ஜௌஸ்ஜான் மாகாணம்

ஜௌஸ்ஜான் (Jowzjan, sometimes spelled as Jawzjan or Jozjan (பாரசீக மொழி: ولایت جوزجان‎, பஷ்தூ: جوزجان ولايت), என்பது ஆப்கானித்தானின் முப்பத்து நான்கு மாகாணங்களில் ஒன்று. இது நாட்டின் வடக்கில் துருக்மெனிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மாகாணமானது 11 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, நூற்றுக் கணக்கான கிராமங்களைக் கொண்டதாக உள்ளது. இதன் மொத்த மக்கள் தொகை 512,100 ஆகும். மாகாணத்தில் பல இனக்குழுவினர் வழ்கின்றனர். பெரும்பான்மையினர் வேளாண் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஜௌஸ்ஜான் மாகாணத்தின் தலைநகரம் செபேர்கன் ஆகும்.

ஜௌஸ்ஜான்
Jowzjan

ولایت جوزجان
மாகாணம்
Map of Afghanistan with Jowzjan highlighted
Map of Afghanistan with Jowzjan highlighted
ஆள்கூறுகள்: 36°45′N 66°00′E / 36.75°N 66.00°E / 36.75; 66.00
நாடு ஆப்கானித்தான்
தலைநகரம்செபேர்கன்
அரசு
 • ஆளுநர்மௌல்வி லூதபுல்லா அசிஸி
பரப்பளவு
 • மொத்தம்11,798.3 km2 (4,555.3 sq mi)
மக்கள்தொகை (2015)[1]
 • மொத்தம்5,40,255
 • அடர்த்தி46/km2 (120/sq mi)
நேர வலயம்UTC+4:30
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுAF-JOW
முதன்மை மொழிகள்தாரி
உசுபேகி
துருக்குமேனியம்

வரலாறு

இந்த மாகாணத்தின் பெயரானது, ஜுஜான் அரசின் பெயரிலிருந்து உருவானது. 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து, 18 ஆம் நூற்றாண்டின் துவக்கம்வரை, இந்த பகுதி புகாரின் கான்னேட்டால் ஆளப்பட்டது. பின்னர் இத அகமது ஷா துரானியால் வெற்றி கொள்ளப்பட்டு, 1750 ஆம் ஆண்டில் துராணிப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. இதன் தொடர்ச்சியாக இப்பகுதி ஆப்கானிஸ்தானின் நவீன மாகாணமாக உருவானது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் நடந்த மூன்று ஆங்கிலோ-ஆப்கானிய போர்களின்போது பிரித்தானியரால் இப்பிரதேசத்தைத் தொட இயலவில்லை.

அண்மைய வரலாறு

1997 இல் உஸ்பெக் போர்வீரரான அப்துல் மாலிக் பஹ்லோவனுடனின் தொடர்ச்சியான மாறும் கூட்டணி உத்திகளைத் தொடர்ந்து, தாலிபான்கள் இப்பகுதியில் இருந்து வெளியேறினர். ஆனால் 1998 ஆம் ஆண்டில் 8,000 தலிபான் துருப்புக்கள் எதிர்பாத விதமாக அண்டை மாகாணமான பர்யாப்பில் இருந்து வந்து, அப்துல் ரஷீத் டோஸ்டுமினால் இதன் தலைமையகமான செபேர்கனைக் கைப்பற்றினர்.[2]

செபேர்கனில், நேடோவிடம் பயிற்சி பெற்ற ஆப்கான் எல்லை காவல்படை

சுவீடனின் தலைமையிலான மாகாண மறுசீரமைப்பு குழுவானது 2005 ஆம் ஆண்டு முதல் மசார் ஈ சரீப்பை அடிப்படையாகக் கொண்டு, ஜௌஸ்ஜான் உள்ளிட்ட நான்கு மாகாணங்களுக்கு பொறுப்பேற்று, மாகாணத்தில் ஒரு அலுவலகத்தையும், துருப்புக்களைக் கொண்டும் செயல்பட்டுவந்த‍து. 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை விரைவாக மோசமடைந்தது. இதையடுத்து 2010 ஆம் ஆண்டு கோடையில் மாகாணத்தில் ஒரு புதிய துருக்கிய மாகாண மறுசீரமைப்பு குழு நிறுவப்பட்டது, இது சர-எல் பால் உள்ளடக்கிய பகுதிக்கு பாதுகாப்பு வழங்கியது. ஆப்கன்ன் தேசியப் பாதுகாப்புப் படையானது கடந்த தசாப்தக் காலகட்டத்தில் விரிவடைந்து, சர்வதேச பாதுகாப்பு உதவிப் படையிடம் இருந்து பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றது. ஆப்கானிஸ்தான்-துர்க்மேனிஸ்தான் எல்லைப் பகுதியை ஆப்கான் எல்லைக் காவல்படை (ABP) பராமரிக்கிறது. மாகாணத்தின் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளையும் நேட்டோவிடம் பயிற்சிபெற்ற ஆப்கானிய தேசிய காவல் துறையால் (ஏஎன்பி) கட்டுப்படுத்தப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானின் பிற மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் பாதுகாக்கப்பட்ட இடமாக இந்த மாகாணம் கருதப்பட்டாலும், குறிப்பாக டார்ஜாப், குஷ்ஷே டெபா, ஃபயாஸாபாத் போன்ற மாவட்டங்களில் மிகுதியான விரும்பத்தகாக சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அரசுப் படைகள், என்.ஜி.ஓ. தொழிலாளர்கள், பொதுமக்கள் போன்றோருக்கு எதிரான தாக்குதல்களை போராளிகள் நத்துவதன் காரணமாக மஸார்-இ-ஷரீஃப்-ஷெபர்கான் நெடுஞ்சாலைப் (அக்யோல் என அழைக்கப்படுகிறது) பாதையை ஆபத்தான பயண வழியாக முடிவு செய்து பயணப்பாதையாக மாற்றுவழி பயன்படுத்தப்படுகிறது.

2012 ஏப்ரலில் அண்மை நாடான துர்க்மேனிஸ்தானில் இருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை இப்பகுதிக்கு வழங்குவதற்கான மின்வழங்கல் கட்டுமானம் துவக்கப்பட்டது; இத் திட்டமானது துர்க்மேனிஸ்தான் மற்றும் துருக்கி ஆகியவற்றின் உதவியால் மேற்கொள்ளப்படுகிறது. திட்டத்தில் ஆரம்பகட்ட வேலையானது $390 மில்லியன் செல்வில் முடிக்கப்பட்டது. துர்க்மேனிஸ்தானில் இருந்து ஆப்கானித்தானின் எல்லையை நோக்கி 374 கிலோமீட்டர் தொலைவுக்கு தனது நிலப்பகுதியில் உயர் அழுத்த மின் கோபுரங்களை நிறுவும் திட்டப்பணி முடிவடைய ஒரு ஆண்டு ஆகும் என கருதப்படுகிறது.[3] இத்திட்டத்தால் ஜௌஸ்ஜான், பால்க், சர்-ஈ போல், பர்யாப், காபூல் போன்ற மாகாணங்களில் உள்ள பல பகுதிகளுக்கு மின்சார வசதி கிடைக்கும்.

அரசியல் மற்றும் ஆட்சி

மாகாண ஆளுநராக இருந்த முகம்மது அலீம் சாயீ 2013 சூலையில் மாற்றப்பட்டு முராத் குவெனிலி புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன் குவெனிலி ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்றத்தில் தனது மாகாணத்துக்கான செனட்டராக இருந்தார்.[4]

மாகாணத்தின் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளையும் ஆப்கானிய தேசிய காவல் துறையால் (ஏஎன்பி) கட்டுப்படுத்தப்படுகின்றது. காபூலின் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக காவல் தலைவர் உள்ளார். ஏஎன்பி போன்றவற்றுக்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.

நலவாழ்வு

சுத்தமான குடிநீர் கிடைக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 2005 இல் 24% என்ற நிலையில் இருந்து 2011 இல் 44% ஆக வளர்ந்துள்ளது.[5]2005 இல் நிகழ்ந்த பிரசவங்களில் 9% பயிற்சியுடைய தாதிகளின் உதவியோடு நிகழ்ந்தது. இது 2011 இல் 21% ஆக வளர்ந்துள்ளது.

கல்வி

ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் (வயது 6+ ) 2005 இல் 31% ஆக இருந்து 2011 இல் 16% என வீழ்ச்சியடைந்துள்ளது.

புவியியல் மற்றும் மக்கள்தொகை

ஆப்கானிஸ்தானில் இனக் குழுக்கள்
ஜௌஸ்ஜான் மாகாண மாவட்டங்கள்

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் ஜௌஸ்ஜான் மாகாணம் அமைந்துள்ளது. இதன் வடக்கில் துர்க்மேனிஸ்தானும், கிழக்குப் பகுதியில் பால்க் மாகாணமும், தெற்கில் சர-எல் பால் மாகாணமும், மேற்கில் ஃபாரியப் மாகாணமும் அமைந்துள்ளது. ஜௌஸ்ஜான் மாகாணத்தின் பரப்பளவு 10,326 km² ஆகும். மாகாணத்தின் கால் பகுதிக்கும் மேலான பகுதியானது மலைகள் நிறைந்த அல்லது ஒரளவு மலைகள் நிறைந்த (29.4%) பகுதியாகும். மூன்றில் இரண்டு பகுதியானது (68.9%) சமவெளியாகும் . பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வளத்துக் கொண்டிருக்கும் மாகாணங்களில் இது ஒன்றாகும். சுரங்கம் மற்றும் விவசாயம் முக்கிய தொழில்களாக உள்ளன.

ஜௌஸ்ஜான் மாகாணத்தின் மக்கள் தொகை சுமார் 512,100 ஆகும், அவர்கள் பல இனத்தவராக உள்ளனர், மேலும் பெரும்பாலானோர் விவசாயிகளாக உள்ளனர்.[6] அவ்வப்போது இனக்கலவரங்கள் ஏற்படுவது உண்டு. அண்மையில் இவ்வாறு 2002 இல் இனக் கலவரம் உருவானது.[7]

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்



"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜௌஸ்ஜான்_மாகாணம்&oldid=3588300" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை