த சாத்தானிக் வெர்சஸ்

த சாத்தானிக் வெர்சஸ் (The Satanic Verses) 1988ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட சல்மான் ருஷ்டியின் நான்காவது புதினமாகும். இது பகுதியில் முகம்மது நபியின் வாழ்க்கைவரலாற்றால் மன எழுச்சிபெற்ற புதினமாகும். தனது முந்தைய நூல்களைப் போன்றே மாய யதார்த்தவாதத்தை (Magic Realism) கடைபிடித்து நடப்பு நிகழ்வுகளையும் மனிதர்களையும் அடிப்படையாகக் கொண்டு தனது கதாபாத்திரங்களைப் படைத்துள்ளார். மூன்று பேகன் மெக்கன் பெண் கடவுள்களுக்காக கடவுளிடம் வேண்டுதல்களாக மன்றாடிய குரானியக் கவிதைத் தொகுப்பாக கருதப்படும் "சாத்தானிக் வெர்சஸ்" என்பதை இதன் தலைப்பாக வைத்துள்ளார்.[1] இந்த சாத்தானிக் வெர்சசை கையாளும் கதையின் பாகம் முதல் ஆயிரவாண்டு வரலாற்றாளர்கள் அல்-வாகிடி மற்றும் முகம்மது இபின் ஜரிர் அல்-டபாரி ஆகியோரின் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.[1]

த சாத்தானிக் வெர்சஸ்
முதல் பதிப்பின் அட்டை
நூலாசிரியர்சல்மான் ருஷ்டி
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
வகைமாய யதார்த்தவாதம், புதினம்
வெளியீட்டாளர்வைக்கிங் பிரஸ்
வெளியிடப்பட்ட நாள்
1988
ஊடக வகைஅச்சு (வன்னட்டை மற்றும் மென்னட்டை)
பக்கங்கள்547 பக்.
ISBN0-670-82537-9
OCLC18558869
823/.914
LC வகைPR6068.U757 S27 1988
முன்னைய நூல்ஷேம்
அடுத்த நூல்ஹரூன் அன்ட் த சீ ஆஃப் ஸ்டோரீஸ்

ஐக்கிய இராச்சியத்தில் இந்த நூலிற்கு நேர்மறையான மதிப்புரைகள் கிடைத்தன. 1988ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு இறுதிப்பட்டியலில் இடம்பெற்று பரிசு பெறாவிடினும் அவ்வாண்டு விட்பிரெட் பரிசைப் பெற்றது.[2] இந்த நூல் தங்கள் சமய உணர்வுகளை புண்படுத்துவதாகவும் சமயநிந்தனை செய்வதாகவும் முசுலிம்கள் எழுப்பிய எதிர்ப்பினை அடுத்து ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெய்னி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று பெப்ரவரி 14, 1989 அன்று ஒரு பத்வா வெளியிட்டுள்ளார்.

கூடுதல் படிப்புக்கு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை