டெர்ரி பிராச்செத்

சர் டெரன்சு தாவீது ழான் பிராச்செத் (28 ஏப்ரல் 1948 – 12 மார்ச் 2015), பரவலாக டெர்ரி பிராச்செத், ஆங்கில கனவுருப் புனைவு எழுத்தாளராவார். குறிப்பாக இவரது நகைச்சுவை படைப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.[2] இவருடைய சிறந்த படைப்பாக 41 புதினங்களை உள்ளடக்கிய டிஸ்க்வேர்ல்டு தொடர் விளங்குகின்றது. பிராச்செத்தின் கன்னிப் படைப்பான தி கார்ப்பெட் பீபிள் 1971இல் வெளியானது. டிஸ்க்வேர்ல்டு தொடரின் முதல் புதினமாக தி கலர் ஆஃப் மாஜிக் 1983இல் பதிப்பிக்கப்பட்டது. இதன்பிறகு ஆண்டுக்கு இரண்டு புதினங்களை வெளியிட்டு வந்தார். 2011இல் வெளியான இசுனஃப் என்ற டிஸ்க்வேர்ல்டு புதினம் வெளியான முதல் மூன்றுநாட்களுக்குள்ளேயே 55,000 பிரதிகள் விற்று பிரித்தானியாவில் சாதனை படைத்தது.[3] இத்தொடரின் இறுதி புதினமான தி செப்பர்டுசு கிரௌன் 2015ஆம் ஆண்டு ஆகத்து மாதம், அவரது மரணத்திற்கு மூன்று மாதங்கள் கழித்து, வெளியானது.


டெர்ரி பிராச்செத்
Terry Pratchett

வார்ப்புரு:Postnom
2012இல் நியூயார்க்கில் பிராச்செத்
2012இல் நியூயார்க்கில் பிராச்செத்
பிறப்புடெரன்சு தாவீது ழான் பிராச்செத்
(1948-04-28)28 ஏப்ரல் 1948
பேக்கன்சுபீல்டு, பக்கிங்காம்சையர், இங்கிலாந்து
இறப்பு12 மார்ச்சு 2015(2015-03-12) (அகவை 66)
பிராடு சால்கெ Broad, வில்ட்சையர், இங்கிலாந்து
தொழில்நாவலாசிரியர்
வகைநகைச்சுவை கனவுருப் புனைவு
குறிப்பிடத்தக்க படைப்புகள்டிஸ்க்வேர்ல்டு
குட் ஓமன்சு
நேசன் (நாடு)
குறிப்பிடத்தக்க விருதுகள்
  • நைட் பேச்சுலர் (2009)
  • ஓபிஈ (1998)[1]
துணைவர்லின் பர்வேசு
(1968–2015; அவரது இறப்பு)[1]
பிள்ளைகள்ரியானா பிராசெத் [1]
இணையதளம்
terrypratchett.co.uk

இவரது நூல்கள் 37 மொழிகளில் 85 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன;[4][5] 1990களில் பிராச்செத் ஐக்கிய இராச்சியத்தின் மிகக் கூடுதலான விற்பனையுடைய எழுத்தாளராக விளங்கினார்.[6][7] 1998இல் இவருக்கு ஐக்கிய இராச்சியத்தின் உயரிய குடிமை விருதான ஓபிஈ வழங்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு புத்தாண்டு விருதுவழங்குவிழாவில் இலக்கியத்திற்கு இவராற்றிய பணிக்காக சர் பட்டம் வழங்கப்பட்டது.[8][9] இவரது டிஸ்க்வேர்ல்டு தொடரின் முதல் சிறுவருக்கானப் புதினமாகிய தி அமேசிங் மாரீசு அன்டு இஸ் எடுகேட்டட் ரோடன்ட்சுக்கு 2001இல் வருடாந்திர கார்னகி பதக்கம் வழங்கப்பட்டது.[10][11] 2010இல் உலகக் கனவுருப் புனைவு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது.[12]

திசம்பர் 2007ஆம் ஆண்டில் தமக்கு முன்னதாகவே ஆல்சைமர் நோய் கண்டுள்ளதாக அறிவித்தார்.[13] இதனைத் தொடர்ந்து ஆல்சைமர் நோய் ஆய்வு அறக்கட்டளைக்கு பெரியளவில் பொதுநன்கொடை அளித்தார்.[14] இந்த அறக்கட்டளை இவரது அனுபவங்களைத் தொகுத்து பிபிசிக்காக இந்நோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டது; பிராச்செத்தை இக்கட்டளையின் புரவலராகவும் நியமித்தது.[15] பிராச்செத் 2015ஆம் ஆண்டு மார்ச்சு 12 அன்று தமது 65ஆம் அகவையில் இந்நோய்க்கு இரையானார்.[16]

இளமைக்காலம்

பிராச்செத் 1948ஆம் ஆண்டு பக்கிங்காம்சையரிலுள்ள பேக்கன்பீல்டு என்னும் ஊரில் பிறந்தார்.[1][17] ஐ வைகோம்பெ தொழினுட்பப் பள்ளியில் படிக்கும்போதே தமது 11ஆம் அகவையில் தி ஹேட்சு பிசினஸ் என்ற முதல் கதையை எழுதினார். இரண்டாண்டுகள் கழித்து இது பொதுவிற்பனைக்கு பதிப்பிக்கப்பட்டது.[18] தமது எழுதும் திறனை உணர்ந்த பிராச்செத் தமது கல்வியை ஊடகவியல் தொடர்பான படிப்புகளில் மேற்கொண்டார். 1965இல் பக்சு ஃப்ரீ பிரசு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். ஊடகவியலாளர்களுக்கான தேசிய பயிற்சி மன்றத்தின் படிப்புகளில் தேர்ச்சி பெற்றார்.[19] இதேயாண்டு தமது இரண்டாவது சிறுகதையான தி நைட் டிவெல்லரை எழுதினார்.

தி டிஸ்க்வேர்ல்டு தொடர்

வண்ணமய கனவுரு டிஸ்க்வேர்ல்டு அண்டத்தில் நடப்பதாக நகைச்சுவையுடனும் பெரும்பாலும் அங்கதத்துடனும் எழுதப்பட்ட இந்தத் தொடரை 1983ஆம் ஆண்டில் துவக்கினார். இத்தொடருக்குப் பல துணைத்தொடர்களையும் எழுதியுள்ளார். விவரமாக விவரிக்கப்பட்டுள்ள அந்த அண்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடப்பதாக ஒவ்வொரு கதையும் அமையும்.

டிஸ்க்வேர்ல்டு அல்லது வட்டுலகம் என்பது நான்கு யானைகள் மீது அமர்ந்த வட்டாக விவரிக்கப்படுகிறது; இந்த யானைகளை மிகப்பெரிய ஆமைகள் தாங்குவதாகவும் விண்வெளியில் இவை நீஞ்சுவதாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கதைகள் காலவரிசைப்படி அமைந்துள்ளன;[20] வட்டுலக மாந்தரின் பண்பாடு முன்னேறி வருவதை அடுத்தடுத்த கதைகளில் காணலாம். காட்டாக பின்னாள் தொடரில் காகிதப் பணத்தாள் அச்சிடுவதை விவரித்துள்ளார்.[21]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டெர்ரி_பிராச்செத்&oldid=3587114" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை