நைஜீரியாவின் பொருளாதாரம்

தேசிய பொருளாதாரம்

நைஜீரியா ஆபிரிக்காவின் வடமேற்கிலுள்ள நடுத்தர வருமானமுடைய கலப்புப் பொருளாதாரமாகும். இது இக்கண்டத்தில் தென் ஆபிரிக்காவை அடுத்து இரண்டாவது பெரிய பொருளாதாரமாகும். வளர்ந்து வருகின்ற சந்தைப் பொருளாதாரம், விரிவடையும் நிதி, சேவை, தொடர்பாடல், தொழில்நுட்பம், மனமகிழ் சேவைகளைக் கொண்டுள்ள நாடாக விளங்குகின்றது. உலகளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் 21வது பெரிய பொருளாதாரமாகவும் கொள்வனவு ஆற்றல் சமநிலைக்குட்பட்ட மொ.உ.உற்பத்தியின் அடிப்படையில் 20ஆவதாகவும் உள்ளது. இங்குள்ள தொழிற்றுறை இக்கண்டத்திலேயே மூன்றாவது பெரியதாக உள்ளது. மேற்கு ஆபிரிக்கப் பகுதியில் தயாராகும் சரக்குகளிலும் சேவைகளிலும் பெரும்பங்கு வகிக்கின்றது. நைஜீரியாவின் தொலைத்தொடர்பு, வங்கி, திரைப்படத்துறைகள் விரைவான வளர்ச்சியைக் காண்கின்றன.[17]

நைஜீரியப் பொருளாதாரம்
நைஜீரியாவின் வணிக மையமான லாகோசின் வான்வரை
நாணயம்நைஜீரிய நைய்ரா (NG₦)
நிதி ஆண்டு1 ஏப்ரல் 2015 - 31 மார்ச் 2016[1]
புள்ளி விவரம்
மொ.உ.உ$574 பில்லியன் (பெயரளவு; 2015)[2]
$1.109 டிரில்லியன் (கொ.ஆ.ச; 2015)[2]
மொ.உ.உ வளர்ச்சி 6.2% (Q1 2014)[3]
நபர்வரி மொ.உ.உ$3,298 (பெயரளவு)[2]
$6,204 (கொஆச)
துறைவாரியாக மொ.உ.உவேளாண்மை: 17.8%
தொழிற்துறை: 25.7%
சேவைகள்: 54.6%
(2015)[4]
பணவீக்கம் (நு.வி.கு)9% ( மே 2015)
கினி குறியீடு43.0 (2010)[5]
தொழிலாளர் எண்ணிக்கை74 மில்லியன் (Q2 2015)[6]
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கைதங்குவிடுதிகள், உணவு, போக்குவரத்து, அசையாச் சொத்து: 12.2%
கல்வி, நலம், அறிவியல், தொழினுட்பம்: 6.3%
வேளாண்மை, வனத்துறை, மீன்பிடித்தல்: 30.5%
உற்பத்தி, சுரங்கத் தொழில், கல்லுடைத்தல்: 11.3%
சில்லறை வணிகம், பராமரிப்பு, சரிசெய்தல், இயக்கம்: 24.9%
மேலாண்மை, நிதியியல், காப்பீடு: 4.2%
தொலைத்தொடர்பு, கலைகள், மகிழ்கலை: 1.8%
பிற சேவைகள்: 8.8%
(2010)[7]
வேலையின்மை6.4% (Q1 2015)[8][9]
முக்கிய தொழில்துறைசீமைக்காரை, பாறைநெய் தூய்விப்பாலை, கட்டுமானம் , கட்டுமானப் பொருட்கள், உணவு பதப்படுத்துதல், உணவுகள், பானங்கள், புகையிலை, துணிகள், உடைகள், காலணி, மருந்து, மரப்பொருட்கள், மரக்கூழ் பொருட்கள், வேதிப்பொருள், சுட்டாங்கல் பொருட்கள், நெகிழிகள், மீள்மப் பொருட்கள், மின் பொருட்கள், நுகர் மின்னணுவியல் பொருட்கள், உலோகங்கள்: இரும்பும் எஃகும், தானுந்துத் தயாரிப்பு, பிற தயாரிப்புக்கள்
(2015)[4]
தொழில் செய்யும் வசதிக் குறியீடு131[10]
வெளிக்கூறுகள்
ஏற்றுமதி$93.01 பில்லியன் (2014 மதிப்.) [11]
ஏற்றுமதிப் பொருட்கள்பாறை எண்ணெய்யும் பொருட்களும், வேதிப்பொருள்கள், வண்டிகள், வானூர்தி பாகங்கள், நீரூர்திகள், காய்கறி பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, பானங்கள், சாராயம் மற்றும் புளிங்காடி, முந்திரி, பதப்படுத்தப்பட்ட தோல்சரக்கு நுட்பியல், கோக்கோ, புகையிலை, அலுமினியம் கலப்புலோகங்கள்
(2015)[12]
முக்கிய ஏற்றுமதி உறவுகள் India 14.1%
 Spain 10.3%
 Netherlands 10.3%
 South Africa 8.4%
 Brazil 5.1%
(Q1 2015)[12]
இறக்குமதி$52.79 பில்லியன் (2014 மதிப்.) [11]
இறக்குமதிப் பொருட்கள்தொழிற்துறை வழங்கல்கள், எந்திரத் தொகுதிகள், வீட்டுப் பயன்பாட்டுக் கருவிகள், வண்டிகள், வானூர்தி பாகங்கள், வேதிப்பொருட்கள், உலோகங்கள்
(2015)[12]
முக்கிய இறக்குமதி உறவுகள் China 22.5%
 United States 9.6%
 India 7.7%
 Belgium 5.6%
 Netherlands 5.4%
(Q1 2015)[12]
வெளிநாட்டு நேரடி முதலீடு$1.1 டிரில்லியன் (2014)
மொத்த வெளிக்கடன்$9.7 பில்லியன் (2015)[13]
பொது நிதிக்கூறுகள்
பொதுக் கடன்$56.74 பில்லியன்; மொ.உ.உவில் 10.9% (2015)[13]
வரவுசெலவு பற்றாக்குறை$5.2 billion; 1% of GDP (2014)[14]
வருவாய்$23.48 billion
செலவினங்கள்$31.61 billion (2012 est.)
கடன் மதிப்பீடுஇசுடாண்டர்ட் அண்ட் புவர்சு:[15]
B+ (Domestic)
B+ (Foreign)
B+ (T&C Assessment)
Outlook: Stable[16]
Fitch:[16]
BBB+
Outlook: Stable
அந்நியச் செலாவணி கையிருப்பு$42.8 பில்லியன் (2012)
Main data source: CIA World Fact Book
'

தொடர்ந்து பல்லாண்டுகளாக நிலவிய மேலாண்மைக் குறைபாடுகளைக் களைந்து கடந்த பத்தாண்டுகளாக நைஜீரியா பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டது. இதன் மூலம் தன் முழுமையானத் திறனை அடைந்துள்ளது. நைஜீரியாவின் கொள்வனவு ஆற்றல் சமநிலைக்கு பின்னரான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2000இல் இருந்த $170 பில்லியனிலிருந்து 2012இல் $451 பில்லியனாக, கிட்டத்தட்ட மூன்று மடங்காக பெருகியுள்ளது. கணக்கில் வராத , முறைசாரா துறைகளையும் சேர்த்தால் மெய்யான கணக்கு $630 பில்லியனாகும். எனவே, தனிநபர் உற்பத்தி 2000இலிருந்த $1400 இருந்து 2012இல் $2,800 ஆக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 2014இல் அடிப்படையை மாற்றியதால் இவற்றை மீள்கணக்கிட்டு உயர்த்த வேண்டியத் தேவை உள்ளது.[18]

நைஜீரியாவின் ஏற்றுமதிகளின் விகிதாச்சார வரைபடம்.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை