்காலத்தில் பிலிப்பைன்சு நாட்டில் புட்டுவான் ராஜா நாடு (Rajahnate of Butuan) எனும் ஒரு நாடு இருந்தது. அந்த நாடு அப்போது இஸ்லாமியத்திற்கு முந்தைய சுலுவைப் போல (Hindu like pre-islamic Sulu) ஓர் இந்து நாடாக இருந்தது என்றும் சொல்லப் படுகிறது.[5]

தவுசுக் மொழி

அந்த நாட்டில் புட்டுவான் (Butuanons); சூரிகானோன் (Surigaonons) மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் வழித்தோன்றல்கள்தான் சூலு மக்கள் என்று சொல்லப் படுகிறது.[6]

இவர்கள் புட்டுவான் ராஜா நாட்டில் இருந்து தெற்கே சென்று சுலுவில் நறுமணப் பொருட்கள் வர்த்தக மையத்தை நிறுவினார்கள். 1600-இல் சூலு சுல்தானகத்தை ஆட்சி செய்த பத்தாரா ஷா தெங்கா என்பவர், புட்டுவான் நாட்டின் உண்மையான பூர்வீகக் குடிமகன் என்று கூறப்படுகிறது.[7]

தொடக்கக் காலக் குடியேற்றம்

புட்டுவானோன், சூரிகானோன் மற்றும் தவுசுக் மொழிகள் அனைத்தும் பிலிப்பைன்சு நாட்டின் விசயன் மொழியின் துணைக் குடும்பத்தின் கீழ் வருகின்றன. தவுசு மொழி புட்டுவானன்-சுரிகானோன் மொழிகளின் உறவால் கண்டு அறியப்படுகிறது.

ஜோலோ (Jolo) தீவின் மைம்புங் (Maimbung) எனும் இடத்தில் தொடக்கக் காலக் குடியேற்றம் நடைபெற்றது. இந்தத் தீவுப் பகுதி சூலு சுல்தானகத்தால் தொடக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகும்.

ராஜா சிபாத்

அந்தக் கட்டத்தில், சுலு சுல்தானகம் லூப்பா சுக் (Lupah Sug) என்று அழைக்கப்பட்டது. லூப்பா சுக் என்பது மலைவாசிகள் என்று பொருள்படும். சுல்தானகத்தின் தலைவரை ராஜா சிபாத் (Rajah Sipad) என்று அழைத்தார்கள். ராஜா சிபாத் எனும் பட்டத்தை ஏற்றுக்கொண்ட ஒரு ராஜாவால் ஆளப்பட்டது.[7]

ராஜா சிபாட் என்ற சொல்; இந்து சமயச் சொல்லான ஸ்ரீ பாதம் (Sri Pada) எனும் சொல்லில் இருந்து உருவானது. அப்போதைய சுல்தானகம் ராஜாக்கள் முறையைப் பயன்படுத்தி நிர்வாகம் செய்யப்பட்டது.[4]

மரபு வழி அரசுகள்

பிலிப்பீன்சு தீவுகளில், தொடக்கக் காலங்களில், பரவியிருந்த சில சமூகங்கள் தனிமைப் படுத்தப்பட்டு இருந்தன. இருப்பினும் அவற்றில் பல சமூகங்கள் அரசுகளாக மாற்றம் அடைந்தன. அந்த அரசுகள் புரூணை, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, சப்பான் மற்றும் ஏனைய ஆஸ்திரோனேசிய தீவுகளுடன் கணிசமான அளவிற்கு வணிகத் தொடர்புகளை வளர்த்துக் கொண்டன.<

தன்னாட்சி கொண்ட அரசுகள்

முதலாவது ஆயிரம் ஆண்டுகாலத்தில் கடலோரத் துறைமுக ஆட்சிப் பகுதிகள் எழுச்சி பெற்றன. தன்னாட்சி கொண்ட பராங்கீசுகளை (Barangay state) உள்ளடக்கிய கடல்சார் நாடுகளாக உருவெடுத்தன. இவை சுதந்திரமாக இயங்கின.

டாத்துக்கள் (Datus) தலைமையிலான மலாய் கடலாதிக்க அரசுகள், சீனா நாட்டின் குவாங்குகளால் ஆளப்பட்ட சீனத்தின் சிற்றரசுகள் அல்லது ராஜாக்களால் நிர்வகிக்கப்பட்ட இந்தியப் பண்பாட்டுச் சார்புடைய அரசகங்கள் போன்றவை பெரிய நாடுகளைச் சார்ந்தவையாக இருந்தன.[8]

எடுத்துக்காட்டாக, அட்டியின் தலைவனான மரிகுடோ என்பவரிடம் இருந்து மட்ஜா-அஸ் -இன் கெடாத்துவானை டாத்து புட்டி மன்னர் விலைக்கு வாங்கி ஆட்சி செய்தார்.[9] மட்ஜா-அஸ், அழிக்கப்பட்ட அவர்களது தாயகமான பன்னய் அரசைத் தழுவிப் பெயரிடப்பட்ட பனய் தீவில் நிறுவப்பட்டது. புட்டுவான் இராச்சியம் ராஜா ஸ்ரீ பட ஷாஜாவின் ஆட்சியின் கீழ் முக்கியத்துவம் பெற்றது.டொண்டோ அரசகம் லகன்டுலா மரபு வழி அரசர்களாலும்.[10][11] செபு அரசகம்[12] ராஜமுடா ஸ்ரீ லுமாயினாலும் ஆளப்பட்டது.

மேற்கோள்கள்

மேலும் படிக்க


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சூலு_சுல்தானகம்&oldid=3877047" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை