தமிழ்க் கல்வெட்டுகள்

தமிழ்க் கல்வெட்டுகள் எனப்படுபவை தமிழ் மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஆகும். கல்வெட்டுக்கள் பல நூற்றாண்டுகளாக நிலைத்து நின்று அவற்றில் குறிக்கப்பெற்ற செய்திகளையும், அவை எழுதப்பட்ட கால மொழி, எழுதியவர்கள், எழுதுவித்தவர்கள், அவர்களின் சமூகம் முதலிய செய்திகளைச் சொல்லுகின்றன. இவை அம் மொழி, சமூகம் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிய முக முக்கியமான ஆவணங்களாக திகழுகின்றன. உலகிலேயே இலத்தீனுக்கு அடுத்து [1] இந்தியத் தொல்லியல் ஆய்வு மையம் (2005 அறிக்கை) கண்டறிந்த சுமார் 100,000 கல்வெட்டுகளில், சுமார் 60,000 தமிழ்நாட்டில் உள்ளன.[2]

பொ.ச.மு. 3 ஆம் நூற்றாண்டய மங்குளம் தமிழ் கல்வெட்டு
தமிழ் நாட்டின், ஜம்பை கிராமத்தில் கிமு முதல் நூற்றாண்டய தமிழ் கல்வெட்டு
பொ.ச.மு. முதல் நூற்றாண்டு, புதுக்கோட்டை மாவட்டம், சித்தனவாசலில் உள்ள சமணத் துறவிகளின் தமிழ் எழுத்துக்களைக் கொண்ட கல் படுக்கைகள்

பண்டைய தமிழ் கல்வெட்டுகள்

கிமு 6 ஆம் நூற்றாண்டு

கிமு 5 ஆம் நூற்றாண்டு

  • கொடுமணல் மற்றும் பொருந்தலில் தமிழ் எழுத்துகள் கொண்ட ஓடுகள் கண்டறியப்பட்டன. [10] [11] [12] [13]

கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள தமிழ் எழுத்து, நான்கு செ.மீ நீளமுள்ள ‘தங்கி’யில் காணப்பட்டது. இதை ‘தவன் சாத்தான்’ என படிக்கபட்டது. அதாவது அதாவது தவமிருக்கும் துறவி என்பதாகும்.

கிமு 4 ஆம் நூற்றாண்டு

கிமு 3 ஆம் நூற்றாண்டு

மலையில் ஐந்து குகைகள் உள்ளன, அதில் நான்கு குகைகளில் ஆறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. [21] சங்க காலத்தில் பொறிக்கப்பட்ட இவை, தமிழ்நாட்டின் முக்கியமான கல்வெட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. [22] சங்க காலத்திய பாண்டிய மன்னான முதலாம் நெடுஞ்செழியனால் (கி.மு. 270) சமண துறவிகளுக்கு கல் படுக்கைகளை உருவாக்கப்பட்டதாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கல் படுக்கைகளை உருவாக்கிய தொழிலாளிகளின் பெயரையும் விவரிக்கிறது. உதாரணமாக, நெடுஞ்செழியனின் பணியாளரான கடலன் வழுதி என்பவன் சமணத் துறவி நந்த சிரிகுவனுக்கு கல் படுக்கை அமைத்ததாக ஒரு கல்வெட்டு காட்டுகிறது. [23] இது இந்தியத் தொல்லியல் துறையால் தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கபட்டுள்ளது. [24]

கிமு 2 ஆம் நூற்றாண்டு

இந்த எழுத்துகள் "குருமங்கள அதன் இ யானைய் போ" என்று படிக்கபட்டது

இது "பெரு தேரூர் குழித்தை அயஅம்" அல்லது "பெரு தே ஊர் உழிதேக்னே ஆயம்" அல்லது "பெரு தே ரூர் குழித்தைய் ஆயாம்" என படிக்கபட்டுள்ளது.

கிமு முதல் நூற்றாண்டு

அதில் 'ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாழி' [36] என்று பொறிக்கபட்ட கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக் கல்வெட்டின் பொருளானது "சத்யபுதோ (பட்டம்) அதியன் நெடுமான் அஞ்சி (பெயர்), கொடுத்த (ஈத்த) உறைவிடம் (பாழி)" என்பதாகும். இந்த கல்வெட்டு ஒரு வரியில் குறுகியதாக இருந்தாலும், இது தென்னிந்திய வரலாற்றின் பல்வேறு அம்சங்களில் சிறப்பான ஒளியை பாய்ச்சுகிறது. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் அசோகரின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்சியாளர்களின் வம்சமான சத்யபுத்திரர்களின் யார் என்பது குறித்த சந்தேகத்தை இந்த கல்வெட்டு நீக்குகிறது [37]

  • கிமு முதல் நூற்றாண்டய, தமிழி எழுத்துக்கள் பொறிக்கபட்ட உடைந்த சேமிப்பு குடுவையானது எகிப்தின், குசீர்-அல்-காதிம், (லுகோஸ் லைமன்) கண்டறியப்பட்டது. கிமு முதல் நூற்றாண்டு காலத்திய இரண்டு தமிழி எழுத்துப் பொறிப்புகளை, இதே தளத்தில் கண்டறியப்பட்டன. [38]

இதில் பொறிக்கப்பட்ட உரை வார்ப்புரு:Script/Brahmi பானை ஒறி "கயிற்றில் தொங்கவிடப்பட உறியைக் குறிக்கிறது. [39]

இது "மூ-நா-கா-ரா" மற்றும் "மு-கா-கா-டி" என படிக்கபட்டது.

இது "யோமிநாட்டுக் குமட்டூர் பிறந்தான் காவுதி யிதனுக்குச் சித்துப்போச்சில் இளையார் செய்த அதிட்டானம்"

களப்பிரர் கல்வெட்டுக்கள்

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் பேரூராட்சிக்கு அண்மையில் உள்ள பூலாங்குறிச்சி ஊராட்சியில் உள்ள பூலாங்குறிச்சி குன்றின் சரிவுப் பகுதியில் அமைந்துள்ளன. கிபி 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த களப்பிரர் காலத்திய மூன்று கல்வெட்டுகள் தமிழ்ப் பிராமி மற்றும் வட்டெழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. [46][47] இக்கல்வெட்டுக்கள் மூலம் களப்பிரர்கள் சமண, பௌத்த சமயங்களை மட்டுமே ஆதரித்தாலும், அந்தணர்களுக்கு அக்ரகாரம் போன்ற பிரம்மதாயம், மங்கலம் போன்ற நிலங்களை வழங்கியும், இந்துக் கோயில்களுக்கு அறப்பணியும் செய்துள்ளனர். அந்தணர், அரசர், வணிகர், உழவர் என்ற நால் வருண முறையை குறிக்கும் மிகப் பழைய தமிழ்க் கல்வெட்டு இதுவே ஆகும்.

மேலும் காண்க

குறிப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை