ஜமைக்கா தேசிய காற்பந்து அணி

ஜமைக்கா தேசிய காற்பந்து அணி ( Jamaica national football team) பன்னாட்டு காற்பந்து போட்டிகளில் ஜமைக்கா சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இது ஜமைக்கா காற்பந்துக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது. வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பின் முதன்மை அணிகளில் இதுவும் ஒன்று. இந்த அணியினர் கரீபியன் கோப்பையை ஆறு முறை வென்றுள்ளனர்; கடைசியாக 2014ஆம் ஆண்டின் இறுதியாட்டத்தில் டிரினிடாடு மற்றும் டொபாகோ தேசிய காற்பந்து அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றினர்.[4] வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு தங்கக் கோப்பை இறுதியாட்டதிற்கு முன்னேறிய ஒரே கரீபியன் நாடாக ஜமைக்கா உள்ளது; 2015ஆம் ஆண்டில் தங்கக் கோப்பை இறுதியாட்டத்தில் பங்கேற்று மெக்சிக்கோவிடம் தோற்றது.

ஜமைக்கா
Shirt badge/Association crest
அடைபெயர்ஜமைக்கா தேசிய அணி[1]
கூட்டமைப்புஜமைக்கா காற்பந்து கூட்டமைப்பு
மண்டல கூட்டமைப்புகரீபியன் காற்பந்து ஒன்றியம்
கண்ட கூட்டமைப்புவட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு
தலைமைப் பயிற்சியாளர்வின்பிரைடு ஷாஃபர்
அணித் தலைவர்ரோடோல்ஃப் ஆஸ்டின்
Most capsஇயான் கூடிசன் (128)
அதிகபட்ச கோல் அடித்தவர்லூட்டன் செல்ட்டன் (35)
தன்னக விளையாட்டரங்கம்சுதந்திரப் பூங்கா
பீஃபா குறியீடுJAM
பீஃபா தரவரிசை46 9 (2 சூன் 2016)
அதிகபட்ச பிஃபா தரவரிசை27 (ஆகத்து 1998)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை116 (அக்டோபர் 2008)
எலோ தரவரிசை80 (சூன் 2015)
அதிகபட்ச எலோ36 (பெப்ரவரி 1998)
குறைந்தபட்ச எலோ146 (மே 1984)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 எயிட்டி 1–2 ஜமேக்கா 
(எயிட்டி; 22 மார்ச் 1925)[2][3]
பெரும் வெற்றி
 ஜமேக்கா 12–0 பிரித்தானிய கன்னித் தீவுகள் 
(கிராண்ட் கேமன், கேமன் தீவுகள்; 4 மார்ச் 1994)
 ஜமேக்கா 12–0 செயிண்ட் மார்டின் 
(கிங்ஸ்டன், யமைக்கா; 24 நவம்பர் 2004)
பெரும் தோல்வி
 கோஸ்ட்டா ரிக்கா 9–0 ஜமேக்கா 
(சான் ஹொசே; 24 பெப்ரவரி 1999)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 1998 இல்)
சிறந்த முடிவுசுற்று 1; 1998
கான்காகேஃப் தங்கக்கோப்பை
பங்கேற்புகள்10 (முதற்தடவையாக 1963 இல்)
சிறந்த முடிவுஇரண்டாவது; 2015
கோபா அமெரிக்கா
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 2015 இல்)
சிறந்த முடிவுகுழு நிலை; 2015

ஜமைக்கா உலகக்கோப்பை காற்பந்து இறுதிப் போட்டிகளுக்கு ஒருமுறை (1998) தகுதி பெற்றது. ஐக்கிய அமெரிக்கா, ஹொண்டுராஸ், கோஸ்ட்டா ரிக்கா போன்று மெக்சிக்கோவுடன் உலகக்கோப்பை தகுதியாட்டத்தில் சமநிலை எய்திய கான்காகேஃப் அணிகளில் இதுவும் ஒன்றாகும்.[5]

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை