மெக்சிக்கோ தேசிய காற்பந்து அணி

மெக்சிக்கோ தேசிய காற்பந்து அணி பன்னாட்டு காற்பந்தாட்டங்களில் மெக்சிக்கோவின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை மெக்சிக்கோவில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தும் மெக்சிக்கோ காற்பந்துக் கூட்டமைப்பு (FMF) நிர்வகிக்கிறது. மெக்சிக்கோ அணியின் தாயக விளையாட்டரங்கமாக எசுடேடியோ அசுடெக்கா உள்ளது. தலைமைப் பயிற்றுனராக மிகுயில் எர்ரெரா பணியாற்றுகிறார். பிஃபா உலகத் தரவரிசையில் தற்போது 20வது இடத்தில் உள்ளது.[2] உலக காற்பந்து எலோ தரவரிசையில் 22வதாக உள்ளது.[3]

மெக்சிக்கோ
Shirt badge/Association crest
அடைபெயர்எல் டிரைகலர்
எல் டிரை
லா வெர்டெ
கூட்டமைப்புமெக்சிக்கோ காற்பந்துக் கூட்டமைப்பு
மண்டல கூட்டமைப்புவட அமெரிக்க காற்பந்து ஒன்றியம் (NAFU) (வட அமெரிக்கா)
கண்ட கூட்டமைப்புவட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு
தலைமைப் பயிற்சியாளர்மிகுயில் எர்ரெரா
அணித் தலைவர்இராபீயில் மார்குயிசு
Most capsகிளாடியோ சுயாரெசு (178)
அதிகபட்ச கோல் அடித்தவர்ஜாரெட் போர்கெட்டி (46)
தன்னக விளையாட்டரங்கம்எசுடேடியோ அசுடெக்கா
பீஃபா குறியீடுMEX
பீஃபா தரவரிசை20
அதிகபட்ச பிஃபா தரவரிசை4 (பெப்ரவரி–சூன் 1998, மே–சூன் 2006)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை33 (சூலை 2009)
எலோ தரவரிசை22
அதிகபட்ச எலோ5 (சூலை 2011)
குறைந்தபட்ச எலோ47 (பெப்ரவரி 1979)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 குவாத்தமாலா 2–3 மெக்சிக்கோ மெக்சிக்கோ
(குவாத்தமாலா; 1 சனவரி 1923)
பெரும் வெற்றி
மெக்சிக்கோ மெக்சிக்கோ 13–0 பஹமாஸ் 
(டோலுக்கா, மெக்சிக்கோ; ஏப் 28, 1987)
பெரும் தோல்வி
 இங்கிலாந்து 8–0 மெக்சிக்கோ மெக்சிக்கோ
(இலண்டன், இங்கிலாந்து; மே 10, 1961)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்14 (முதற்தடவையாக 1930 இல்)
சிறந்த முடிவுகால் இறுதி, 1970, 1986
கான்காகேஃப் தங்கக் கோப்பை
பங்கேற்புகள்20 (முதற்தடவையாக 1963 இல்)
சிறந்த முடிவுவாகையர், 1965,1971,1977,1993,1996,1998,2003, 2009, 2011
கோபா அமெரிக்கா
பங்கேற்புகள்8 (முதற்தடவையாக 1993 இல்)
சிறந்த முடிவு2வது இடம், 1993, 2001
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்6 (முதற்தடவையாக 1995 இல்)
சிறந்த முடிவுவாகையர், 1999

மெக்சிக்கோ பதினான்கு உலகக்கோப்பைகளில் தகுதிபெற்றுள்ளது; 1994ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தகுதிபெற்று வந்துள்ளது. மெக்சிக்கோ முதல் உலகக்கோப்பையின் சூலை 13, 1930 அன்று ஆடப்பட்ட முதல் ஆட்டத்திலேயே பிரான்சுடன் விளையாடியுள்ளது. இந்த அணியின் சிறந்த வெளிப்பாடாக மெக்சிக்கோவில் நடத்தப்பட்ட இரு உலகக்கோப்பைகளிலும், 1970, 1980, காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு மண்டலத்தின் வரலாற்றில் மிகவும் சிறந்த தேசிய அணியாக விளங்குகிறது. இந்த மண்டலத்திலிருந்து ஃபிஃபா அங்கீகரித்த கோப்பை ஒன்றை வென்ற ஒரே அணியாக மெக்சிக்கோ விளங்குகிறது. பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் ஒருமுறையும் வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு போட்டிகளில் ஒன்பது முறையும் வென்றுள்ளது.

மெக்சிக்கோ வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பில் இருந்தாலும் கோபா அமெரிக்காவில் விளையாட அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டிகளில் இருமுறை இரண்டாமிடத்திற்கும் மூன்று முறை மூன்றாமிடத்திற்கும் பதக்கம் வென்றுள்ளது.

மேற்சான்றுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை