படைப்புவாதம்

படைப்புவாதம் (Creationism) என்பது மனிதன், உயிரினங்கள், புவி மற்றும் அண்டத்தை ஒரு மீயிற்கை படைப்பாளர் (கடவுள்) தோற்றுவித்தார் எனும் சமய நம்பிக்கையாகும். 18ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் படிவளர்ச்சிக் கொள்கையின் உருவாக்கத்துக்குப்பின் விவிலியத்தின் தொடக்க நூலில் சொல்லப்பட்டுள்ளனவற்றுக்கு அறிவியல் அடிப்படை உண்டு என்று காட்ட முயற்சிகள் செய்யப்பட்டன. இக்கருத்தை முன்வைத்தவர்கள் படைப்புவாதிகள் என்றும் படிவளர்ச்சி எதிர்ப்பாளர்கள் என்றும் அறியப்பட்டனர். 1920களில் இருந்து ஐக்கிய அமெரிக்காவில் கிறித்தவ அடிப்படைவாதிகள் படிவளர்ச்சிக் கொள்கையினை எதிர்த்து படைப்புவாதத்தை முன்னிறுத்தி வருகின்றனர். படைப்புவாதத்தில் பல வகைகள் உண்டு. படிவளர்ச்சியை அறவே ஏற்றுக் கொள்ள மறுத்து விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ளதை (ஏழு நாட்களில் அண்டத்தின் படைப்பு, உயிரினங்கள் தனித்தனியே படைக்கப்பட்டன, புவியின் வயது சில ஆயிரம் வருடங்களே) என்று நம்புபவர்கள்; படிவளர்ச்சியை ஏற்று அதன் கர்த்தா கடவுளே என்போர், கிறித்தவமல்லாத பிற சமயங்களில் உள்ள படைப்பு தொன்ம கதைகளை நம்புவோர் போன்றவர்கள் இவற்றுள் அடக்கம். படைப்புவாதத்தை அறிவியல் பாடமாகக் கற்றுத் தர ஐக்கிய அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டதால், நுண்ணறிவு வடிவமைப்புக் கோட்பாடு படைப்புவாதிகளால் அறிமுகப்படுத்தப்படது.[1][2][3][4][5]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=படைப்புவாதம்&oldid=3561663" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை