தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்


தமிழை (Tamil) ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளும், தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டுள்ள நாடுகளும் பட்டியலிடப் படுகின்றன.

சோழர் ஆட்சிக்காலத்தில் பரவியிருந்த தமிழ்

உலகின் பழைமையான மொழிகளுள் தமிழும் ஒன்று.பேசுபவர்களின் எண்ணிக்கையில் பதினைந்தாவது இடத்தில் உள்ளது. பழந்தமிழ் மொழியில் இருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் பிரிந்து சென்றதாக ஆய்வாளர்கள் கூறுவர்.[சான்று தேவை]

உலக மக்கட்தொகையில் ஒரு விழுக்காட்டினர் தமிழ் பேசுபவர்கள் ஆவர். தமிழைத் தாய்மொழியாகப் பேசுபவரும், தமிழ்நாடு மற்றும் ஈழத்தில் தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்ந்து தமிழில் பேசி வாழ்பவரும் உள்ளனர்.

தமிழ் பழங்காலத்தில் சீனா, எகிப்து, கம்போடியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் பரவியிருந்தன என்பதற்கான ஆதாரங்கள் இந்நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள் மூலம் அறியலாாம்.[1]

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் தமிழர்களை ஆசியாவின் பிற பகுதிகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிற்கும் விவசாயம் புரிய அழைத்துச் சென்றனர். மேலும் பல்வேறு காரணங்களுக்காக தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் குடிபெயர்ந்து வாழ்கிறார்கள்.

தற்போது மலேசியாவில் மட்டும் பத்து லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். இடம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழ் மக்களும் அந்நாடுகளில் இம்மக்கள் செய்த அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டப் பங்களிப்புகளும் அளப்பறியாதது ஆதலாால் தமிழ் மொழி மற்ற சில நாடுகளின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக உள்ளது.


ஆட்சிமொழி

நாடுகள்

தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகள் (சட்டத்தின்படி)
நாடுபகுதிமக்கள்1
இந்தியா[2]ஆசியா66,742,402
 சிங்கப்பூர்[3]ஆசியா650,184
 இலங்கை[4]ஆசியா5,065,930

நாட்டின் பகுதிகள்

இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ் பேசுவோர்
பகுதிகண்டம்மக்கள்தொகைநிலை
அந்தமான் நிக்கோபார் தீவுகள்ஆசியா3,79,944ஒன்றியப் பிரதேசம்
பாண்டிச்சேரிஆசியா12,44,464ஒன்றியப் பிரதேசம்
தமிழ்நாடுஆசியா7,21,38,958மாநிலம்

அங்கீகரிக்கப்படாத பகுதிகள்

பகுதிகள்குறிப்பு
காரைக்கால்தனி ஒன்றியப் பிரதேசமாகக் கோருகிறது.[5]

முன்பு தமிழ் அலுவலக மொழியாக இருந்த பகுதி(கள்)

பகுதிகுறிப்பு
அரியானாஅரியானாவில் தமிழ் அலுவலக மொழியாக இந்தி மாற்றப்படும் வரை இருந்தது.[6]

தமிழை அலுவலக மொழியாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள்

பண்பாட்டு மொழி

மேற்கூறிய நாடுகள் தவிர சில நாடுகளில் தமிழ் ஒரு பண்பாட்டு மொழியாக உள்ளது.

மொரீசியசு நாட்டுப் பணத்தில் தமிழ் எழுத்துகள் (இன்றும் உள்ளன)
நாடுபகுதி
 மலேசியா[7]ஆசியா
 மொரிசியசு[8]ஆபிரிக்கா
இறீயூனியன் [9]ஆப்பிரிக்கா
 சீசெல்சு[10]ஆப்பிரிக்கா
 கனடா[11]வட அமெரிக்கா

இந்தியாவிலும் ஐக்கிய நாடுகள் அவையிலும் ஆட்சிமொழியாகத் தமிழை ஏற்குமாறு கோரப்பட்டுள்ளது.[12]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தமிழ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை