த காபிட்டு (திரைப்படத் தொடர்கள்)

த காபிட்டு (ஆங்கில மொழி: The Hobbit) என்பது பீட்டர் ஜாக்சன் இயக்கிய மூன்று காவிய கனவுருப்புனைவு [சாகச திரைப்படத் தொடர்கள் ஆகும். இது 1937 ஆம் ஆண்டு ஜே. ஆர். ஆர். டோல்கீன் டோல்கீன் எழுதிய த காபிட்டு நாவலை அடிப்படையாகக் கொண்டு, அன் அன்எக்ஸ்பெக்டட் ஜெர்ன்னி (2012), த டெசோலேசன் ஆப் சிமாக் (2013) மற்றும் த பாட்டிலே ஆப் த பைவ் அர்மிசு (2014) போன்ற திரைப்படங்கள் வெளியானது. இந்த திரைப்படம் த லார்டு ஆப் த ரிங்ஸ் படத்தின் முன்பு நடப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

த காபிட்டு
இயக்கம்பீட்டர் ஜாக்சன்
தயாரிப்புபீட்டர் ஜாக்சன்
பிரான் வால்சு
கரோலின் கன்னிங்காம்
ஜேன் வெய்னர்
மூலக்கதைத காபிட்டு
படைத்தவர் ஜே. ஆர். ஆர். டோல்கீன்
திரைக்கதைபீட்டர் ஜாக்சன்
பிரான் வால்சு
பிலிப்பா போயன்சு
கில்லெர்மோ டெல் டோரோ
இசைஹோவர்ட் ஷோர்
நடிப்பு
ஒளிப்பதிவுஆண்ட்ரூ லெசுனி
படத்தொகுப்புஜபேஸ் ஓல்சென்
கலையகம்விங்நட் பிலிம்சு
நியூ லைன் சினிமா
மெட்ரோ-கோல்ட்வின்-மேயர்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடு
ஓட்டம்474 நிமிடங்கள் (திரையரங்கு பாதிப்பு)
532 நிமிடங்கள் (விரிவாக்கப்பட்ட பதிப்பு)
நாடுநியூசிலாந்து
ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$700–745 மில்லியன்[1][2][3][4]
மொத்த வருவாய்$2.938 பில்லியன்

இந்த படத்திற்கு பீட்டர் ஜாக்சன், பிரான் வால்சு, பிலிப்பா போயன்சு மற்றும் கில்லெர்மோ டெல் டோரோ ஆகியோரால் எழுதப்பட்டது. இது த லார்டு ஆப் த ரிங்ஸ் தொடங்குவதற்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு மத்திய-பூமியில் கற்பனை உலகில் திரைப்படங்கள் நடைபெறுகின்றன. மேலும் பதின்மூன்று பேருடன் வரும் விசார்ட் காண்டால்ப்பு தி கிரே (இயன் மெக்கெல்லன்) நம்பிய ஹொபிட் பில்போ பாக்கின்சு (மார்டின் பிறீமன்) ஐப் பின்தொடர்கிறார்கள். தோரின் ஓக்கன்ஷீல்ட் (ரிச்சர்ட் ஆர்மிட்டேச்) தலைமையிலான குள்ளர்கள், டிராகன் சிமாக்கிலிருந்து லோன்லி மலையை மீட்டெடுப்பதற்கான தேடலில் (பெனடிக்ட் கம்பர்பேட்ச் குரல் கொடுத்தார்) போராடுகிறார்கள். இந்த திரைப்படங்கள் நாவல் மற்றும் பிற மூலப் பொருட்களிலிருந்து சில கூறுகளை விரிவுபடுத்துகின்றன, அதாவது டோல் குல்தூர் மற்றும் காண்டால்ப்பு இன் விசாரணை மற்றும் தோரின் மற்றும் அவரது உறவினர்களுக்கு எதிராக பழிவாங்கும் அசோக் மற்றும் போல்க் ஆகியோரின் பின்தொடர்தல் போன்றவை விரிவாக கூறப்படுகின்றன.

இப்படத்தில் ஜேம்ஸ் நெஸ்பிட், கென் சாட், இவாஞ்சலீன் லில்லி, லீ பேஸ் மற்றும் லூக் எவன்ஸ் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழும நடிகர்கள் இந்தத் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளனர், இதில் பல நடிகர்கள் த லார்டு ஆப் த ரிங்ஸ் இருந்து கேட் பிளான்சேட், ஆர்லாந்தோ புளூம், இயன் கோல்ம், கிறிஸ்டோபர் லீ, கியூகோ வீவிங் ஆகியோர் தங்கள் பாத்திரங்களில் மீண்டும் நடிக்கின்றனர்.

இதன் முதல் படம் 28 நவம்பர் 2012 அன்று நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள எம்பசி திரையரங்கில் திரையிடப்பட்டது. கோர்ட்டனே பிளேஸில் ஒரு லட்சம் பேர் சிவப்பு கம்பளத்தில் அணிவகுத்து நின்றனர், முழு நிகழ்வும் நியூசிலாந்தில் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது மற்றும் இணையத்தில் ஊடக ஓடை செய்யப்பட்டது. இந்தத் தொடரின் இரண்டாவது படம் 2 டிசம்பர் 2013 அன்று கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் திரையிடப்பட்டது. இறுதித் திரைப்படம் 1 திசம்பர் 2014 அன்று லண்டனில் உள்ள ஓடியோன் லீசெஸ்டர் சதுக்கத்தில் திரையிடப்பட்டது. இந்தத் தொடர் கலவையான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் நிதி ரீதியாக வெற்றி பெற்றது மற்றும் உலகளவில் $2.938 பில்லியன் வசூலுடன் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த திரைப்படத் தொடர்களில் ஒன்றாக ஆனது. இது பல்வேறு விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது மற்றும் பலவற்றை வென்றது, இருப்பினும் அசல் முத்தொகுப்பு அளவுக்கு இல்லை.

படப்பிடிப்பு

த ஹாபிட்டுகளின் வீடு

இந்த திரைபபடத்தின் முதன்மை புகைப்படம் எடுத்தல் 21 மார்ச் 2011 அன்று நியூசிலாந்தின் வெலிங்டனில் தொடங்கியது. அதை தொடர்ந்து வெலிங்டன் ஸ்டோன் இசுட்ரீட் சுடியோசு, மாடமாட்டா நகரம் மற்றும் நியூசிலாந்தைச் சுற்றியுள்ள பிற அறியப்படாத இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.[5]

ஜூலை 2011 இல் ஹொபிட்டின் காட்சிகள் இங்கிலாந்தின் பைன்வுட் வளாகத்தில் படமாக்கப்பட்டன. படப்பிடிப்புக்காக எல்வு மற்றும் என்&பி ஸ்டேஜ்களில் கூடாரம் கட்டப்பட்டது.[6] ஜாக்சன் தொகுப்பிலிருந்து ஒரு காணொளி வலைப்பதிவை பதிவு செய்தார், அதில் கிறிஸ்டோபர் லீ முழு ஒப்பனை மற்றும் உடையில் சாருமானாக நடித்தார்.[7] சாருமானாக கிறிஸ்டோபர் லீ இருக்கும் காட்சிகள் அனைத்தும் அந்த வளாகத்தில் படமாக்கப்பட்டதால், அவரால் நியூசிலாந்து செல்ல முடியவில்லை.[8]

நியூசிலாந்தில் இரண்டாவது படப்பிடிப்பு ஆகஸ்ட் இறுதியில் தொடங்கி டிசம்பர் 2011 இல் நிறைவடைந்தது.[9] 266 நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு 6 ஜூலை 2012 அன்று முதன்மை புகைப்படம் எடுத்தல் முடிந்தது.[10] மே 2013 இல், இரண்டாவது மற்றும் மூன்றாவது படங்களுக்கான கூடுதல் படப்பிடிப்பு நியூசிலாந்தில் தொடங்கி 10 வாரங்கள் நீடித்தது.[11]

முகப்பு ஊடகம்

திரைப்படம்திரையரங்க பதிப்பு நீளம்நீட்டிக்கப்பட்ட பதிப்பு நீளம்
அன் அன்எக்ஸ்பெக்டட் ஜெர்ன்னி169 நிமிடங்கள் (2 மணி, 49 நிமிடம்)182 நிமிடங்கள் (3 மணி, 2 நிமிடம்)
த டெசோலேசன் ஆப் சிமாக்கு161 நிமிடங்கள் (2 மணி, 41 நிமிடம்)186 நிமிடங்கள் (3 மணி, 6 நிமிடம்)
த பாட்டிலே ஆப் த பைவ் அர்மிசு144 நிமிடங்கள் (2 மணி, 24 நிமிடம்)164 நிமிடங்கள் (2 மணி, 44 நிமிடம்)
மொத்த இயக்க நேரம்474 நிமிடங்கள் (7 மணி, 54 நிமிடம்)532 நிமிடங்கள் (8 மணி, 52 நிமிடம்)

மொத்த வருவாய்

படம்வெளியீட்டு தேதிவசூல் வருவாய்அனைத்து நேர தரவரிசைஉற்பத்தி செலவுமேற்கோள்
அமெரிக்கா மற்றும் கனடாவேறு நாடுகள்உலகளவில்
அன் அன்எக்ஸ்பெக்டட் ஜெர்ன்னி14 திசம்பர் 2012$303,003,568$714,000,000$1,017,003,56847$200,000,000[12][13]
த டெசோலேசன் ஆப் சிமாக்13 திசம்பர் 2013$258,366,855$700,640,658$959,007,51356$250,000,000[14][15]
த பாட்டிலே ஆப் த பைவ் அர்மிசு17 திசம்பர் 2014$255,119,788$707,063,077$962,182,86554$250,000,000[16][17]
Total$816,490,211$2,121,703,735$2,938,193,946-$700,000,000

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை