பக்லான் மாகாணம்

ஆப்கானிஸ்தானின் ஒரு மாகாணம்

பக்லான் மாகாணம் (Baghlan (பஷ்தூ/பாரசீகம்; بغلان‎ ‎ Baġlān) என்பது ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள் முப்பத்து நான்கில் ஒன்றாகும். இது நாட்டின் வடபகுதியில் உள்ளது. மாகாணத்தின் மக்கள் தொகை 2013 ஆண்டு 910,700 என்று இருந்தது.[1]

பக்லான் மாகாணம்
Baghlan

بغلان
மாகாணம்
பக்லான் மாகாணத்தில் ஆப்கான் தேசிய இராணுவம்
பக்லான் மாகாணத்தில் ஆப்கான் தேசிய இராணுவம்
ஆப்கானிஸ்தானில் பக்லானை காட்டும் வரைபடம்
ஆப்கானிஸ்தானில் பக்லானை காட்டும் வரைபடம்
நாடு Afghanistan
தலைநகரம்புலி கும்ரி
அரசு
 • ஆளுநர்சுல்தான் முகமது இபாடி
பரப்பளவு
 • மொத்தம்21,118 km2 (8,154 sq mi)
மக்கள்தொகை (2013)[1]
 • மொத்தம்8,63,700
 • அடர்த்தி41/km2 (110/sq mi)
நேர வலயம்UTC+4:30
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுAF-BGL
முதன்மை மொழிகள்துரி (ஆப்கன் பாரசீகம்)
பஷ்தூ மொழி

இந்த மாகாணத்தின் தலைநகரம் புலி கும்ரி ஆகும். ஆனால் இந்த மாகாணத்தின் பெயர் இன்னொரு பெரிய நகரான பக்லான் நகரின் பெயரைக் கொண்டு அழைக்கப்படுகிறது. பக்லானின் சுர்க் கோட்டல் பகுதியில் பழங்கால சரத்துஸ்திர தீக்கோயிலின் இடிபாடுகள் உள்ளன. உள்ளூர் மாகாண புனரமைப்பு குழு 2006 முதல் 2015 வரை அங்கேரி தலைமையில் செயல்பட்டது.

வரலாறு

பழங்கால வரலாறு

பக்லான் என்ற பெயர் பக்கோலங்கோ அல்லது "கோயில் படம்" என்ற பெயரிலிருந்து தோன்றியது. சுர்க் கோட்டல் கோயிலில் இரண்டாம் நூற்றாண்டின் குசான் பேரரசு காலக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. சீன பௌத்த பயணியான சுவான்சாங் ஏழாம் நூற்றாண்டில் பக்லான் வழியாகப் பயணித்தார், மற்றும் இப்பிரதேசத்தை "ஃஓ-கியா-லாங் ராஜ்யம்" என குறிப்பிடப்பிட்டுள்ளார்.[2]

கிபி 13 ஆம் நூற்றாண்டில், மங்கோலியப் படைகள் குண்டுஸ்-பகிலான் பகுதியில் நிரந்தர கோட்டையமைத்தது, மற்றும் 1253 இப்பகுதியின் ஆட்சியாளராக சயில் நோயன் தாதர் என்பவரை மோன்க் கான் நியமித்தார். சயில் யோதனுக்குப் பிறகு அவனது பதவி அவனின் மகனான உலாது வசம் வந்தது, பின் பேரன் பக்துத் வசம் வந்தது.[3] இந்த துருக்கிய-மங்கோலிய காவற் படைகள்தான் (தம்மா) ஆப்கானிஸ்தானில் உள்ள குவார'உன்னஸ் இனப்பிரிவாக உருவாகினார்கள், மற்றும் இவர்களால் 14 ஆம் நூற்றாண்டில் சாகடெய்டா கனட் அரசு உருவானது. தைமூரின் ஆட்சியில் குவாரா'உன்சா பகுதி சிக்கு பர்லாஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது, அவனுக்குப் பிறகு அவன் மகன் ஜஹான்ஷா வசம் இருந்தது. குண்டுஸ்-பகிலான் படைகள் வெவ்வேறு தலைவர்கள் மற்றும் பல்வேறு பெயர்களாக திமுரிட் காலம் முழுவதும் செல்வாக்கு செலுத்தியது போல் தோன்றுகிறது என்று ஃபோர்ப்ஸ் மன்ஜ் குறிப்புகள் கூறுகின்றன. இந்நிலை உஸ்பெக் படையெடுப்புவரை அதாவது இஸ்லாமிய ஆண்டு 900 (கி.பி 1494-1495 ) வரை நீடித்தது. இந்த பகுதியைச் சிற்றரசனான குய்பிகாக் ஆண்டதாக பாபர் நாமாவில் குறிப்பிடப்படுகிறது.[4]

20 ஆம் நூற்றாண்டு

20 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில், ஆப்கானிஸ்தான் மேற்கத்திய மற்றும் சோவியத் ஒன்றியத்தின், விவசாய-தொழில்துறை திட்டங்கள் போன்றவற்றின் சர்வதேச அபிவிருத்திக்கு இலக்கானது. இதில் சர்க்கரை வள்ளி கிழங்கில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் (1940 களில் செக் நிபுணர்களால் துவக்கப்பட்டது.[5]) மற்றும் காய்கறி எண்ணை.[6] மேலும் செக் நிபுணர்களால் பெருமளவு நிலக்கரி சுரங்கத் தொழில் வளர்த்தெடுக்கப்பட்டது,[7] ஆப்கானிஸ்தானின் கர்கர் பள்ளத்தாக்கில் உள்ள ஒரே ஒரு நிலக்கரி சுரங்கம் 1992 இல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.[8]

தற்கால பக்லான் மாகாணம் 1964 ஆம் ஆண்டு குவாத்தகான் மாகாணத்தில் இருந்து உருவாக்கப்பட்டது.[9]

அண்மைய வரலாறு

2001 இல் ஆப்கன் போர் துவங்கியது, இதில் தாலிபான்கள் வசமிருந்து பாக்கலானை மீட்க இஸ்மாயிலி ஆன்மீக தலைவர் சயீத் மன்சூர் நாதிரி முயற்சி எடுத்தார். உஸ்பெக் இராணுவத் தலைவர் அப்துல் ரஷித் டோஸ்தும் மற்றும் அவரது ஜும்பிஷ்-இ மில்லி கட்சி உடன் நாத்ரி கூட்டணி வைத்துக்கொண்டார், மற்றும் தாலிபான்களுக்கு எதிராக இருந்த போட்டி தாஜிக்குகளான ஜாமியத்-இ இஸ்லாமி கட்சியினர் தலிபான்களை முறியடித்து பக்லானை கைப்பற்ற முனைப்புடன் இருந்தனர். நாதிரிக்கு முன்பாகவே தலைநகரான புலி-ஐ குமுரி நகரை ஜாமியத் கைப்பற்றியது, இவர்கள் ஆப்கான் இஸ்மாயிலிகள் மற்றும் ஷியா கசாரா மக்கள் போன்றவர்கள் மத்தியில் தனது வலுவான ஆதரவை கொண்டிருந்த போதிலும் யாராலும், மாகாணத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பட்டில் கொண்டுவர போதுமான ஆதரவாளர்களை அணிதிரட்டி முடியவில்லை. தலைநகரை மீண்டும் கைப்பற்ற 2001 மற்றும் 2003 இல் முயற்சியில் நாதிரி தோல்வியுற்றார். தொடர் தோல்விகளால் நாதிரியும் அவரது ஆதரவாளர்களும் பிராந்தியத்தை விட்டு தப்பி ஓடினர்.[10]

2012 சூன் 13, அன்று, இரண்டு பூகம்பங்கள் ஆப்கானிஸ்தானை தாக்கியது இதனால் பக்லான் மாகாணம் புர்கா மாவட்டத்தில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. சயி ஹசாரா கிராமத்தில் ஒரு 30 மீட்டர் கொண்ட பாறையின் சரிவால் ஏற்பட்ட அழிவுகளாலும் பாறையின் கீழே நசுங்கி 71 பேர் கொல்லப்பட்டதாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது,

அரசியல் மற்றும் ஆட்சி

மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் சுல்தான் முகமது இபடி ஆவார். மாகாணத்தின் தலைநகராக புலி கும்ரி உள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) மூலம் கையாளப்படுகிறது. மாகாண காவல்துறைத் தலைவர் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ANSF) போன்றவற்றிற்க்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.

மக்கள் வகைப்பாடு

ஆப்கானித்தான் இனக்குழுக்கள்

2013 ஆண்டில் பக்லான் மாகாணத்தின் மக்கள் தொகை 863,700.[1] இதில் 55% பேர் தாஜிக்குகள், 20% பேர் பஷ்தூன் மக்கள், 15% பேர் கசாரா மக்கள், 9% பேர் உஸ்பெக் மக்கள், மீதமுள்ளவர்கள் தடார் மக்கள்.[11] இதில் இன்னொரு புள்ளி விவரத்தின்படி, தாஜிக்குகளும் அவர்களின் துணைக் குழுக்களான அய்மாக் மற்றும் சயீத்-தஜிக்குகள் போன்றவர்களை இணைந்து தஜிக்குகள் மாகாண மக்கள் தொகையில் 70% க்கும் மேலாக உள்ளனர். கூடுதலாக, ஹசாராஸ் என்னும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழும் பாரசீக மொழி பேசும் மக்களும், பஷ்தூன் மொழி பேசும் பஷ்துன்கள், உஸ்பெக் மற்றும் சில தடார்களுக்கும் வாழ்கின்றனர்.[12] பக்கலான் சிறிய சமூகமான சயீது ஆப் கயான் எனபவரது தலைமையில் வாழும் இஸ்மயில் என்ற இனமக்களின் தாயகமாகவும் பக்லான் மாகாணம் உள்ளது.

நலவாழ்வு பராமரிப்பு

இந்த மாகாணத்தில் தூய்மையான குடிநீர் கிடைக்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை 2005 ஆம் ஆண்டு 19% என்ற விகிதத்தில் இருந்தது, அதிலிருந்து 2011 ஆண்டு 25% என உயர்ந்துள்ளது.[13]திறமையான பிரசவ உதவியாளர் மூலமாக பிரசவம் பார்க்கும் மக்களின் விழுக்காடு 2005 ஆண்டில் 5.5 % என்ற எண்ணிக்கையில் இருந்து 2011 ஆண்டு 22 % என உயர்ந்தது.[13]

கல்வி

மொத்த கல்வியறிவு விகிதம் (6+ வயதுக்கு மேற்பட்டவர்களில்) 2005 ஆண்டு 21% என்று இருந்தது. 2011 இல் இது 24% என உயர்ந்துள்ளது.[13]ஒட்டுமொத்த நிகர சேர்க்கை விகிதம் (6 முதல் 13 வயது வரை) 2005 இல் 29% என இருந்து, 2011 ஆம் ஆண்டில் 62% என உயர்ந்துள்ளது.[13]

பொருளாதாரம்

வேளாண்மை

பக்லான் மாகாணத்தின் முதன்மை பயிராக ( 1974 வரை) பஞ்சு மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தொழில்துறையில் சர்க்கரை உற்பத்தி 1940 களில் செக் மேற்பார்வையின் கீழ் தொடங்கிவிட்டன. இந்தப் பகுதியில் திராட்சை, பிஸ்தானியன், மாதுளை போன்ற வேளாண் பயிர்களும், காபூல் ஆடு வளர்ப்பும் முதன்மைத் தொழிலாக உள்ளன.[14]

பிற தயாரிப்புகள்

இந்த மாகாணத்தில் பட்டு உற்பத்தி, கர்கர் பள்ளத்தாக்கில் நிலக்கரி வெட்டி எடுத்தல் போன்ற பிற தொழில்களும் உள்ளன.[14]

மாவட்டங்கள்

பக்லான் மாகாண மாவட்டங்கள்
பக்லான் மாகாண மாவட்டங்கள்
மாவட்டம்
தலை நகரம்
மக்கள் தொகை[1]பரப்புகுறிப்பு
அண்ட்ராப்24,800துணையாக - 2005 இல் பிரிக்கப்பட்டது
பக்காலனி ஜடிட்167,200
புர்கா52,200
தன்னா-ஐ-குரி57,300
டி சலா31,1002005 இல் அந்தராப் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது
துசி65,000
ஃராங் வா கரு16,1002005 இல் கோஸ்வா ஃபிரிங் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டது
குசார்காய் நுர்9,9002005 இல் கோஸ்வா ஃபிரீங் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டது
கிஞ்சான்29,600
கோஸ்ட் வா பிரீங்61,3002005 இல் துணையாகபிரிக்கப்பட்டது
கவ்வாஜா ஹிஜ்ரன்23,2002005 இல் ஆண்ராப் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டது.
நஹ்ரின்67,200
புலி ஹிசார்26,8002005 ஆண்டு ஆண்டாரப் மாவட்டதிலிருந்து உருவாக்கப்பட்டது.
புலி குமிரிபுலி கும்ரி203,600
டாலா வா பர்ஃபாக்29,400

மேற்கோள்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பக்லான்_மாகாணம்&oldid=3388223" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை